Jump to content

எனது பார்வையில் '96 என்கிற திரைக்காவியம் 

Recommended Posts

'96 திரைப்படத்தைப்  பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் தான் கிட்டியது. அக்டோபர் 04ல் இத்திரைப்படம் வெளியானதில் இருந்து முகநூல் மற்றும் நண்பர்கள் வாயிலாக இத்திரைப்படத்தின் கதை ஏற்கெனவே ஓரளவு தெரிந்திருந்தாலும், படம் பார்க்கும் போது கிடைத்த அனுபவம் புதுவிதம். 

கடந்த ஓரிரு வருடங்களாக காதல் / நட்பு சார்ந்த, ஆர்ப்பாட்டம் இல்லாத தரமான திரைப்படங்கள் தற்போது வெளிவருவதில்லையே என்றெல்லாம் சலித்துக்கொண்டு, விறுவிறுப்பான, மர்மக் கதையம்சம்  (Thriller / Crime / Mystery) அல்லது அவ்வப்போது வெளியாகும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட தமிழ் சினிமாவைத் தேடித் தேடிப் பார்த்த எனக்கு '96 திரைப்படம் ஓர் புத்துணர்வையும், நம்பிக்கையையும் கொடுத்தது. 2000ஆம் ஆண்டு வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படம் போல ஓர் அழகான காதல் கதையம்சம், மனமொன்றி ரசிக்க வைத்த திரைக்கதை, நிறைவான நடிப்பு இவை கொண்ட திரைப்படம் என்று அடித்துச் சொல்லக்கூடிய ஓர் காவியமே '96 ஆகும்.

'ஆட்டோகிராஃப்', 'நினைத்தாலே இனிக்கும்' (2009), 'பள்ளிக்கூடம்' போன்ற திரைப்படங்களை சற்று ஞாபகப்படுத்தினாலும், '96 திரைப்படத்தின் தனித்துவமானது ரசிகனுக்கு ஓர் அழகிய கவிதை  படிக்கும் உணர்வைக் கொடுப்பதாகும். Wildlife photographerஆம் கதாநாயகனை (விஜய் சேதுபதி) அறிமுகப்படுத்திய அந்த ஆரம்பப்பாடல் காட்சி (The Life of Ram)  புகைப்படக்கலை, ஒளிப்படக்கலை, கவித்துவமான வரிகள் எனக் கலைகளின் சங்கமம். ராம்-ஜானுவின் கல்லூரிக் காதல் காட்சிகள் மொட்டு அவிழா ரோஜாக்களின் அழகென்றால், Reunionன் போதும், அதன் பின்னருமான காட்சிகள் மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களோ! சலனமற்றுப் பாயும் நதி போன்ற '96ன் திரைக்கதையில், விஜய் சேதுபதி - திரிஷா, சிறுவயது ராம்-ஜானு ஜோடிகள்  அழகு வண்ண ஓடங்களோ! 

சிறிது பிசகினாலும் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகக் கூடிய ஓர் கதையை, வரம்புகள் மீறா  வெள்ளமாய்  இயல்புடன் நமக்கெல்லாம் திரைப்படமாய் இயக்குனர் பிரேம்  வழங்கிய வண்ணம் அழகு. கார்த்திக்கின் எளிமையான வரிகள் கொண்ட 'காதலே காதலே' பாடலும்,  கோவிந்த் மேனனின் பின்னணி இசைக்கோர்ப்பும் , சின்மயியின் குரலும் இனிமையும் சேர்ந்து இதமூட்டும் தென்றலாய் உள்ளத்தை வருடும். 

96ம் ஆண்டினரை  மட்டுமல்ல 86ம், 76ம், 66ம்,  கூடவே 2006ம் ஆண்டினரையும் சிலாகித்துப் பேச வைத்த திரைப்படம் நிச்சயமாக தமிழ் சினிமா தந்த உன்னதமான காவியமாகும். காதலை கௌரவிக்கும் திரைப்படமாகப் பலராலும் பார்க்கப்பட்டாலும், இத்திரைப்படம் என்னைப் பொறுத்தவரையில் கல்லூரி நட்பையும் போற்றுவதாகும். ஆர்ப்பாட்டமில்லாமல் ஆங்காங்கே வரும் சில காட்சிகள் இதனை உணர்த்தும். ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. இப்போதைக்குப் பார்க்கும் உத்தேசமும் இல்லை.  ஆனாலும் எழுதவேண்டும் போலத் தோன்றியது.

நான் எழுதுவதற்கும் இப்படத்திற்கும் எந்தவித தொடர்போ அல்லது, உங்களின் இப்படத்தின் மீதான விமர்சனத்தின் மீதான என்னுடைய விமர்சனமாகக் கூட இதைக் கருத வேண்டாம்.

இப்படத்தைப் பார்த்த நான் அறிந்த சிலரின் கருத்துக்களைக் கேட்டிருந்தேன். காதலில் உரிகி, கட்டாயம் எல்லோரும் பார்க்கவேண்டிய காதல் கவிதை என்றே கூறினார்கள். ஆனால், என்னைப்பொறுத்தவரை இனம்தெரியாத வெறுப்பு இப்படத்திமீது ஏற்படுத்தியிருக்கிறது.

சரியான காரணம் என்று எனக்கு எதுவுமில்லை. ஆனால், காதலை முன்னிலைப்படுத்தி சொல்லப்படும் ஒரு கதையென்பதாலோ என்னவோ எனக்கு இந்த வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம். 96 அல்லாமல் எந்தவொரு காதல்க் கதையுடனான படமாக இருந்தாலும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வெறுப்புகளும் , வேதனைகளும், ஏமாற்றங்களும், விரக்திகளும், காயங்களும், களிவிரக்கங்களும் பற்றி இவை பேசுவதில்லை. வெறுமனே நாயகனும் நாயகியும் காண்பது, கண்களால்ப் பேசுவதும், முடிந்தால் கவிதைகள் எழுதுவதும், கூடவே பூச்செடிகளைச் சுற்றி ஓடித்திரிவதும்தான் காதல் என்று காட்டப்படுகிறது. காதலைச் சுற்றி மனித வாழ்க்கையில் கூடவே நடைபெறும் ஏனைய உணர்வுகள் பற்றிப் பேசாமல், பார்ப்போரை கனவுலகில் வைத்திருக்கப் பண்ணும் இப்படங்களை வெறுக்கிறேன்.

காதல் எனும் உணர்வு ஒரு ரசாயனச் சேர்க்கையின் விளைவுதான் என்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கூறினேன். அவர் உடன்படவில்லை, கோபித்தும் கொண்டார். ஆனால், அதுதான் உண்மை. உடலில் சுரக்கும் ஹோர்மோன்களான டெஸ்டெஸ்டொரோன், ஈஸ்ட்ரொஜின், ஒக்ஸிடொஸின், வஸோப்ரெஸின், அட்ரெனெலின், டொபோமின், செரோடொனின் என்று ஒரு சிறிய கூட்டம் ஹோர்மோன்கள்தான் காதலையும், கவர்ச்சியையும் தூண்டுகின்றன. நாம் காதல் என்றும், காவியம் என்றும், தெய்வீகம் என்றும் கற்பிதம் கூறும் இந்தக் காதல் வெறும் ரசாயன மாற்றம்தான் என்றான பிறகு இக்காதல்பற்றி அதிசயப்பட எதுவுமில்லையென்றாகி விட்டது எனக்கு.

அதேபோல , காதல்த் தோல்வியென்றும், காதலினால் பொறாமை என்றும், நாம் உளறுவதும் கூட ஹோர்மோன்களின் செயற்பாட்டினால்த்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குது என்று புரியவில்லை? ...ஒரு வேளை காதல் என்னும் இளகிய மனம் என்னிடம் இல்லையோ😄
 
Link to comment
Share on other sites

7 hours ago, ragunathan said:

96 படமும் அதே வகையில் பல வருடங்களுக்கு முன்னர் வந்த அழகி படமும் எனக்கு நன்கு பிடித்துப் போனதுக்கு காரணங்களுக்குள் ஒன்று இப்படியான மரத்தை சுற்றி பாடுவது போன்ற அபத்தங்கள் இல்லாமல் காதலுடன் சேர்ந்து ஏமாற்றங்களும்,காயங்களும், தனிமையையும் பற்றி பேசுவதால். தமிழ் சினிமாவில் காதலை காட்டுகின்றோம் என்று காட்டும் வழக்கமான பல அபத்தக் காட்சிகள் இதில் இல்லை. அத்துடன் பதின்ம வயதில் ஏற்படும் காதலை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்டி செல்வதாலும், படம் முழுக்க பயணிக்கும் இளையராஜாவின் 90 களில் வந்த பாட்டுக்களாலும் இப் படம் எனக்கு பிடித்துப் போகின்றது
 
Quote

இப்படி எல்லாவற்றையும் காரணங்களுடன் பார்த்தால் வாழ்வில் எஞ்சுவது வெறும் தட்டையான விரக்கி மட்டும் தான் ரகு. தாய் பாசத்தில் இருந்து எமக்கு ஏற்படும் கோப உணர்ச்சி வரைக்கும் ஹோர்மோன்களால் தான் நிகழ்த்தப்படுகின்றன. காதலை வைத்து உருவான அத்தனை காவியங்களையும், சினிமாக்களையும், சரிந்த எழுந்த சாம்ராஜ்ஜியங்களையும் வெறுமனே ஹோர்மன்களின் குழப்படியால் நிகழ்ந்தன என்று விட்டு போய்விட முடியும் நீங்கள் சொல்லும் முறையில் அணுகினால்.
adrenaline னும் noradrenaline இல்லாவிடின் கோப உணர்ச்சியும் அதன் காரணமாக எழுகின்ற நியாயமான ஆத்திரமும் இல்லாமல் போய்விடும். testosterone னும் estrogen னும் இல்லாவிடின் காமமும் இல்லை, இவ் உலகில் மனிதர்களும் இல்லை, நானும் நீங்களும் கூட இல்லை.

ஒருவர் சுயநலமாக இருப்பதற்கும், தாயக பற்று இல்லாமல் வெறுமனே இருப்பதற்கும் கூட அவர்களின் ஹோர்மான்களும் டி.என்.ஏ யும் தான் பொறுப்பு என்று விட்டு எளிதில் கடந்து விடுவீர்களா?

Link to comment
Share on other sites

8 hours ago, ragunathan said:

ஆனால், என்னைப்பொறுத்தவரை இனம்தெரியாத வெறுப்பு இப்படத்திமீது ஏற்படுத்தியிருக்கிறது.

சரியான காரணம் என்று எனக்கு எதுவுமில்லை. ஆனால், காதலை முன்னிலைப்படுத்தி சொல்லப்படும் ஒரு கதையென்பதாலோ என்னவோ எனக்கு இந்த வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம். 96 அல்லாமல் எந்தவொரு காதல்க் கதையுடனான படமாக இருந்தாலும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொன்னது போல எனக்கும் தமிழ் சினிமா காதல் படங்கள் மீது ஒரு வெறுப்புணர்வு இருந்தது / இன்னும் உண்டு. பல தசாப்தங்களாக காதலை மையப்படுத்திய கதைகளையே திரைப்படங்களாகப் பார்க்க வேண்டிய சாபக்கேடு. ஒரே மதிரியான கதை, அதைக் கூடநேர்த்தியாக / வித்தியாசமாகப் படமாக்கப்பட்டிருக்காமை போன்ற காரணங்களால் காதற் படங்களை கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்துவந்தேன். அத்துடன் புதுமுக இயக்குனர்கள்,நடிகர்களின் குறைந்த பட்ஜெட்டில் அமைந்த புதுவிதமான கதைக்களங்கள் கொண்ட தரமான பல திரைப்படங்களுக்கும் அண்மைக்காலமாக வாழ்வு கிடைத்து பரவலாகக் கொண்டாடப்படும் சூழலில் அவ்வாறான திரைப்படங்களையே நானும் விரும்பிப் பார்த்துவந்தேன். உதாரணத்துக்கு, 'பரியேறும் பெருமாள்', 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆகிய திரைப்படங்களைக் கூறலாம். இன்னும் நான் பதிவில் சொன்னது போல, பரபரப்பான, மர்மம் நிறைந்த, குற்றவியல் சார்ந்த திரைப்படங்களும் ஒரு மாறுதலாக இருந்தன.

இதனால் காதற் படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை என என் மீது என் வீட்டினருக்கு ஒரு குற்றச்சாட்டு உண்டு! இந்த நிலையில் ஒரு மாறுதலுக்காகவும், விஜய் சேதுபதி என்ற அற்புதமான கலைஞனுக்காகவும் '96 திரைப்படத்தைப் பார்த்ததன் பிரதிபலிப்பே மேலுள்ள எனது பதிவாகும். இளவயதில் ஆகக் குறைந்தது ஒரு தலையாகவேனும் காதலித்தோர் அல்லது தமது நண்பர்களின் / உறவுகளின் அந்த அனுபவத்தை நன்றாக உணர்தோருக்கு இத்திரைப்படம் நிச்சயமாக ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும். 

Link to comment
Share on other sites

9 hours ago, ragunathan said:

காதல் எனும் உணர்வு ஒரு ரசாயனச் சேர்க்கையின் விளைவுதான் என்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கூறினேன். அவர் உடன்படவில்லை, கோபித்தும் கொண்டார். ஆனால், அதுதான் உண்மை. உடலில் சுரக்கும் ஹோர்மோன்களான டெஸ்டெஸ்டொரோன், ஈஸ்ட்ரொஜின், ஒக்ஸிடொஸின், வஸோப்ரெஸின், அட்ரெனெலின், டொபோமின், செரோடொனின் என்று ஒரு சிறிய கூட்டம் ஹோர்மோன்கள்தான் காதலையும், கவர்ச்சியையும் தூண்டுகின்றன. நாம் காதல் என்றும், காவியம் என்றும், தெய்வீகம் என்றும் கற்பிதம் கூறும் இந்தக் காதல் வெறும் ரசாயன மாற்றம்தான் என்றான பிறகு இக்காதல்பற்றி அதிசயப்பட எதுவுமில்லையென்றாகி விட்டது எனக்கு.

அதேபோல , காதல்த் தோல்வியென்றும், காதலினால் பொறாமை என்றும், நாம் உளறுவதும் கூட ஹோர்மோன்களின் செயற்பாட்டினால்த்தான். 

இக்கருத்துக்கு நிழலி அவர்கள் எழுதிய பதிலையே நானும் எழுத நினைத்தேன். இது காதல் பற்றிய உரையாடல்களில் வழமையாக வைக்கப்படும் ஓர் விமர்சனமாகும். நிழலி அவர்கள் குறிப்பிட்டது போல மனித வாழ்வில் நாம் உணரும் எந்தவிதமான உணர்வுகளும் இரசாயணச் செயற்பாடுகளின் விழைவுகள் தான் எனக்கூறலாம். அப்படிப் பார்த்தால் சாம்பல் தான் எஞ்சும். தெய்வம் என்ற ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் பொய்யென சித்தர்கள் உணர்ந்ததை நாமே உணர்வோம். 

இயல்பாக உங்கள் கருத்தினைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி, ரகுநாதன். :)

3 hours ago, ரதி said:

எனக்கும் இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குது என்று புரியவில்லை? ...ஒரு வேளை காதல் என்னும் இளகிய மனம் என்னிடம் இல்லையோ😄
 
ரதி, இத்திரைப்படம் ஓர் அனுபவ பூர்வமானது. ஒவ்வொருவரின் கண்ணோட்டம், அப்போதைய சூழல், மனோநிலை பொறுத்து இத்திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் மாறுபடலாம். 'நீ தானே என் பொன் வசந்தம்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற திரைப்படங்களும் அவ்வாறானதே; மாறுபட்ட கருத்துக்கள் இவற்றுக்கும் உண்டு. தவிர, கால மாற்றத்தில் பிடித்த படங்கள் பிடிக்காமலும், வெறுத்து ஒதுக்கப்பட்ட திரைப்படங்கள் கொண்டாடப்படுவதும் உண்டு. :)

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

96 படமும் அதே வகையில் பல வருடங்களுக்கு முன்னர் வந்த அழகி படமும் எனக்கு நன்கு பிடித்துப் போனதுக்கு காரணங்களுக்குள் ஒன்று இப்படியான மரத்தை சுற்றி பாடுவது போன்ற அபத்தங்கள் இல்லாமல் காதலுடன் சேர்ந்து ஏமாற்றங்களும்,காயங்களும், தனிமையையும் பற்றி பேசுவதால். தமிழ் சினிமாவில் காதலை காட்டுகின்றோம் என்று காட்டும் வழக்கமான பல அபத்தக் காட்சிகள் இதில் இல்லை. அத்துடன் பதின்ம வயதில் ஏற்படும் காதலை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்டி செல்வதாலும், படம் முழுக்க பயணிக்கும் இளையராஜாவின் 90 களில் வந்த பாட்டுக்களாலும் இப் படம் எனக்கு பிடித்துப் போகின்றது

இப்படி எல்லாவற்றையும் காரணங்களுடன் பார்த்தால் வாழ்வில் எஞ்சுவது வெறும் தட்டையான விரக்கி மட்டும் தான் ரகு. தாய் பாசத்தில் இருந்து எமக்கு ஏற்படும் கோப உணர்ச்சி வரைக்கும் ஹோர்மோன்களால் தான் நிகழ்த்தப்படுகின்றன.

மிக்க நன்றி நிழலி. எனது அபிப்பிராயத்தை பிரதிபலிப்பதான கருத்தைச் சொன்னீர்கள். 😊

அத்துடன் அந்த இளையராஜாவின் பாடல்கள் பாடப்படும் காட்சிகள் அழகானவை! 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இது எல்லோர் வாழ்விலும் எதாவது ஒரு வகையில் தடம் பதித்து சென்றிருக்கும் அல்லது மிதித்து விட்டு சென்றிருக்கும்.அதனால்தான் திரைப்படங்களிலோ பொது வெளிகளிலோ காதலை தரிசிக்கும் பொழுது நாமே நம்மை அதற்குள் பொருத்திப் பார்த்து எமது ஈகோவை திருப்திப் படுத்திக் கொள்ளுகிறோம்.சொல்லி வெற்றியடைந்த காதல்களை விட சொல்லாமல் கரைந்துபோன காதல்கள் அதிகம்.அப்படியானவர்களை இந்தப்படம் வெகுவாக கவர்ந்திருக்கும்......!  🌼 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

96 படமும் அதே வகையில் பல வருடங்களுக்கு முன்னர் வந்த அழகி படமும் எனக்கு நன்கு பிடித்துப் போனதுக்கு காரணங்களுக்குள் ஒன்று இப்படியான மரத்தை சுற்றி பாடுவது போன்ற அபத்தங்கள் இல்லாமல் காதலுடன் சேர்ந்து ஏமாற்றங்களும்,காயங்களும், தனிமையையும் பற்றி பேசுவதால். தமிழ் சினிமாவில் காதலை காட்டுகின்றோம் என்று காட்டும் வழக்கமான பல அபத்தக் காட்சிகள் இதில் இல்லை. அத்துடன் பதின்ம வயதில் ஏற்படும் காதலை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்டி செல்வதாலும், படம் முழுக்க பயணிக்கும் இளையராஜாவின் 90 களில் வந்த பாட்டுக்களாலும் இப் படம் எனக்கு பிடித்துப் போகின்றது
 
இப்படி எல்லாவற்றையும் காரணங்களுடன் பார்த்தால் வாழ்வில் எஞ்சுவது வெறும் தட்டையான விரக்கி மட்டும் தான் ரகு. தாய் பாசத்தில் இருந்து எமக்கு ஏற்படும் கோப உணர்ச்சி வரைக்கும் ஹோர்மோன்களால் தான் நிகழ்த்தப்படுகின்றன. காதலை வைத்து உருவான அத்தனை காவியங்களையும், சினிமாக்களையும், சரிந்த எழுந்த சாம்ராஜ்ஜியங்களையும் வெறுமனே ஹோர்மன்களின் குழப்படியால் நிகழ்ந்தன என்று விட்டு போய்விட முடியும் நீங்கள் சொல்லும் முறையில் அணுகினால்.
adrenaline னும் noradrenaline இல்லாவிடின் கோப உணர்ச்சியும் அதன் காரணமாக எழுகின்ற நியாயமான ஆத்திரமும் இல்லாமல் போய்விடும். testosterone னும் estrogen னும் இல்லாவிடின் காமமும் இல்லை, இவ் உலகில் மனிதர்களும் இல்லை, நானும் நீங்களும் கூட இல்லை.

ஒருவர் சுயநலமாக இருப்பதற்கும், தாயக பற்று இல்லாமல் வெறுமனே இருப்பதற்கும் கூட அவர்களின் ஹோர்மான்களும் டி.என்.ஏ யும் தான் பொறுப்பு என்று விட்டு எளிதில் கடந்து விடுவீர்களா?

நிழலி,

காதலெனும் உணர்வை ஹார்மோன்களின் கூட்டுச் சதி என்று வெறுமையாகச் சொல்லிவிட்டுச் செல்ல நான் நினைத்திருக்கவில்லை. அப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்கிற ஆதங்கம்தான் என்னை எழுதத் தூண்டியது. காதலும், அதனால் வரும் ஆசைகளும் இன்பங்களும், கூடவே இடைச்செருகல்களாய் சேர்ந்து வரும் ஏக்கங்கள், ஆற்றாமைகள், வெறுமைகள், விரக்திகள், ஏமாற்றங்கள்  என்று எல்லாமுமே ஹார்மோன்களினால்த்தான் என்று பழியைப் போட்டுவிட்டு போகத்தான் விரும்புகிறேன்.

ஆனால், அது அப்படியில்லை என்பது நான் இங்கு எழுதும்போதே எனக்கு நன்கு தெரியும். எப்படிக் கல்சியமும், புரோட்டினும், கொழுப்போடு இரத்தமும்தான்  தான் மனிதனின் உருவமே அன்றி எதுவுமில்லை என்று எம்மால் சொல்லிவிட்டுப் போகமுடியாமல் இருக்கிறதோ, அதேமாதிரித்தான் உணர்வுகளுக்கு, காதல் உற்பட்ட, ஹார்மோன்களில் பழியைப் போட்டுவிட்டுச் செல்லமுடியாது.

நீங்கள் கேட்டதால்ச் சொல்கிறேன், தாயக்ம் மீதான பற்றும், என்னினம் அடைந்த அழிவும், அதனோடு இருக்கும் கோபமும் எப்படி ஹார்மோன்களாலினால் ஏற்பட்ட ஒரு ரசாயனத் தக்கம் என்று என்னால் சொல்லமுடியாதோ, அதுபோலத்தான் எல்லா உணர்வும்.

காதல் வெறுப்பதற்கும் காதலித்துப் பார்த்திருக்க வேண்டும். எனக்கு அது நன்கே இருக்கிறது. அதனால் சிறு வெறுப்பு. ஆற்றாமையும், கோபமும், விரக்தியும் சேர்ந்து என்னை அலைக்கழித்தது. இன்னும் சொல்லப்போனால், செரொடொனின் எனும் ரசாயனம் தரமிழந்துபோய் நான் துன்பப்படுகிறேன் என்று சொல்லலாமா? ( அதுதான் ஆற்றமையும், விரக்தியும் உருவாகக் காரணமாம் !!!)

உணர்வுகளைக் கொச்சைப்படுத்தவில்லை, அந்த உணர்வுகள் இப்போதைக்கு எனக்கு வெறுக்கிறது, அவ்வளவுதான். மற்றும்படி ரசாயனம் எல்லாம் சும்மா, ஒரு பேச்சுக்கு இழுத்துக் கொண்டு வந்தது !

அதுசரி, படம் எப்படி, யாருக்குத் தெரியும்? பார்த்தால்த்தானே??? 

Link to comment
Share on other sites

19 minutes ago, ragunathan said:

அதுசரி, படம் எப்படி, யாருக்குத் தெரியும்? பார்த்தால்த்தானே??? 

பார்த்தவர்கள் ஓகே என்டு சொல்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Rajesh said:

பார்த்தவர்கள் ஓகே என்டு சொல்றார்கள்!

பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள். பார்க்கலாம் , இந்த வார விடுமுறையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்தேன். அநியாயத்துக்கும் மிக நல்லவனாக இருப்பதும் தூய காதலாகக் காட்டுவதும் கொஞ்சம் ஓவராகப் பட்டது. இளவயதுக் கதாநாயகி சின்ன வயதில் தெரிந்த ஒருவரை வேறு ஞாபகப்படுத்தினார்.🥰

Link to comment
Share on other sites

9 hours ago, ragunathan said:

பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள். பார்க்கலாம் , இந்த வார விடுமுறையில்.

பார்த்துவிட்டு அதைப்பற்றிய உங்கள்  பார்வையையும் எழுதுங்கள். ஆவலுடன் உள்ளேன்! 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண ஓர் காதல் கதைதான் மல்லிகை வாசம்  தன் தகப்பனின் கடன் சுமையால் ஊரை விட்டு போகிறார் (காதலியையும் ) சின்ன வயதில் பிறகு கல்லூரியில் சந்திக்க போகிறார் முடியாது போகிறது பிறகு ஒர் ஆண்டில பயின்றவர்கள் கூட நினைக்கிறார்கள்  அந்த வேளையில் அவர்கள் ஓர் இரவை கழிக்கிறார்கள் சுத்தமாக 

ஆனால் அவள் நினைவாக வாழ்வதென்பதெல்லாம்  சீறோ நிலைதான் காதல் வாழும் காதலர்களும் வாழ்வார்கள் கழட்டிவிடப்பட்டவர்கள் , கரசேர முடியாதவர்கள் வாழ்க்கையென்பது தூரம் தெரியும் கானல் நீர் மாத்திரம் தெரியும் ஆனால் அருகில் போனால் இராது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியின் அற்புதமான அலட்டலில்லாத நடிப்புக்கும் சிறு வயது தேவதர்சினியின் குறும்புக்குத்தனமான நடிப்பிற்கும் இப்படத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப் படத்தைப் பார்த்தேன் நண்பர்களே ! படம் ஒன்றிரண்டு இடங்களில் ' போர் ' அடித்தது. மற்றபடி விஜய் சேதுபதியும் திரிஷாவும் தங்களது தேர்ந்த நடிப்பால் சமூகத்தில் அபாயகரமான ஒரு விடயத்தை சுவாரஸ்யமானதாக மாற்றியிருக்கிறார்கள். சிறுவயதில் தங்களுக்கிடையே இருந்த இனக்கவர்ச்சியை (infatuation), பெரியவர்களான பின்னர் உரசிப் பார்க்கிறார்கள் (அதுவும் திரிஷாவிற்கு வேறு ஒரு அழகான மணவாழ்க்கை அமைந்த பின்னர்). நடிப்பாற்றலாலும் நல்ல படமாக்கலினாலும் ஒரு சமூகச் சீர்கேடான விடயத்தை ஏதோ உன்னதமான காதல் காவியம் போல் தீட்டியிருக்கிறார்கள். பார்வையாளர்களை மதிமயங்க வைக்கும் அளவு திறமை எட்டிப் பார்க்கிறது (அத்திறமையும் சுமார் ரகம்தான்). படம் பண்ணுகிறவர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வும் வேண்டும். 'மேற்குத் தொடர்ச்சி மலை' மற்றும் 'பரியேறும் பெருமாள்' போன்ற படங்களைக் கொடுத்தவர்களுக்கு அந்தப் பொறுப்புணர்வு நிரம்ப உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96 வார்த்தைகள் இல்லை

தமிழ் சினிமாவில் வழமையான மசாலாப்படங்களுக்கு மத்தியில் மனதைவசைக்கும் படங்களும் இடையிடையே வரத்தான் செய்கிறது. படம் 96 யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்று முகநூல் வெளிகளிலும் பல விமர்சனத்தளங்களிலும் சர்ச்சைக்குரிய தாக மற்றும் சமூக ஒழுக்கஞ் சிதறியதாக அல்லது ஒழுக்கத்தை சிதற வைக்கக்கூடியதாக அல்லது அத்தகைய நடப்புகளுக்கு வழிவகுக்கக்கூடியதாக என்றதான கருத்தாடல்களுக்களைக் கடந்து 96 மனதிற்கு இசைவான அகவெளித்தேடல்களுக்கு பதில் சொல்வதாகவும் அமைந்துள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு பள்ளிக்கூட வயதுக்காதல் எவ்வளவு ரம்மியமானது என்பதை பதிவு செய்து எல்லோருக்குள்ளும் மீள அப்பருவத்தை அசை மீட்ட வாய்ப்பளித்திருக்கிறது. இதமாக வருடி விட்டிருக்கிறது. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதேபோல ஒவ்வொருவருடைய குணநலன்களும் நற்பண்புகளைக் கொண்டிருப்பதில்லை. அண்மையில் 96 இன் விமர்சனம் ஒன்று ராமின் ஆண்மை குறித்தும் ராமும் ஜானுவும் புணராமல் விட்டமை குறித்தும் முகநூல் வெளியில் பலதரப்பட்ட அருவருக்கத்தக்க வகையில் முற்போக்குவாதிகளாக தம்மை நிலை நிறுத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள் மேதாவித்தனமாக பதிவிட்டிருந்தார்கள். முற்போக்கு என்றால் அம்மணமாக நிற்பதும் கிடைத்த சந்தர்ப்பங்களில் ஆண்குறிகளை நிமிர்த்துவதாக நினைத்துவிட்டார்களோ..  படத்தின் நாயகன் அப்படி இல்லை என்பதை ஏற்க முடியாமல் நம்ம விமர்சகர்கள் கதாநாயகனை கே ஆக்கி விட்டார்கள். உண்மையிலேயே சபலங்களுக்கு அப்பாலும் காதல் வாழும். அத்தகைய காதல் எல்லோருக்கும் புரியாது. பிம்பங்களுக்கு அப்பாலும் காதல் செய்ய முடியும். ஆழமாக காதலித்த இருவர் மறுபடியும் பல ஆண்டுகளின் பின்னால் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்போது அவர்களுக்குள் காமம் தோன்றுவதில்லை. காமம் தோன்றவில்லை என்றால் அது காதல் இல்லை என்று ஆகிவிடாதுதானே. காலமும், சமூகமும் சேர்ந்து ஒருங்கமைத்த எவராலும் காதலனையோ அல்லது காதலியையோ மீளவும் காணும்போது பேசப்பழக முடியுமே தவிர காமுறமுடியாது. கால இடைவெளி சிற்றின்ப நிலையிலிருந்து பேரின்ப நிலைக்கு இருவரையும் மாற்றிவிடும். ஒருவித பக்தி மனப்பான்மை அதிகரிக்கும் வேறென்ன சொல்ல….  மல்லிகை வாசம் தன்பங்குக்கு எழுதியிருக்கிறார் நாமும் நம்ம பங்குக்கு…….. 96 பலருக்குள் தேடலை புதுப்பித்திருக்கும். இந்த அலை அவ்வளவு சீக்கிரம் அடங்கிவிடாது. ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள அகவெளியை நோண்டிவிட்டிருக்கிறது. பலநேரங்களில் இரணமாக இருந்தாலும் ஆறுகிற காயத்தை மீள மீளச் சொறிவதில் இன்பம்போல் இதுவும் அகவெளியில் மீள மீள வலித்தாலும் சுகம் கொடுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்தப்படத்தை பார்த்தேன். என்னை பொறுத்தவரை இது காதல் அல்ல என்பேன் இனக்கவர்ச்சியே. இது பொதுவாக எல்லாருக்கும் 14, 15 வயதில் ஏற்படுவது. படத்தில் கதாநாயகன் மிகவும் நல்லவனாக காட்டப்படுகின்றான். பாத்ரூமில்அழுகின்ற ஜானுவை (திரிஷா) தேற்றக்கூட தொடுகின்றானில்லை. இது மிகவும் ஓவர், சாத்தியமற்றது. ஒரு கட்டியணைபேபோதும் ஆயிரம் முறை வாயல் தேற்றுவதற்கு சமம். 

(ஆனால் அப்படி செய்யமுடியாது ஜானு இன்னொருவரின் மனைவி) பின்பு ஏன் இந்த உணர்வுகளின் உரசல்கள். 

ஒரு கட்டத்தில் காரில் கியர் மாத்தும்போது கூட காதலி கையை பிடிக்கும்போது, காதலனுக்கு உணர்ச்சியில்லை. (பார்க்கின்ற எங்களுக்கு படபட வேன கியர் எறுகின்றது). இதென்னடா இப்படியும் நடக்குமா? மேலும் இந்த காதலியை நினைத்து கல்யாணமே செய்யாமல் காதலன் பிரம்ம்ச்சாரியாக வாழுகின்றான். இது மிகவும் பிழையானது.

என்னை பொறுத்தவரை 100% காதல்/அன்பு என்பதெல்லாம் சுத்தப்பபொய். காதலுக்குள் காமம் உள்ளது, இதை தவிர்க்கவேமுடியாது.  காமத்தினூடாகவே காதல் முடிவு பெறும்/பூரணப்படும் காமமின்றி காதல் இல்லவே இல்லை. 

சிங்ப்பூரில் இருந்து வரும் ஜனூ தன்னை நம்பி அனுப்பிய  கணவருக்கு துரோகம் செய்தாரா? உடல்ரீதியாக அல்ல,ஆனால் மான‌சீகமாக ஏனெனில்  இங்கு marriage vow மீற்ப்பட்டுள்ளது.
 
Link to comment
Share on other sites

1 hour ago, வல்வை சகாறா said:

படம் 96 யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்று முகநூல் வெளிகளிலும் பல விமர்சனத்தளங்களிலும் சர்ச்சைக்குரிய தாக மற்றும் சமூக ஒழுக்கஞ் சிதறியதாக அல்லது ஒழுக்கத்தை சிதற வைக்கக்கூடியதாக அல்லது அத்தகைய நடப்புகளுக்கு வழிவகுக்கக்கூடியதாக என்றதான கருத்தாடல்களுக்களைக் கடந்து 96 மனதிற்கு இசைவான அகவெளித்தேடல்களுக்கு பதில் சொல்வதாகவும் அமைந்துள்ளது.

அண்மையில் 96 இன் விமர்சனம் ஒன்று ராமின் ஆண்மை குறித்தும் ராமும் ஜானுவும் புணராமல் விட்டமை குறித்தும் முகநூல் வெளியில் பலதரப்பட்ட அருவருக்கத்தக்க வகையில் முற்போக்குவாதிகளாக தம்மை நிலை நிறுத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள் மேதாவித்தனமாக பதிவிட்டிருந்தார்கள். ..  

இவ்வாறான சர்ச்சைகளை நானும் பல்வேறு சமூகத் தளங்களில் பார்த்துள்ளேன். அவர்கள் தமது  பார்வை எதுவோ அதற்குள்ளேயே முடங்கிப் பிறரது எண்ணங்களை புரிந்து கொள்ள இயலாதவர்களாக / விரும்பாதவர்களாக இருக்கின்றபடியால் அவற்றைக் கண்டு கொள்ளாமல் சென்றிருக்கிறேன். 

உங்கள் பார்வையையும் அருமையாக இங்கு பகிர்தமைக்கு நன்றி சகாரா அக்கா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.