Jump to content

7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டத்துடன் ஆஸி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டத்துடன் ஆஸி.

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை குவித்துள்ளது.

aus2.jpg

இவ் விரு அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. 

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நேற்றைய ஆட்ட நேர முடிவின் வரை இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்திருந்தது. ஆடுகளத்தில் மெஹமட் ஷமி 6 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாளான இன்று முதல் பந்திலேயே ஷமி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்காக 250 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பாக புஜாரா 123 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 37 ஓட்டங்களையும், ரிஷாத் பந்த் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 25 ஓட்டங்களையும் அதிகப்படியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக  ஹேசல்வுட் 3 விக்கெட்டுக்களையும் மிச்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் நெதன் லியோன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 88 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றவேளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

aus4.jpg

அவுஸ்திரேலிய அணி சார்பாக டிராவிஸ் ஹெட் 61 ஓட்டங்களையும், பீட்டர் ஹான்சாம்கோப் 34 ஓட்டத்தையும், உஸ்மான் கவாஜா 28 ஓட்டத்தையும், மார்கஸ் ஹாரிஸ் 26 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

aus3.jpg

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும், இஷான் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

ஆடுகளத்தில் டிராவிஸ் ஹெட் 61 ஓட்டங்களுடனும், மிச்செல் ஸ்டாக் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். நாளை போட்டியின் மூன்றாம் நாளாகும்.

 

http://www.virakesari.lk/article/45935

Link to comment
Share on other sites

அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா #AUSvIND

அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா
 
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 235 ரன்னில் சுருண்டது.

15 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 40 ரன்னுடனும், ரகானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 


இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். புஜாரா 140 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரகானே நம்பிக்கையுடன் விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டே வந்தது.

இந்தியாவின் ஸ்கோர் 234 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. புஜாரா 204 பந்தில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா - ரகானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. அடுத்து ரோகித் சர்மா களம் இறங்கினார். இவர் 1 ரன் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரகானே உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். ரகானே 111 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்தது. ரகானே 57 ரன்களுடனும், ரிஷப் பந்த் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது இந்தியா 275 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

201812090920017592_1_lyon0912011._L_styv

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாதன் லயன் ஓவரில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசினார். ஆனால் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். அப்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த அஸ்வின் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ரகானே 70 ரன்னில் ஆட்டமிழந்தார். அத்துடன் ஏறக்குறைய இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவிற்கு வந்தது.

முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் டக்அவுட்டில் வெளியேற இந்தியா 106.5 ஓவரில் 307 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஏற்கனவே முதல் இன்னிங்சில் 15 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் லயன் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/09092002/1217145/AUSvIND-Adelaide-Test-India-323-Runs-Target-to-India.vpf
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.