Sign in to follow this  
கிருபன்

அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை ஜனாதிபதி நிராகரித்தார் – ஐ.தே.க குற்றச்சாட்டு

Recommended Posts

அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை ஜனாதிபதி நிராகரித்தார் – ஐ.தே.க குற்றச்சாட்டு

Akila-Viraj-Kariyawasam.jpg

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களால் செயல்படுத்தப்படவிருந்த அபிவிருத்தித் திட்டங்கள் அடங்கிய அமைச்சரவை ஆவணங்களை கடந்த 3 ஆண்டுகளில் ஜனாதிபதி மைத்திரி நிராகரித்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில்விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சிவில் ஆர்வலர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.தே.க.வால் வழங்கப்பட்ட பல அமைச்சரவை பாத்திரங்களில் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பிரதமரால் முன்வைக்கப்பட்ட வேலை வாய்ப்புகளை கூட ஓரிரு வருடங்களுக்கு காலதாமதம் ஏற்படுத்தியதாகவும், அதில் சில இரத்து செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஐக்கிய தேசியக்கட்சி திருடர்களை பிடிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் கடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்சம் ஊழல் தொடர்பில் ஆய்வு செய்வதில் அக்கறையற்றவர் யார் என்பதை பொது மக்களுக்கு தற்போது தெளிவாக அறிந்துகொண்டுள்ளனர்.

அத்தோடு மஹிந்த ராஜபக்ஷவை கைப்பற்றியது யார் என்றும் தற்போது தெளிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/அபிவிருத்தித்-திட்டங்க-2/

 

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this