Sign in to follow this  
பிழம்பு

மன்னார் மனித புதைகுழியிலிருந்து விலங்குடன் கால்கள் கட்டப்பட்ட மனித எலும்புக்கூடு :

Recommended Posts

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_1515.jpg?resize=800%2C450
மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பனியானது 112 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது. இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்றைய தினம் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று மதியம் அளவில் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுக கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாம் என காணமல் போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் இன்று கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு கம்பியால் கட்டப்பட்ட மனித எச்சம் என்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடைய பொருட்களும் மீட்;கப்பட்டு வருகின்றது

இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 256 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 250 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது

IMG_1521.jpg?resize=723%2C407IMG_1522.jpg?resize=723%2C407

IMG_1517.jpg?resize=800%2C450

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, பிழம்பு said:

இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாம் என காணமல் போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் இன்று கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு கம்பியால் கட்டப்பட்ட மனித எச்சம் என்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

இந்த புதைகுழி பெரிய மர்மமாக இருந்தும் தமிழ் தலைவர்கள் இதனை கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.ஒரு பக்கம் பிள்ளைகளைக் காணவில்லையே என்று போராட்டம்.மறுபக்கம் தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும் மனித எலும்புக் கூடு.கதிரைகளுக்காக குரல் கொடுக்கும் எவரும் உயிர்களுக்காக குரல் கொடுப்பதாக தெரியவில்லை.
ஏன் இந்த மெளனம் என்று தெரியவில்லை.உடலங்களைக் கண்டு பிடிக்க எத்தனையோ அதிநவீன முறைகள் இருந்தும் யாருமே முன்வராதது மிகவும் ஏமாற்றமாகவும் மனதுக்கு உழைச்சலாகவும் இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this