பிழம்பு

ஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும்

Recommended Posts

குளோபல் தமிழ்ச் செய்திகள்…

Iranaimadu1.jpg?resize=800%2C534

இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் கிளிநொச்சி இரணைமடுகுளத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று(05) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு தற்போது இரண்டு வருடங்களின் பின் குளத்தின் நீர் கொள்ளளவு முழுமையை எட்டியுள்ள நிலையில் ஆளுநர் றெஜினோல்ட் குரே விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளார்.

இரணைமடுகுளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது. இதுவரை காலமும் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 500 ஏக்கர் அடியாக (131 எம்சிஎம்) காணப்பட்ட நீர் கொள்ளளவு தற்போது ஒரு இலட்சத்து 19500 ஏக்கர் அடியாக(147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயரும் போது குளம் இந்த கொள்லளவை அடையும். தற்போது இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 35.4 அடியாக காணப்படுகிறது.

ஜனாதிபதியை அழைத்து வந்து இரணைமடுகுளத்தை திறக்கும் திட்டம் இருப்பது பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட போது கருத்து தெரிவித்த அளுநர் ஆம், ஆனாலும் தற்போது குளத்தின் நிலைமைகளை பார்வையிடுவதற்காவே வருகை தந்துள்ளேன். குளத்தின் நீர் மட்டம் அதன் வான் பாயும் அளவை இன்னமும் அடையவில்லை. எனவே இது தொடர்பில் மாவட்ட அரச அதிபருடன் இனைந்து நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவித்தல்களை பெற்று அதற்கமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Iranaimadu1-1.jpg?resize=800%2C534Iranaimadu2.jpg?resize=800%2C534Iranaimadu3.jpg?resize=800%2C534Iranaimadu4.jpg?resize=800%2C534Iranaimadu5.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/105701/

Share this post


Link to post
Share on other sites

அந்தாள் மைத்திரிக்கு இரு்கிற பிரச்சணைக்குள, உதுக்கே வரப்போகுது மனிசன்?

Share this post


Link to post
Share on other sites

இரணைமடுவுக்கு ஜனாதிபதியின் திடீர் பயணத்திற்கான ஏற்பாடுகள் தீிவிரம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_7482.jpg?resize=800%2C533
நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி இரணைமடுவுக்கு செல்லவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகளை திறக்கும் பொருட்டு ஜனாதிபதி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் எவரும் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை.

ஆனாலும் இன்றைய தினம் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறைமா அதிபர் கேபி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

IMG_7454.jpg?resize=800%2C533IMG_7455.jpg?resize=800%2C533 

http://globaltamilnews.net/2018/105835/

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, Nathamuni said:

அந்தாள் மைத்திரிக்கு இரு்கிற பிரச்சணைக்குள, உதுக்கே வரப்போகுது மனிசன்?

அரசியலை விட்டுட்டு தோட்டம் செய்ய போகிறேன் என்றார்.இரணைமடுவுக்கு போய் செய்ய போகறாரோ தெரியல்லை.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நீர்ப்பாசனத்திணைக்களத்தில் வேலைக்கு மனுச்செய்திருப்பார்

Share this post


Link to post
Share on other sites

maithiri-720x450.png

இரணைமடு குளம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு!- கூட்டமைப்பினரின் பங்கேற்பு சந்தேகம்

அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த  இரணைமடு குளம் வான் கதவுகளை சம்பிரதாய பூர்வமாக  திறந்து வைக்கும் நிகழ்வில கலந்துக் கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் இன்றைய விஜயம் அமையவுள்ளது.

ஜனாதிபதியுடன் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால்,  நாட்டில் அரசியல் குழப்பம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொள்வது சந்தேகம் எனத் தொிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி  இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்  நேற்று நேரடியாக  இரணைமடு குளத்திற்கு  சென்று ஏற்பாடுகள் தொடர்பில் அவதானித்திருந்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஜனாதிபதி-கிளிநொச்சிக்க/

 

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

பலத்த பாதுகாப்புடன் மைத்திரி இரணைமடு குளத்தின் வான் கதவு திறந்துவைத்தார்

%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-300x168.jpg

இலங்கையின் பெரிய குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான் கதவு ஒன்று சம்பிரதாயபூர்வமாக சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரணைமடு குளத்தின் வான் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரான காலப்பகுதிகளில் குறித்த குளம் மீள் கட்டுமாணத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இந்த குளத்தின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF-287இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

மேலும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரணைமடுவிற்கு வந்திறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.todayjaffna.com/133554

Share this post


Link to post
Share on other sites
58 minutes ago, Ahasthiyan said:

பலத்த பாதுகாப்புடன் மைத்திரி இரணைமடு குளத்தின் வான் கதவு திறந்துவைத்தார்

மேலும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரணைமடுவிற்கு வந்திறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சனாதிபதி மைத்திரிபாலவிடம் இருந்து இலங்கைமக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு தேடவேண்டிய அதிமுக்கிய தருணத்தில்.... அந்த மைத்திரிக்குப் பாதுகாப்பு கொடுப்பது விசித்திரமாக இல்லை....????

Share this post


Link to post
Share on other sites

இனி விவசாயம் செழிக்கும் போல இரணைமடுக்குளத்தினால் :unsure:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now