Jump to content

எனது பார்வையில் 2.0 3D


Recommended Posts

பிரம்மாண்டமான காட்சியமைப்பு, சமூக அநீதிக்கு எதிரான போராட்டம், சமூகத்துக்கு ஒரு செய்தி என வழமையான சங்கர் படங்களின் பாணியில் தான் இருக்கும் என எதிர்பார்த்துச் சென்றது போலவே 2.0ம் இருந்தது. 

எனினும் இதில் சங்கர் எடுத்துக்கொண்ட களம் புதிது; இலகுவாகப் புறக்கணித்து ஒதுக்கக் கூடிய, ஆனால் ஒதுக்கிவிடக் கூடாத சமூகப் பிரச்சினை. அதை விறுவிறுப்பான திரைக்கதையுடனும், பிரம்மிக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடனும்  வழங்கிய விதம் கற்பனைக்கும் மிக மிக அப்பாற்பட்டது. படத்தின் Title cardல் இருந்து ஆரம்பித்து நிறைவுறும் வரையில் தொடர்ந்த 3D அனுபவம் ஒரு Theme park சென்றது போன்ற ஓர் உணர்வு. 

ஒருபக்கம் stylish, mass hero ரஜினி பல்வேறு ரூபங்களில் அமர்க்களப்படுத்த, மறுபக்கம் அக்க்ஷய்  குமாரின் நெகிழ வைத்த, இன்னும் மிரட்டவும் செய்த நடிப்பும், இடையே எமி ஜாக்சன் எனும் அழகுப் பதுமையும் உள்ளம் கவர்ந்தன. 

பெரிய பட்ஜெட் என வீணடித்தும் தரமான சினிமாவைத் தர முடியாத இயக்குனர் சங்கர் என்ற என் அபிப்பிராயத்தை மாற்றிய படம் இது. சில குறைகள் ஆங்காங்கே தெரிந்தாலும் ஓரு Science fiction சினிமா என்ற அளவில் அவற்றைப் புறக்கணிக்கலாம். 

மேலும், சங்கரின் முன்னைய படங்களில் (எந்திரன் தவிர) இருந்த பல சினிமாத்தனமான குறைகள் 2.0ல் இல்லை - குறிப்பாக திரைக்கதையின் ஓட்டத்துக்கு இடையூறான பாடல் காட்சிகள், காதல், நகைச்சுவைக் காட்சிகள் இல்லை;  ஆனாலும் இந்த அம்சங்கள் தேவையான இடங்களில் அழகாக, அளவாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக ஓர் முழுமையான பொதியாக 2.0 வழங்கப்பட்டுள்ளமை இப்படக்குழுவின் வெற்றியாகும்.

(இருந்தாலும் பாட்டி வடை சுட்ட கதையையும் சங்கர் இப்படிப் பிரம்மாண்டமாக திரைப்படமாக்குவாரோ என்ற ஒரு குறும்புக் கேள்வியும் எனக்குள் எட்டிப் பார்த்தது! படம் பார்த்தவர்கள் இதனைக் கற்பனை செய்க: - பறவைகள் = காக்கா, செல் போன் = வடை, ரஜினி = நரி, அக்ஷய் குமார் = பாட்டி என!) ???

எது எப்படியோ தமிழ் சினிமாவை முழு இந்தியாவும், இன்னும் உலகளாவிய சினிமா ரசிகர்களும் கவனிக்க வைக்கும் திரைப்படமாக 2.0 அமையும் எனக் கூறுவது மிகையாகாது தான். இதனை உலகத்தரம் மிக்க சினிமா எனக் கொண்டாடுவதற்கு வெறுமனே அதன் 3D Graphics வேலைப்பாடுகள் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் மட்டும் காரணமல்ல; கூடவே புது விதமான கதைக்களமும், அதனை ஓரளவுக்குச் சிறப்பான திரைக்கதை மூலம் நமக்களித்த விதமும், அதன் மூலம் மக்களிடையே ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தியமையும் முக்கியமான காரணிகளாகும். 

இந்த வேளையில், இதன் முன்னைய படமான எந்திரன் திரைப்படத்திற்கு பல வருடங்களுக்கு முன்னர் கருவளித்த மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களை நன்றியுடன் நினைவுகூரல் பொருத்தமானது. ஒரு Science fiction என்ற ரீதியில் உலக சினிமாவுக்கான அத்திவாரம் அங்கேயே இடப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சி தான் 2.0. ?

கடைசி பஞ்ச்: 2.0 - செல்போன்களின் சுனாமி, மாஸ்'னா ரஜினி என்று போனா எல்லாம் செல்போனா இருக்கே! ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.