Jump to content

பொட்டு அம்மானை முடித்துவிட்டோம் - மீண்டும் எழும்புவதென்றால், சடலம்தான் எழ வேண்டும் - பீல்ட் மார்ஷல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 
நோர்வேயில் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
 
மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், மீண்டும் புலிகள் புத்துயிர் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார்.
 
எனினும் இதனை மறுக்கும் பொன்சேகா போலியான தகவல்களை வெளியிட வேண்டாம் என கேட்டுள்ளார்.
 
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
 
“நாங்கள் பொட்டு அம்மானை போரின் போது நிறைவு செய்துவிட்டோம். மீண்டும் எழும்புவதென்றால், சடலங்கள் தான் எழும்ப வேண்டும். போலி பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். இராணுவத்தினர் கடமைகளை நிறைவு செய்துள்ளனர்.
 
அத்துடன் தான் யார் என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என கருணா குறிப்பிட்டுள்ளார்.
 
கருணா நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். நான் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

அத்துடன் தான் யார் என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என கருணா குறிப்பிட்டுள்ளார்.

 கருணாவின் position சொறி லங்கா அரசை பொறுத்தவரையில் சட்ட நடவடிக்கையில் இருந்து நிரந்தரமாக விலக்களிப்படாத பயங்கரவாதி என்பததற்கு, இதை விட எதாவது சான்று வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீல்ட் மார்சல்  தான் உள்ளுக்க இருந்ததை மறந்தது போயிட்டார்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

பீல்ட் மார்சல்  தான் உள்ளுக்க இருந்ததை மறந்தது போயிட்டார்?
 

உங்கட அண்ணரும் உள்ளுக்க இருந்ததை மறந்து போயிட்டார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2018 at 2:16 PM, colomban said:

கருணா நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். நான் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சும்மா இப்பிடி பேசிக்கிட்டே இருந்தா எப்படி ...? அடிச்சுக்காட்டுறது அப்பதானே தெரியும் யாருக்கு தில்லுன்னு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

பீல்ட் மார்சல்  தான் உள்ளுக்க இருந்ததை மறந்தது போயிட்டார்

என்ன அக்கோய் ...உங்கட அண்ணருக்கு வேறு எதுவோ தேவைப்படுகுது போல ...நோர்வேயிலை பொட்டம்மானை எழுப்புறார் ...
அண்ணை வேற  பழையபடி கூலிக்கு போட்டு தள்ளும் தொழிலை ஆரம்பிச்சுட்டாராமே ...அப்பச்சி இரண்டு மாதம் பிரதமாராக இருந்ததற்கே இவ்வளவு ஆட்டமெண்டால் அப்பச்சி நிரந்தர பிரதமரானால் அவ்வளவுதான் நாங்கள் பாடையில் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

உங்கட அண்ணரும் உள்ளுக்க இருந்ததை மறந்து போயிட்டார்??

நன்றி மீரா...ஒரு நாட்டின் பீல்ட் மார்சலோடு ஒப்பிட்டு என்ட அண்ணரை எங்கேயோ கொண்டு போயிட்டிங்கள் ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நன்றி மீரா...ஒரு நாட்டின் பீல்ட் மார்சலோடு ஒப்பிட்டு என்ட அண்ணரை எங்கேயோ கொண்டு போயிட்டிங்கள் ?
 

உங்கட அண்ணரும் பீல்ட் மார்சல் மாதிரி கக்கூசு வாசலில் தண்ணி வாளியோட வரிசையில் நின்றிருப்பார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sarath-720x450.png

பொட்டம்மான் தொடர்பில் உண்மையை வெளியிட்டார் பொன்சேகா

யுத்தத்தின் இறுதி தருணத்தில் வெடிகுண்டை வெடிக்கவைத்து விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் தற்கொலை செய்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொட்டு அம்மான் வெளிநாட்டில் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் மாத்திரமே காணப்பட்டனர். அவர்களின் 70 பேர் முதலில் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சேர்த்து ஐவர் காணப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முனைந்தனர். அதில் பொட்டு அம்மானும் ஒருவராவார்.

இருப்பினும் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டினால்  காயமடைந்த பொட்டு அம்மான், தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு  இராணுவத்தினால் உறுதியும் செய்யப்பட்டது.

இதன்போது, கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார். அத்துடன் பிரபாகரன் இருக்குமிடத்தை அவர் தெரிவிக்கவில்லை.

ஆனால், பொட்டு அம்மான் நோர்வேயிற்கு தப்பிச்சென்றுவிட்டாரென பொய்யான தகவலை விநாயகமூர்த்தி முரளீதரன் தற்போது பரப்பி  நாட்டில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றார்” என சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

http://athavannews.com/பொட்டம்மான்-தொடர்பில்-உண/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மானிற்கு என்ன நடந்தது- சரத்பொன்சேகா கருத்து

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை முழு பொய் என முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

வெடிகுண்டை வெடிக்கவைத்து பொட்டு அம்மான் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தற்கொலை செய்துகொண்டார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் காணப்பட்டனர் அவர்களில் 70 பேர் வரை அவருடனேயே கொல்லப்பட்டனர் என சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் ஐவருடன் இணைந்து தப்பிச்செல்வதற்கு பிரபாகரன் திட்டமிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் பொட்டு அம்மானும் ஒருவர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மான் துப்பாக்கிசூட்டில் காயமடைந்தார் அதன் பின்னர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார் என கேபி தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொட்டு அம்மான் நோர்வேயிற்கு தப்பிச்சென்றுவிட்டார் என தெரிவிக்கப்படுவது பொய்யான தகவல், என குறிபிட்டுள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மானின்  உடல் மீட்கப்பட்டதாக கேபி தெரிவித்திருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

sarath_fon.jpg

யுத்தம் இடம்பெற்றவேளை கருணா அம்மான் எனப்படுபவர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார்,எனினும் பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்ற தகவல்களை அவர் படையினரிற்கு வழங்கவில்லை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் கருணா இரவுவிடுதிகளில் காணப்பட்டார் அவ்வாறான நபர் தற்போது அரசியல் நெருக்கடியின் போது கருத்துக்களை வெளியிடுகின்றார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்

அரசாங்கம் அவ்வேளை புலனாய்வு அiமைப்புகள் ஊடாக கருணாவிற்கு நிதி வழங்கியது அவர் அதனை குடித்து அழித்துவிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/45913

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யுத்தம் இடம்பெற்றவேளை கருணா அம்மான் எனப்படுபவர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார்,எனினும் பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்ற தகவல்களை அவர் படையினரிற்கு வழங்கவில்லை

 

2 hours ago, கிருபன் said:

அரசாங்கம் அவ்வேளை புலனாய்வு அiமைப்புகள் ஊடாக கருணாவிற்கு நிதி வழங்கியது அவர் அதனை குடித்து அழித்துவிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 

எதற்காக வெறும் பயலை காெழும்புக்கு கூட்டிவந்து பணம் குடுத்து பாதுகாத்தீங்களாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2018 at 7:20 PM, ரதி said:

பீல்ட் மார்சல்  தான் உள்ளுக்க இருந்ததை மறந்தது போயிட்டார்

 

On 12/5/2018 at 11:04 PM, MEERA said:

உங்கட அண்ணரும் உள்ளுக்க இருந்ததை மறந்து போயிட்டார்??

பொன்சேகாவும், கருணாவும் நீங்கள் சொன்னது மாதிரியே இருந்தனர்.

யார் யாரை அதட்டக் கூடிய நிலையில் உள்ளார்?

அப்படி அதட்டப்பட்டும், வாய் மூடி (தாட்பணிந்து ?) இருந்திருக்கலாமோ என்பதை கூட, மன்னிக்கவும் என்ற தொனியில் கூட முணுமுணுக்க சிந்திக்க வேண்டிய நிலையில் இருப்பவர் யார்?

ஒன்று மாட்டும் தெளிவு, நீங்கள் சொல்லிய கருணா சாணக்கியவாதி என்பது கூட, கருணாவிற்கு பிரச்சனை விளங்கவில்லை என்பது.

புலிகள் அழிக்கப்பட்டும் பயங்கரவாதிகள் அல்ல ஏனெனில் legitimacy.  நாடுகளால் பயங்கரவாதம் என்ற முத்திரையே, புலிகளுக்கு  legitimacy. நாடுகளின் முத்திரை குத்தல் ஓர் அரசியல் இலக்கீடு.  

பிரபாகரன் (சட்ட அறிவு இல்லாமலும்), செல்வநாயகம், சம்பந்தன் (சுமந்திரன் கூட), விக்கி பிரச்சனையை விளங்கியுள்ளனர்.

கருணா இப்போது உண்மையில் ஓர் முகவரியற்ற  பயங்கரவாதி அல்லது கூலிப்படை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.