Jump to content

ரஷ்ய ஆண்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு உக்ரேன் தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

skynews-ukraine-border-goptovka_4504300-720x450.jpg

ரஷ்ய ஆண்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு உக்ரேன் தடை

மொஸ்கோ உக்ரேன் மீது படையெடுப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து 16 வயது முதல் 60 வயதிற்குட்பட்ட ரஷ்ய ஆண்கள் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு உக்ரேன் தடை விதித்துள்ளது.

ரஷ்யர்களை தமது நாட்டில் தனிப் படைகள் உருவாக்குவதை தடுக்கும் நோக்குடன் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்ய பீரங்கிகள் தமது நாட்டின் எல்லையில் முற்றுகையிட்டுள்ளதற்கான ஆதாரங்கள் தம்மிடமுள்ளதாகவும் உக்ரேனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டில் மொஸ்கோவால் கைப்பற்றப்பட்ட கிரைமியா தொடர்பாக இரண்டு நாடுகளுக்குமிடையே நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த மோதல் இவ்வார ஆரம்பத்தில் விரிவடைந்ததையடுத்து உக்ரேனில் இராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இச்சட்டத்தின் ஒரு பகுதியாகவே ரஷ்ய ஆண்களுக்கான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ரஷ்ய-ஆண்கள்-நாட்டுக்குள்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.