Jump to content

'தனித்தமிழ்ப்பற்று' பிறமொழி வெறுப்பைக் குறிக்கிறதா? செம்மொழிப் புதையல்-2


Recommended Posts

'தனித்தமிழ்ப்பற்று' பிறமொழி வெறுப்பைக் குறிக்கிறதா?

செம்மொழிப் புதையல்-2

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

சமற்கிருதமோ, ஆங்கிலமோ கலக்காமல் தனித்தமிழில் பேசிப்பாருங்கள்! நம்மவர் பலரும் உங்களைத் தீவிரவாதியைப் பார்ப்பதுபோலக் கலவரத்துடன் பார்ப்பார்கள். அத்தகைய பார்வையில் ஏதேனும் உண்மை உள்ளதா என்று சற்றே சிந்திக்கலாம்.

கவிதையின் கருதான் முக்கியமேதவிர, மொழி ஒரு பொருட்டல்ல. கவிதைக்கான உயர்ந்த கருப்பொருள் கவிஞனின் உள்ளத்தில் மேலோங்கிவிட்டால், கலப்புமொழியிலும் அக்கவிதை அற்புதமாக வெளிப்படும் என்று பேசும் படைப்பாளிகள் தற்காலத்தில் அதிகம்.

புகழ்பெற்ற கவிதைகள் தூய தாய்மொழியிலேயே அமைகின்றன!

தாய்மொழியில் தூய்மை காப்பது குறித்து சிறப்பாகத் தனிக்கவனம் செலுத்தாத கவிஞர்கள் படைத்த புகழ்பெற்ற கவிதைகளை உற்று நோக்கினால், வியத்தகு முறையில் அக்கவிதைகள் தூய தாய்மொழியில் அமைந்திருப்பதைக் காணலாம். காட்டாக, சில கவிதைகளை ஆய்வோம்.

பெற்றோர் சூட்டிய மருள்நீக்கியார் என்ற அழகிய தமிழ்ப் பெயரை நீக்கிவிட்டுத் தருமசேனர் என்ற வடமொழிப்பெயர் தாங்கிப், வடமொழிச் சார்பான சமண சமயத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்தார் நாவுக்கரசர். அவ்வாறு பயணித்ததன் விளைவாக, நாவுக்கரசர் பெருமானின் அழகுதமிழ்த் தேவாரப்பாடல்களிலும் ஆங்காங்கே சில வடமொழிச் சொற்கள் விரவிக் கிடக்கக் காணலாம்.

நாவுக்கரசரின் தனித்தமிழ் தேவாரப் பாடல்கள்

இருப்பினும், நாவுக்கரசர் தேவாரங்களில் உலகெங்கும் பெரும்புகழ்பெற்று அனைவராலும் கொண்டாடப்படும் சில தேவாரப்பாடல்களில் வடமொழிச் சொற்கள் அறவே இல்லை என்பதை  நாமறிவோம். அதில் ஒரு தேவாரப்பாடலை இங்கு காண்போம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே. அப்பர் தேவாரம்.

மேற்கண்ட நாவுக்கரசர் பெருமானின் தேவாரப் பாடல் அனைவரின் உள்ளம் கொள்ளை கொண்டதன் காரணம் அப்பாடலில் காணும் அழகு தனித்தமிழின் ஆட்சியேயாகும் என்பது தெளிவு.  

தனித்தமிழ் திருவாசகங்கள்!

சிவனடியார் மட்டுமல்லாது தமிழன்பர்கள் அனைவரின் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட  மணிவாசகரின் திருவாசகப் பாடல்கள் பலவும் தனித்தமிழில் அமைந்துள்ளதாலேயே அக்கவர்ச்சியைப் பெற்றுள்ளன என்பதும் இங்கு கட்டாயம் குறிப்பிடத்தகுந்த ஆய்வுப் பொருள். காட்டாக,

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே! - திருவாசகம் 39.3

என்ற திருவாசகத்தை ஆய்வு செய்வோம். 'தான் ஈன்ற கன்றின்பால் கொண்ட எதிர்பார்ப்பில்லாத அன்பு' ஒன்றினால் மட்டுமே மனமுருகும் தாய்ப்பசுவின் மனம்போலவே, இறைவன் திருவடிகளின்பால் அன்பு கொண்டு உருகவேண்டும்; அத்தகைய ஆற்றலைத் தந்தருளுமாறு இறைவனிடம் வேண்டுகின்றது இத்திருவாசகம். இப்பாடல் உணர்த்தும் "கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்"  என்னும் இறைப்பற்றுக்கும் இறையன்புக்கும் இணையான உறுதிப்பாடு எங்கும் நாம் கண்டதுண்டோ? இவ்வாற்றலைத் தரும் ஆற்றல் தனித்தமிழுக்கே இயலும் என்பதை உற்று உணர்க!

எத்திசையும் புகழ் மணக்கும் மற்றுமோர் திருவாசகம்!

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே. - திருவாசகம் 5.15

இப்பாடலில் இறைவனே யாதுமாகி நிற்கும் பேரழகைச் சொல்லோவியத்தில் வடிக்கும் ஆற்றல் தனித்தமிழால் நிகழ்ந்தது என்பதையும் உணர்க!

தனித்தமிழால் கம்பன் காட்டும் மருதநில எழிற்தோற்றம்!

இனி, கம்பராமாயணப் பாடல்களுள் உள்ளம் கவர்ந்த பாடல்கள் பலவும் தனித்தமிழில் அமைந்துள்ளதும் ஆய்வுக்குரியது. காட்டாக,

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ - கம்பராமாயணம்:35.

என்ற கம்பனின் சொல்லோவியத்தில் இயற்கை என்னும் இளையகன்னியின் மருதநில எழிற் தோற்றம் உயிரோவியமாய் நம் கண் முன்னே கொண்டுவருவது தனித்தமிழின் மாட்சியே என்பதில் ஐயமில்லை!

தனித்தமிழின் ஆற்றல்!

மேற்கண்ட பாடல்களைப் படைத்த அருளாளர்கள் தனித்தமிழ் ஆர்வலர்கள் அல்லர். ஆனால், அவர்கள் படைத்த இப்பாடல்கள் தனித்துவத்துடன் ஒளிவீசி மிளிர்வதன் மறைதிறவு (இரகசியம்)  அவை தனித்தமிழில் உருவானதேயாகும்.  

அருளாளர்களால் அருளப்பட்ட நம்மை மெய்மறக்கச்செய்யும் இப்பாடல்கள் திட்டமிட்டுத் தனித்தமிழில் உருவாக்கப்பட்டனவா என்ற வினாவுக்கு 'இல்லை' என்பதே உறுதியான விடை. அப்படியானால், அப்பாடல்கள் எவ்வாறு உருவாயின? கவிதையுணர்ச்சி மேலோங்கிய பக்தி நிலைகளில் படைக்கப்பட்ட அப்பாடல்கள்  படைத்தவரறியாமலேயே இயல்பாகத் தூய தாய்மொழியாம் தனித்தமிழில் அமைந்தன.

தாய்மொழியின் ஆளுமை ஆற்றல்!

தமிழ்மொழி மட்டுமல்ல, எம்மொழியிலும், கவிதையுணர்ச்சி மேலோங்கிய நிலையில் படைக்கப்பட்ட கவிதைகள் இயல்பாகவே தனித்த தாய்மொழியில் அமைந்துவிடும் பாங்கைக் காணலாம். மக்கள் கவிஞர் ஷேக்ஸ்பியர் கவிதைகளை ஆய்வுசெய்த ஆங்கில மொழியியல் ஆய்வர்கள் பின்வரும் முக்கியமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்:

1. ஷேக்ஸ்பியர் நடையில் தாய்மொழிச் சொற்களே மிகுதியாகக் காணப்படுகின்றன.

2. ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் கவிதை உணர்ச்சி மேம்பட்ட இடங்களில், தாய்மொழிச் சொற்களின் விழுக்காடு இன்னும் பலமடங்கு மிகுதியாகக் காணப்படுகின்றன.

தனித்தமிழ் பயிற்சி நல்கும் ஆற்றலும் ஆளுமையும்!

இயல்பாகவே தனித்தமிழில் படைக்கும் திறன் மிக்கோர் உயர்ந்த படைப்புகளைப் படைக்க வல்லமை பெற்றிருப்பதும், அத்தகைய திறன் இயற்கையில் கைவரப் பெறாதவர்கள் "செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற பழமொழியின்படி, தனித்தமிழ்த் திறன்களை மேம்படுத்திக்கொள்வது அவர்தம் ஆளுமையையும், மொழியாற்றலையும் மேம்படுத்தும் என்பது திண்ணம்.

தனித்தமிழ் முயல்க!

எனவே, தனித்தமிழ் பற்றாளர்கள் தம் படைப்புத்திறனையும் ஆளுமையையும் மேம்படுத்தும் நோக்கோடு பயணிக்கிறார்கள் என்பதை ஏனையோர் உணர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். தாமும் அவ்வழியில் முயலவேண்டும்.

இதுவரை நாம் கண்ட 'காட்டுகள்' நமக்குப் பின்வரும் தெளிவுகளைத் தரவல்லவை:

1. தமிழ்ப்பண்பின் வெளிப்பாடே 'தனித்தமிழ் ஆர்வ'த்தை தோற்றுவித்ததேயன்றி, அயல்மொழி வெறுப்பு அன்று.

2. தனித்தமிழ் இயக்கம் அயலின மொழிப்பற்றை (ஆரியமொழிப் பற்றை) எதிர்த்துத் தோன்றியதன்று.

3. தமிழில் ஆரியமொழிக்கலப்பை ஏற்காது என்பதால் தனித்தமிழ் இயக்கம் ஆரியமொழிக்கு எதிரானது என்பது நச்சுத்தனமான கருத்து.

4. தனித்தமிழ் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பிறதாய்மொழியாளரும் பங்களித்துள்ளனர்.

தனித்தமிழைப் பழிப்போரே "தமிழ்மொழி வெறுப்பு வெறியர்கள்"

அதைவிடுத்து, தனித்தமிழ் ஆர்வலர்களை "மொழிவெறியர்கள்" என்று கட்டம் கட்ட முயல்பவர்களே உண்மையில் "தமிழ்மொழி வெறுப்பு வெறியர்கள்" என்று தம்மைத் தாமே அடையாளம் காட்டிக் கொள்கின்றார்கள் என்பதையும் உணர்தல் நல்லது.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலி னால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

புதையல் வேட்டை தொடரும்!

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.