Jump to content

தமிழக சாலையர்களே சிங்கள சலாகம சாதியினர் - வ,ஐ,ச,ஜெயபாலன்


Recommended Posts

MUFIZAL ABOOBUCKER அவர்களே
SENIOR LECTURER 
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA
 
மதிப்புக்குரிய பேராசிரியருக்கு.
 
இன்றைய சிங்களவர்களை, இலங்கைக்கு கொண்டுவந்த அன்றைய முஸ்லிம்கள் என்கிற தலைப்பில் 18.11.2018  திகதியிட்ட Jaffna Muslim  இதழில் வெளிவந்த கட்டுரை தொடர்பாக.  
.
உங்கள் கூற்று மிகத் தவறானதாகும். சலாகம சாதியினர் தமிழகத்தைச் சேர்ந்த சாலையர்கள் அல்லது செங்குந்தர் என அழைக்கபட்ட் நெசவு செய்தலைக் குலத் தொழிலாக கொண்டவர்கள்.  கம என்கிற சிங்களச் சொல் சாதியையும் குறிப்ப்பதாகும்.சாலை சாதி என்பதன் சிங்கள பதமே சலாகம என்பது. 
.
வரலாற்று காலந்தொட்டே இலங்கைக்கு  படைவீரர்களாக புலம் பெயர்ந்து  சிங்கள மன்னர்கள் படைகளில் சலாகம அணியாகவும் யாழ்ப்பாண மன்னர் அணியில் செங்குந்தர் படை அணியாகவும் பணிபுரிந்தார்கள். தமிழக மறவர் அணியும் யாழ்பாண அரசன் படையில் இருந்தது. கோட்டை அரசனின் பிரதிநிதியாக புவனேகபாகு என்கிற பெயரில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய செண்பக பெருமாள் சாலையர் சாதியைச் சேர்ந்த தமிழராவார்.  
.
டச்சுக்காரர் காலத்தில் சாலையர்கள் கறுவா பட்டை உரிப்பதற்காக  பெருந்தோட்ட கூலித்  தொழிலாளர்களாக பெரிய அளவில் தென்னிலங்கைக்குக்  கொண்டுவரப்பட்டார்கள். இதுபற்றிய டச்சு ஆவணங்களையும் கறுவா தோட்டக் கூலிகளான சாலை தொழிலாளர்களுக்காக டச்சுக்காரர்களால் ஆரம்பத்தில் தமிழில் வெளியிடப்பட்ட அறிவித்தல்களையும் நான் கொழுபு ஆவணக் காப்பத்தில் பார்த்திருக்கிறேன்.
.
1915 முஸிம்களுக்கு எதிரான கலவரத்தின்போது சிங்கள கிராமங்கள் பிரிட்டிஸ்    படைகளால் தாக்கபட்டபோது  சாலாகம மேலோர்கள்  நாங்கள் சிங்களவரல்ல தமிழர்கள் என பிரிட்டிஸ்  அரசுக்கு பெட்டிசம் கொடுத்திருக்கிறார்கள்.   இவ்வளவு ஆவணங்கள் நூலகங்களில் இருக்கிறபோது ஏன் இப்படி தவறு நிகழ்ந்தது? தயவு செய்து திருத்தவும் - அன்புடன் வ.ஐ.ச.ஜெயபாலன்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.