Sign in to follow this  
கிருபன்

சொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணியில் அப்பில் நிறுவனம் தீவிரம்

Recommended Posts

சொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணியில் அப்பில் நிறுவனம் தீவிரம்

apple-1-720x450.png

தனக்கென சொந்தமாக பிராசஸர் மற்றும் வயர்லெஸ் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் அப்பிள் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக அதிகளவான பொறியியளாலர்களை பணிகளுக்கு அமர்த்தியுள்ளமையால் எதிர்காலத்தில் ஐபோன் மாடல்களுக்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய குவால்காம் நிறுவனத்திற்கு வாய்ப்பு குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த பொறியியளாலர்கள் எல்.டி.இ, ப்ளூடூத் போன்ற ப்ரோடோகால்களில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில பிராசஸர் வடிவமைப்பிற்காக தெற்கு கலிபோர்னியாவிலுள்ள சில பொறியியலாளர்களை அப்பிள் நிறுவனம் வெளிப்படையாக தெரிவு செய்துள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

இவ்வாறான செயற்பாடுகளினால் அப்பில் நிறுவனம், எதிர்காலத்தில் தமது சாதனங்களை ஏனைய நிறுவனங்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாக வெளியிட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெறுமென பொறியியலாளர்கள் சிலர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/சொந்த-பிராசஸர்களை-உருவாக/

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this