Jump to content

இப்போ மட்டும் நீ சரக்கு அடிக்கல .. மிரட்டும் மோமோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நீ மட்டும் சரக்கு அடிக்கலை.. கொன்னுடுவேன்.. காதரை மிரட்டும் மோமோ..

momo232323-1534072431-1542604353.jpg

வேலூர்:  இப்போ நீ நிறைய சரக்கு அடிக்கலைன்னா... உன்னை கொன்னே புடுவேன் என்று மிரட்டி எடுத்துவிட்டது அந்த மோமோ !

எங்கேயோ ரஷ்யாவில் ஆரம்பிச்ச இந்த விளையாட்டு இன்னைக்கு நம்ம ஊர் கிராமங்கள் வரை வந்து உயிரை வாங்க ஆரம்பித்து விட்டது. சவால் என்ற பெயரில் அசிங்க அசிங்கமான கேள்விகளை கேட்பது, அந்தரங்கமான கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையென்றால் விளையாடும் நபரை கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, மானம் போற மாதிரி கேள்வி கேட்டு சாகிற வரைக்கும் கொண்டு போய் விடும் ஒரு ஆபத்தான விளையாட்டுதான் இந்த மோமோ.

எதிர்ப்புகள் கிளம்பின

தனி மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும், தற்கொலையே சவாலின் முடிவாக அமையும் வகையிலும் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் குழந்தைகள், இளைஞர்களை வன்முறைக்கு இட்டு செல்கிறது என்றும் இந்த விளையாட்டுக்கு எதிர்ப்புகள் நம் மாநிலத்தில் கிளம்பியது.

கல்வித்துறை அதிகாரிகள்

இது ஓரளவு தடுக்கப்பட கல்வித்துறை அதிகாரிகள் சார்பில் நடிவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முழுசா இந்த விளையாட்டு இன்னும் போய் ஒழியவில்லை போல இருக்கு. கொஞ்ச நாளா சத்தமே இல்லாமல் கிடந்தது அந்த மோமோ. திரும்பவும் வேலையை காட்ட ஆரம்பிச்சிடுச்சு.

காதர் புகார்

வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் காதர். 24 வயசாகிறது. இந்த விளையாட்டு சம்பந்தமாக, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்துவிட்டார். அந்த மனுவில் காதர் சொல்லி இருப்பதாவது: ரகசியத்தை வெளியிடுவேன் 4 மாதங்களுக்கு முன் எனது வாட்ஸ்அப்-க்கு ஒரு மெசேஜ் வந்தது.

அதில், என் செல்போனில் இருந்த எல்லா தகவல்களும் திருடப்பட்டு விட்டது என்று இருந்தது. உடனே நான் சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றாவிட்டால் உன் செல்போனில் உள்ள எல்லா ரகசியத்தையும் வெளியிட்டு விடுவேன் என்றிருந்து. இதை நான் பெரிசா எடுத்துக்கவில்லை. ஆனால் திரும்பவும் எனக்கு கடந்த 16-ந் தேதி வேற வேற நம்பர்களில் இருந்து அதேபோல மெசேஜ் வந்தது.

கொல்லப் போறேன்

அதில், உன்னை விடமாட்டேன், கொல்லப்போகிறேன். உடனே நிறைய மது குடிக்க வேண்டும் என்று கட்டளை வந்தது. இதை பார்த்து நான் அதிர்ந்து போய் உள்ளேன். எனவே மோமோ சேலஞ்ச் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட சைபர் கிராம் போலீசார், காதருக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமான விசாரணையிலும் இறங்கி உள்ளனர்.

https://tamil.oneindia.com/news/vellore/the-dangerous-game-momo-invites-vellore-youth-play-game-334525.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.