Jump to content

துரித உணவுக்கு (Fastfood) ஸ்ரீலங்காவில் ஏன் இத்தகைய ஒரு விருப்பம் உள்ளது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸகாரா டாவுட்போய்

கடந்த தசாப்தத்தில் கொழும்பின் உணவு நிலை கணிசமானளவு வேறுபட்டது. இன்று கொழும்புவாசி ஒருவருக்கு தெரிவு செய்வதற்கு பரந்த அளவிலான சமையல் வகைகள் pizzahutஉள்ளன, மற்றும் நடைமுறையில் ஒவ்வொரு தெருவிலும் ஒரு புதிய உணவகம் உள்ளது. விரைவான வளர்ச்சியை அனுபவிக்கும் பிரிவுகளில் துரித உணவும் ஒன்று.

ஸ்ரீலங்காவில் 1993ம் ஆண்டு முதன்முதலில் திறக்கப்பட்ட சர்வதேச துரித உணவுச் சங்கிலி ‘பிஸ்ஸா ஹட்’ ஆகும். யூனியன் பிளேசில் அமைந்திருந்த இந்த  புதுமையான கடை உடனடியாகவே நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களிடையே மிகவும் பிரபலம் பெற்றது, குறிப்பாக அதன் விரிவான விளையாட்டுப் பகுதி காரணமாக, அது மேலும் அந்த நேரத்தில் கொழும்பில் எளிதாகக் கிடைக்காத உணவு வகைகளையும் வழங்கியது. அப்போது முதல் ஸ்ரீலங்காவுக்குள் நுழைந்த இதேபோன்ற பல வகையான துரித உணவுச் சங்கிலிகள் இதேமாதிரியான பரந்த வெற்றிகளைச் சந்தித்தன. உதாரணமாக டூப்பிளிக்கேசன் வீதியில் சப்வே திறக்கப்பட்டபோது வாடிக்கையாளரின் வரிசை பிரதான வீதிவரை நீண்டது. மற்றைய சங்கிலிகளும் இதேபோன்ற வரவேற்பைப் பெற்றன.

இருப்பினும் துரித உணவுத் தொழிலின் மதிப்பு அது பிறந்த நாட்டில் வித்தியாசமானது. அமெரிக்காவில் சராசரி ‘ரக்கோ பெல்’ இனது அனுபவம், அதிக நேரம் பணிபுரியும் வாடிக்கையாளர் சேவை முகவர்கள் மற்றும் மலிவான ஆபத்தான உணவு என்பனவற்றுடன் பரஸ்பர தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதன் உரிமையாளரின் வரலாறு சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. 2011ம் ஆண்டில்; அரைத்த மாட்டிறைச்சியை “ரக்கோ இறைச்சி நிரப்புதல்” எனப் பிழையாக விளம்பரம் செய்ததால் இந்த நிறுவனத்தின்மீது வழக்குத் தொடரப்பட்டது, உண்மையில் இந்த நிரப்பும் முறை அப்படிப் பெயரிடுவதற்கான சட்டப்படியான தேவைகளைக் பூர்த்தி செய்யவில்லை. அமெரிக்க பொதுமக்களின் கருத்துப்படி இந்த ரக்கோ பெல் கடைகள் (மற்றும் இதர துரித உணவுச் சங்கிலிகள்) ஆரோக்கியமற்ற, பிரதானமாகவும் குறைந்த வருமானமுள்ள பிரிவினரை இலக்காகக்கொண்டு ஜோடிக்கப்பட்ட உணவுகளைப் பரிமாறுவதாக கருதப்பட்டது. நாட்டில் உடல் பருமன் தொற்று அதிகரிப்பதற்கான குற்றம் சாட்டப்பட வேண்டியவைகளில் பிரதான இடத்தில் இது இருப்பதாககக் பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

முக்கியமான முரண்பாடாக, ஸ்ரீலங்காவில் உள்ள ரக்கோ பெல் கடைகள் இtacobellணக்கமானதாகவும் நவீன உட்புற வடிவமைப்பு, இடுப்பளவு சுவரில் வரையப்பட்ட சுவரோவியங்கள் என்பனவற்றைக் கொண்டதாகவும் கட்டிடத்தின் முன் வாயிலில் ஒரு காவலாளியை வேறு நிறுத்தி தமது பெருமைகளைப் பறைசாற்றுகின்றன. ஒரு வழக்கமான உணவுக்கு 1,000 ரூபா வரை செலவாகும் மற்றும் ஒரு பக்க உணவு மற்றும் உணவுக்குப் பின் சாப்பிடும் இனிப்புவகையறாக்களுக்கு 500 ரூபாவுக்கும் அதிகம் செலவிடவேண்டியிருக்கும். சாப்பாட்டு அனுபவம் ஒரு உயர்மட்டத்திலானதாக இருக்கும் குறிப்பாக துரித உணவுச் சங்கிலிகளைப் பொறுத்தவரை. நாங்கள் அவர்களது கடை ஒன்றுக்கு விஜயம் செய்து அதன் முகாமையாளரிடம் வாடிக்கையாளர் அடிப்படையில் அவர்களது இலக்கு என்ன, மற்றும் அவர்களது சந்தைப்படுத்தலில் யாரைக் கவருவது அவர்களின் நோக்கம் என்று வினாவினோம். அதற்கு அந்தப் பெண் அளித்த பதில் “… உயர்தரத்திலானவர்களே ரக்கோ பெல்லுக்கு உணவருந்த வருகிறார்கள்” என்பதாக இருந்தது. அது சுவராஸ்யமான பதிலாக இருந்தது ஏனென்றால் அமெரிக்காவில் குறைவான வருமானம் உள்ளவர்களை இலக்காகக்கொண்டு மலிவான உணவு வகைகளை நடுத்தரவருமானம் பெறுபவர்களுக்கு விநியோகித்த உணவகம் ஸ்ரீலங்காவில் சமூகத்தின் வசதியான பிரிவினரை இலக்குவைத்து நடாத்தப்படுகிறது.

நகர்ப்புறமாக்கப்பட்ட நாடு

அநேகமான வளரும் நாடுகளில் நகரமயமாக்கல் உணவு வகைகளில் மாற்றத்தைப் பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். நகரச் சூழல் அழுக்குப்படாத வெள்ளைச் சட்டை வேலைகளுக்கு அதிகம் வழியைத் திறந்துவிட்டுள்ளது,பதிலாக அது மக்கள் உணவினை தங்கள் தேவைக்கு மேலாகப் பார்க்கும் ஒரு நிலையினைத் தோற்றுவித்துள்ளது. வருமானம் அதிகரிக்கும்போது, வித்தியாசமான சாப்பாட்டையும் சிறந்த தரமான உணவினையும் தேடும் ஆசை வளருகிறது இது முக்கிய தேவையான ஒன்றல்ல.

ஸ்ரீலங்காவில் உணவு உட்கொள்ளும் முறைபற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, கிராமப்புறங்களில் உணவிற்காக செலவிடப்படுவது மொத்த வருமானத்தில் 25 – 30 விகிதம் வரை, மற்றும் கோதுமை சார்ந்த உற்பத்திகளைவிட அரிசியை அடிப்படையாகக் கொண்ட உணவுகளே அதிகம்; நுகரப்படுகின்றன. எனினும் நகர்ப்புறங்களில் உணவுக்காகச் செலவிடப்படுவது, மொத்த வருமானத்தில் 60 – 75 விகிதம் வரை. மேலும் கிராமப்பகுதிகளுடன் ஒப்பிடுகையில் கோதுமையை அடிப்படையாகக் கொண்ட உணவுப்பொருட்களின் நுகர்வு இங்கு அதிகமாக உள்;;;;ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் உயர் வருமானம் பெறுபவர்களில் அதிகமானவர்கள் பெரும்பாலும் மேற்கத்தைய துரித உணவினைத் தேடுகிறார்கள். இது குறிப்பாக எதனாலென்றால் அதன் விலை மிகவும் அதிகமானதாகவும் மற்றும் நகர்ப்புறங்களில் எளிதில் கிடைக்கும்படியாக இருப்பதுமே காரணம்.

இந்தப் பன்னாட்டுச் சங்கிலிகள் தங்களைத் தெரிந்து கொள்ளத் தெரிவு செய்வது, எந்தச் சந்தை அதிகம் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதையே. அமெரிக்காவில் துரித உணவுச் சங்கிலிகள் – குறிப்பாக மக்டொனால்ட்ஸ் மற்றும் ரக்கோ பெல் என்பன – எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. வறுமையான பகுதிகளில் சில நேரங்களில் மக்கள் சில்லறைக் கடைகளில் பொருட்களை வாங்குவதைவிட துரித உணவகங்களுக்குச் சென்று உணவினை வாங்குவது எளிதாக இருக்கும். எனினும் ஸ்ரீலங்காவில் இது நேர்மாறாக இருப்பதுதான் உண்மை, இங்கு பெரும்பாலான மக்களுக்கு சந்தைகளில் விற்பனை செய்யப்படும்  புதிய உற்பத்திகளை கொள்வனவு செய்வது எளிதாக உள்ளது. ஆனால் துரித உணவுச் சங்கிலிகள் முக்கியமாக பெரிய நகரங்களிலேயே காணப்படுகின்றன, குறிப்பாகத் தொழில்துறைமயமான பகுதிகளில்.mac

தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒரு பொருளியலாளர் சொல்வதின்படி, வளர்ந்துவரும் நாடுகளில் துரித உணவுச் சங்கிலிகள் வழக்கமாக பெரிய நகரங்களிலும் மற்றும் பட்டினங்களிலுமே  நிறுவப்படுகின்றன ஏனென்றால் கிராமப்பகுதிகளில் உண்ணப்படும் கடுமையான உணவு மற்றும் குறைவாகச் செலவிடும் சாத்தியங்கள் என்பன பன்னாட்டு துரித உணவு நிறுவனங்களை அத்தகைய பகுதிகளில் சந்தைப்படுத்துவதற்கு சிறதளவு கட்டுப்பாட்டு உணர்வினை ஏற்படுத்துகின்றன என்று.

“உலகில் உள்ள இந்தமாதிரியான நகர்ப்புறப் பகுதிகளில்தான் உண்மையில் அவர்களால் இலாபம் ஈட்டமுடியும், அதனால்தான் இதற்கான கோரிக்கை இங்கு எழுகிறது. ஏனென்றால் ஸ்ரீலங்காவில் வருமான இடைவெளி மேற்கில் உள்ளதைக் காட்டிலும் பரவலானது. இந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளை குறைந்த வருமானம் பெறும் குழுக்களுக்கு இலக்கு வைத்தால் அவர்களால் இலாபம் அடைய இயலாது” என்று அந்த பெண் பொருளியலாளர் தெரிவித்தார்.

பொருளியிலாளரும் ஒரு குடியிருப்பாளருமான ரவி ரத்னசபாபதி என்பவரும் இதே கருத்தையே எதிரொலித்தார். “இந்த துரித உணவு நிறுவனங்களில் பெரும்பாலானவை அவர்களின் உணவுத் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களில் நல்லதொரு விகிதத்தை இறக்குமதி செய்ய வேண்டும். இறக்குமதி என்பது ஸ்ரீலங்காவில் எவ்வளவு செலவுள்ளது என்பதைக் கருதும்போது அவர்களால் ஒரு பர்கரை ஒரு அரிசிப் பையின் அதே விலையில் விற்கமுடியாது. அதேவேளை பாண் மற்றும் வெண்ணெய் என்பன மேற்கத்தைய நாடுகளின் வழக்கமான உணவாக இருந்தாலும் இங்கு அவை பெறுவதற்கு விலை உயர்வான பொருட்களாகும்” என்று அவர் தெரிவித்தார்.

பெரிய மக் சுட்டெண்

ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சோதிப்பதற்கு துரித உணவினை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது புதிய ஒன்றல்ல. 1986ல் த எகானமிஸ்ட்,  நாடுகளுக்கு இடையே வாங்கும் திறன் சமநிலையை அளவிடுவதற்கான ஒரு வழிகாட்டியாகப் பயன்படுத்துவதற்கு பெரிய மக் சுட்டெண்ணை கொண்டுவந்தது, அதாவது ஒரு பெரிய மக் கினது விலையை  அளவுகோலாகப் பயன்படுத்துவது.

“கொள்வனவு சக்தியின் சமநிலை ஒரு கோட்பாடு, அது பரிந்துரைப்பது இரு நாட்டு நாணயங்கள் ஒன்றுக்கொன்று சமமானதாக இருந்தால் ஒரு உற்பத்தியின் மதிப்பு இரு நாடுகளிலும் சமமானதாக இருக்கவேண்டும்” என ரத்னசபாபதி விளக்கினார். வெவ்வேறு நாடுகளிலுள்ள ஒரு பெரிய மக்கினது விலையை ஒப்பிட்டால் பெரிய மக் சுட்டெண் அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பை கொள்வனவு சக்தியின் அடிப்படையில் தீhமானிக்க முடியும்.menu

பெரிய மக் சுட்டெண்ணின்படி, ஸ்ரீலங்காவில் ஒரு பெரிய மக்கின் விலை 550 ரூபா ஆகவும்  அnரிக்காவில் அதன் விலை 5.50 அமெரிக்க டொலர் ஆகவும் இருந்தால் பெரிய மக்கின் விலையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட  550 ரூபாவின்  பெறுமதி 5.50 அமெரிக்க டொலர் என இருக்கும். எனினும்; 550 ரூபாவுக்கான உண்மையான டொலரின் பெறுமதி 3.14 அமெரிக்க டொலர்கள் ஆகும். பெரிய மக்கின் விலை மூலமாக உணர்த்தப்படும் நாணயமாற்றின் வித்தியாசம் மற்றும் இரு நாடுகளின் உண்மையான நாணயமாற்று விகிதப்படி ஸ்ரீலங்காவின் ருபா 33 விகிதம் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. அடிப்படையில் இது உணர்த்துவது என்னவென்றால் ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமதி அது உண்மையில் இருக்கவேண்டியதைக் காட்டிலும் குறைவாக இருப்பதையே. ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்துக்கு ஸ்ரீலங்காவில் நீங்கள் என்ன வாங்க முடியுமோ  அதேயளவு பணத்தை நீங்கள் அமெரிக்க டொலருக்கு மாற்றீடு செய்தால் அதை அமெரிக்காவில் உங்களால் வாங்க முடியாது.

இந்த சுட்டெண் ஒரு பெரிய பொருளாதாரச் சூழலில் ஒரு நாட்டைக் கண்டறிவதற்கு பயனுள்ள ஒரு கருவியாக உள்ளது, ஆனால் நாடுகளுக்கு இடையே உள்ள பொருட்களின் தரத்தின் வேறுபாடுகளை அது கணக்கில் கொள்ளவில்லை. அமெரிக்காவிலும் மற்றும் ஸ்ரீலங்காவிலும் இடையேயான ஒரு பெரிய மக்கின் ஒப்பீட்டு விலையானது, பொருளாதார ரீதியாக ஸ்ரீலங்காவைப் பற்றி ஏராளமானவற்றைத் தெரிந்து கொள்வதற்கு ஏற்ற ஒரு கருவியாக இருந்தபோதிலும், இங்கு வெற்றிகரமாக நடைபெற்றுவரும் துரித உணவுச் சங்கிலியானது எங்கள் நாட்டின் மதிநுட்பமான சமூக மற்றும் கலாச்சார புரிதலை எடுத்துக்காட்டுகிறது.

http://www.nermai-endrum.com/துரித-உணவுக்கு-fastfood-ஸ்ரீலங்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.