Jump to content

சுழற்றியடித்த கஜா.. மிரண்டு போன சிறுமி.. உயிரை பறித்த தென்னை மரம்.. ஒரு பரிதாப மரணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நà¯à®à¯à®à®¿à®²à¯ à®à®¾à®¯à¯à®¨à¯à®¤ தà¯à®©à¯à®©à¯

சுழற்றியடித்த கஜா.. மிரண்டு போன சிறுமி.. உயிரை பறித்த தென்னை மரம்.. ஒரு பரிதாப மரணம்!

கஜா புயலை விட கொடுமையான, கொடூரமான செயலைதான் இவர்கள் செய்திருக்கிறார்கள்... அந்த செய்திதான் இது!!

கஜா... பட்டுக்கோட்டை பக்கமாக போகும்போது தந்துவிட்டுபோன அழிவு கொஞ்சம் நஞ்சமல்ல. நடுராத்திரி... அப்படி ஒரு பேய்க்காத்து.. ஊரே தூக்கிட்டு போற மாதிரி காற்று சுழட்டி அடித்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது.

அணைக்காடு கிராமத்தில் 7-ம் வகுப்பு படிக்கிறாள் அந்த சிறுமி. திடீரென்று வயசுக்கு வந்துட்டாள். அதனால் வீட்டு பெரிசுகள் எல்லாம் சேர்ந்து தீட்டு என்று காரணம் சொல்லி, அந்த சிறுமியை தனியாக உட்கார வைத்து விட்டார்கள். உட்கார வைக்கப்பட்ட இடம் எது தெரியுமா? வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற தென்னை மர தோப்புலதான்.

சுத்தி எங்கேயும் வீடுகள் இல்லை.. வெறும் தென்னந்தோப்புதான். அங்கதான் அந்த சிறுமி ராத்திரி பகலா தங்கணும்னு சொல்லிட்டாங்க. அப்படிப்பட்ட ஒரு ராத்திரியில்தான் கஜா வந்தான்... மாநிலத்தையே மிரட்டிட்டு போன கஜா சிறுமியை சும்மா விட்டு வைத்திருப்பானா என்ன? சுழன்று சுழன்று காற்றிலேயே பயமுறுத்தினான்.

à®à®¿à®±à¯à®®à®¿à®¯à®¿à®©à¯ à®à®²à®±à®²à¯

நடுராத்திரி... 2 மணி... சுற்றிலும் இருட்டு.. கருப்பு போர்வைக்குள் கஜா சத்தத்தை கேட்டு குழந்தை அலறினாள்... பயந்து மிரண்டு கதறினாள்.. சத்தம் கஜாவை தவிர யாருக்குமே கேட்கவில்லை. புயல் காற்றுக்கு நடுநடுவே மரங்கள் முறிந்து விழும் சத்தத்தை கேட்டே பாதி செத்துவிட்டாள் சிறுமி. அதில் ஒரு தென்னை மரம் வேரோடு சாய்ந்து குடிசை மீது விழுந்து, பிறகு சிறுமி நெஞ்சில் விழுந்து.. சிறுமியின் அலறல் வீறிட்டு அடங்கி நின்றது!!

பொழுது விடிந்து பார்த்து, குழந்தையை பிடித்து அணைத்து கொண்டு அழுது என்ன பயன்? தென்னை மரத்தை தூக்கிட்டு மகளை முழுசா வெளியே எடுக்கவே அவ்வளவு நேரம் ஆயிடுச்சு. எவ்வளவு நேரம் தெரியுமா? 20 மணி நேரம்... அந்த பிஞ்சு உடம்பில் சாய்ந்த கிடந்தது அந்த நெடுமையாக உயர்ந்த மரம்!

இப்படி ஒரு கூட்டமா? ஊரெல்லாம் காத்தும், மழையும் அடிக்கும்போது கூடவா பெத்த மகளை பத்தி கவலைப்படாமல் ஜீவன்கள் இரவை கழித்திருக்கும்? நாசமா போன பிற்போக்குத்தனமும் மூடநம்பிக்கையும் என்னைக்குத்தான் போய் ஒழியுமோ தெரியவில்லை. நடுராத்திரி கும்மிருட்டில் சிறுமியின் கடைசி தவிப்பையும் துடிப்பையும் கதறலையும் அலறலையும் கூடவே சேர்த்துகொண்டு போய்விட்டான் கஜா!

Read more at: https://tamil.oneindia.com/news/thanjavur/7th-std-girl-dies-cyclone-gaja-pattukottai-334472.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூட நம்பிக்கையால் அநியாயமாய் ஒரு சிறுமியை பலி கொடுத்துள்ளார்கள்...இவ்வளவு காத்துக்கு உள்ளேயும் அந்த சிறுமி கத்த,கத்த எப்படித் தான் பெற்றோருக்கு உள்ளுக்குள்ள படுத்து நித்திரை கொள்ள மனசு வந்ததோ தெரியவில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

தீட்டாவது  மண்ணாங்கட்டியாவது.
தினமும் கக்கூஸ் போய்கிட்டு தானே இருக்கிறோம்? 
உடல் கழிவு எப்படி தீட்டாகும்? என்ன மாதிரியான சமூகத்தில், வாழ்கின்றோம்.
-தாமரை செல்வன்.-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.