Jump to content

மகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை

November 17, 2018

mahintha-2.jpg?resize=800%2C400

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூடும் போது பெரும்பாண்மையை நிரூபிக்க மகிந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்காகவே அவ்வாறு முக்கிய கூட்டம் கூட்டப்பட்டு கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://globaltamilnews.net/2018/103637/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றிபெற வாழ்த்துகள் வெற்றிபெற வாழ்த்துகள் வெற்றிபெற வாழ்த்துகள்
    • "வாழ்வைப் பற்றிய சைவ நோக்கம்"     சைவசமயம் [தற்காலத்தில் இது இந்து சமயத்துக்குள் உள்வாங்கப் பட்டு இருந்தாலும், உண்மையில் இவை இரண்டு வேறுபட்டவை. எனவே இதை இந்து சமயத்துடன் குழப்பவேண்டாம்] "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது.   அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என புறநானுறு கூறுகின்றது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று எம்மை அது வழி காட்டுகின்றது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்கிறார் இக்காலப் பகுதியில் வாழ்ந்த திரு மூலர்.   பல வகைப்பாடான கடவுள் தன்மையை [இறைமையை] புராண இலக்கியங்களில் ஒருவர் எதிர்கொள்ள நேர்ந்தாலும், தேவாரங்களை மிக நுணுக்கமாக படிக்கும் போது, அவை அதற்கு எதிர் மாறானதே உண்மை என சுட்டிக் காட்டும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை [ஒருமை] ஒன்றையே உறுதியாக்கு கிறார்கள். உதாரணமாக மாணிக்கவாசகர் தமது திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!" என்கிறார். அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?. என கேள்வி கேட்கிறார்.   சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக் கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. உதாரணமாக, தென்ஆப்பிரிக்க இன வெறிக் கொள்கை போல வேத இந்து சமயத்தால், சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ என்று வினவுகிறார். பொதுவாக தனி மனிதனைக் கடந்து அண்டத்தை உணர்த்தி நிற்கும் அல்லது ஒன்றை (கடவுள், இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே “சமயம்“ என்பர். எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு!   உதாரணமாக, திருமூலரின் திருமந்திரம் 252 இல்,   “யாவார்க்கும் இறைவற்கு ஒரு பச்சிலை யாவார்க்கும் பசுவிற்கு ஒரு வாயூரை யாவார்க்கும் உண்ணும் போது ஒரு கைபிடி யாவார்க்கும் பிறர் இன்னுரை தானே…”   என்று பாடுகிறார். அதாவது இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லை; எளிமையாகப் பச்சிலை கொடுத்து வணங்கினாலே போதும். கோபூசை செய்ய வேண்டும் என்பதில்லை, பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை; உண்ணும்போது தான் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். பதாகைகள் வைத்துப் புகழ்ந்துரை செய்து முதுகு சொறிய வேண்டும் என்பதில்லை; யாருக்கும் இன்னுரை சொன்னாலே போதும் என்று எல்லார்க்கும் இயல்கிற வழிமுறை சொல்கிறார் திருமூலர். பகட்டல்ல; பற்றுதலும் பரிதவிப்புமே கணக்கில் வரும் என்பது திருமூலர் கருத்து. அவர் மேலும்   "படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா; நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே." (திருமந்திரம். 1857)   படம்போல எழுப்பி வைத்திருக்கிற மாடக் கோயிலின் இறைவனுக்கு ஒன்றைக் கொடுத்தால், அது நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்குப் போய்ச் சேராது. ஆனால் நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்கு ஒன்று கொடுத்தால், அது படமாடக் கோயிலின் இறைவனுக்கு மிக உறுதியாய்ப் போய்ச் சேரும்.   இன்றைக்கு பல இடங்களில் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு பாடல் பாடவேண்டுமாயின், என் கருத்தின் படி அது:   “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமைவேண்டும்” என்ற பாடல்தான். இதை 5-10-1823-ம் ஆண்டு பிறந்த அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்பட்ட ராமலிங்க அடிகளார் பாடியுள்ளார். மேலும் இவர்:   “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன். பசியால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன். நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளம் துடித்தேன். ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்” இப்படி சைவ சமயத்தில் அமைதிக்கான வழியை பல அருளாளர்களும் கவிஞர்களும் வலியுறுத்தி உள்ளனர்.   புரட்சி கவிஞர் பாரதிதாசனோ:   “அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அனைத்துகொள் உன்னை சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்று கூவு”   என்று அறிவுரை கூறுகிறார். இக்கருத்துகள் உலக உள்ளங்களில் பதிந்து நடைமுறையில் வெளிப்படுமானால் உலகில் அமைதி பூக்கும். அன்பு, உண்மை, நீதி, சகோதரத்துவம் உடைய சமூகம் உருவாகும்.   சைவ சமயத்தின் வேர் சுமேரியா இலக்கியத்தில் ஈனன்னா பாடலில் இருந்து, சிந்து வெளி நாகரிக தொல்பொருள்களில் காணப்பட்டு, தமிழகத்தில், வளர்ந்த ஒரு சமயம். எனவே சைவ சமயம் காலத்தால் முந்தியது , இதை வரலாறு செப்புகிறது. ஆகவே அது தமிழர் அல்லது பழம் தமிழரின் ( திராவிடரின்) வரலாற்றுடன் பரிணமித்தது. தனி ஒருவரால் ஆக்கப் பட்டது அல்ல. அது மட்டும் இல்லை , பெண் தெய்வமே முதன்மை தெய்வமாக தோன்றி பின் ஆண் தெய்வம் ஒன்றிணைக்கப் பட்டது வரலாறு (மலை மகள் மகனே , கொற்றவை சிறுவ ), மற்ற எல்லா சமயமும் ஆணையே முதன்மையாகக் கொண்டது. வேட்டுவ சமுதாயத்தில் இருந்து, ஓரிடத்தில் குடியேறி விவசாய சமுதாயமாக மாறும் பொழுது, ஆண் முதன்மை பெறுகிறான். அது ஆண் ஆதிக்க சமூகமாக மாறியது என்பதால் ஆகும். பெண்ணை மதிக்கும் பொழுது தான் சமாதானம் தானாக பிறக்கிறது என்பது ஒரு உண்மையாகும்.   ஆகவே சைவ சமயத்துக்கு மற்றைய சமயங்களைப் போல இது மட்டும்தான் கடவுள், இப்படி மட்டும் தான், இந்த நாளில் தான், இந்த முறையில் தான் வணங்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.   சைவத்தில், கேள்வியே கேட்க முடியாத ஆளுமை செலுத்தும் உயர் ஆணையாளர் இல்லை. தீர்க்க தரிசிகள் இல்லை. எதிர்வு கூறல்கள் இல்லை. ஆகவே இது தான் தெய்வீகப் புனித நூல் என்று ஒன்று திணித்து வைக்கப்படவில்லை.   ஒவ்வொரு காலத்திற்கும் ஒத்துப் போகுமாறு வழிபாட்டு வழிமுறைகளை அப்பப்போ அவதரிக்கும் நாயன்மார்கள் மற்றும் ஆன்மீக குருமார்கள் காலத்திற்கும் நடைமுறைக்கும் ஏற்றவாறு தங்கள் பாடல்கள் மூலம் [தேவாரம், திருமந்திரம்] தெளிவு படுத்திக்கொன்டே இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து அல்லது அவர்களுக்கு முன்பே [சங்க இலக்கியம், திருக்குறள் ] தமிழர் சமுதாயமும் தங்கள் நம்பிக்கைகளை, வாழ்க்கை முறைகளை பதிவிட்டு உள்ளார்கள் அல்லது தெளிவு படுத்திக்கொன்டே இருக்கிறார்கள். சைவ சமயம் ஒரு தமிழர் சமயம் என்பது குறிப்பிடத் தக்கது.   மேலும் வரலாற்றில் இருந்தும், மற்றும் பாடல்களிலும் இருந்தும் கட்டாயம் ஆழமாக சமாதானத்துக்கு, ஒற்றுமைக்கு, நீதிக்கு, அன்புக்கு தேவையான உன்னத கருத்துக்களை நடைமுறைக்கு ஒத்துப்போகும் நிலையில் உணர முடியும்.   அதைத்தான் நான் மேலே பாடல் வரிகளுடனும் வாசகங்களுடனும் கூறினேன். மற்ற சமயங்கள் எல்லாம் இரண்டாயிரம் ஆண்டு அளவில், அல்லது அதற்குப் பின்பு ஏற்கனவே இருந்த எதாவது சமய நம்பிக்கையில் இருந்து பிரிந்து அல்லது புரட்சி செய்து ஒரு தனிப்பட்ட ஒருவரால் ஏற்படுத்தியது. ஆகவே மக்களை அதில் இருந்து பிரித்து எடுக்க அல்லது தன்னை பின் தொடர சில, பல கட்டுப்பாடுகள் நிறுவி, ஒரு கட்டளையை அல்லது மனித வாழ்க்கைக்கான வழிகாட்டும் பிரகடனம் ஒன்றை அந்த தனிப்பட்ட நபர் செய்தார். அதையே புனித நூல் என்கிறார்கள். ஆனால் சைவமதம் அப்படியான ஒன்று அல்ல, அது தமிழர் அல்லது பழம் தமிழர் [திராவிடர்] வரலாற்றுடன் பரிணமித்த ஒன்றாகும். எனவே, திருமந்திரம் , திருக்குறள், தேவாரம் , சங்க இலக்கியம் மற்றும் பிற்கால தமிழ் இலக்கியம் முதலியவற்றில் இருந்து, கடலில் முத்து குளிப்பது போல பொறுக்கி எடுக்கவேண்டும். காரணம் அவர்கள் வேறு ஒன்றில் இருந்து ஒரு தனி நபரால் பிரிந்து நிறுவியது அல்ல.   எனவே புனித வாசகம் இது தான் என அறுதியிட்டு கூற முடியுமா என்பது எனக்கு சந்தேகமே !!   நன்றி   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]              
    • இன்று காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். நிறைய கம்பெனிகள் இங்கே சனி ஞாயிறு விடுமுடை. சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது. ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது. அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார், வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட். அவர் பக்கத்தில் நெருங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று யூகித்துவிட்டேன். கொண்டு போன லன்ச் பேக் அருந்து , கீழே விழுந்து, கொண்டு போன உணவு எல்லாம் கொட்டிவிட்டது. சில காட்சிகளை பார்த்துவிட்டு அந்த இடத்தை நம்மால் கடக்க முடியாது. ஒரு இரண்டு வார்த்தை உச்சு கொட்டிவிட்டாவது சென்றால்தான் திருப்தியாக இருக்கும். நானும் அதே நோக்கத்தோடு வேகத்தை குறைத்து நின்று… “ஐயோ கீழே கொட்டிருச்சா”. அவர் தலையை மட்டும் அசைத்தார். அப்போதுதான் முகத்தை பார்த்தேன் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. உடைந்து போய் நின்றார். அய்யா… இதுக்குபோய் ஏன் கலங்குறீங்க? தப்பா நினைக்க வேண்டாம். லன்ச்க்கு பணம்வேணா தரேன். விடுங்க அய்யா கொட்டியதை அள்ளவா முடியும்.. உங்க முகத்தை பார்க்க கஷ்டமா இருக்கு..” என்று முட்டாள்தனமாக பேசிட்டேன். என்னை ஒரு பார்வை பார்த்துட்டு அவர் பர்ஸ் எடுத்து காட்டினார். நிறைஞ்சு இருந்தது. “என் ஒய்ப் ஆசை ஆசையா காலையில் ஐந்து மணிக்கு எழுந்து எனக்கு பிடிச்சதை சமைச்சு கொடுப்பா சார். மூட்டுவலி & சுகர் இருக்கு. உடம்புக்கும் முடியல அவளுக்கு. மதியம் போன் பண்ணுவா சார் “எப்படி இருக்கு டேஸ்ட் ? உப்பு சரியா இருக்கா? நல்லா இருக்கா?னு கேப்பா சார்….” அதற்க்கு மேலே என்னாலும் பேச முடியவில்லை. அவருக்கும் வார்த்தை வரலை. ஒரு சில வார்த்தைகள் தான் ஆனால் அர்த்தம் ஓராயிரம். கீழே கிடந்த உணவை அவர் வாஞ்சையா அள்ளி ஒரு கேரிபேக்கில் போட ஆரம்பித்தார். “ரோட்டில் கிடந்தா வேஸ்ட் ஆகிடும். ஏதாவது நாய்க்கு வச்சா சாப்பிடும்…” தனக்குத்தானே பேசிக்கொண்டார். எனக்கு அவர் சொன்ன வார்த்தையும், அதன் வலியும் அப்படியே இருக்கு இன்னும்.சோறு என்பது ஒரு பொருள் அல்ல. அதை சமைப்பவர்களின் அன்பு. எத்தனை முறை உதாசீனம் செய்திருக்கிறேன். “மதியம் பாக்ஸ் ரெடியா இருக்கு. இன்னிக்கி அவியல் செஞ்சேன்.”“வேண்டாம்… ஆபீசில் சாப்பிட்டுகிறேன்.” நைட் ….”வாங்க புதினா சட்னி இருக்கு .சாப்பிடலாம்” “வெளில சாப்பிட்டுட்டேன்”. “ஒண்ணே ஒன்னு டேஸ்ட் பாக்கலாமே”. “வயிறு புல்லா இருக்கு. வேண்டாம்.” எத்தனை முறை நோகடிச்சு இருக்கிறோம். மிக பெரிய உதாசீனம் அது. சுருக்கென்று இருக்கிறது. சாப்பாடுதானே வயிறு நிறைஞ்சா போதாதா? அப்படி இல்லை. நாம சாப்பிடுற சாப்பாட்டில் உப்பு இருக்கோ, காரம் இருக்கோ, புளிப்பு இருக்கோ…. தெரியாது ஆனால் சமைப்பவர்களின் அன்பு இருக்கு. சாப்பிட்டா நிறைவது நம்ம வயிறு மட்டும் இல்லை. அவர்களின் மனசும் சேர்ந்தே நிறைகிறது. கொஞ்சம் பாராட்டலாம். அட பாராட்ட கூட வேண்டாம். ஒரு “தேங்க்ஸ்” சொல்லி பழகலாம். “நல்லா இருக்கு, தேங்க்ஸ்பா” என்று சொல்லலாமே. இரண்டு மணி நேர அடுப்படி போராட்டம் உங்களின் ஒரே ஒரு வார்த்தையில் மகிழ்ச்சியாக மாறுமே..!!!!! “உணவே மருந்து இதயத்திற்கும்”    படித்ததில் பிடித்து பகிர்கிறேன்.
    • (நேரம் கிடைக்கும் போது) தேடி பகிர்கிறேன். இது சம்பந்தமாக நமக்கிடையே ஒரு சம்பாசணை நடந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.