Jump to content

அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது?

ஆர். மணி மூத்த பத்திரிகையாளர்
ரஜினிGetty Images

(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

தமிழக அரசியலில் இன்று கண்டிப்பாக ஒரு வெற்றிடம், ஏற்பட்டிருக்கிறது. 19 ஆண்டுகாலம் முதலமைச்சராகவும், திமுகவின் முடிசூடா மன்னராகவும் இருந்த மு.கருணாநிதியும், 15 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்த அஇஅதிமுகவின் ஜெ. ஜெயலலிதாவும் மாண்டு போய் விட்டார்கள். 

இன்று அஇஅதிமுக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. திமுக பிரதான எதிர்கட்சியாக 89 எம்எல்ஏ க்களுடன் சட்டசபையில் இருந்து கொண்டிருக்கிறது. 

திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார். ஆனால் அஇஅதிமுகவில் ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்த இடம் இன்னும் நிரப்பபடவில்லை. 

கருணாநிதி, எம்.ஜி.ராமசந்திரன்

அதற்கு பதிலாக அஇஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. 

ஒருங்கிணைப்பாளராக, தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இருக்கின்றனர்.

இந்தியா விடுதலை அடைந்த 70 ஆண்டு காலத்தில் சந்திக்காத அரசியல் வெற்றிடத்தை இன்று தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. 

அரசியல் வெற்றிடம் என்று சொல்வதை விட அரசியல் தலைமையில் வெற்றிடம், அதாவது ஆங்கிலத்தில் சொன்னால், Not political vacumn but political leadership vacumn என்று கூட நாம் சொல்லலாம். 

ஜெ. ஜெயலலிதாGetty Images

ஆனால் சில அரசியல் விற்பன்னர்களும், அனுபவத்தில் தோய்ந்த சில மூத்த பத்திரிகையாளர்களும் இரண்டும் ஒன்றுதான், அதாவது, அரசியல் வெற்றிடம் என்றாலும் சரி, அரசியல் தலைமையின் வெற்றிடம் என்றாலும் சரி, இரண்டும் ஒன்றுதான் என்கின்றனர். இந்த வாதத்தை நிச்சயம் ஒதுக்கித் தள்ள முடியாது. 

இங்குதான் ரஜினிகாந்த் வருகிறார். ரஜினியால் இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்ப முடியுமா? முடியாதா? அதுவும் தனி மனித சாகசங்களால் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து விட முடியும் என்று நம்புபவர்களை பெரும்பான்மையினராக கொண்ட ஒரு சமூகத்தில், ரஜினியால் என்ன சாதிக்க முடியும் என்பதுதான் முக்கியமான கேள்வி. 

1996- ல் திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கூட்டணி, அன்றைய ஜெயலலிதா அரசை வீழ்த்திய தேர்தலில் இருந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி 21 ஆண்டுகாலம் நிலவி வந்த சூழலில் 2017 டிசம்பர் 31ம் தேதி தன்னுடைய ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெளிவாக அறிவித்தார். 

கருணாநிதி, மு.க.ஸ்டாலின்

''நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன். சட்டமன்ற தேர்தலில்தான் போட்டியிடுவேன். அதுவும் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் கட்சி ஆரம்பிப்பேன். தமிழக சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தனித்து என்னுடைய கட்சி போட்டியிடும். மற்ற கட்சிகளை போல என்னுடைய கட்சி போராட்டங்கள் எதிலும் ஈடுபடாது'' என்று தெளிவாகவே அறிவித்தார். 

தற்போது நாம் ரஜினியை பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது? நவம்பர் 12ம் தேதி சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம், செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், பதிலும்தான் இப்போது நாம் ரஜினியை பற்றி பேச வேண்டிய உடனடி அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யலாமா என்பதுதான் கேள்வி. 

இதற்கு ரஜினிகாந்த் சொன்ன பதில், ''எந்த ஏழு பேர்''. இந்த பதிலை சொல்லி விட்டு, ரஜினி அந்த இடத்தை விட்டு நகருகிறார். 

ரஜினி

அப்போது ஒரு செய்தியாளர், 'ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர்' என்கிறார். இதற்கு ரஜினி எந்த பதிலும் சொல்லாமல் தன்னுடைய காருக்கு போய் விடுகிறார்.

அடுத்த நாள், நவம்பர் 13-ஆம் தேதி காலை செய்தித்தாள்கள் ரஜினிகாந்தின் இந்த பதிலை பற்றி பிரசுரித்த செய்திகளும், தலைப்புகளும், ரஜினியின் கொதி நிலையை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டன. 

உடனே நவம்பர் 13-ஆம் நாள் சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டு வாசலில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி விமான பயணத்திலிருந்து வந்து இறங்கியதால் ஏற்பட்ட பயண களைப்பில் தன்னால் அந்த கேள்வியை உள் வாங்க முடியவில்லை என்றும், மற்றபடி அந்த விஷயத்தை பற்றி, அதாவது, ராஜீவ்காந்தி கொலை மற்றும் ஏழு பேர் விடுதலை பற்றி நன்றாக தெரியும் என்றும் கூறினார். 

தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கருணாநிதிGetty Images தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கருணாநிதி

''பேரறிவாளன் (ராஜீவ் கொலை வழக்கில், முதலில் மரண தண்டனை பெற்று பின்னர் அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட கைதி) பரோலில் வந்தபோது அவருடன் தொலைபேசியில் 10 நிமிடங்கள் பேசியது யார்? இந்த ரஜினிதான்' என்று கூறினார். 

ரஜினிகாந்த் கிட்டத்தட்ட கடந்த 3 மாதங்களாக இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார். அதாவது முதலில் ஒரு செய்தியாளர் சந்திப்பு (Press meet). அடுத்த நாள் அந்த Press meet பற்றி ஒரு பொழிப்புரை, ஒரு பரிமேல் அழகர் உரையை ரஜினி நிகழ்த்துவார். 

 

அதாவது முதல் நாள் Press meet பற்றி அடுத்த நாள் வியாக்யானங்கள் கொடுக்கப்படும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடந்த துப்பாக்கி சூடு பற்றிய விவகாரத்திலும் இதுதான் நடந்தது. துப்பாக்கி சூட்டில் காயம் பட்டவர்களை பார்க்க தூத்துக்குடி போனார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓர் இளைஞர் ரஜினியை பார்த்து, 'நீங்கள் யார்' என்று கேட்டு விட்டார். இது தொலைக் காட்சிகளில் வந்து விட்டது. 

எடப்பாடி பழனிசாமிGetty Images

பின்னர் அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானத்தில் சென்னை திரும்பினார் ரஜினி. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். இது தெளிவாகவே தொலைக்காட்சிகளை பார்க்கும் போது எல்லோருக்குமே தெரியும் விதமாக இருந்தது. அப்போது செய்தியாளர்களிடம் கோபம் கொந்தளித்து பேசினார் ரஜினி. 

இது அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்துக்கு ஆளானது. அடுத்த நாள் ரஜினி ஒரு அறிக்கை கொடுத்தார். அதில் எந்த பத்திரிகையாளர் மனமாவது புண்படும் விதத்தில் பேசியிருந்தால் அதற்காக தான் வருந்துவதாக கூறியிருந்தார். 

இந்த நிலைமையை ஆங்கிலத்தில், "Damage Control" என்று சொல்லலாம். இந்த செயலை கடந்த சில மாதங்களில் குறைந்தது இரண்டுக்கும் மேற்பட்ட முறைகளாவது ரஜினிகாந்த் செய்திருக்கிறார். 

ஒரு பத்திரிகையாளனாக, அரசியல் பார்வையாளனாக, எனக்கு இன்றளவும், ரஜினிகாந்த் ஒரு 'தயக்கத்துடனான அரசியல்வாதியாக' (Hesitant Politician) தான் தென்படுகிறார். 

பன்னீர் செல்வம்Getty Images

இது அவருடைய மிகப்பெரிய பலவீனமாகவே விவரம் அறிந்தவர்களால் பார்க்கப்படுகிறது என்று நான் உறுதியாக சொல்லுவேன். 

சாணக்கியன் சொல்படி, வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவைப்படும் குணம் இதுதான்; ''அரசியலில் வெற்றி பெற ஒருவருக்கு தேவைப்படுவது பதவியை அடைவதற்காக எதையும் செய்ய தயங்காத மனமும், அடைந்த பதவியை தக்க வைத்துக் கொள்ள பஞ்சமா பாதகங்களை செய்ய துளியும் குற்ற உணர்ச்சி இல்லாத அணுகுமுறையும், குணமும்தான்'. 

இதனை ஆங்கிலத்தில் இப்படி சொல்லுவார்கள்; "Everything is good in love and war", அதாவது, காதலிலும், போரிலும் - இங்கு போர் எனும் போது நாம் நாடாளுமன்ற ஜனநாயக அரசியலை சொல்லுகிறோம் - எல்லாமே நல்லதுதான். 

நாடு விடுதலை அடைந்த 70 ஆண்டு காலத்தில், முதல் 20 ஆண்டுகள் காங்கிரஸ் தமிழகத்தை ஆண்டது. அதன் பின்னர் 1967 முதல் இன்று வரையில் திராவிட கட்சிகளால் ஆளப்படுகிறது. 

1967-ல் அண்ணா முதல்வரானார். பின்னர் மு.கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமைகள் தமிழகத்தை ஆண்டனர். 

எடப்பாடி, பன்னீர்செல்வம், தினகரன்

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கடந்த 50 ஆண்டு காலத்தில், அதாவது 1969 பிப்ரவரியில் அண்ணா இறந்த பிறகு மூன்று தலைவர்கள் மட்டுமே, 2016 டிசம்பர் 5 (ஜெயலலிதா இறந்த நாள் அது) வரையில் தமிழகத்தின் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா. 

இந்த மூவர் மட்டுமே 50 ஆண்டு காலம் தமிழகத்தை நீண்ட காலம் ஆண்டிருக்கிறார்கள். இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் அரை நூற்றாண்டு காலத்தை மூன்றே தலைவர்கள்தான் மாறி, மாறி ஆண்டார்கள் என்ற வரலாறு இல்லை.

தமிழக அரசியலை பற்றிய பெரும்பான்மையினரின் பார்வை தமிழகம் சினிமாகாரர்களால் மட்டுமே ஆளப்படுகிறது. ஆளப்பட முடியும் என்பது. இது தவறான பார்வை என்றே உறுதியாக கருதுகிறேன். 

ஏனெனில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அவர்கள் முதலமைச்சர்களாக வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே தீவிர அரசியலில் இருந்தவர்கள். 

1952-ல் முதல் பொது தேர்தலை திமுக புறக்கணித்தது. 1957 சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக திமுக போட்டியிட்ட போது, எம்ஜிஆருக்கு சட்டமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கியது. 

ஆனால் எம்ஜிஆர் வேண்டாம் என்று கூறினார். 'நான் பொதுக் கூட்டங்கள் மூலம் திமுகவுக்காக வேலை செய்கிறேன். சினிமாதான் என்னுடைய முதல் தொழில்' என்று கூறிவிட்டார். 

தமிழக அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது?Getty Images

இந்த தகவலை மறைந்த அஇஅதிமுக அமைச்சர் ப.உ. சண்முகம் என்னிடம் ஒரு முறை பேசும்போது இவ்வாறு கூறினார்; ''எம்ஜிஆர் தனக்கு எம்எல்ஏ சீட் வேண்டாமென்று கூறி விட்டார். 

அதனால்தான் நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரனுக்கு (எஸ்எஸ்ஆர்) திமுக எம்எல்ஏ சீட் தந்தது. ஆனால் எஸ்எஸ்ஆர் எம்எல்ஏ ஆன பிறகு அவருக்கு கிடைத்த மரியாதைதான் எம்ஜிஆருக்கு அரசியலின் பலத்தை காட்டியது. 

அதன் பின்னர் எம்ஜிஆர் 1962-ல் சட்ட மேலவை உறுப்பினராக (எம்எல்சி) ஆனார். 1967 மற்றும் 1971 தேர்தல்களில் எம்எல்ஏ ஆனார். பின்னர் 1972-ல் திமுகவிலிருந்து பிரிந்து அஇஅதிமுகவை உருவாக்கி, 1977- ல் ஆட்சியை கைப்பற்றி முதலமைச்சரானார்''.

அதேபோல ஜெயலலிதா 1982-ல் தீவிர அரசியலுக்கு வந்தார். 1991-ல் ஆட்சியை கைப்பற்றினார். முதல்வராவதற்கு முன்பு ஒன்பது ஆண்டு கால அரசியல் கள அனுபவம் அவருக்கு இருந்தது. 

அந்த காலகட்டத்தில் 1989 சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் இரண்டு நாட்கள் ஜெயலலிதாவுடன் அவரது தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு உடன் சென்றிருக்கிறேன். திருச்சி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஒரு முறை இரண்டு நாட்கள் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். 

சசிகலாGetty Images

மதியம் 3.30 க்கு புறப்பட்டால், அடுத்த நாள் அதிகாலை 4.30 அளவில்தான் தங்குமிடம் திரும்பி வருவார். கிராமங்களுக்கு, குக்கிராமங்களுக்கு, பட்டி, தொட்டி எல்லாம் ஜெயலலிதாவின் கால் படாத இடமே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.

இந்த நீண்ட பின்புலத்தை நான் சொல்ல காரணம் இன்றைக்கு ரஜனிகாந்துக்கு கள அரசியல் அனுபவம் என்ன என்ற கேள்வியை எழுப்பத் தான். 

அரசியல் ஒன்றும் சாதாரண விஷயமோ அல்லது விளையாட்டோ அல்லது சினிமா வசனங்களையும், டூப் போட்டு எதிரியை பந்தாடுவதோ கிடையாது. 

சட்டமன்ற தேர்தலுக்கு நான்கு மாதங்கள் முன்புதான் அரசியல் கட்சியை துவக்குவேன் என்று ரஜினி சொல்லுவது, சூப்பர் ஸ்டாரின் பாஷையில் சொன்னால், எனக்கு, தலையை கர்-ரென்று சுற்ற வைக்கிறது. 

ரஜினியின் செல்வாக்கை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் ரஜினியின் செல்வாக்கு என்பது மத்திய தர மற்றும் அடித்தட்டு மக்கள் பிரிவினரின் ஒரு தரப்பில் அவருக்கு வாக்குகளை பெற்றுத் தரலாம். 

ஆனால் ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு ரஜினியால் வாக்குகளை பெற முடியாது. அப்படியென்றால் ரஜினி உடைக்கும் அந்த வாக்குகள் யாருடையை வெற்றி வாய்ப்பை பாதிக்கும், அதுவும் எந்தளவுக்கு பாதிக்கும் என்பதுதான் கேள்வி. 

தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளான அஇஅதிமுகவும், திமுகவும் இன்று ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி ஓரளவுக்கு மேலேயே கவலை கொண்டிருப்பது உண்மை. நான் மறுக்கவில்லை. 

குறிப்பாக திமுக ரஜினியின் அரசியல் வருகையால் அஇஅதிமுகவை விட கவலை கொண்டிருப்பது உண்மை. 

ரஜினி

இதற்கு சரியான உதாரணம், ரஜினி பற்றிய எந்த தொலைக்காட்சி விவாதங்களிலும் தற்போதைக்கு கலந்து கொள்ள வேண்டாம் என்று திமுக செய்தி தொடர்பாளர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

இதனை என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசிய பல திமுக செய்தி தொடர்பாளர்களும் உறுதிபடுத்தினார்கள். 

அதே போலவே, எழுவர் விடுதலை பற்றிய ரஜினியின் கருத்து மற்றும் மோடியை பற்றிய ரஜினியின் கருத்து பற்றிய, தொலைக்காட்சி விவாதங்கள் எவற்றிலும் திமுக பிரமுகர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. 

இதுதான் இன்றையை தமிழக அரசியிலின் சுவாரஸ்யம். ரஜினியின் வருகை இரு பெரும் கட்சிகளிடம் கண்டிப்பாக ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஆனால் அதனை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டிய அளவுக்கு ரஜினியால் உபயோகப்படுத்திக் கொள்ள இதுவரையில் முடியவில்லை. தேர்தல்கள் நெருங்கும்போது ரஜினி இதனை உபயோகப்படுத்திக் கொள்வார் என்கிறார்கள். 

ரஜினியின் தற்போதய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது அது அவ்வளவு சுலபமானதல்ல என்பது தமிழக அரசியலின் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கும் நன்றாக தெரியும். 

இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. அது தேர்தல்களுக்கு தேவைப்படும் பணம். நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தமிழகத்தில் தேர்தல்கள் எந்தளவுக்கு பணம் புரளும் விவகாரம் என்பது. 

திருமங்கலம் ஃபார்முலா மற்றும் ஸ்ரீரங்கம் ஃபார்முலா என்பவை நமக்கு தெரிந்த விஷயங்கள்தான். ஆகவே தேர்தலில் பணத்தின் பெரும் பங்கு ரஜினிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்புகள் ஏதுமில்லை. 

வாக்காளர்களுக்கு பெரிய கட்சிகள் பணம் கொடுப்பதை எங்களால் தடுக்க முடியவில்லை என்று கூறி, இந்திய தேர்தல் ஆணையம் 2016 சட்டமன்ற பொது தேர்தலில் இரண்டு தொகுதிகளில் தேர்தல்களை முற்றிலும் ரத்து செய்தது. 

2017-ல் சென்னை ஆர்கே நகர் இடைத் தேர்தலையும் தேர்தல் ஆணையம் ஒரு முறை ரத்து செய்தது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து 89 கோடி ரூபாயை ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அஇஅதிமுக செலவிட்டதற்கான வலுவான ஆதரங்கள் இருப்பதாக, இந்திய வருமான வரி துறை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் இடைத்தேர்லை ரத்து செய்தது. 

இதேபோல அப்போதய ரிசர்வ் வங்கி ஆளுநர், ரகுராம் ராஜன், 2016 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களின் துவக்க கட்டத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசும்போது கூறிய விஷயம் இதுதான்; 

''இந்த ஐந்து மாநில தேர்தல்களை தேர்தல் ஆணையம் அறிவித்த சில நாட்களில் 60,000 கோடி ரூபாய், ரொக்க பணமாக, இந்திய பொருளாதாரத்துக்குள் வந்திருக்கிறது. வழக்கமாக தேர்தல் காலங்களில் பணத்தின் வரத்து அதிகரிக்கும். ஆனால், இந்த 60,000 கோடி ரூபாய் என்பது அசாதாரணமானது'' என்றார் ரகுராம் ராஜன். . 

நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைகாட்சி விவாதத்தில் பங்கு பெற்று விட்டு வெளியே வரும்போது ஒரு அஇஅதிமுக தலைவர் (முன்னாள் எம்எல்ஏ) என்னிடம் சொன்னார், ''நான் ஒரு எம்எல்ஏ சீட்டில் நின்று ஜெயிப்பதற்கு எனக்கு 15 கோடி தேவைப்படுகிறது''. நான் என்னருகில் அப்போது நின்று கொண்டிருந்த ஒரு திமுக பிரமுகரை (அவரும் அந்த விவாதத்தில் இருந்தார்) திரும்பி பார்த்தேன் அவர் சொன்னார், ''சார், அவர் சொல்லுவது சரியானதுதான். இதுதான் கள யதார்த்தம்''.

மிகவும் எளிதான கேள்வி இதுதான். தேர்தலுக்கு வரும் ரஜினிக்கு 234 தொகுதிகளிலும் தேவைப்படும் இவ்வளவு பணம் எங்கிருந்து வரப் போகிறது? இந்த கேள்விக்கான விடை நமக்கு தெரிந்தால் நாம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியலை துல்லியமாக புரிந்து கொள்ளலாம். 

 

https://www.bbc.com/tamil/india-46228058

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா... போங்கப்பு. 
ரசனிக்கும்... அரசியலுக்கும்... வெகு  தூரம். 
அந்த ஆள்... தான், லூஸ். என்றால்...  தமிழ்  ஊடகங்களும்,  லூசு.. கேசுகள்  தான். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mqdefault.jpg

" நான் அரசியலுக்கு வரப்போறன் "

" தம்பி நீ மேல வந்துட்ட " ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/16/2018 at 9:13 PM, கிருபன் said:

மிகவும் எளிதான கேள்வி இதுதான். தேர்தலுக்கு வரும் ரஜினிக்கு 234 தொகுதிகளிலும் தேவைப்படும் இவ்வளவு பம் எங்கிருந்து வரப் போகிறது? 

1542511034-6281.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.