Jump to content

குடாநாட்டுக்குள் புகுந்தது கஜா! – கடும் காற்றுடன் மழை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கஜா புயல் காரணமாகத் தற்போது யாழ்ப்பாணம் குடாநாட்டில் கடும் காற்றுடன் மழை பெய்கின்றது. அதனால் மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்கு முடங்கியுள்ளனர்.

இன்று இரவு 8 மணியளவில் காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. மழையும் பெய்யத் தொடங்கியது. காங்கேசன்துறை, காரைநகர், வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமானதாகக் காணப்பட்டது. வடமராட்சியில் பலத்த காற்று மற்றும் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.

நாளை அதிகாலை காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://newuthayan.com/story/01/குடாநாட்டுக்குள்-புகுந்தது-கஜா-கடும்-காற்றுடன்-மழை.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜா புயல்: யாழில் 700 குடும்பங்கள் பாதிப்பு

gaja-720x450.png

கஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

கஜா புயல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யாழ். மாவட்டத்தில் நிலைக்கொண்டிருந்த கஜா புயல் நேற்று மாலை 6.10 மணிமுதல் இன்று அதிகாலை வரை கடுமையாக வீசியது.

கஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை.

ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் 700 குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 52 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 500 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சிறுதொழில் முயற்சியாளர்களின் கடைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 படகுகள் ஆகியனவும் சேதமடைந்துள்ளன.

தற்போது காற்றின் வேகம் குறைவடைந்து சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

 

http://athavannews.com/கஜா-புயல்-யாழில்-700-குடும்ப/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.