Sign in to follow this  
கிருபன்

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: பங்களாதேஷ் அணி வெற்றி

Recommended Posts

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: பங்களாதேஷ் அணி வெற்றி

சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி, தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது..

இதன் முதலாவது டெஸ்ட் போட்டியில், சிம்பாப்வே அணி 151 ஓட்டங்களால் சரித்திர வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று முடிந்துள்ளது.

இப்போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம்,

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி, முஷ்பிகுர் ரஹிமின் இரட்டை சதத்தின் துணையுடன் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 522 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்போது பங்களாதேஷ் அணி சார்பில், முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிழக்காது 219 ஓட்டங்களையும், மொஹிமுல் ஹக் 161 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் கெய்ல் ஜார்வீஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய சிம்பாப்வே அணி, 304 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது சிம்பாப்வே அணி சார்பில், அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக பிரெண்டன் டெய்லர் 110 ஓட்டங்களையும், பீட்டர் மூர் 83 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளையும், மெஹிடி ஹசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 218 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

இதன்போது பங்களாதேஷ் அணி சார்பில், அணித்தலைவர் மொஹமதுல்லா 101 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் கெய்ல் ஜார்வீஸ் மற்றும் டொனால்ட் ட்ரீபானோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதற்கமைய சிம்பாப்வே அணிக்கு 443 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சிம்பாப்வே அணி, 224 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பங்களாதேஷ் அணி 218 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைக், பங்களாதேஷ் அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியுள்ளது.

இதன்போது சிம்பாப்வே அணி சார்பில், பிரெண்டன் டெய்லர் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் மெஹிடி ஹசன் 5 விக்கெட்டுகளையும், தைஜூல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்பிகுர் ரஹிம் தெரிவு செய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக தைஜூல் இஸ்லாம் தெரிவுசெய்யப்பட்டார்.

 

http://athavannews.com/சிம்பாப்வே-அணிக்கெதிரான/

 

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this