Jump to content

Recommended Posts

சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக, பொதுஜன முன்னணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளதை அடுத்தே மகிந்த ராஜபக்ச இந்த முடிவுக்கு வந்திருப்பாதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தற்போது நடந்து கொண்டிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மகிந்த ராஜபக்ச தனது கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் பதவியை விட்டு விலக வேண்டும் என்று மங்கள சமரவீர கோரியிருந்தார்.

அதேவேளை, நாளை நாடாளுமன்றம் கூடும் என்றும், அங்கு தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பேன் என்றும் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இதனிடையே,  சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை நாளை காலை 8.30 மணிக்குக் கூட்டியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/11/13/news/34387

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி-  நாமல்

பிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும்  கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

NAMAL.jpg

இதேவேளை, பொதுத்தேர்தலை இடைநிறுத்தும் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இது நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமை குறித்து அரசியல்வாதிகள் இவ்வளவு ஆனந்தமடைந்ததை நான் ஒருபோதும் பார்த்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி பல தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இறுதியில்  பொதுமக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/44429

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவும்... 6 நாள் பிரதமரா?
இந்த அரசியல் கோமாளி  விளையாட்டில், சிங்களவனைப் பற்றி.. உலகம் நன்றாக அறிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மகிந்தவும்... 6 நாள் பிரதமரா?
இந்த அரசியல் கோமாளி  விளையாட்டில், சிங்களவனைப் பற்றி.. உலகம் நன்றாக அறிந்திருக்கும்.

ஒரு கிழமை விளையாட்டால் பல கோடி ரூபாக்கள் நஸ்டமாகியிருக்கும்.

ஏற்கனவே டொலர் 175 போனது இப்போ இன்னும் கூடியிருக்கும்.யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு கிழமை விளையாட்டால் பல கோடி ரூபாக்கள் நஸ்டமாகியிருக்கும்.

ஏற்கனவே டொலர் 175 போனது இப்போ இன்னும் கூடியிருக்கும்.யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

சாத்திரிமார் சொல்லியிருப்பார்கள் குறுகிய காலம் பதவியிலிருந்து விலகினால் பின்பு ஆயுட்காலம் வரை ஜனாதிபதியாக இருக்கலாம் என்று.........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.