Jump to content

கஜா புயலின் தாக்கம்: வடக்கு, கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
November 13, 2018
kaja.png?resize=800%2C459

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. யாழ். குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மன்னார், புத்தளம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் ஊடாகக் காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதேவேளை, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அத்துடன், கிழக்கு கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறையினூடாக மன்னார் வரையிலான கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது.

http://globaltamilnews.net/2018/103140/

Link to comment
Share on other sites

வருகிறது கஜா ! வடக்கு, கிழக்கு மக்களே அவதானம்

kaja_puyal.jpg

கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலைகொண்டுள்ள கஜா என பெயரிடப்பட்டுள்ள புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வலுப்பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது. 

இதேவேளை, யாழ். குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னார், புத்தளம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் ஊடாகக் காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும். 

இதேவேளை, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

அத்துடன், கிழக்கு கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறையினூடாக மன்னார் வரையிலான கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் ஐந்து கிலோ மீற்றர் என குறைந்த வேகத்தில் நகர்கிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீற்றர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை இந்திய வானிலை மையம், ‘‘கஜா புயல் 5 கிலோ மீற்றர் என குறைந்த வேகத்தில் நகர்கிறது. 

சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீற்றர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீற்றர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. 

மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் 15 ஆம் திகதி அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/44409

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.