Jump to content

மனுகா தேன்(Manuka Honey)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் எனது நெருங்கிய உறவினர் சிட்னியில் இருந்து வந்திருந்தார்.காலையில் ஓட் சாப்பிடும் போது தேன் இருக்கா?ஆமா இருக்கு என்று கொடுத்தா இந்த தேனை விட மனுகா தேன் என்று விற்கிறார்கள் இனிமேல் அதை வாங்கி பாவியுங்கள் என்றார்.

சரி இந்த தேன் எங்கே எடுக்கிறார்கள் என்று தேடினால் கூடுதலாக நியூசிலாந்திலும் அவுஸதிரேலிய சில பகுதியிலும் இருந்து எடுக்கிறார்கள்.இதன் விலை சாதாரண தேனை விட பல மடங்காக இருக்கிறது.பலவகைகளிலும் இருக்கிறது.இப்போது இருக்கும் தேன் முடிய வாங்கலாம் என்றிருக்கிறேன்.ஆனாலும் எதை வாங்குவது என்று தெளிவில்லாமல் இருக்கிறது.

இங்கு அவுஸ் உறவுகள் யாராவது பாவிக்கிறீர்களா?அல்லது மற்றைய நாடுகளில் உள்ளவர்கள் யாரேனும் பாவிக்கிறீர்களா?இது பற்றிய கூடுதலான விபரங்கள் அறிய ஆவலாக உள்ளேன்.

Here are reviews of these five best types of manuka honey.
  • Comvita Manuka Honey UMF 15+ (Super Premium) New Zealand Honey. ... 
  • Kiva Certified UMF 15+ – Raw Manuka Honey. ... 
  • Manuka Health – MGO 400+ Manuka Honey, 100% Pure New Zealand Honey. ... 
  • Wild Cape UMF 15+ East Cape Manuka Honey. ... 
  • Bee's Inn Manuka Honey UMP 15+ Pure Natural Honey
  • Here are reviews of these five best types of manuka honey.
    • Comvita Manuka Honey UMF 15+ (Super Premium) New Zealand Honey. ... 
    • Kiva Certified UMF 15+ – Raw Manuka Honey. ... 
    • Manuka Health – MGO 400+ Manuka Honey, 100% Pure New Zealand Honey. ... 
    • Wild Cape UMF 15+ East Cape Manuka Honey. ... 
    • Bee's Inn Manuka Honey UMP 15+ Pure Natural Honey.

06F93AB6-80EC-47EC-89EB-ADD58182657D.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், ஈழப்பிரியன்!

இந்த விதமான தேன்....நான் பாவிக்கிறதில்லை!

மனுசி மட்டும் தான் பாவிக்கிறது! ஏனென்றால்...விலை...அப்படி!?

பின்வரும் இணைப்பில்...சில உபயோகமான தகவல்கள் இருகின்றன! நேரம் கிடைக்கும் போது...வாசித்துப் பார்க்கவும்!

https://www.huffingtonpost.com.au/2017/09/28/is-manuka-honey-really-better-than-normal-honey_a_23225467/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

நன்றி புங்கை.

இதன் விலை தான் தலைசுற்ற வைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für new zealand Bee products manuka honey

சென்ற ஏப்பிரல்  மாதம், எனது சகோதரி அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கு வரும் போது...
நியூசிலாந்தில் தயாரிக்கப் பட்ட 500 கிராம் அளவு உள்ள மூன்று போத்தல்களையும்,
ஐந்து கங்காரு இறைச்சி வத்தல் பக்கற்ரும் கொண்டு வந்து தந்தார். 

கங்காரு வத்தலை.. நான் சாப்பிடுகின்றேன். 
தேனை... மனிசி, பாலுடன் கலந்து குடிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

அப்போ....வீட்டுக்கு வீடு....வாசல் படி தானா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புங்கையூரன் said:

அப்போ....வீட்டுக்கு வீடு....வாசல் படி தானா??

எல்லா இடமும், அப்படித்தான் போலை இருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

கங்காரு வத்தலை.. நான் சாப்பிடுகின்றேன். 
தேனை... மனிசி, பாலுடன் கலந்து குடிக்கிறார்.

சிலவேளை ஆண்களுக்கு ஒத்து வராதோ?

ஜேர்மனியில் அதன் விலை எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

UK இல் பாரம்பரிய அல்லது காய் வைத்திய முறைகளிற்றுக்கு, இயற்கை அடிப்படையிலான மருந்து மற்றும் மூலிகைகள் விற்கப்படும் கடையில் மனுக்க தேனின் விலை.

ttps://www.hollandandbarrett.com/shop/food-drink/honey-jams-spreads/honey/manuka-honey/

அமேசன் UK  இல் மனுக்க தேனின் விலை.

https://www.amazon.co.uk/s/?ie=UTF8&keywords=manuka+honey&index=aps&tag=googhydr-21&ref=pd_sl_szuwsws6l_e&adgrpid=48652742530&hvpone=&hvptwo=&hvadid=259049962750&hvpos=1t1&hvnetw=g&hvrand=6035091872946057559&hvqmt=e&hvdev=c&hvdvcmdl=&hvlocint=&hvlocphy=9045954&hvtargid=kwd-282944663

ஆனால், பொதுவாக தென் என்பது எந்த தேவைக்கு  பாவிக்கப்படுகிறது என்பதை பொறுத்தது.

https://www.huffingtonpost.com.au/2017/09/28/is-manuka-honey-really-better-than-normal-honey_a_23225467/  

அல்லது, Aus  இல் கிராம புறமாக வீடுகளிலே தென் விற்றப்பார்கள். அது எமது இலங்கை தேனை போன்றது, கருமையான நிறம் உடையது.

பொதுவாக தேன், antibacterial குணம் உடையது. எனவே, சிலருக்கு தென் ஒத்து வராத சந்தர்ப்பங்களும் உண்டு. ஏனெனில்,  உணவே சீரணத்திடற்கும், சுகாதாரத்திடற்கும் உதவும் வயிற்றில் இருக்கும் bacteria வின் சம நிலையை குழப்பி விடும் வாய்ப்புகளும் உண்டு.

உணவே மருந்து என்பதனால், அது ஒவ்வொரு தனி நபரிட்ற்கும்  தேனின் ஒவ்வாமை பொதுவாக வேறுபடும்.

அதனால், Aus இல் இருக்கும் மஞ்சள் வர்ண போத்தலில் வரும் தேன் பொதுவான பாவனைக்கு நன்று என்றே எண்ணுகிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

கங்காரு வத்தலை.. நான் சாப்பிடுகின்றேன். 
தேனை... மனிசி, பாலுடன் கலந்து குடிக்கிறார்.

கங்காரு வத்தல் கொஞ்சம் வில்லங்கமான சாமான்....

பாக்யராஜின் முருகைக்காய் சமாசாரம் போல..

பார்த்து சிறியர்...... :grin:

பிறகு... ஒண்டு கிடக்க, ஒண்டு 'ஆகிடும்'... ஏதோ நமக்கு தோன்றியதை சொன்னேன். பிறகு உங்க பாடு...?

கேட்டுப் பாருங்க. புங்கையர் கதை, கதையா சொல்லுவார்... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கங்காரு வத்தல் கொஞ்சம் வில்லங்கமான சாமான்....

பாக்யராஜின் முருகைக்காய் சமாசாரம் போல..

பார்த்து சிறியர்...... :grin:

பிறகு... ஒண்டு கிடக்க, ஒண்டு 'ஆகிடும்'... ஏதோ நமக்கு தோன்றியதை சொன்னேன். பிறகு உங்க பாடு...?

கேட்டுப் பாருங்க. புங்கையர் கதை, கதையா சொல்லுவார்... ?

அங்கால பாலும் தேனுமென்றால் இங்கும் உசாராகத் தானே இருக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

கங்காரு வத்தலை.. நான் சாப்பிடுகின்றேன். 
தேனை... மனிசி, பாலுடன் கலந்து குடிக்கிறார்.

சிறித்தம்பி!

 உந்த சாமானுகள் உங்கினேக்கை எங்கையும் விக்குதே?

நோமலாய் என்ரை கட்டுமஸ்தான உடம்புக்கு தேவையில்லை.....எண்டாலும் ஒருக்கால் ரேஸ்ற் பண்ணிப்பாப்பமெண்டு கேக்கிறன்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

கங்காரு வத்தல் கொஞ்சம் வில்லங்கமான சாமான்....

பாக்யராஜின் முருகைக்காய் சமாசாரம் போல..

பார்த்து சிறியர்...... :grin:

பிறகு... ஒண்டு கிடக்க, ஒண்டு 'ஆகிடும்'... ஏதோ நமக்கு தோன்றியதை சொன்னேன். பிறகு உங்க பாடு...?

கேட்டுப் பாருங்க. புங்கையர் கதை, கதையா சொல்லுவார்... ?

சும்மா போங்க... நாதமுனியர்.
ஒரு பக்கற்  கங்காரு வத்தல் சாப்பிட்டும்...  ஒரு, அசுமாத்தத்தையும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

அங்கால பாலும் தேனுமென்றால் இங்கும் உசாராகத் தானே இருக்கணும்.

ஆகா... ஈழப் பிரியன்.  நல்ல, ரைமிங்கான பதில். ரசித்தேன், சிரித்தேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி!

 உந்த சாமானுகள் உங்கினேக்கை எங்கையும் விக்குதே?

நோமலாய் என்ரை கட்டுமஸ்தான உடம்புக்கு தேவையில்லை.....எண்டாலும் ஒருக்கால் ரேஸ்ற் பண்ணிப்பாப்பமெண்டு கேக்கிறன்? :cool:

அந்தாள் வெள்ளிக்கு வெள்ளி கொஞ்சம்கொஞசமா பாவிக்குது.அதையும் ஆட்டையைப் போடுற பிளானோ?

பேசாமல் அவுஸ்காரருடன் தொடர்பு கொண்டால் பார்சலில் வீடு வந்து சேரும்.

உந்த வயகிரா ஒன்றுமே தேவையில்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி!

 உந்த சாமானுகள் உங்கினேக்கை எங்கையும் விக்குதே?

நோமலாய் என்ரை கட்டுமஸ்தான உடம்புக்கு தேவையில்லை.....எண்டாலும் ஒருக்கால் ரேஸ்ற் பண்ணிப்பாப்பமெண்டு கேக்கிறன்? :cool:

Bildergebnis für mariani game jerky kangaroo

இங்கு  கடைகளில், இவை  விற்பதை நான் அறியவில்லை.
உங்கள்  விலாசத்தை... தனி மடலில் தாருங்கள். கங்காரு வத்தல்  அனுப்பி வைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அந்தாள் வெள்ளிக்கு வெள்ளி கொஞ்சம்கொஞசமா பாவிக்குது.அதையும் ஆட்டையைப் போடுற பிளானோ?

பேசாமல் அவுஸ்காரருடன் தொடர்பு கொண்டால் பார்சலில் வீடு வந்து சேரும்.

உந்த வயகிரா ஒன்றுமே தேவையில்லையாம்.

வயாகரா எண்டால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி!

 உந்த சாமானுகள் உங்கினேக்கை எங்கையும் விக்குதே?

நோமலாய் என்ரை கட்டுமஸ்தான உடம்புக்கு தேவையில்லை.....எண்டாலும் ஒருக்கால் ரேஸ்ற் பண்ணிப்பாப்பமெண்டு கேக்கிறன்? :cool:

இங்கே முயற்சித்துப் பார்க்கவும்!

https://www.tripadvisor.co.nz/Restaurant_Review-g187323-d782485-Reviews-Corroboree_Restaurant_Cafe_Bar-Berlin.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனுக்கா என்பது நியுசிலாந்து அவுஸ் பக்கம் உள்ள தாவரம் அதில் உள்ள பூக்கள் பூக்கும் நேரம் உற்பத்தியாகும் தேன் அளவு அதன்தன்மைக்கு ஏற்ப்ப 15+ அல்லது 30+ என்பார்கள் அதைவிட நமது வேப்பம் பூக்கள் பூக்கும் நேரம் வேப்பமரத்தில் உண்டாகும் தேனடை பலமடங்கு மேலானது சுடுதண்ணியில் தேனை கலந்து குடிப்பது பலனை தராது என்கிறார்கள் இங்கு சென்ஸ்பரி போன்ற சூப்பர்ஸ்டார் களில் அதிவிலை கூடிய பொருளாய் விற்பனைக்கு இருக்கும் வேண்டிகொண்டுவந்து சாப்பிட்டால் ஒரே கைப்பு ம் இனிப்பும் சேர்ந்து ஒரு மெழுகு போல் இருக்கு ஆனால் ஊரில் காணியில் உள்ள வேப்பம்கூடலில் உள்ள தேனும் அதே போல் உள்ளது இங்கு  அடிக்கடி காய்ச்சல் வரும் ஆளுக்கு குடுக்க 50 வயதிலும் புட்போல் தெரியாதவர் இப்ப நன்கு விளையாடுறார் நமக்கு பஞ்சி தேனை குடிக்கவும் .

மனுக்கா பற்றி ஏற்கனவே இங்கு எழுதினதை தேடிக்கொண்டு இருக்கிறன் சிலவேளை அரசியல்  வாதிகளையும் சேர்த்து திட்டி இருப்பன் எல்லமே வெட்டு வேண்டி இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kadancha said:

பொதுவாக தேன், antibacterial குணம் உடையது. எனவே, சிலருக்கு தென் ஒத்து வராத சந்தர்ப்பங்களும் உண்டு. ஏனெனில்,  உணவே சீரணத்திடற்கும், சுகாதாரத்திடற்கும் உதவும் வயிற்றில் இருக்கும் bacteria வின் சம நிலையை குழப்பி விடும் வாய்ப்புகளும் உண்டு.

உணவே மருந்து என்பதனால், அது ஒவ்வொரு தனி நபரிட்ற்கும்  தேனின் ஒவ்வாமை பொதுவாக வேறுபடும்.

அதனால், Aus இல் இருக்கும் மஞ்சள் வர்ண போத்தலில் வரும் தேன் பொதுவான பாவனைக்கு நன்று என்றே எண்ணுகிறேன்.  

3 hours ago, பெருமாள் said:

மனுக்கா என்பது நியுசிலாந்து அவுஸ் பக்கம் உள்ள தாவரம் அதில் உள்ள பூக்கள் பூக்கும் நேரம் உற்பத்தியாகும் தேன் அளவு அதன்தன்மைக்கு ஏற்ப்ப 15+ அல்லது 30+ என்பார்கள் அதைவிட நமது வேப்பம் பூக்கள் பூக்கும் நேரம் வேப்பமரத்தில் உண்டாகும் தேனடை பலமடங்கு மேலானது சுடுதண்ணியில் தேனை கலந்து குடிப்பது பலனை தராது என்கிறார்கள்

கடைஞ்சா, பெருமாள்... நல்ல பயனுள்ள தகவல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன்கூடு வைத்து, வீடுகள், தோட்டங்களில் வைதது, கலப்படமற்ற சுத்தமான தேனை, உள்ளூர் அரச சான்றிதலை பெற்று, தேனீ  வளர்ப்போர் சங்கம் மூலம் விற்கின்றனர். ஊரில் இருந்து தேன் என்ற பெயரில் வரும் கலப்படத்திலும் பார்க்க இது பாதுகாப்பானது.

அதை வாங்காமல், கண்ணுக்கு தெரியாத ஊரில இருந்து வருவது நல்லதா கெட்டதா என்று குடைகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் கடன்சா உங்கள் விரிவான விளக்கங்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 1 year later...

மனுகாஹனி என் றால் என்ன?
இந்த அரிய மற்றும் சிறப்பு நியூசிலாந்து ததன் பூர்வீக மானுகா தாவரத்தின்
(லலப்த ாஸ் லபர்ம் ஸ் தகாபாரியம்) அமிர்தத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது, 
இது நமது புத்திசாலி ததனீக்கள் தசகரித்து மனுகா ததனாக மாற்றும், அதன்
அரிய மற்றும் சிக்கலான பண் புகளுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தது. 
நியூசிலாந்து மானுகா மலரின் அமிர்தம் தான் மானுகா ததனுக்கு
தனித்துவமான இயற்கக லபாரு ்ககள பங்களிக்கிறது, இது மற்ற
ஹனிகளுக்கு மிகவும் வித்தியாசமானது.
MGO Manuka Power
எம்.ஜி.ஓ என்பது (methylglyoxal) லமத்தில்கிளிதயாக்ஸகலக் குறிக்கிறது, இது
இயற்ககயாக நிகழும் கலகவ, இது மனுகா ததகன மிகவும் சிறப்பானதாக
ஆக்குகிறது.

எங்கள் ஆராய்ச்சி கூ ் ாளர் - தபராசிரியர் தாமஸ் லஹன் தல (டிலரஸ் ன்
பல்ககலக்கழகம்) மற்றும் அவரது குழு - எம்.ஜி.ஓகவ மனுகா ததனில் உள்ள
மாய மூலப்லபாருளாகக் கண் டுபிடித்தது, இது அறிவியல் உலகில்
நீண் காலமாக எதிர்பார்க்கப்ப ் ஒரு கண் டுபிடிப்பு.
2008 ஆம்ஆண் டில் மனுகா லஹல்த்எம்.ஜி.ஓ பரிதசாதகனகய மனுகா ததகன
தரம் பிரிப்பதற்கான மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமான முகறயாக
முன் தனாடியாகக் கா ்டியது, இந்த நிலத்கத உக க்கும் ஆராய்ச்சியின்
அடிப்பக யில்.
எல்லா மனுகா ததனும் சமமாக உருவாக்கப்ப வில்கல மற்றும் எம்.ஜி.ஓ
அளவுகள் லபரிதும் மாறுபடும். மனுகா லஹல்த் எம்.ஜி.ஓ மனுகா ஹனியின்
ஒவ்லவாரு ஜாடியும் இயற்கக எம்.ஜி.ஓ உள்ள க்கத்திற்காக தசாதிக்கப்ப ்டு
சான்றிதழ் லபறப்படுகிறது. உங்கள் ததன் ஜாடியில் எம்.ஜி.ஓ எவ்வளவு
இருக்கிறது என் பகத எம்.ஜி.ஓ எண் லசால்கிறது - எளிகமயானது.
மனுகா ஹஹல்த்எம்.ஜி.ஓ மனுகா ததனன ஏன் ததர்வு ஹெய்ய தேண் டும்?
மனுகா ததன் அறிவியலில் உள்ள தகலவர்கள் - மனுகா ததனின்
ரகசியங்ககளக் கண் டுபிடித்து, அதன் தூய்கம மற்றும் அசாதாரண
இயற்கக பண் புககள பாதுகாத்து தமம்படுத்துகிதறாம், தமலும் எங்கள்
அறிவியல் ஆராய்ச்சி கூ ் ாண் கமகளு ன் எங்கள் புரிதகலயும்
நிபுணத்துவத்கதயும் லதா ர்ந்து வளர்த்து வருகிதறாம்.
HIVE முதல் வீ ்டிற்கு கவனிப்பு மற்றும் நிபுணத்துவம் - எங்கள்
அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் குழு (சுமார்1.5 பில்லியன் ததனீக்கள் மற்றும்
200 மனிதர்கள்) இந்த அரிய மற்றும் சிறப்பு ததகன இந்த லசயல்முகறயின்
ஒவ்லவாரு க ் த்திலும் கவனமாக வடிவகமத்து வளர்க்கின் றன.
100% நியூசிலாந்து ததாற்றம் - ஒவ்லவாரு ஜாடியும் அது வந்த ததனீ
வளர்ப்பவரி மிருந்தத கண் டுபிடிக்கப்ப லாம், தமலும் எங்கள் சிறப்பு ததன்
வசதியில் நியூசிலாந்தில் கவனமாக தசாதகன லசய்யப்ப ்டு, லபாதி
லசய்யப்ப ்டு பாதுகாப்பாக மூ ப்ப ்டுள்ளது.

எம்.ஜி.ஓ ஆற்றல், தூய்கம மற்றும் தரம் ஆகியவற்றிற்காக தசாதிக்கப்ப ் 
மற்றும் சான் றளிக்கப்ப ் கவ - ஒவ்லவாரு லதாகுதியும்
தசாதிக்கப்படுகின் றன, எனதவ எங்கள் பிரீமியம் எம்.ஜி.ஓ மனுகா ஹனி
அதுதான் என்று உறுதியளிக்கிறது என் பகத நீங்கள் நம்பலாம்.
Why is Manuka Honey so special?
மனுகா ததன் ஒரு COMPLEX சிக்கலான ததன், இது ஒரு எளிய த பிள் ததனுக்கு
அப்பால் லசல்கிறது.
குறிப்பி த்தக்க இயற்கக பண் புககள நிரூபிக்கும் விரிவான விஞ்ஞான
ஆராய்ச்சியின் கமயமாக இது அகமந்துள்ளது, இது மற்றஹனிகளி மிருந்து
ஒதுக்கி கவக்கப்ப ்டு உலகம் முழுவதும் மிகவும் மதிப்புமிக்கதாக
அகமகிறது.
Manuka Health is a member of the UMFHA and every jar of Manuka honey is tested for MGO, 
Leptosperin and DHA Manuka Health now proudly carries both the MGO and UMF rating 
systems - we believe using both MGO and UMF on our labels offers the customer the ultimate 
in transparency and reassurance of quality and origin. Our iconic red MGO double hex mark 
gives the exact content of MGO in each jar (an indicator of its potency and power) and the 
UMF mark gives an added endorsement authenticating New Zealand origin. Combined, these 
trusted symbols solidify Manuka Health’s position as a trusted expert in Manuka honey.

(மனுகா ஹெல்த் யுஎம்எஃப்ஹெச்ஏ உறுப்பினராக உள்ளார், மமலும் மனுகா
மதனின் ஒவ்ஹவாரு ஜாடியும் எம்ஜிஓ, ஹலப்ம ாஸ் ஹபரின் மற்றும் டிஹெச்ஏ
ஆகியவற்றிற்கு மசாதிக்கப்படுகிறது
மனுகா ஹெல்த் இப்மபாது எம்.ஜி.ஓ மற்றும் யு.எம்.எஃப் மதிப்பீ ்டு முறறகள்
இரண் ற யும் ஹபருறமயு ன் ஹகாண் டுள்ளது - எம்.ஜி.ஓ மற்றும் யு.எம்.எஃப்
இரண் ற யும் எங்கள் மலபிள்களில் பயன் படுத்துவது வாடிக்றகயாளருக்கு
தரம் மற்றும் மதாற்றத்தின் ஹவளிப்பற த்தன்றம மற்றும் உறுதியளிப்பதில்
இறுதி வாய்ப்றப வழங்குகிறது என்று நாங்கள் நம்புகிமறாம். எங்கள்
சின்னமான சிவப்பு எம்.ஜி.ஓ இர ்ற ஹெக்ஸ் குறி ஒவ்ஹவாரு குடுறவயிலும்
எம்.ஜி.ஓவின் சரியான உள்ள க்கத்றத அளிக்கிறது (அதன் ஆற்றல் மற்றும்
சக்தியின் கா ்டி) மற்றும் யு.எம்.எஃப் குறி நியூசிலாந்து மதாற்றத்றத
அங்கீகரிக்கும் கூடுதல் ஒப்புதறல அளிக்கிறது. ஒருங்கிறணந்தால், இந்த
நம்பகமான சின்னங்கள் மனுகா மதனில் நம்பகமான நிபுணராக மனுகா
ஹெல்த்நிறலறய உறுதிப்படுத்துகின் றன.)
மனுகா ததனுக்கு அதன் சிறப்பு இயற்கக பண் புககள தமம்படுத்தவும்
பாதுகாக்கவும் சிறப்பு கவனிப்பு மற்றும் நிபுணத்துவம் ததகவ. 
லமத்தில்கிதளாக்சல் (எம்.ஜி.ஓ) இயற்ககயாக நிகழும் கலகவ என
நிரூபிக்கப்ப ்டுள்ளது, இது மனுகா ததகன மிகவும் சிறப்பானதாக
ஆக்குகிறது. மனுகா ததனிலிருந்து ததனில் எம்.ஜி.ஓ உருவாகிறது, தமலும்
ததன் பழுக்கும்தபாது, எம்.ஜி.ஓ உள்ள க்கம் அதிகரிக்கும்.
இதற்கு நிபுணர் ககயாளுதல் மற்றும் தசமிப்பு ததகவப்படுகிறது, தமலும்
ஆற்றல், தரம் மற்றும் தூய்கம ஆகியவற்கற உறுதிப்படுத்த ததனின்
துல்லியமான தசாதகன அவசியம். இந்த லசயல்முகறயின் அகனத்து
நிகலகளிலும் கடுகமயான விதிமுகறகள் பூர்த்தி லசய்யப்ப தவண் டும்.
How to best enjoy MGO Manuka Honey
எங்கள் எம்.ஜி.ஓ மனுகாஹனி உங்கள் சுய பாதுகாப்பு வழக்கத்திற்கு எளிதில்
லபாருந்தும். அகத அனுபவிக்க சிறந்த
வழி SPOON கரண் டியால் சரியாக
அல்லது லவதுலவதுப்பான நீ ரில்
கலக்கப்படுகிறது. இது சூ ான
பானங்களில் சுத்திகரிக்கப்ப ் 
சர்க்ககரக்கு ஒரு சிறந்த மாற்றாகவும், 
அதத தபால் காகல உணவுகள் மற்றும்

மிருதுவாக்கல்களுக்கான சரியான துகணயாகவும் அகமகிறது.
எங்கள் எம்.ஜி.ஓ மனுகா ஹனி ஒரு பயிற்சிக்கு முன்னும் பின்னும் ஒரு சிறந்த
இயற்கக ஊக்கத்கதயும், அத்து ன் குழந்கதயின் மதிய உணவிற்கு ஒரு
ஆதராக்கியமான கூடுதலாகவும் லசய்கிறது.
ததனின் இயற்ககயான பண் புககளப் பாதுகாக்க அதிக லவப்பத்கத
லவளிப்படுத்துவகதத்தவிர்க்கவும்.
Manuka Honey & Wound Care

You can buy wholesale price  in India 

From Barakeshop pvt Ltd 

Chennai 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, balaji.srinivasan said:

You can buy wholesale price  in India 

From Barakeshop pvt Ltd 

Chennai 

சென்னையில்... மனுகா தேன் (500 மி.லீ.) என்ன விலை விற்கிறார்கள் என அறிய ஆவலாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.