Jump to content

ஸ்டெயின், றபாடா துல்லியமான பந்துவீச்சு – தொடரை இழந்தது அவுஸ்ரேலியா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெயின், றபாடா துல்லியமான பந்துவீச்சு – தொடரை இழந்தது அவுஸ்ரேலியா!

Drt6wuKVYAAPN1M.jpg

தென்னாபிரிக்க அணியின் டேல் ஸ்டெயின் மற்றும் றபாடாவின் துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவுஸ்ரேலிய அணி தோல்வியை தழுவியுள்ளது.

அதன்படி அவுஸ்ரேலிய அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை தென்னாபிரிக்கா வென்றுள்ளது.

ஓவல், ஹோபர்ட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப விக்கெட்கள் சொற்ப ஓட்டத்துடன் பறிபோனது. இருப்பினும் 15.3 ஆவது ஓவரில் இருந்து இணைந்த அணித்தலைவர் டு பிளசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர்.

இதில் டு பிளசிஸ் 125 ஓட்டங்களையும், 139 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்க அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களை பெற்றது.

பந்துவீச்சியில் அவுஸ்ரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்ட்னினிஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் 321 ஓட்டங்கள் எடுத்தல் வெற்றி என்ற அடிப்படையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 280 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

அந்த அணி சார்பில் ஷோன் மார்ஷ் 106, மர்கஸ் ஸ்ட்னினிஸ் 63, அலெக்ஸ் கேரி 42 ஓட்டங்களையும் க்ளென் மக்ஸ்வெல் ஆட்டமிழக்கத்து 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் டேல் ஸ்டெயின் மற்றும் றபாடா தல 3 விக்கெட்களையும், டிவைன் ப்ரோட்டோரியஸ்2 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனால் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற தென் ஆபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு T-20 போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி குயின்ஸ்லாந்தின் கர்ரா ஓவெல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Drt2trfUUAECAS0.jpg

Drt2tnpU8AAz8w5.jpg

Drt2uE_U4AArzUH.jpg

Drt2tqXUcAAV8pw.jpg

http://athavannews.com/ஸ்டெயின்-றபாடா-துல்லியம/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.