Jump to content

48 மணி நேரத்தில் வங்க கடலில் புயல் எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

519_newsPage-519-720x450.jpg

48 மணி நேரத்தில் வங்க கடலில் புயல் எச்சரிக்கை!

வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் கூறியபோது,

“நேற்று அந்தமான் கடல்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது தென் கிழக்கு வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. அந்த புயல் 14ஆம்; திகதி இரவு வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியை நெருங்கும்.

இதன் காரணமாக வட தமிழக கடலோரம், புதுச்சேரி, ஆந்திர கடலோர பகுதிகளின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும்.

மாலத்தீவு, குமரி கடல் பகுதியில் உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்” என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/48-மணி-நேரத்தில்-வங்க-கடல்-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à®ªà¯à®ªà®à®¿ தà¯à®°à¯à®µà¯

மதம் பிடித்த யானை.. சென்னையை நோக்கி வரும்,  கஜா புயல்.. இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா?

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது புயலாக உருவாகி உள்ளது. இதற்கு கஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

தற்போது புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் டெல்டா பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கஜா புயல் இன்னும் 2 நாட்களில் தமிழகத்தை தாக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு கஜா என்று பெயர் வைக்கப்பட்டதே சுவாரசியமான விஷயம் ஆகும்.

புயல் பெயர்: இந்திய பெருங்கடலில் சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கும் 2000ல் தொடங்கியது. ஆனால் இது முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது 2004ல்தான். புயல் ஒரு குறிப்பிட்ட வேகத்தை அடைந்ததும் அதற்கு பெயர் வைக்கப்படும். இந்த பெயர்களை குறிப்பிட்ட நாடுகள் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருக்கும்.

எந்த நாடுகள்:  இந்திய பெருங்கடல் பகுதிகளை சுற்றி ஏற்படும் புயலுக்கு சில நாடுகள் மட்டுமே பெயர் வைக்க முடியும். வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, ஓமான், பாகிஸ்தான் , மியான்மர், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே பெயர் வைக்க முடியும். இந்த முறை தமிழகத்தில் ஏற்படும் புயலுக்கு கஜா என்று தாய்லாந்துதான் பெயர் வைத்தது.

எப்படி தேர்வு:  இந்த பெயர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருக்கும். அடுத்த புயல் ஏற்படும் போது, இந்த நாடு வைத்த பெயர் பயன்படுத்தப்படும் என்று ஒரு வரிசைப்படி இந்த பெயர் வைக்கும் செயல் நடந்து வருகிறது. உதாரணமாக வர்தா புயல் பாகிஸ்தான் வைத்த பெயர் அதன்பின் மருதா என்ற புயலுக்கு தாய்லாந்து வைத்த பெயரும், மோரா என்ற புயலுக்கு இலங்கை வைத்த பெயரும் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் வங்கதேசம் வைத்த ஓகி என்ற புயல் வந்தது. தற்போது தாய்லாந்து வைத்த கஜா என்ற புயல் வந்துள்ளது. இன்னும் இரண்டு புயலுக்கு பின் மூன்றாவது புயலுக்கு இந்தியா வைத்த பெயரான வாயு என்று பெயர் பயன்படுத்தப்படும்.

என்ன சிறப்பு:  தற்போது தமிழகத்தை தாக்க உள்ள புயலுக்கு கஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துதான் இந்த பெயரை வைத்தது. கஜா என்றால் யானை என்று பொருள். சரியாக இந்த மதம் பிடித்த யானை தற்போது சென்னையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் இருந்து 900 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/gaja-storm-may-hit-tamilnadu-next-days-333944.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à®©à¯à®©à¯à®®à¯ பà¯à®°à®¿à®¤à®¾à®à¯à®à®µà®¿à®²à¯à®²à¯

கஜா வரான்டா.. கஜா வரான்டா.. சென்னையை நெருங்கும் கஜா புயல்.. இப்போது எங்குள்ளது!

கஜா புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது புயலாக உருவாகி உள்ளது. இதற்கு கஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துதான் இந்த பெயரை வைத்தது. இந்த புயல் சென்னையை நோக்கி வந்து கொண்டு இருப்பதால் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

இந்த புயல் இன்னும் பெரிய அளவில் தீவிரம் அடையவில்லை. இப்போது சிறிய புயலாகத்தான் இருக்கிறது. சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல் உள்ளது. 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது

இந்த புயல் சென்னையை நோக்கி வந்து பின் சென்னையை கடக்கும். சரியாக சென்னை வழியாகத்தான் இந்த புயல் கடந்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரக்கோணம் வழியாக ஆந்திரா வரை இந்த புயல் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலில் வேகம் சென்னையை நெருங்க நெருங்க அதிகரிக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. தற்போது இது 12 கிலோ மேட்டர் வேகத்தில் தான் வந்து கொண்டு இருக்கிறது. சென்னையையே நெருங்கும் போது 40-60 கிலோ மீட்டர் வேகத்தை அடைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

இதனால் சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கனமழை பெய்தாலும் இந்த புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று இப்போது கூற இயலாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/gaja-storm-coming-towards-chennai-with-gaining-speed-every-minute-333950.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தை நெருங்குகிறது 'கஜ' புயல்

 
தமிழகத்தை நெருங்குகிறது 'கஜ' புயல்

வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள 'கஜ' புயல் தற்போது தமிழகத்தை நெருங்கிவரும் நிலையில், ஏழு மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புயல் நாளை (வியாழக்கிழமை) இரவில் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவரும் கஜ புயல் தற்போது சென்னைக்குக் கிழக்கே 490 கி.மீ. தூரத்திலும் நாகப்பட்டிணத்திற்கு வடகிழக்கே 580 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. தற்போது சுமார் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் இந்தப் புயல் நவம்பர் 15ஆம் தேதியன்று, அதாவது வியாழக்கிழமையன்று இரவில் கடலூருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பனுக்கும் இடையில் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயலின் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். சில நேரங்களில் 100 கி.மீ. வேகம்வரை காற்று வீசுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

புயல் கரையைக் கடக்கும்போது கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் நாளை துவங்கி அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னையில் நாளை துவங்கி அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்யும்.

தற்போது இந்தப் புயல் பத்து கி.மீ. வேகத்தில் நகர்ந்துவந்தாலும் கரையை நெருங்க நெருங்க தரைப்பகுதி காற்றின் வேகத்திற்கு ஏற்ப இந்தப் புயல் நகரும் வேகம் மாறக்கூடும்

மீனவர்கள் 15ஆம் தேதி கடலுக்குள் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள். 15, 16ஆம் தேதிகளில் தமிழகத்தின் இதர பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தப் புயல் நாளை கரையைக் கடக்கும் என்பதால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் பகுதியில் உள்ள 49 மீனவ கிராமங்களில் இருந்து எந்த மீனவரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லையென கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்த மாவட்டத்தில் 2600 காவல்துறையினரும் புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிச்சாவரம் பகுதியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரிச்சல்முனைக்குச் செல்ல இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேர்கோடு பகுதியிலேயே வானங்கள் நிறுத்தப்படுகின்றன.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை நெருங்குகிறது 'கஜ' புயல்

இதற்கிடையில் இந்தப் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்து மாநில வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 130 பேர் நெல்லூர் பகுதியில் மீன் பிடித்துவருவதாகவும் அவர்கள் உடனடியாக கரை திரும்ப கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர்கள், கப்பல்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் புயலின் காரணமாக, கரையோரம் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்ப்பட்டிருக்கிறது. புயலால் அதிக மழையைப் பெறக்கூடிய 7 மாவட்டங்களில் உள்ள குடிசை, தகர கொட்டகை, மின் கம்பங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், அவற்றைச் சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகளை இம்மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டுவருகின்றன.

கடந்த புயல் காலங்களில் தொலைத்தொடர்பின் காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டதால், இந்த முறை அதனை சமாளிக்க முன்கூட்டியே தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இதனால், புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் செல்போன் கோபுரங்கள் தொடர்ந்து இயங்கும்வகையில் ஜெனரேட்டர்களுக்கான டீசல் 5 நாட்களுக்குத் தேவைப்படும் அளவில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

இந்த கஜ புயலின் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-46212394

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gaja Storm: Most of the trains in Tamilnadu canceled due to worst climate

கஜா புயல் பாதிப்பு.. தமிழகத்தில் முக்கியமான பல ரயில்கள் ரத்து

ஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் முக்கியமான பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. புயலின் தொடக்க கட்ட பாதிப்புகள் இப்போதே தொடங்கி உள்ளது.

புயலில் இருந்து மக்களை காப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் முக்கியமான பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சை - சென்னை உழவன் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி - தஞ்சை சிறப்பு கட்டண ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி - காரைக்கால், காரைக்கால் - தஞ்சை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் - சென்னை ரத்து செய்யப்பட்டுள்ளது., சென்னை - மன்னார்குடி ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி - சென்னை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/gaja-storm-most-the-trains-tamilnadu-canceled-due-worst-climate-334241.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cyclone Gaja impact: Rain lashes Chennai City since Thursday morning

கும் இருட்டு.. காற்றுடன் மழை.. ஜில், ஜில் சென்னை

கஜா புயல் காரணமாக சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவாகிய கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு பாம்பன் மற்றும் கடலூர் நடுவே நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 6.30 மணி நிலவரப்படி, வங்கக் கடலில் சென்னைக்கு கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டிருந்தது. இதன் தாக்கம் காரணமாக இன்று அதிகாலை முதலே சென்னையில் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.

காலை 7 மணி அளவில் கோயம்பேடு, போரூர், பெரம்பூர், திருவான்மியூர், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, கிழக்கு கடற்கரை சாலை, அடையாறு, ஈக்காடுந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. வானம் மேக மூட்டத்தோடு உள்ளதால் சூரியனை காண முடியவில்லை. நல்ல காற்றும் வீசுகிறது.

இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்வோர் அலுவலகம் செல்வோர் அவதிப்பட்டனர். புயல் மற்றும் மழை காரணமாக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பாக இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்டம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை 


Read more at: https://tamil.oneindia.com/news/chennai/cyclone-gaja-impact-rain-lashes-chennai-city-since-thursday-morning-334229.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜா வரான்ா.. கஜா வரான்டா .. ராத்திரி 11:30 மணிக்கு கஜா வரான்டா .. ?

46312617_1924164124335519_16391255120496

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கஜா வரான்ா.. கஜா வரான்டா .. ராத்திரி 11:30 மணிக்கு கஜா வரான்டா .. ?

46312617_1924164124335519_16391255120496

கஜா புயல்.. வேதாரண்யம் - நாகை இடையே அடுத்த 1 மணி நேரத்தில் கரையைக் கடக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®®à¯à®à®®à®¾à®© நாà®à¯

சுனாமிக்கு பின் பெரிய பேரிடர்.. நாகை, அதிராம்பட்டினத்தை சூறையாடிய கஜா புயல்.. பெரும் சேதம்!

2004 சுனாமிக்கு அடுத்து கஜா புயல் நாகை மற்றும் அதிராம்பட்டினத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கஜா புயல் மொத்த தமிழகத்தையே முடக்கி போட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .

கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.

எதிர்பார்க்கவில்லை:  இந்த புயல் பாம்பன் மற்றும் கடலூர் உள்ளிட்ட கரையோர பகுதிகளை அதிகம் தாக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெல்டா மாவட்டங்களை அதிகம் தாக்கியது. கடைசி நேரத்தில் திசை மாறிய கஜா புயல், வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

à®à®¤à®¿à®°à®¾à®®à¯à®ªà®à¯à®à®¿à®©à®®à¯ பாதிபà¯à®ªà¯

நாகப்பட்டினத்தில் இந்த கஜா புயல் 108 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. இதனால் பெரும்பாலான மரங்கள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. புராதன கட்டிடங்கள், வீடுகள் நிறைய இடிந்து விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மழை வேறு பெய்த காரணத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

à®à®¤à®¿à®°à¯à®ªà®¾à®°à¯à®à¯à®à®µà®¿à®²à¯à®²à¯

இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது அதிராம்பட்டினமும் வேதாரண்யமும்தான். அதிராம்பட்டினத்தில் இன்று காலை 111 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்கு இருக்கும் பெரிய கட்டிடங்கள், குடிசைகள், பழைய கட்டிடங்கள் எல்லாம் இடிந்து விழுந்துள்ளது. சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

சுனாமியை போல பாதிப்பு:  கஜா புயல் 2004 சுனாமிக்கு அடுத்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பலரின் வாழ்வாதாரம் மொத்தமாக நிலைகுலைந்து போய் இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். வானிலை மைய அதிகாரிகள் அங்கு இன்னும் மழை பெய்யும் என்று வேறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/nagapattinam/gaja-storm-nagappatinam-adirampattinam-faces-huge-disaster-after-tsunami-334331.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்டிப் போட்ட...  "கஜா" புயலின் படங்கள். 

PHOTOS: Cyclone Gaja In Tamil Nadu

 

PHOTOS: Cyclone Gaja In Tamil Nadu

 

PHOTOS: Cyclone Gaja In Tamil Nadu

 

PHOTOS: Cyclone Gaja In Tamil Nadu

 

PHOTOS: Cyclone Gaja In Tamil Nadu

 

PHOTOS: Cyclone Gaja In Tamil Nadu

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜா புயல் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

india-weather-cyclone-gaja-720x450.jpg

தென்னிந்திய கரையோரங்களை கடுமையாக தாக்கிய கஜா புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 100 தொடக்கம் 120 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சமஸ்கிருதத்தில் ‘யானை’ என்ற பொருள்படும் வகையில் இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு 11 மணியளவில் கஜா புயல் தமிழக கரையோரத்தை அடைந்து, நள்ளிரவு 12.30 மணிக்கு புயல் ஆக்ரோ‌ஷமான வேகத்துடன் கரையைக் கடக்க ஆரம்பித்தது. வேதாரண்யத்துக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடந்து சென்றது.

புயல் முழுமையாக கரையைக் கடப்பதற்கு சுமார் 6 மணி நேரமாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப கஜா புயல் வேதாரண்யம் – நாகை இடையே 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையை கடந்தது.

புயலின் மையப் பகுதி ஒரு இடத்தை கடப்பதற்கு சுமார் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு புயலின் மையப் பகுதி கடலோரத்தில் இருந்து கடந்து சென்றது.

கஜா புயலின் சீற்றம் காரணமாக சுமார் 2 மணி நேரம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கம்பங்களும் சரிந்து வீழ்ந்தன.

குறிப்பாக நாகப்பட்டினம் கஜா புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. அங்கு மின்சாரம் சீராகி, மக்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்ப இன்னும் இரண்டு நாட்களாகும் என்று கூறப்படுகிறது.

gaja-1-1-720x469.jpg

 

http://athavannews.com/கஜா-புயல்-காரணமாக-உயிரிழ/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à¯à®±à®¾à®µà®³à®¿ à®à®¾à®±à¯à®±à¯

"பேயாட்டம்"   ஆடி விட்டு,  கரையை கடந்த கஜா.. பலி எண்ணிக்கை 49-ஆக உயர்வு!

கஜா புயல் தமிழகத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்ட நிலையில் இந்த புயலுக்கு இதுவரை 49 பேர் பலியாகிவிட்டனர்.

கடந்த 11-ஆம் தேதி வங்க கடலில் கஜா புயல் உருவானது. இந்த புயல் நேற்று முன் இரவு 12 மணிக்கு நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டது.

இதனால் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்கண்ட இடங்களில் நேற்று முன் தினம் மாலை முதலே மழை பெய்ய தொடங்கியது.

கஜாவின் கண் பகுதி 26 கி.மீ. நீளமும், 20 கி.மீ. அகலமும் கொண்டது. இது கரையை கடக்க 2 மணி நேரம் ஆனது. அப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

à®à®¾à®±à¯à®±à¯ வà¯à®à®¿à®¯à®¤à¯

இதனால் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. புயல் கரையை கடந்த போது அதிராம்பட்டினத்தில் 110 கிலோ மீட்டர், நாகையில் 100, காரைக்காலில் 74 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.

வà¯à®à¯à®à®³à®¿à®©à¯ à®à¯à®°à¯à®à®³à¯

திருச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் நாசமாயின. கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள், சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் தூக்கி வீசப்பட்டன. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

கஜா புயலால் தமிழகத்தில் இதுவரை 49 பேர் பலியாகிவிட்டனர். தஞ்சையில் அதிகப்பட்சமாக 18 பேர் பலியாகியுள்ளனர். புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 7 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் தலா 2 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்து இருக்கிறார்கள்

à®à®¤à®¿à®à®ªà¯à®ªà®à¯à®à®®à®¾à® 18 பà¯à®°à¯

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் காயம் அடைந்தனர். திருச்சிக்கு நேற்று காலை வந்த 2 விமானங்கள் பலத்த மழை காரணமாக தரை இறங்க முடியாததால் சென்னை மற்றும் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்று பார்வையிட உள்ளார். அதற்கு முன்னதாக கஜா புயலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ .1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/49-were-died-so-far-cyclone-gaja-334384.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.