Jump to content

நித்தகைக்குளம் உடைப்பெடுத்ததால் காணாமல்போன 6 பேரும் உலங்குவானூர்தியின் உதவியுடன் மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

36 மணி நேரமாக அனத்தத்திற்குள் சிக்கியவர்கள் விமானப் படையினரால் மீட்பு

முல்லைத்தீவு குமுழமுனையில் 36 மணி நேரமாக வெள்ள அனர்த்தத்தில் சிக்கி கடும் முயற்சியெடுத்தும் மீட்க  முடியாது பரிதவித்த 6 பேரினை இராணுவத்துடன் இணைந்து விமானப்படையினரால் இன்று காலை மீட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக  மேலும் தெரியவருவதாவது,

444.jpg

07.11. 2018 அதிகாலை 12.10 மணியளவில் ஏற்பட்ட குமுழமுனை நித்தகை குளம் உடைப்பெடுத்திருந்த பேரனர்த்தத்தின் போது அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகாக சென்றிருந்தவர்கள் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியினை கிராமத்து இளைஞர்களுடன் ஊடகவியலாளர் பா.சதீஸ், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் இ. மயூரன் ஆகியோரின் அபார முயற்சியினால் முதற்கட்டமாக 9 பேர் மீட்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் சிக்கியவர்களை மீட்க்குமாறு அனர்த்த முகாமைத்துவத்தினருக்கு கோரியும் அவர்கள் இரவு 7.30 மணி வரையும் ஸ்தலத்திற்கு வருகை தரவில்லை.

SAT_0074.jpg

மீட்பு நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவத் திணைக்களம் உரிய அக்கறை காட்டாது தாமதித்த போதும் இராணுவம், கடற்படை எடுத்த முயற்சி 07.11.2018 அதிகாலை 2 மணிவரை வெற்றியளிக்காமையால் இதை அறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராம மக்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி நிலைவரத்தை அறிந்து தொலைத்தொடர்பு மூலம் இணைப்பு அழைப்பினை (Conference call) முப்படைகளுக்கும் , அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் உரிய பணிப்புரைகளை வழங்கி இன்று அதிகாலை விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் மீட்பு நடவடிக்கையை ஒழுங்குபடுத்தியிருந்தார்.

SAT_0067__1_.jpg

இன்று காலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்கு அண்மையில் நகர்த்தப்பட்ட இராணுவத்தினரின் உதவியுடன் விமானப்படையின் MI-17 ரக உலங்கு வானூர்தி மூலம் அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகளையும் பத்திரமாக மீட்டெடுத்து குமுழமுனையில் தரையிறக்கினர்.

SAT_0070.jpg

 

http://www.virakesari.lk/article/44142

 

Link to comment
Share on other sites

நித்தகைக்குளம் உடைப்பெடுத்ததால் காணாமல்போன 6 பேரும் உலங்குவானூர்தியின் உதவியுடன் மீட்பு

அனர்த்த முகாமைத்து நிலையம் உயிருடன் விளையாடுவதாக மக்கள் விசனம்
 
 
main photomain photomain photo
  •  
தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் தொடச்சியாக பெய்யும் கடும் மழையினால் மக்கள் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள நிலையில் அனர்தத்தில் சிக்குண்டுள்ள மக்களின் உயிருடன் இலங்கை அனர்த முகாமைத்துவ மத்திய நிலையம் விளையாடுவதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதி மக்கள் பாரிய அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் இவ்வாறு அனர்த்ததில் சிக்குண்டுள்ள மக்களை மீட்குமாறு இலங்கை அனர்த்த முகாமைத்து பிரிவினருக்கு வழங்கப்பட்ட போதிலும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். 
 
1983ஆம் ஆண்டு குளத்தின் கட்டுமான பணி நடைபெற்றிருந்த வேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அது இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனால் குளத்தின் அணைக்கட்டு பாரிய உடைப்பு ஏற்பட்டு அன்றிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை குளம் நீர் இன்றி காணப்பட்டது. மேற்படி கால வேளையில் அதன் கீழான வேளாண்மையும் பாதிப்படைந்திருந்தது.

 

மீண்டும் 2018 ஆம் ஆண்டு வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் 15 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது. இக்குளம் நேற்று முன்தினம் 7 ஆம் திகதி அதிகாலை 12 .10 அளவில் உடைப்பெடுக்கும் போது நீரின் கொள்ளளவு 15 அடியாக காணப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருந்தனர். இவர்களைத் தேடிச்சென்ற உறவினர்கள் வெள்ளத்தின் மத்தியில் பகல் 11 மணியளவில் குளம் பெருக்கெடுத்ததை அவதானித்தனர். இதன் பின்னர் மீட்கக்கூடிய உறவுகளை கடும் போராட்டத்தின் மத்தியில் மீட்டெடுத்தனர்.

இருந்தும் அங்கிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவன், மனைவி, அவர்களது 12 வயது மகன் ஆகியோருடன் உறவுகளான மூவர் உட்பட ஆறு நபர்களை மீட்க முடியாத நிலையில் பிற்பகல் 2 மணியளவில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளரான லிங்கேஸ்குமார் என்பவருக்கு தகவல் வழங்கினார். எனினும் தனக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளதாகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் இரவு 7.30 அளவிலேயே குமுழமுனை பகுதிக்கு உரிய பணிப்பாளர் கொண்ட குழாம் விஜயம் செய்தது. பகல்வேளையிலேயே பயணிக்க முடியாத காட்டாற்று வெள்ளத்துடன் உடைப்பெடுத்த குள நீரும் சேர்ந்து ஓடும் வேளையில் இரவில் எவ்வாறு மீட்பு பணியை மேற்கொள்வது. பகல்வேளையில் நிலவரத்தைப் பார்வையிட்டு முடிவெடுக்க வேண்டிய அதிகாரி அவரது அசமந்தப் போக்கினால் சிக்கியிருக்கும் ஆறு உயிர்களை பொருட்டாக மதிக்காது இரவில் வருகை தந்து இராணுவத்தினரிடமும், கடற்படையிடமும், விமானப்படையினரிடமும், பொலிஸாரிடமும் உதவி கோரிய போது தர மறுத்து விட்டதாகவும், இப்போது மீட்பு பணியை மேற்கொள்ள முடியாதெனவும் பொறுப்பற்ற வகையில் கூறி தனக்கு தகவல் கிடைக்கவில்லை எனவும் மேற்படி பொறுப்புக்கூறும் நடவடிக்கையிலிருந்து நழுவ முற்பட்டார்.

அதன் பின்னர் வருகைதந்த இராணுவத்தினர் 10 மீற்றர் தூரம் வரை முன்னேறி திரும்பிச் சென்றுவிட்டனர். அதன்பின் மக்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தகவல் வழங்கப்பட்டதன் பெயரில் இணைப்பு அழைப்பின் (Conference call) மூலம் முப்படையினரிடமும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினருடனும் அழைப்பை ஏற்படுத்தி பேசியதன் பின் அனர்த்தத்தில் சிக்குண்டவர்களுடனும் பேசினர். பின் இரவு வேளையாகையாலும், காலநிலை சீரின்மையாலும் நாளை அதிகாலையிலே விமானப் படையினர் மீட்பு பணியை மேற்கொள்வதாக தெரிவித்திருந்ததாக தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவம் என்பது ஏற்கெனவே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் ஒரு திட்டமாகும். வெள்ளமோ, சுனாமியோ ஓர் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் மீட்பு பணியாளர்களை தேடுவது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணியல்ல. முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளருக்கு போதிய பயிற்சியோ , அறிவுறுத்தல்களோ இல்லாது பணி பொறுப்பினை வழங்கியமையால் அனர்த்தத்திற்குள்ளான மக்கள் உயிரிழக்கும் தறுவாயில் உள்ளனர்.

மேற்படி விடயத்தை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையமும் சம்பந்தப்பட்ட அமைச்சும் கருத்திலெடுத்து எதிர்வரும் காலத்திலாவது உயிர்களுடன் விளையாடாது ஆக்கபூர்வமான பணியை செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வலிந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=476

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனர்த்த வேளையிலும் அயர்ந்து தூங்கும் மற்றும்.. அரசியல் செய்யும் நாதாரிகளை என்ன செய்வது...?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அனர்த்த வேளையிலும் அயர்ந்து தூங்கும் மற்றும்.. அரசியல் செய்யும் நாதாரிகளை என்ன செய்வது...?!

Image may contain: 5 people, people sitting

அவர்களுக்கு... இன்னும்  தீபாவளி கொண்டாட்டம்  முடியவில்லை போல் இருக்கின்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.