Sign in to follow this  
பிழம்பு

தமிழர்களின் உரிமைக் கோரிக்கைகளை நோக்கி, முத்தையா முரளீதரன் வீசிய பந்திற்காக கோத்தாபய பாராட்டு

Recommended Posts

 

Gotabaya-tw1.png?resize=672%2C506

இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் அண்மையில் வெளியிட்ட கருத்திற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அவரிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தனது ருவிட்டர் செய்தியில் இது குறித்து பதிவிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஸ, “அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் முரளீதரனின் கருத்து அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார். “முரளீதரன் நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள்” என கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு அவசியம் என தெரிவித்து வருகின்றனர் எனினும் அவ்வாறான தீர்வொன்று தேவையா என முரளீதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது ஜனநாயகத்தையோ அல்லது உரிமைகளையோ இல்லை மூன்று வேளை உணவு உண்பதற்கும் தமது பிள்ளைகளிற்கு சிறந்த கல்வியை பெற்றுத்தருவதற்குமான பொருளாதார அபிவிருத்தியையுமே கேட்கின்றனர் என முத்தையா முரளீதரன் தெரிவித்திருந்தமை குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gotabaya-tw.png?resize=635%2C800

Share this post


Link to post
Share on other sites

பூர்வீகத் தமிழர், மலையக தமிழர் என்று இரு வகையில் தமிழர் இருக்கையில், முத்தையாவின் மகன், எந்தத் தமிழர்களின் உரிமை குறித்து கரிசனம் கொண்டிருப்பார் என்று யோசிக்க வேண்டியுள்ளது.....

சிங்களவர் மத்தியில் வாழும் மலையக தமிழர், சிங்களவருடன் அனுசரித்தே போகவேண்டும். கோத்தா போன்ற பேரினவாதிகள் மகிழ்வுற எதையாவது பேசலாம்.

ஆனால், பூர்வீகத் தமிழர்கள் அவ்வாறு அனுசரித்து போகவேண்டிய தேவை இல்லை. ஆகவே எமக்காக முரளிதரன் பேசவேண்டிய தேவை இல்லை.

அட, நமக்கு, அட்டகாசமாக பேச, எங்கண்ட அம்மான் இருக்கிறார். :grin: 

Edited by Nathamuni
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இவரை விடுங்கோ பாஸ்.கொழும்பில் புதுசாக செட்டிலான எங்கடை புர்வீக தமிழரைக் கேட்டுப்பாருங்கோ (பழைய கொழம்புத் திழரை விடுங்கோ) முரளி பிச்சை வாங்க வேணும்.இதில் சரி பிழை சொல்ல எனக்கு வெளி நாட்டில் இருந்து சொல்ல தகுதி இல்லை.சரி பிழைக்கு அப்பால் அவர்அவரின் வாழும் பிரச்சனை.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
31 minutes ago, சுவைப்பிரியன் said:

இவரை விடுங்கோ பாஸ்.கொழும்பில் புதுசாக செட்டிலான எங்கடை புர்வீக தமிழரைக் கேட்டுப்பாருங்கோ (பழைய கொழம்புத் திழரை விடுங்கோ) முரளி பிச்சை வாங்க வேணும்.இதில் சரி பிழை சொல்ல எனக்கு வெளி நாட்டில் இருந்து சொல்ல தகுதி இல்லை.சரி பிழைக்கு அப்பால் அவர்அவரின் வாழும் பிரச்சனை.

பாகிஸ்தானின் ஜின்னா உதாரணம் இருந்தபோதும், பொன்னம்பலம், திருச்செல்வம் தனிநாடு கேட்க்காமைக்கு காரணம், கொழும்பில சொத்து, பத்து இருந்ததால தானாம்.

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

"George Bernard Shaw wrote, "Cricket is a game played by 11 fools and watched by 11,000 fools."

சினிமா கூத்தாடிகளை போல கிரிக்கெட் கூத்தாடிகளையும் ஒதுக்கி வைக்குக .😊

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

இதுதான் சொல்றது விளையாட்டுக்குள் அரசியலை புகுத்த வேண்டாம் என்று இங்கு எழுதின அறிவாளிகளை தேட வைச்சிட்டான்கள் .அவை இப்படியான திரிக்கு வரமாட்டினம் .

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இதனால்தான் நான் ஒருநாளும் சொறிலங்கா டீமையோ முரளியையோ support பண்ணினது இல்லை. 1998இல் மாத்தளை அம்மன் கோவிலில் இவன் குடும்பம் இவன் சகிதம் வந்திருந்தது. கிழமை நாள் என்றபடியால் கூட்டம்இல்லை. எனது நண்பர்கள் சிலர் இவனுடன் கதைக்க எத்தனிக்க எல்லோரையும் உதாசீனம் செய்துவிட்டு காரில் ஏறிசென்று விட்டான் ஏனெனில் அவனுக்கு தமிழரில் அவ்வளவு விருப்பம்

Edited by ragaa
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this