• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

தமிழகத்தில் டெங்கு தொற்றினால் 34 பேர் உயிரிழப்பு

Recommended Posts

dengu-720x450.png

தமிழகத்தில் டெங்கு தொற்றினால் 34 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலினால் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதுடன்  3,600 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்  தமிழகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றுப்புற சூழலை வைத்திருக்கும் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது சட்ட நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலினை கட்டுப்படுவதற்கு வேண்டிய சகல வசதிகளும் வைத்தியசாலைகளில் தற்போது உள்ளமையால் மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளதுடன், அதில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் அரச வைத்தியசாலையில் சுமார் 2700 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தழிழகத்தில்-டெங்கு-தொற்ற/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this