Jump to content

டைட்டானிக் – 2 சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்க தயாராகின்றது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

16-1455606825-titanic-01-720x450.jpg

சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்க தயாராகும் டைட்டானிக் – 2

டைட்டானிக் – 2 கப்பல் தனது பயணத்தை எப்போது ஆரம்பிக்கவுள்ளது என உலகமெங்கும் பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்தநிலையில் எதிர்வரும் 2022-ல் அந்தப் பிரம்மாண்ட கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது அவுஸ்ரேலிய நிறுவனமான ப்ளூ ஸ்டார் லைன்.

1912-ல் இரண்டாயிரம் பயணிகளோடு சவுத்தாம்ப்டனிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியே நியூயார்க் செல்லும் வழியில் பனிப்பாறைகளில் மோதி மூழ்கியது டைட்டானிக்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதே வடிவத்தில் கப்பல் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது ப்ளூ ஸ்டார் லைன்.

ஒன்பது அடுக்குகள், 835 அறைகள், 2,435 பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் இந்தக் கப்பல் தயாராகிவருகிறது.

இந்தநிலையிலேயே எதிர்வரும் 2022-ல் அந்தப் பிரம்மாண்ட கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் – இற்கு ஏற்பட்ட நிலையை தவிர்க்கும் வகையில், ரேடார் உள்ளிட்ட சகலவிதமான நவீன வசதிகளோடு அதிகளவில் உயிர் காக்கும் படகுகளும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/சுற்றுப்பயணத்தை-ஆரம்பிக/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.