• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

பிள்ளைகளை உணவுக்காக விற்கும் கொடுமை – எங்கு என தெரியுமா?

Recommended Posts

world-last-week-9-720x450.jpg

பிள்ளைகளை உணவுக்காக விற்கும் கொடுமை – எங்கு என தெரியுமா?

எதிர்கால திட்டங்களின்றி முடிவுகளை எடுத்து கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாடு வெனிசுலா. அண்மைக்காலமாகவே அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளனன.

பொருளாதார நெருக்கடி அதி தீவிரமடைந்த நிலையில் இங்குள்ள மக்கள் அயல் நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அத்துடன், குடும்ப உறுப்பினர்களின் பட்டினியை போக்க பெண்கள் அயல் நாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமாத்திரமின்றி பட்டினியால் தமது பிள்ளைகள் வாடுவதை பொறுக்காமல் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல நாட்கள் உணவின்றி தவிக்கும் பிள்ளைகளை எதுவும் செய்ய முடியாத பெற்றோர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றுவதாகவும் கூறப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி காரணம் அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்தவர்களில் ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என பலரும் உள்ளடங்குவதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக யுத்தத்திற்கு பின்னர் ஐரோப்பாவை தாக்கிய பொருளாதார நெருக்கடியின் 21 ஆம் நூற்றாண்டின் ஒரு பதிப்பு தான் லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவை தாக்கியுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பிள்ளைகளை-உணவுக்காக-விற்/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this