• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

விலை போன வியாழேந்திரனும் கிழக்குப் பிரிவினைவாதமும்

Recommended Posts

விலை போன வியாழேந்திரனும் கிழக்குப் பிரிவினைவாதமும்

viyalenthiran-300x225.jpg

வன்னி இனப்படுக்லைக்குப் பின்னால், பல் வேறு நாடுகளின் அதிகாரவர்க்கங்கள் மட்டுமல்ல, புலம்பெயர் அரச ஆதரவாளர்கள், புலிகளின் ஆதரவாளர்களின் வியாபார நோக்கம்ங்களும் காணப்பட்டதை இன்றைய அரசியல் சூழல் மீண்டும் வெளிப்படுத்துகிறது.

இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடந்திய மகிந்த ராஜபக்சவின் கோடிகளுக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் விலை போன பின்னர், வெளியாகும் எதிர்வினைகள் மறுபடி ஒருமுறை அணிகளை தெளிவாக வரையறுத்துக்காட்டுகிறது.

கிழக்கு மாகாணத்தின் மீது யாழ்ப்பாண மேலாதிக்கம் திணிக்கப்பட்டிருந்ததையும் அது தொடர்வதையும் யாரும் மறுக்க முடியாது. இவ்வாறான சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான உணர்வை ஒடுக்கும் அரசுகளுக்கு ஆதரவாக மாற்றும் ஒரு கும்பல் வியாழேந்திரன் விலைபோனதை எதிர்த்தால் யாழ் மையவதம் எனக் கிளம்பிவிடுகிறது.

பேரினவாதிகளுக்கும், ஒடுக்குமுறையாளர்களுக்கும் ஆதரவான அனைத்து ஆயுதங்களையு ம் தேடித்தேடிப் பொறுக்கும் இக் கும்பல்கள் இன்று பிரதேச வாதத்தின் ஊடாக வியாழேந்திரனை நியாயப்படுத்துகிறது.

ரனில் என்ற இலங்கையின் மேல்தட்டு மனிதனின் ஆட்சிக் காலத்தில் வெறுப்படைந்த சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் மகிந்த ஆட்சிக்கு வந்ததும் தமது அன்றாட வாழ்க்கை வளமாகும் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். நாளாந்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறுகிய காலத்துள் இரண்டுமடங்காக உயர்த்திய ரனிலின் நான்கு வருட ஆட்சி மகிந்தவிற்கு ஆதரவாக மக்களை மாற்றியிருக்கிறது,

அப்படியிருந்தும் மகிந்தவிற்கு ஆதரவாக சிங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி வகுக்கவில்லை. தமது தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கு மகிந்த தேவை என்ற முட்டாள் தனமான வாதத்தை முன்வைக்கவில்லை. மகிந்தவிடம் இணைந்தவர்கள் கடுமையாக ஊடகங்களின் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இன்று மக்களைச் சாரி சாரியாகக் கொன்று குவித்த ஒரு கிரிமினல் மீண்டும் அரசாள முன்வைந்த போது எந்தக் கூச்சமும் இல்லாமல் வெறும் பணத்திற்காக இணைந்து கொள்ளும் வியாழேந்திரன் எமது சமூகத்தின் சாபக்கேடு.

தான் மதிக்கும் ஒரே தமிழ் அரசியல்வாதி விக்னேஸ்வரன் எனக் கூறும் வியாழேந்திரன் அவரைத் தான் ஒரு காலத்திலும் எதிர்க்கப்போவதில்லை என்கிறார்.

மகிந்த என்று இதுவரை பெயர் குறிப்பிடாவிட்டாலும், இனப் படுக்லைக்கு நியாயம் பெற்றுத் தருவதாக பூவோடும் பொட்டோடும் முழங்கி வந்த விக்னேஸ்வரன் இப்போது எங்கே என்ற கேள்வி இத்தோடு தொக்கி நிற்பது இயல்பானது

விக்னேஸ்வரனும் விசிறிகளும் மூச்சுக்கூட விடாமல் மதில்மேல் பூனையாகி விட்டதன் உள்ளார்த்தம் என்ன?
இதுதான் வியாழேந்திரனின் அரசியல் வரலாற்றின் கடைசி அத்தியாயம். இனிமேல் அவர் காணாமல் போய்விடுவார். ஆனால், இன்னும் ஒரு முறை விக்னேஸ்வரன் மகிந்தவோடு குடும்பசகிதம் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு தொடர்ந்தும் அரசியலில் இருப்பார். சிலவேளைகளில் தமிழ்த் தேசிய முன்னோட்டியாகக் கூட முன்னிறுத்தப்படுவார். ஆக, விக்னேஸ்வரனுக்கும் வியாழேந்திரனுக்கும் இடையிலான இடைவெளியில் தான் யாழ் மையவாதம் குடியிருக்கிறது, தவிர, இரண்டு முகங்களுமே வரலாற்றில் தமிழ்ப் பேசும் மக்களின் சாபக்கேடுகள் தான்.

http://inioru.com/viyaalenththiran-and-separatism/

Share this post

Link to post
Share on other sites

சரி வியாளேந்திரன் விலை போனவர் என்றால் 

இது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புகளின்றி முழு ஆதரவையும் கொடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு பெயரென்ன?

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, கிருபன் said:

விக்னேஸ்வரனும் விசிறிகளும் மூச்சுக்கூட விடாமல் மதில்மேல் பூனையாகி விட்டதன் உள்ளார்த்தம் என்ன?
இதுதான் வியாழேந்திரனின் அரசியல் வரலாற்றின் கடைசி அத்தியாயம். இனிமேல் அவர் காணாமல் போய்விடுவார். ஆனால், இன்னும் ஒரு முறை விக்னேஸ்வரன் மகிந்தவோடு குடும்பசகிதம் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு தொடர்ந்தும் அரசியலில் இருப்பார். சிலவேளைகளில் தமிழ்த் தேசிய முன்னோட்டியாகக் கூட முன்னிறுத்தப்படுவார். ஆக, விக்னேஸ்வரனுக்கும் வியாழேந்திரனுக்கும் இடையிலான இடைவெளியில் தான் யாழ் மையவாதம் குடியிருக்கிறது, தவிர, இரண்டு முகங்களுமே வரலாற்றில் தமிழ்ப் பேசும் மக்களின் சாபக்கேடுகள் தான்.

இதை எழுத எவ்வளவு கிடைத்தது?

Share this post

Link to post
Share on other sites

மக்களுக்கு சேவை செய்ய 
மகிந்தவுடன் சேர்ந்தார் எனும் கருத்தை 
என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது 

மேலிருக்கும் கட்டுரையும் வெறும் காழ்ப்புணர்ச்சியை கொண்டது. 

Share this post

Link to post
Share on other sites
58 minutes ago, ஈழப்பிரியன் said:

இதை எழுத எவ்வளவு கிடைத்தது?

கூட்டமைப்புக்காக  கூவிய.... கட்டுரை எழுதியவருக்கு,  அடுத்த தேர்தலில்..   கூட்டமைப்பு  ஒரு சீட்  கொடுக்கும்.

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதை எழுத எவ்வளவு கிடைத்தது?

கொள்கைப் பிடிப்பு மட்டும் உள்ளதால் இனியொருகாரர் காசுக்கு கட்டுரை வடிப்பதில்லை.

 விக்கி ஐயா கட்சி தொடங்கிய பின்னர் தெற்கில் அரசியல் பூகம்பம் வந்தது. ஐயா ஏதும் சொன்னமாதிரித் தெரியவில்லையே!

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, கிருபன் said:

கொள்கைப் பிடிப்பு மட்டும் உள்ளதால் இனியொருகாரர் காசுக்கு கட்டுரை வடிப்பதில்லை.

 விக்கி ஐயா கட்சி தொடங்கிய பின்னர் தெற்கில் அரசியல் பூகம்பம் வந்தது. ஐயா ஏதும் சொன்னமாதிரித் தெரியவில்லையே!

கிருபன் கொள்கை பிடிப்பென்றால் வியாளேந்திரன் மட்டுமல்ல மற்றையகூட்டணியில் இருக்கும் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைமைக்கு எதிராக எப்பப்ப ஏன் போர்க்கொடி ஏந்துகிறார்கள் என்ன பிரச்சனை என்று கண்டறிந்திருக்க வேண்டும்.

எனக்கும் கூட அவர் கட்சி தாவியதில் வருத்தம் தான்.ஆனால் ஒரு குடும்பத்தின் தலைவன் குடித்து கூத்தாடி வேறு பெண்களுடன் கூத்தாடிக் கொண்டிருந்தால் அவன் மனைவி என்ன செய்வாள்?யாருடனாவது போய் குடும்பம் நடத்தத் தான் யோசிப்பாள்.அது தான் இங்கேயும் நடந்திருக்கிறது.வியாளேந்திரன் துரோகியல்ல துரோகியாக்கப்பட்டார்.

அடுத்து மேலே உள்ள கட்டுரையில் விக்கியரை இழுத்து சீண்டியிருக்கிறார்களே ஏன்? அவருக்கும் இதற்கும் என்ன தான் தொடர்பு?
விக்கியருக்கும் கூட்டணிக்கும் பிரச்சனை வந்ததே கூட கதைக்கிறார் வெளிநாட்டுக்காரர் வர அரசைப் போட்டுக் கொடுக்கிறார்(அரசைப்பற்றிய உண்மையை)என்று தான்.இப்போ அவர் எந்த உறுப்பினருமில்லாத நிலையில் அவர் ஏன் வாய் திறக்க வேண்டும்?
என்ன அதை வைத்து ஏதாவது கட்டுரை எழுதி பிழைக்கலாம் என நினைத்திருப்பார்களோ?
ஊடகம் என்பது உண்மையை எழுத வேண்டுமே தவிர பக்கச் சார்பாக இருக்கக் கூடாது.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இனியொருகாரர் இடதுசாரிகள். சுத்துமாத்து அரசியல்வாதிகள் எல்லோருக்கும் எதிரானவர்கள். இதில் விக்கியரும், சம்பந்தர், சுமந்திரரும் அடக்கம். என்ன பாட்டாளிகள் ஒன்றுபட்டு உலகப்பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காணலாம் என்ற நினைப்பில் இப்பவும் இருக்கின்றார்கள்.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

இனியொருகாரர் இடதுசாரிகள்.

வாசுதேவாவும் இடதுசாரி தான்.

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, கிருபன் said:

கொள்கைப் பிடிப்பு மட்டும் உள்ளதால் இனியொருகாரர் காசுக்கு கட்டுரை வடிப்பதில்லை.

 விக்கி ஐயா கட்சி தொடங்கிய பின்னர் தெற்கில் அரசியல் பூகம்பம் வந்தது. ஐயா ஏதும் சொன்னமாதிரித் தெரியவில்லையே!

ஆனாலும் வியாழேந்திரனது முடிவை விக்கினேஸ்வரன் அய்யாவின் அரசியலுடன் முடிச்சுப் போடுவதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, வாத்தியார் said:

ஆனாலும் வியாழேந்திரனது முடிவை விக்கினேஸ்வரன் அய்யாவின் அரசியலுடன் முடிச்சுப் போடுவதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்

அது தான் வாத்தியார் எனக்கும் விளங்கவேயில்லை.

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this