Sign in to follow this  
ஆதித்ய இளம்பிறையன்

உயிர் மெய்க்கு அப்பால்....

Recommended Posts

எந்தவித இலக்கணத்திற்கும்  உட்படாமல் நான் கிறுக்கிய காதல் மொழிகள் ஒரு தொகுப்பாக...

 

 

உன் விழிஓதும் வேதத்திற்கு
இலக்கணம் ஏதுமில்லையோ!? -  விழிப்பார்வை
உயிர் மெய்க்கு அப்பாலும் செல்கிறதே

****

உன் மென்விழி
எப்பொழுது மின்விழியானது??
பார்வை பட்டாளே  தாக்குதே!!

****

என் நித்திரை
நித்தமும் திருடப்படுகிறது
கண்ணுறங்காமல் களவாடியவளைத் தேடுகிறேன் !!

****

விழியழகோ !!
உன் விழிபேசும் மொழியழகோ !!
விழிஉமிழும்  மொழியலையில்  
என் தேகமெங்கும் சாரல் மழை!!

****

உடலெங்கும் பரவி விரவ
வியர்வைத் துளிகளுக்கு மட்டும்
ஏன் விசேட அனுமதி ?

****


என்னை
விழுங்க காத்திருக்கும் விழியே !!
பார்வைப் பொய்கையில் மூழ்கி விட்டேன்
எழ முடியவில்லை!!
விழுவதற்கு முன் தெரியவில்லை
எழ முடியாதென்று ...

****

நீ பேசாத கணங்களில்
காற்றும் கூட கனமாகிறது !!
கனமான நொடிகளில்
இதயம் ரணமாகிறது  !!

****

உண்ணச்  சொல்லுகிறாய்
உன்னைப் பருகுவதே
சிறந்து உணவுதான் ...!!

****

முத்தம் வேண்டாம்
உன் மோகனப் பார்வை போதும்
உடலெங்கும் சூறாவளி சுழன்று அடிக்க !!

****

இவள் விழிகள்
ஒரு விஞ்ஞானக்  கூடம்  
அவைகளை ஆராய்வதே அன்றாட வேலையாகிவிட்டது... !!

****

பூக்களின் வாசம்
நீ பேசும் மொழிகளில் வீசும்!!
உன் விழி பேசும் மொழி கேட்க விரியும் உயிரே!!

****
 
யுகங்களில் வார்ப்புறும் ஓர் மொழியை
நொடிகளில் பிரசவிக்கிறாய்...
உன் ஒற்றை பார்வையாலே !!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

 • Similar Content

  • By ஆதித்ய இளம்பிறையன்
   முழுமதி முகமதில்
   கனலும் கருவிழிகண்டு
   இயல்பான இதயம்
   இடம் பெயருதே!!
    
   உன் கன்னங்களின் வண்ணம்
   என் எண்ணங்களில் நிரம்புகிறது...
   வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில்
   நின் முகமே எங்கு நோக்கினும்...!

   கனவுகளில் கரம்கோர்த்து
   விழித்தவுடன் வெறுமையை உமிழும்
   இவள் நினைவுகளை யாரிடம் பகிர்வேன்!!??
    
  • By ஆதித்ய இளம்பிறையன்
   உனைக் காணாத கணங்களில் காதல் எண்ணம்
   காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடுகிறது  
   பெருக்கெடுத்து ஓடும் உன் எண்ணச் சுமைகளின்
   திண்ணம் தாளாமல் தவித்துப் போகிறேன் 
   திறன்பேசியில் குறுஞ்செய்தி தேடி 
   நொடிக்குகொருமுறை நெருடுகிறேன்
   குறுஞ்செய்தி காணாது குன்றிப் போகிறேன்...
   அருகலையில் ஐயம் கொண்டு
   திசைவியை திருகிப் பார்க்கிறேன்..
   என் கனவுக் கூட்டங்களின் பிறப்பிடமே
   அவற்றின் இருப்பிடமே….!!
   வீசும் தென்றலும்
   விசும்பின் சாரலும்
   உன் நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது!!
   ஆதவனின் கதிரொளிகளும்
   உன் எண்ணங்களால் சுட்டு விட்டுச் செல்கிறது !!

   என் கனவுகளை நீயே பிரசவிக்கிறாய்
   அவற்றை போற்றுகிறாய் அழிக்கவும் செய்கிறாய்..!!

   ஐம்பூதங்களும் என் வேட்கை அறியும்
   அருகில் இருந்தும் நீ அறியாதது ஏனோ !!
   வான்மழையாய் உன்  பார்வைச்சாரல்களில்
   என்னை  நனைத்து விடு!!


   ஓர் தீண்டலில்
   ஓர் தழுவலில் ...
   என்னுயிரை மீட்டுக் கொடு !!