Jump to content

சர்கார் விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
சர்கார்
நடிகர் விஜய்
நடிகை கீர்த்தி சுரேஷ்
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்
இசை ஏ.ஆர்.ரகுமான்
ஓளிப்பதிவு கிரிஷ் கங்காதரன்
 
 
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த விஜய், அமெரிக்காவில் பெரிய கார்ப்பேட்டில் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார். இதையறிந்த பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள். ஆனால் விஜய்யோ தான் ஓட்டு போடுவதற்காக வந்தேன் என்று கூறுகிறார். ஓட்டு போட போன இடத்தில் இவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிடுகிறார்கள்.
 
முதலமைச்சராக இருக்கும் பழ.கருப்பையாவின் ஆட்கள் தான் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பதை விஜய் அறிந்துக் கொள்கிறார். மேலும் பலருடைய ஓட்டுகளும் கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது. இதை ஏன் மக்கள் கேட்கவில்லை என்று விஜய் ஆவேசப்படுகிறார். 
201811061127140977_1_Sarkar-3._L_styvpf.jpg
 
 
விஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வழக்கு தொடர, பழ.கருப்பையாவால் முதலமைச்சர் பதவிக்கு போகமுடியாமல் போகிறது. இதனால் கோபமடையும் பழ.கருப்பையா விஜய்யை பழிவாங்க நினைக்கிறார். ஆனால், விஜய்யோ பழ.கருப்பையாவை எதிர்த்து தமிழ்நாட்டை ஒழுங்குபடுத்த நினைக்கிறார்.
 
இறுதியில், விஜய்யை பழ.கருப்பையா பழிவாங்கினாரா? பழ.கருப்பையாவை விஜய் எப்படி சமாளித்து எதிர்த்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
துறுதுறுவென இருக்கும் மிகவும் இளமையான விஜய்யை இப்படத்தில் பார்க்க முடிகிறது. நடனம், நடிப்பு, வசனம், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார். வசனங்கள் எல்லாம் தியேட்டரில் அனல் பறக்கிறது. குறிப்பாக கள்ள ஓட்டு போட்டவுடன் மக்களுடன் பேசுவது, பழ.கருப்பையாவுடன் நேருக்கு நேர் பேசும் காட்சிகள் விசில் பறக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மிளரவைத்திருக்கிறார்.
 
201811061127140977_2_Sarkar-22._L_styvpf
 
நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், விஜய்யை பார்த்தவுடன் காதல் வசப்படுவது, அவருடன் பயணிப்பது என அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். பழ.கருப்பையாவிற்கு மகளாக வரும் இவர், தந்தைக்கு அறிவுரை கூறுவது, விஜய்யை எதிர்ப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். 
முதலமைச்சராக வரும் பழ.கருப்பையாவின் நடிப்பு அபாரம். மிகவும் சாதாரணமாக நடிப்பை வெளிப்படுத்தி விட்டு செல்கிறார். இவருக்கு உதவியாளராக வரும் ராதாரவி, விஜய்யை தூண்டி விடுவது, பின்னர் அவர் யார் என்று தெரிந்தவுடன் பயப்படுவது என ரசிக்க வைத்திருக்கிறார்.
 
தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், கள்ள ஓட்டு விவகாரம், கந்து வட்டி பிரச்சனை என அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். யாரை வைத்து என்ன சொன்னால் எப்படி படம் வரும் என்று கணித்து வைத்திருக்கிறார் இயக்குனர். விஜய்யிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக வசனங்கள் கைத்தட்டல் பெற்றிருக்கிறது. 
 
201811061127140977_3_Sarkar-5._L_styvpf.
 
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவுடன் பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. விஜய்யை மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார் கிரீஷ். பல இடங்களில் இவரது கேமரா விளையாடி இருக்கிறது.
 
மொத்தத்தில் ‘சர்கார்’ நின்னு ஜெயிப்பான். 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: சர்கார்

உதிரன்சென்னை
downloadjfif

கார்ப்பரேட் உலகின் நம்பர் ஒன்னாக வலம் வருபவர் ஜி.எல். சிஇஓ சுந்தர் ராமசாமி (விஜய்). இவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வருகிறார். விஜய்யின் வாக்கு இன்னொருவரால் கள்ள ஓட்டாகப் போடப்பட்டது தெரிந்ததும் அந்தத் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கச் சொல்லி நீதிமன்றம் செல்கிறார். 49 (பி) பிரிவின் படி விஜய் வாக்களிக்கலாம் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் வாக்குச்சாவடி அமைக்கவும் உத்தரவிடுகிறது. இதனிடையே விஜய்க்கு வழக்கு விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் தங்கள் ஓட்டும் கள்ள ஓட்டாகப் போடப்பட்டதால், எங்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும் என்று 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்கின்றனர். இதனை ஏற்ற நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையுடன் மறுதேர்தல் நடத்த உத்தரவிடுகிறது.

இதனால் அகில இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் மாசிலாமணி (பழ.கருப்பையா) காலை 8 மணிக்கே பதவி ஏற்க அவசரமாக ஆயத்தமாகிறார். ஆனால், பதவியேற்பு விழா பாதியிலேயே முடிய, மறு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. பழ.கருப்பையாவை எதிர்த்து விஜய் அதே தொகுதியில் களமிறங்குவதாக சபதமிடுகிறார். அந்த சபதம் என்ன ஆனது, பழ.கருப்பையா வென்றாரா, ஆட்சியமைத்தது யார், ஜி.எல். சிஇஓ விஜய் ஏன் வாக்களிப்பதில் அவ்வளவு தீவிரம் காட்டுகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

தன் வாக்குக்காகப் போராடும் இளைஞன் ஒருவன் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காகவும் போராடினால் என்ன ஆகும் என்ற சுவாரஸ்ய ஒன்லைனைப் பிடித்து அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

படம் முழுக்க விஜய்யின் ராஜ்ஜியம்தான். ஸ்டைல், மாஸ், வசன வெளிப்பாடு, சண்டைக்காட்சிகள், நடனம் என்று எல்லாவற்றிலும் ஒரு படி மேலே போய் அசத்தி இருக்கிறார். விஜய்யின் கோபமும், ஆவேசமும் இதில் கொஞ்சம் தூக்கல்தான். ஆனால், அந்த உணர்வுகள்தான் விஜய்யை இன்னும் நெருக்கமாகக் காட்டுகிறது. தனி ஒருவனாக விஜய் 'சர்கார்' படத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார். அலுப்பூட்டாமல் படம் பார்க்க விஜய்யின் ஸ்க்ரீன் பிரசன்ஸே முழுமுதல் காரணம்.

ஓ.எம்.ஜி பொண்ணு பாடலில் மட்டும் டூயட் ஆடும் கீர்த்தி சுரேஷ் ரொம்பவே பாவம். விஜய்யுடன் ஒரு செட் பிராபர்ட்டி போல வந்து போகிறார். யோகி பாபுவுக்கும் படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. பாட்டுக்கான லீட் கொடுக்கவே பயன்பட்டிருக்கிறார்.

ராதாரவி தனக்கே உரிய தேர்ந்த நடிப்பில் அசால்ட்டாய் ஸ்கோர் செய்கிறார். விஜய்யை மிஞ்சும் அளவுக்கு அநாயசமாகப் பேசிக் கவர்கிறார். பழ.கருப்பையா பக்குவமான நடிப்பில் மிளிர்கிறார்.

வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம். தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

துளசி, கல்யாணி, பிரேம், லிவிங்ஸ்டன், டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் எனப் பலரும் ஓரிரு காட்சிகளில் வருகிறார்கள்.

க்ரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய பலம். அமெரிக்கா, சென்னையின் அழகையும், ஆயிரக்கணக்கான மக்களையும் கேமராவில் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார் . ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். அறிமுகப் பாடலான ஏவுகணை தேவையே இல்லாத ஆணி. சிம்டாங்காரன் பாடலில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பாடல்கள் கதையோட்டத்துக்கு வேகத்தடையாகவே இருந்தன.

''அவன் கார்ப்பரேட் கிரிமினல்...நான் கருவுலயே கிரிமினல்'', ''அஸ்தியைக் கரைக்குற கடல்ல அப்பாவைக் கரைச்சோம்'' உள்ளிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்- ஜெயமோகனின் வசனங்கள் மனதில் பதிகின்றன.

ஒரு விரல் புரட்சியாக தனக்காகப் போராடும் விஜய், தேர்தல் முடிவுகள் தள்ளி வைக்கச் சொல்வது, மறு தேர்தலுக்குக் காரணியாய் அமைவது, தானே வேட்பாளராகக் களத்தில் குதிப்பது எல்லாம் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் அம்சங்களாக உள்ளன. 234 தொகுதிகளிலும் போட்டி என்பதும் திரைக்கதை நகர்வுக்கு சரியான உத்திதான். அதில் பியூஷ்மனுஷ், சபரிமாலா, பேராசிரியை சரஸ்வதி என்று நிகழ்கால ஆளுமைகளை, சமூக ஆர்வலர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் சரியான உத்தி.

நெல்லை தீக்குளிப்பு சம்பவம், கண்டெய்னர் பணம் ஆகியவையும் திரைக்கதையின் பொருத்தமான இடத்தில் கோக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜல்லிக்கட்டு, வெள்ள மீட்பு என்று நடப்பு சம்பவங்கள் கைத்தட்டலுக்காகவே காட்சிகளாகவும், வசனங்களாகவும் அமைத்திருப்பது ஒரு கட்டத்தில் சோர்வை வரவழைக்கிறது. அதுவும் கழகம் இணையும் விழாவில் நடக்கும் அசம்பாவிதங்கள், அடுத்தடுத்து மாறும் அரசியல் காட்சிகள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பை நம்பியே மாற்றம் விதைக்க நினைப்பது ஆகியவற்றில் நம்பகத்தன்மை காணாமல் போய் செயற்கை மட்டுமே மிஞ்சுவதால் இரண்டாம் பாதியில் படத்துடன் ஒட்ட முடியவில்லை.

இவற்றை தவிர்த்துப் பார்த்தால் குறியீடுகள் மூலம் சமகால அரசியலை நினைவுகூர்ந்த விதத்தில் விஜய்யின் ‘சர்கார்’ ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் படமாக உள்ளது.

 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25433239.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வில்லிக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்திருந்தால் என்ன தவறு? பழ. கருப்பையா கேள்வி

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர் தமிழர் எல்லாம் ஜேர்மன், ஏனைய ஐரோப்பிய நாடுகள், பலர் இங்கிலாந்தில் எந்த மொழி பேசினார்களோ - அந்த மொழியில் என ஊகிக்கிறேன். ஆனால் இவர்களுக்கு மொழி ஒரு பெரிய தடை என்கிறது அந்த பதிவு. இந்தியாவில் ஒருத்தரை சண்டை பிடிக்கும் பகுதியில் கிளீனர் என அழைத்துப்போய் - சண்டையே பிடிக்க வைத்துள்ளார்களாம்.
    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா? பிற்சேர்க்கை ஒலிப்பதிவை கேட்டேன், இதில் சிலாகிக்கபடுவது கிட்டதட்ட முழுவதும் ரஸ்யா போனவர்கள் பற்றியே. எனிலும் உக்ரேனுக்கும் இப்படி போவதாக இரெண்டு இடத்தில் சொல்லவும் படுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.