Jump to content

அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப் பயணம் - 1938


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: water and text           Image may contain: 4 people, people smiling, people standing, wedding and outdoor

 

Image may contain: one or more people and people sitting  Image may contain: ocean, sky, water and outdoor  Image may contain: one or more people

 

யாழ்.வல்வையிலிருந்து வேப்ப மரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு தமிழர்கள் சென்றார்கள், என்றால் நம்பமுடிகிறதா...?

கோடிக்கணக்கில் உருவான டைடானிக்கே பாதித் தூரத்தில் மூழ்கிய போது..  
ஈழத்தமிழன் உருவாக்கிய பாய் மரமான அன்னபூரணி  கப்பல் புயலுக்கும், மழைக்கும் தப்பி ...அமெரிக்கா 
சென்றது  தமிழனின் சாதனை எத்தகையது.

அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938

வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில்> சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரி லான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது.

அன்னபூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபாளத்தின் எல்லைக்குட்பட்ட இதன்உயரம் 26504 அடிகளாகும். அத்துடன் அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால் ஆராதிக்கப்படும் பெண் தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும். இப்பெயரே அன்னபூரணிஅம்மாளின் சுட்டுப் பெயராக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்த அமெரி;க்கரான பிரபலகடலோடியான அமெரிக்கரான றொபின்சன் “Florence C. Robinson” அன்னபூரணியின்; அழகால் கவரப்பட்டவராக அதனை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்பினார். அதனைக் கொள்வனவு செய்ததும்,அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் உள்ள அந்தக் கப்பலை “Florence.C.Robinson” என்ற தனது மனைவி யின் பெயருக்கு மாற்றியபின்னரே அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார். வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் கொந்தளிக்கும் இராட்சச அலைகளையும் கடந்து சுயஸ் கால்வாயி னூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சாதனை இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படு கின்றது.

சூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக் கடலில் பயணம் செய்த போது, ஏற்பட்ட புயலில் சிக்கிய கப்பல் 250 கடல்மைலகள் பின்புறமாக பெய்ரூத் வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மைல்களையும்> பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 1938 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள குளோசெஸ்ரர் (Gloucester) துறைமுகத்தில் நிறைவடைந்தது. 
தெற்காசிய நாடொன்றில் உள்ள சின்னஞ்சிறிய தீவான இலங்கை யில் உள்ள வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு காற்றின் துணை யுடன் இயங்கும் கப்பலொன்று> இந்து சமுத்திரத்தைக் கடந்து ஐரோப்பாவின் ஊடாக மத்திய தரைக் கடலையும் கடந்து> அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக> அமெரிக்காவின் குளோசெஸ்ரர் துறைமுகம் வரை பயணம் செய்தது> உலக வரலாற்றில் இதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையு மாகும். இச்சாதனை நிறைந்த கடற்பயணத்தில், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிள்ளை (48வயது) அவர்களின் தலைமையில், திரு.பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (29 வயது), திரு.தாமோதரம்பி;ளளை சபாரத்தினம் (28வயது) திரு.சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை, (28 வயது)) திரு.ஐயாத்துரை இரத்தினசாமி(24 வயது) ஆகிய ஐந்து கடலோடிககளும் பயணத்தின் இறுதி இலக்கு வரை பங்கேற்றிருந்தனர். அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் நகருக்கு அண்மையில் உள்ள பால்ரிமோர் என்ற துறைமுகத்தில் தரித்து நின்றபொழுது எடுக்கப்பட்ட படத்தை அது தொடர்பான கட்டுரையுடன், பால்ரிமோரில் இருந்து வெளிவரும்> “Baltimore Sun” என்ற செய்தித்தாள் பிரசுரித்திருந்தது. அன்னபூரணி அம்மாள்> கப்பலை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் பொழுது கப்டன் மக்குயிஸ் என்பவரின் தலைமையில், வல்வெட்டித்துறை மாலுமி களின் உதவியுடன் பயணம் செய்து குளோசெஸ்டர் துறை முகத்தைச் சென்றடைந்தது. அன்று குளோசெஸ்டர நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்கள் பிரசுரித்த கருத்துக்கள் மிகச் சிறந்த சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் விளங்கின.

அன்னபூரணி அம்மாளின் இந்த திகில் நிறைந்த பயணம் பற்றிய இலக்கியங்கள் நூல்களாகவும்> பத்திரிகைகள்> சஞ்சிகைகளில் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளமை அதன் சிறப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இச்சாதனைப் பயணம்பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine . Barrows என்பவரால் விவரிக்கப் பட்டிருந்தது. மற்றும் அன்றையநாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான 02.08.1938 அன்று வெளியிடப்பட்ட Gloucester Time பத்திரிகையில் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணி யின் நீண்ட கடற்பயணம் அதன் முன்பக்க செய்தியாக வெளிவந்த ருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செய்திக் குறிப்பினூடாக தமிழர்களின் கடல் ஆளுமைகளை பற்றி மேற்கத்தைய நாட்டவர்க ளின் உள்ளக் கிடக்கையையும் கருத்தையும் அறிய முடிகின்றது.

“வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட ஒன்பது பாய்களையும் விரித்தபடி> கம்பீரமாக ஆடிஆடிப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் ஒன்று> அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கடந்து அமெரிக்கக் கிழக்குக் கரையை அடைந்ததோர் நீண்ட கடல் பயணம் பற்றிய உண்மைக் கதை. இத்தகைய கப்பல்கள்> வல்வெட்டித்துறையிலும் அதனை அடு;த்துள்ள பருத்தித்துறையிலும் கட்டப்பட்டு வல்வெட்டித்துறைக் கடலோடிகளால்> செலுத்தப்பட்டன. இவை தமிழ் நாட்டில் பணம் படைத்த செட்டிமாருக்காகவும்> வல்வெட்டித்துறையை வதிவடமாகக் கொண்ட செட்டிமாருக்காகவும்> வல்வெட்டித்துறை வணிகர்களுக்காகவும் இலங்கை வடக்கில் உள்ள வல்வெட்டித்துறை> பருத்தித்துறை மேஸ்திரிமார்களால் கட்டப்பட்டவை.”

அன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும்போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவையாகும்.

அமெரிக்கா சென்ற மூன்றாவது மாதத்தில் அன்னபூரணி 22 நவம்பர் 1938 இல் தென்பசிபிக் (South Pacific) சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்றுநாட்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில் 100மைல் வேகத்தில் வீசியகாற்றையும் 40அடி உயரத்திற்கு எழுந்தஅலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது. வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமர கட்டுமானமும் அதன் செய்வினைத் தொழில்நுட்பத்திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196 மைல்களைக் கடந்து 15 பெப்ரவரி 1939 இல் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலகசாதனைப் பயணத்தையும் வெற்றி கரமாக முடித்துக்கொண்டது.

அன்னபூரணியின் Tahiti பயணம்பற்றி Tahiti Bound மற்றும் Wandere எனும் இருநூல்கள் வெளிவந்துள்ளன. Florence C. Robinson இன் இப்பயணத்தின்போது அமெரிக்க தலைநகரான Washington நகருக்கு அண்மையில் உள்ள Baltimore துறைமுகத்திற்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் படத்தின் மூலம்> தனது ஒன்பது பாய்களையும் முழுமையாக விரித்தபடி ஓடிவரும் இரட்டைப்பாய்மரக்கப்பலான அன்னபூரணியின் கண்ணைக்கவரும் கம்பீரத்தோற்றத்தை இதில் உள்ள புகைப்படத்தில் பார்க்கலாம்.

பொங்கியெழும் கடலின் இராட்சத அலைகளின் மத்தியில் துணிகரப் பயணத்தின் மூலம்> சுயெஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்கு வல்வை மாலுமிகளால் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட அந்த வரலாற்றுச் சாதனை இன்றும் உலக மக்களால் பெருமையாகப் பேசப்படுகின்றது.

இவ்வளவு சாதனைகளையும் செய்து இந்துசமுத்திரம் அத்திலாந்திக்சமுத்திரம் பசுபிக்சமுத்திரம் என உலகத்தை சுற்றிய அன்னபூரணியின் பயணம் 1957 ஆம் ஆண்டு Tahiti யில் மூழ்கி தனது வாழ்வை முடித்துக் கொண்டது. ஆயினும்> சாகசம் மிக்க கடற்பயணத்தை மேற்கொண்ட அன்னபூரணி என்ற அந்த இரட்டைப் பாய்க்கப்பல் வல்வெட்டித்துறையின் பெருமை மிக்க ஒரு முதுசொமாகும்.

அமெரிக்க மற்றும் ஸ்ரீPலங்காப் படையினர் இணைந்து நடத்திய 'ஒப்ரேசன் பசுபிக் ஏஞ்சல்' நிகழ்விற்காக(15.08.2016) அமெரிக்க தூதுவரான அதுல்ஹேசப் (Atul Keshap) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அங்கு அவர் தனதுரையில் 1813இல் அமெரிக்க மிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம் உருவாக்கிய அன்னபூரணிஅம்மாள் என்ற பாய்க்கப்பலில் அமெரிக்காவின் குளோஸ்ரர்துறை முகத்திற்கு வந்த வல்வெட்டித்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் இக் கடல்வழிப் பயணம் சரித்திர பூர்வமானது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

இலங்கைமக்கள் அனைவரும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்கூட மறந்துவிட்ட ஒருநிகழ்வினை எழுபத்தைந்து வருடங்களின்பின் யாழ்ப்பாண மண்ணில் மீண்டும் ஓர் அமெரிக்கர் நினைவு கூர்ந்துள்ளார். இதுபோலவே 1987 மே மாதத்தில்; வடமராட்சியை கைப்பற்றுவதற்காக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் 'லிபரேசன் ஒப்பரேசன்' எனும்பெயரில் பெரும் தாக்குதலை தொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உலகவங்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் வல்வெட்டித்துறைக்கு விஜயம்செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் குறிப்பிட்ட அன்னபூரணி அம்மாளின் பயணம்பற்றி அன்று உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.வை.வேலும்மயிலும் அவர்களிடம்; தெளிவாக உரையாடியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

75 ஆண்டுகளுக்கு முன்னர் தொழி;ல் நுட்பத்திறனும்> அறிவியல் நுட்பங்களும் விரு;ததியடைந்திராத காலத்தில் உள்ளு}ர் வேப்ப மரங்களைக் கொண்டு பாயும் நீரையும் கிழித்துச் செல்லக்கூடிய பல கப்பல்களைத் தயாரித்த தமிழர்கள்அன்று அமெரிக்கா மட்டுமின்றி பர்;மா> காக்கிநாடா> தூத்துக்குடி போன்ற பல துறைமுகங்களுக்குச் சென்று வர்த்தகத் தொடர்பை ஏற்படு;ததித் திரவியம் தேடி நமது நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள்....ஆனால் காலத்திற்குக் காலம் தமிழ் அரசியல் தலைவர்களின் துணையுடன் பதவி ஏற்றுவரும் இலங்கை அரசுகளின் இனவாதப் போக்குகளின் காரணத்தால் தமிழ் மக்களின் கப்பல் கட்டும் தொழிலுக்கே சாவுமணி அடிக்கப்பட்டது. அன்றே அவர்களுடைய கப்பல் கட்டும் தொழில் இங்கையின் அரசுகளினால் அங்கீகரிக்க்பட்டு கப்பல் பயணங்களினூடாக மேற்கொள்ள்பபட்டு வந்த ஏற்றுமதி> இறக்குமதி வர்த்தகத்தைச் சட்ட பூர்வமானதாக்கியிருந்தால் எமது நாட்டின் பொருளாதார வளமும் உயர்ந்திருக்கும், இலங்கையில் இனவாதமும், அதனால் எழுந்த யுத்தமும் தோனறியிரு;ககாதல்லவா....

ஆனால் இன்றும் கூடத் தமிழர்களின் கண்களைத் தமிழர்களின் கைளினாலேயே குத்திக் காயப்படுத்த வைக்கின்ற செயலில் சிங்கள பேரினவாத அரசும், அதற்குத் துணைபோகின்ற இனவாதிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாட்டில் சாந்தி, சமாதானம் ஏற்படுவதற்கு, இலங்கையில் ஒற’றுமையாகவே வாழ ஆசைப்படுகின்ற சிங்;கள,தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது........! விலைபோகாத நல்லதொரு தலைமைத்துவத்தைக் கொண்டு நிமிர்ந்து நின்ற எமது மக்களின் தலைவிதியென்றால் என்ன செய்வது....?

ஆதாரம்: வல்வையின் முதுசொம் வல்வை.ந.அனந்தராஜ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நினைவுப் பகிர்வு. கடலையும் ஆண்ட இனம் இன்று படலையையும் தாண்ட முடியாமல்....!

நன்றி தமிழ்சிறி......!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kuvahaun tulos haulle florence c robinson ship

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் காலங்களில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து இப்படியான கப்பல் ஒன்றை தற்போதைய நவீன வசதிகளை உள்ளடக்கி உருவாக்கலாம் அக்கப்பலை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுள் கடலாடும் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சிக்கப்பலாகப் பயன்படுத்தலாம். புலம்பெயர் தமிழர்கள் நினைத்தால் உலகில் செய்ய முடியாதது எதுவுமில்லை ஆனால் நாங்கள் ஆர்வமில்லாமலும் ஒற்றுமையில்லாமலும் சாமத்திய வீடு கல்யானவீடு இவைகளில் கெலிகப்ரரிலை ஆக்களை இறக்கிப்போட்டம் எனச் சந்தோசப்பட்டு போத்து மூடிப்படுத்துக்கிடக்கிறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் பெருமைகளின் அடையாளமாய் அமெரிக்கத் துறைமுகத்தில் ஈழத்தமிழரின் கப்பல்.!!!

FB_IMG_1493227312901-696x576.jpg

கப்பல் கட்டுங்கலையில் ஈழத்து தமிழர்கள்

தமிழர்களின் கப்பல் கட்டுங்கலை சம்பந்தமாக எனது கண்ணில் பட்ட தகவல்களை உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன் ஈழத்து தமிழர்கள் அன்றைய கால கட்டத்தில் மூன்று கப்பலைக் கட்டினார்கள் அவைகளாவன ,

01 அன்னபூரணி :

இந்தக் கப்பல் வல்வெட்டித்துறையில் 1930ம் ஆண்டளவில் கட்டப்பட்டது. இது “நாகப்ப செட்டியாருக்காக சுந்தர மேஸ்திரியாரின் அனுபவ அறிவின் முதிர்ச்சியின் முயற்சியினால் ” கட்டப்பட்டது.

அடிப்படையில் அன்னபூரணி ஒரு பாய்கப்பல் ஆகும். வேம்பு, இலுப்பை மரங்களைக் கொண்டு எம்மவர் கப்பல் கட்டும் கலையைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. இதன் நீளம் 89 – 133 அடிகள் , அகலம் 19 அடி . இக் கப்பலில் புவிப்படம், திசையறிகருவி, ஆழமானி ஆகியவை மட்டுமே இருந்தன.

இந்தக் கப்பலின் வரலாறு மிகவும் சுவாரசியமானது இந்த வரலாற்றை சிறீ சிறீதரன் பின்வருமாறு கூறுகின்றார்:
FB_IMG_1493227317676

“வல்வை மக்கள் “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பதற்கிணங்க சிறந்த கடலோடிகளாகவும் கப்பற் சொந்தக்காரர்களாகவும் கப்பல் கட்டுபவர்களாகவும் இருந்தார்கள். இதை இலங்கையின் முதலாவது பிரதமர் திரு டீ.எஸ். சேனநாயக்காவும் குறிப்பிட்டுள்ளதை மறக்க முடியாது. அன்னபூரணி அம்மாள் வல்வை சுந்தர மேஸ்திரியார் அவர்களால் 1930ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கப்பல் இந்தியாவின் கரயோரப் பட்டினங்களுக்கும், பர்மா, பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. உலகத்தை ஒரு சின்ன வள்ளத்தில் உல்லாசப் பிரயாணத்தை மேற்கொண்டு வந்த திரு றொபின்சன் என்ற அமெரிக்க செல்வந்தபிரபு அன்னபூரணியை பார்க்க நேர்ந்தது. இவர் பிரபல நாவலாசிரியரும், ஆராச்சியாளரும், கடலோடியுமாவார். அன்னபூரணி உள்ளூர் வேப்பமரத்தைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டது. இந்த பாய்மரக்கப்பலின் அழகிய அமைப்பையும் அதன் உறுதியையும் எந்த நீரோட்டத்திலும் இலகுவாகப் பயணம் செய்யும் தன்மையையும் கண்ட திரு றொபின்சன் இதை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றால் அது காட்சிப் பொருளாகவும் நூதனமாகவும் இருக்குமென விரும்பினார்.

1936ம் ஆண்டு அன்னபூரணியை விலை கொடுத்து வாங்கினார். அவர் இக்கப்பலை வல்வையைச் சேர்ந்த திரு கே. தம்பிப்பிள்ளை என்பவரின் தலைமையில் திரு தா. சபாரத்தினம், திரு ஐ.இரத்தினசாமி திரு சி.சிதம்பரப்பிள்ளை, திரு பூ.சுப்பிரமணியம் ஆகியோரின் உதவியுடன் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லத் தீர்மானித்தார். அமெரிக்கா புறப்படுமுன் முன்பு திரு டபிள்யு.ஏ. றொபின்சன் கொழும்பு வாக்கர்ஸ் ஸ்தாபனத்தாரிடம் பெற்றுக்கொண்ட டீசல் இயந்திரமொன்றை முன்னேற்பாடாக கப்பலுக்குப் பொருந்தினார். அன்னபூரணி என்ற அக்கப்பலுக்கு திரு றொபின்சன் தன் மனைவியின் பெயரான ஷஷபிறிகன் ரைன்புளோரெனஸ் சி றொபின்சன் என்னும் பெயரைச் சூட்டினார். இதைத் தொடர்ந்து அவர்களுடைய வரலாறு படைத்த அந்த நீண்ட பயணம் ஆரம்பமாகியது. திரு டபிள்யு.ஏ.றொபின்சன் அமெரிக்காவில் தங்கி நின்ற பொழுது பிரபல கப்பல் தலைவரான டொனால்ட் எ.மக்கியஸ் என்பவரைச் சந்தித்து அன்னபூரணி அம்மாள் என்ற கப்பல் கிரேக்கத்திற்கு வரும்போது அதைச் சந்திக்கும்படி கூறினார்.
FB_IMG_1493227315220

வல்வெட்டித் துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்கிற தலைப்பில் சுவையாக, நாமே கடலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிற கப்பலோட்டியின் கதை இது. பிரச்சனைகள், கடலின் அமைதி, சீறி எழும் கடலலைகள், திக்குத் தொ¢யாது தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு, கரையைக் காணும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி, தமிழர்களின் திறன், கூட்டுமுயற்சியின் வெற்றி – என்பன போன்ற பல்வேறு உணர்வலைகளை உருவாக்குகிற நூல் இது. அன்னபூரணி என்ற அந்தக் கப்பலை நெஞ்சு சுமக்கிறது.

கொந்தளிப்பும், புயலும் நிறைந்த பயங்கரமான மத்திய தரைக்கடலையும், அத்திலாந்திக் சமுத்திரத்தையும் தாண்டும்வரை அக்கப்பலை வழி நடத்துமாறு கூறினார். கப்பல் ஏடனில் இருந்து கிறிக் துறைமுகத்தை வந்தடைந்ததும் கப்டன் திரு மக்குயிஸ் அக்கப்பலில் ஏறிக் கொண்டார்.

கப்டன் மக்குயிஸ் நீராவிக்கப்பலில் 42 வருட அனுபவமுடைய சிறந்த கடலோடியும், குளோசெஸ்ரரின் அதிசிறந்த தலைவர்களில் ஒருவருமாவார். ஆனால் இவர் பாய்க்கப்பலைச் செலுத்துவதில் அனுபவமில்லாதவராகவும் காலநிலை சீராக இருக்கும் பொழுதே எல்லாப் பாய்களையும் விரித்துக் கப்பலைச் செலுத்திய இலங்கை மாலுமிகளைப் பொறுத்தவரையில் பதட்டப்பட்டவராகவும் காணப்பட்டார்.

கப்பல் ஜிபிறேல்ரரில் இருந்து புறப்பட்டதும் அதற்கு அருகாமையில் ஓர் பயங்கரப்புயல் காற்று பெரும் இரைச்சலுடன் கப்பலை அதன் வழியில் இருந்து 250 மைல்களுக்கு அப்பால் இழுத்துச் சென்றது. வல்வையின் ஆறு மாலுமிகளும் ஆண்டவனைத் தொழுது கொண்டிருந்தனர். அவர்கள் மீண்டும் ஜிபிறோல்ரரை அடைந்த பொழுது திரும்பவும் பயணத்தைத் தொடர அனுகூலமான காற்றெதுவும் இல்லை. கப்பலில் பொருத்தப்பட்ட இயந்திரம் பழுதடைந்ததனால் அவர்கள் முழுக்க முழுக்க காற்றின் உதவியையே நாட வேண்டியதாயிற்று. ஓர் அமெரிக்க சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகள் அன்னபூரணி அம்மாளில் இருந்த கறுப்பரான இலங்கை மாலுமிகளைக் கண்டவுடன் இனத்துவேச வார்த்தைகளால் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்படி ஒருநிலை இருந்தும் இழுவைக்காக அன்னபூரணி அம்மாளை அந்த அமெரிக்க கப்பலுடன் தொடுத்து விட்டனர். ஆனால் அவர்கள் ஜிபிறோல்ரர் துறைமுகத்தை விட்டு அதிகதூரம் நீங்க முன்னரே சரக்கு கப்பலின் பின்தளத்திற்கு அண்மையில் உள்ள கயிறு துண்டாயிற்று. இரண்டையும் இணைத்திருந்த தொடுவைக் கயிறு வேண்டும் என்றே வெட்டப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து “புளோரன் சி றோபின்சன்” என்ற இரட்டைப் பாய்மரக்கப்பல் அங்கு வீசிய வர்ததகக் காற்றின் உதவியுடன் அத்திலாந்திக் சமுத்திரத்தில் சிறிது காலம் ஓடியது. இதே கால நிலை அவர்களுக்கு எவ்வளவு காலம் தான் இருக்க முடியும்? திரும்பவும் நடுச்சமுத்திரத்தில் காற்று அவர்களை கைவிட்டதனால் எத்தனை நாட்களை அவர்கள் வீணே கழிக்க வேண்டியிருந்தது. கப்பலில் வைக்கப்பட்டிருந்த உலோக பீப்பாக்களில் சேமித்து வைத்த நீர் கெட்டு குடிப்பதற்கு கூடாததாக இருந்தது. உணவு முடிந்து அங்கே பற்றாக்குறை நிலவத் தொடங்கியது. ஓரளவு காற்றின் வேகம் குறைய ஆரம்பித்தது. நாற்பத்தியொரு நாட்களின் பின் புளோரன்சி றொபின்சன் என்னும் கப்பல் கெமில்ரனை வந்தடைந்த பொழுது அவர்களுக்கு அங்கு என்றுமே பார்க்க முடியாத வரவேற்பு காத்து இருந்தது. ஒன்பது நாட்களின் பின் அவர்கள் குளோசெஸ்ரர் நோக்கி பயணமானார்கள்.
FB_IMG_1493227320942

அப்பொழுது இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது. இக்காற்று முன்பு அசமந்த நிலையில் கழித்த நாட்களை ஈடுசெய்தது. ஆனால் கடல் மட்டம் வரைக்கும் கீழே தொங்கிக் கொண்டிருந்த மூடுபுகார் படலம் ஒரு மாபெரும் ஆபத்தைக் கொண்டு வந்தது. இப்புகார் மண்டலத்தின் காரணமாக பிரிகன்ரைன் விரைந்து வந்து கொண்டிருந்த போது வேறு ஒரு பாரிய கப்பலுடன் மோதுண்டு நொருங்கக் கூடிய நிலை ஏற்பட்டது. காப்டன் மாக்குயிஸ் தனது ஊது குழலினால் உரத்த சத்தமாக ஊளையிட்டார். கப்பலின் தளத்தில் நின்ற குழுவினர் தம்மால் இயன்றவரைக்கும் தமது பலம் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கத்தினார்கள். ஆனால் எதையுமே உணராhர் போல் அப்பாரிய கப்பல் விரைந்து வந்து கொண்டிருந்தது. அவர்களால் வேகமாக வந்து கொண்டிருக்கும் அப்பாரிய கப்பலின் உயரமான பாய்மரங்களையும் அதன் பக்கங்களையும் அவதானிக்க முடிந்தது. அப்படி இருந்தும் அந்தவேளையில் அவர்கள் ஒன்றும் புரியாத அவநிலையில் தவித்தனர். இரண்டாவது தடவையாக மீண்டும் இலங்கைக் குழுவினர் ஆண்டவனைப் பிரார்த்தித்தனர். கண் இமைக்கும் சில அங்குல இடைவெளியில் அக்கப்பல் விலகிச் சென்றதால் தெய்வாதீனமாக பிறிகன்ரைன் மயிரிழையில் தப்பியது. இப்படிக் கடல் கொந்தளிப்பு இருந்தும் எத்தனையோ அபாயங்களில் இருந்தும் தப்பிய பிரிகன்ரைன் புளோரன்ஸ்சி றொபின்சன் அமெரிக்காவின் பிரசித்தி வாய்ந்த குளோசெஸ்ரர் துறைமுகத்தை அடைந்தது.

திரு வில்லியம் அல்பேட் றொபின்சன் கப்பலில் வந்த இக்குழுவை அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க் நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களை மிக உயர்ந்த கட்டிடத்தில் அமைந்துள்ள சென்மொறிஸ் ஒன்தி பார்க் என்ற நவீன வசதிகள் படைத்த ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்தார். அங்கு அவர்கள் அரச விருந்தினர்களாகவே கௌரவிக்கப்பட்டனர்.

உள்ளூர் மரமான வேப்பமரத்தில் செய்யப்பட்ட அக்கப்பல் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இரவென்றும் பகலென்றும் பாராது அதில் ஏறிப் பார்வையிட்ட வண்ணமே இருந்தனர். சில சமயங்கிளல் வேட்டியுடுத்த மாலுமிகள் தியானத்திலும் ஆழ்ந்திருப்பதை அவதானித்த மக்கள் ஆச்சரியமடைந்தனர். சில நாட்களின் பின்னர் வல்வை மாலுமிகள் அங்கிருந்து நீராவிக்கப்பலில் சிங்கப்பூர் வழியாக இலங்கை திரும்பினார்கள்.

1938 ஆகஸ்ட் 2ம் திகதி வெளியாகிய அமெரிக்க தினசரியான போஸ்ரன் குளோப் பத்திரிகையின் முற்பக்கச் செய்தியாக அதன் நிருபர் ஏ.பரோஸ் பின்வருமாறு எழுதியுள்ளார்.

ஆர்வம்மிக்க மாலுமிகள் 89அடி நீளமுள்ள புளோறன் சி. றொபின்சன் என்னும் கப்பலில் இன்று வந்து பொஸ்ரன் துறைமுகத்தை அடைந்தனர். இந்த ரகக்கப்பலில் பாய்களின் உதவியுடன் மாத்திரம் மேற்கு சமுத்திரத்தை கடப்பது இதுவே முதற்தடவையாகவும் கடைசி தடவையாகவும் இருக்கும். ஐந்து இந்துக்களான இலங்கையரையும் தாடி வளர்த்த இளம் அமெரிக்க கடலோடி ஒருவரையும் கொண்ட பிறிகன் ரைன் ஆனது ஜி.பி.றோல்ரரில் இருந்து போர் முடா வழியாகப் புறப்பட்டு இத்துறைமுகத்தை அடைந்தது. பெருமை வாய்ந்த பல வருகைகளைக் கண்ட பிரசித்தி பெற்ற இத்துறைமுகமானது நூறு வருடங்களாகக் கண்டிராத அளவுக்குப் பெருந்தொகையான கப்பற்தலைவர்களையும் படகோட்டிகளையும் உல்லாசப் பிரயாணிகள் முதலானோரையும் கண்டு களிப்பதற்கென தன்பால் கவர்ந்தது அக்கப்பல். வெறுங்காலுடன் பாய்மரங்களில் விரைவுடன் ஏறிடும் இந்துக்களை அங்கு குழுமியிருந்த மக்கள் வியப்புடன் அவதானித்தனர். உள்துறைமுகத்தை வந்தடைந்ததும் வாழ்த்து தெரிவிப்பதற்காக சுமார் இருபது படகுகள் அப்புதிய கப்பலின் மருங்குகளைச் சென்றடைந்தன. 1840ம் வருடத்து பிரித்தானிய சண்டைக்கப்பலையொத்த இக்கப்பல் எட்டு வருடங்களுக்கு முன் இலங்கையில் செய்யப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு இத்துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. கடலோடிகளின் நகரான வல்வெட்டித்துறையில் இருந்து இக்கப்பலில் புறப்பட்ட ஆறு மாலுமிகளுள் ஒருவர் மாத்திரமே இடை நடுவில் வீடு திரும்பினார்.

உச்சந்துணை :https://groups.google.com/forum/m/#%21msg/mintamil/ZF3kL6UDxrY/js43pA2P7BAJ

மேலும் இதுபற்றி தி சண்டே ரைம்ஸ் பின்வருமாறு கூறுகின்றது :

“Westward ho!”

In the course of his research into Sri Lanka’s nautical culture, Lt. Cdr. Somasiri Devendra came across reference to a Jaffna Thoni, a traditional sea going cargo ship which had sailed to America. Here he relates its story

This fascinating account flows, alas! not from my pen, and I claim no authorship. But let me tell you of how I chanced upon the story. I found a copy of an old “Veerakesari” newspaper with a grainy photograph of a Jaffna Thoni in the National Archives but none of my Tamil friends could understand the classical Tamil in which it was written: not even the then Editor of the paper who helped me with my research.

I only gathered that the ship had been named “Annapoorani”, and that the picture was of her in the Suez canal. The rest of the article was about Velvettithurai: no more references to the ship.

Later, I learnt about the Thonis from James Hornell’s writings and photographs , and I stumbled upon an especially good photograph in the website www.imagesofceylon.com where a thoni is shown at the King’s Jetty, Colombo (identified by error as Galle Port).

Serendipitously, while I was trawling the net I came across a site devoted to Velvettithurai, http://valvainila.com/anna.htm and there, reproduced without comment, was an account of the voyage, as reported in the “Boston Globe”. I contacted it, identifying myself as a Sinhalese maritime historian. (I did not want to sail under false colours: if I had merely signed as “Devendra” I might have been luckier – but that’s conjecture). I asked for more information, but none was forthcoming. This is a pity, because the site had comments from relations of the crew: when I tried to access the site while composing this compilation, the site has disappeared and Google said “Oops! This link appears broken”.

But now, with the bit firmly between my teeth, I continued searching and came across a Blogsite, LankaNewspapers.com in which a senior member identified as “jacob99” had not only reproduced, but added to the account. I wrote in but unfortunately have not got the answers I am seeking.

The account I now reproduce here is basically that which appears in the first site mentioned, but with additional material from the second. My reason for reproducing all this is to open the eyes of Sri Lankans, and their friends, to a little-known aspect of our technological culture. Let me add that, to me, Sri Lanka is one and all who live here are brothers.
IMG_20170427_233440
A Thoni in Colombo port. (Source: www.imagesofceylon.com

In 1999, I tentatively identified a shipwreck site, close off shore at Ambalangoda, as that of a thoni. Unfortunately the relevant authorities took no notice and a Fisheries harbour has been built on the site after a most cursory inspection by the Department of Archaeology: and thus, another link of our “glorious past” has slipped through our fingers. But that is another story.

Source: http://valvainila.com/ anna.htm

Annapooranyamal

The brigantine was re- christened as Florence C. Robinson in reference to Robinson and his amour Florence

VALVETTITHURAIs SEA FARERS -1
GLOUCESTER., Massachusetts USA. August 1, 1938.
IMG_20170427_231735

We have folk stories and mythologies. And then, we have a history most people have either forgotten or are not aware of. This is a real- life story about one of the last sailing vessels built in Valvettithurai, making a long journey to the Atlantic Coast of United States. But, closer to home, these vessels made their home ports at Valvettithurai and Parithithurai ( Pt. Pedro).

Most of them, while being built and operated by sailors from Valvettithurai, were owned by the wealthy Chetty families from Tamil Nadu. The rest were owned by the Chetty traders who had settled in Valvettithurai since the opening of secure sea lanes in Indian Ocean by the Porthuguese (from Arab & Far Eastern pirates). (They might have been there since before Cholas time.)

Building and maintaining large ocean-going vessels in those days required a large sum of capital; it can be afforded by only few families who had already well established themselves as reputed trading families. These vessels, up to World War 2, plied the sea-routes the Tamils had used for centuries before. They made ports-of-call in South India, Vizhakapattinam to Cochin (occasionally even Calcutta), Rangoon, Far Eastern destinations, ports in Middle East (such as Aden). In Ceylon itself, they made frequent trips to Galle and ports in between. They carried rice, spices, roof tiles, timber (teak, sandalwood, etc), palmyra products, dried fish, tobacco products, etc.
IMG_20170427_232502

In 1938, the ship Annapoorani was leading other sailing vessels in the annual parade of ships in Valvai Muthu-maariamman kovil’s theerthath thiruvizha. This practice continues up to today, now with fishing trawlers, vallams and fibre-glass boats. Annapoorani caught the eyes of a visiting wealthy American, William A. Robinson. It was a cargo vessel modeled on the popular British frigate-type ship; it was known for its speed and maneuverability. A wealthy young man from Ipswich, Massachusetts, who made his fortune in journalism, he decided that should have this vessel. Within the next 2- 3 months, his wishes were fulfilled.

The owner- family in Tamil Nadu sold it for a handsome price. The vessel sailed to Colombo with its Valvettithurai crew of 4 under Thundayal (chief of crew) Kanagaratnam Thampipillai. In Colombo, the brigantine was re-christened as Florence C. Robinson in reference to Robinson and his amour – Florence. The brigantine, once insured by Lloyds of London, set sail for Cyprus under Thampipillai’s command, (from) where it would come under the command of a captain from Gloucester. Gloucester was one of the busiest sea ports on America’s eastern coast; it was where the popular schooner-type of vessel saw its shape take place.
IMG_20170427_233321

My own research on Annapoorarini (made) through (a) few trips to Gloucester, about 30 miles north of Boston, I have found old paper articles from Gloucester Times and Boston Globe. I’m thankful to a friend who helped me out in this venture, the enthusiastic people of Gloucester (particularly a Librarian) and the resources of (the) Boston Public Library. Even though all this took place two summers ago, I have allowed the paper articles and ship port- of- call registration documents to gather dust. Because of other obligations, I wasn’t able to follow on my research to ascertain the final status of Annapoorani.

(These words are those of the unknown writer of this article)

Voyage Ended by Brigantine

A Rare Spectacle Provided by Arrival from Ceylon. By Nat. A. Barrows Boston Globe, August 2, 1938

GLOUCESTER, Aug 1.Like a chapter straight from one of the Malay sea stories of Joseph Conrad, a picturesque crew of square-rigger sailors came reaching into port before a quartering breeze today aboard the 89-foot brigantine Florence C. Robinson – the last windship of her kind that, in all probability, will ever cross the Western Ocean under canvas alone. Bringing a tale of storms, doldrums, thirst, short rations and near collision, the trim little brigantine’s company of seven – a grizzled old Gloucesterman, five turbaned, be-skirted Ceylonese Hindus and a youthful, bearded American adventurer – tied up alongside a waterfront dock at noon, 50 days out of Gibraltar via Bermuda. The famous old fishing port, which has seen many a colourful arrival in its day, turned out, skippers, dorymen, tourists, for a sight that had not been seen in a hundred years, if then. Coast Guard lookouts flashed the word to town even as the vessel stood in the offing, her Hindus climbing the yards with a bare-footed agility that left the old- timers gasping in admiration.
Boats Greet Arrival
IMG_20170427_232901

As she worked past Ten-Pound Island and stood up for the inner harbor, a score of boats raced out in greeting. From his home at Ipswich, her owner William Albert Robinson, famed author, explorer and sea rover, hurried down with his wife, in the Florence Crane. A steady slant on the inner quarter had sent the brigantine scudding up from Bermuda nearly a week ahead of the expected time. She has been two years reaching here from Ceylon, where she was built eight years ago on the lines of a British brig of war of the 1840 period. Robinson himself took her leisurely through the Indian Ocean and the Red Sea as far as Crete. Six Ceylonese from the seafaring town of Valvettithurai in Northern Ceylon, came out with her and only one has returned home. In March, Capt. Donald. A. MacCuish, of 5 Lookout St., one of Gloucester’s saltiest and best- known skippers, went over to Crete to bring her across the Atlantic.

Bad Storm Near Crete

“I’ve had 42 years at sea man and boy, but that storm we hit in the Mediterranean, just after we cleared Candia (in Crete) was one of the worst I’ve ever pulled through,” Capt. Dan said today as he took his leisure on the poop deck, amid a salvo of greetings from ashore and harbor. “She’s a tidy little vessel, built of honest workmanship and good hard-wood, or we’d not be here to tell the tale. There we were, running under bare poles, with the seas breaking white over the bow and the day inky black like night. We were driven 250 miles off our course.” With him at that time were the six Ceylonese – “and a fine lot of men, too, if you treated them right and respected their religious beliefs.”
IMG_20170427_235617

At Gibraltar, Capt. Dan put in for water and supplies, and there he picked up a Connecticut youth of 20, Alexis Doster Jr. of Litchfield who had been roaming about Europe and the Near East for two years. At the instigation of the American consul, Capt. Dan signed young Doster (on) as a workaway.

Becalmed at Gibraltar

Doster told of the difficulty in getting away from Gibraltar. “We couldn’t get a spot of wind,” he related, “and there we were, becalmed. The vessel’s kicker was out of order and we had to depend entirely on our sails. The skipper of a big American freighter agreed to give us a tow, but when some of the seamen saw our crew and saw we were flying the Stars and Stripes they shouted down vile remarks about a union crew. We got the tow, all right, but we had not cleared the harbor when the hawser broke suddenly – close to the freighters after deck. It is my opinion that this hawser was cut.We were four days drifting about the harbor before we could get a slant of wind to carry us out.”

IMG_20170428_000326

A Jaffna Thoni at anchor. (Source: Hornell)

Out in the Atlantic, Capt. Dan tried to stay with the trade winds and, for a while, made a good passage, although the brigantine never reached the 18- knot speed Robinson found one day in the Red Sea when he was coming out from Ceylon. The wind failed them in mid- ocean and for days on end they idled about.

Coleridge Paraphrased

“We were a painted brigantine on a painted ocean,” said one of the Ceylonese, Sabaratnam who, with two others in the native crew, speaks English fluently. The water became too rusty for drinking. The food became low. Capt. Dan headed for Bermuda, carrying every inch of sail to catch whispers of wind. After 41 days, the Florence C. Robinson – which the owner named for his wife, and sailing companion – reached Hamilton, amid a reception that Capt. Dan will never forget. They got underway for Gloucester nine days ago and picked up a wind that did much to make up for the black days in the doldrums.

Making up for Nantucket Light, with a soupy fog clinging low, the brigantine had a narrow escape from being cut down by a transatlantic liner. Capt. Dan blew ……….. blasts on his mouth foghorn and the crew in the yards, – …………( text couldn’t be deciphered). They could see the towering masts and even the sides of the big liner and there was little they could do in the absence of wind. She cleared the brigantine by yards and went on her way without a sign of recognition.
IMG_20170427_234030

Doster Glad to be Back

Doster was the first ashore today as the headlines caught on the bollards. “What a glorious feeling, what a sensation, to get my feet on American soil again,” he exclaimed. “I’ve been all over Europe, and in Asia and the Near East, and this is the best thing I’ve seen in two years – a bit of the United States.” The Ceylonese, first of their race to touch Gloucester in many years, glanced casually at the shore. They were more interested in making the brigantine ship-shape and in seeing their old friend and skipper, Robinson. When he appeared, they greeted him with the exultant excitement of children, shouting greetings long before he was aboard. Robinson took them ashore to see a lobster pound and they stared in fascination. But, they were eager to be back aboard their vessel. Robinson said the brigantine will “stay for a while” here, while she is being repainted and overhauled. He was not certain just when he will make a cruise in her, he said.

Old Salts Amazed

Until the vessel hauled out into the stream, a steady line of old Gloucester salts stood in wonder, gazing at the lines and exclaiming at her ironwood planking – teak and a native Ceylonese wood known as Margosa. “She is built to last 100 years, if not longer,” said Robinson with a touch of pride. When he bought her two years ago she was named “Annapooranyamal” after a Hindu temple in Benares. This name is still indented on her side. She was originally schooner-rigged, but Robinson whose epic trip alone around the world in the Ketch Svaap stamps him as an authority, had her changed over to the brigantine along the lines of the old British brigs of war.
IMG_20170428_000207

Doster, heavily bearded and bronzed by many suns, hastened to Boston for a meeting with his parents. His luggage bore legends that revealed he had been in recently in Franco territory. But, he dismissed that phase of his adventure.” I’m back in the States now and there is nothing like it …. nothing that means more to an American.” — Thats it — –

Names of the crew that landed in Gloucester

Kanagaratnam Thampipillai( 48)
Sinathamby Sithamparapillai (28)
Thamotharampillai Sabaratnam (28)
Pooranavelupillai Subramaniam (29)
Aiyadurai Ratnasamy (24)

Ceylon Brig Arrives After Long Voyage

Gloucester Times, August 2, 1938

Capt. MacCuish with Hindu Crew Presents Rare Spectacle – Light Winds Extended Trip to 80 Days.

A strange boat, a strange crew but, a well- known skipper, Capt. Duncan A. MacCuish, local master skipper, rounded Eastern Point yesterday noon, when the hermaphrodite brig Florence C. Robinson, with five Hindus handling sail, completed her 80- day passage from Candia, Isle of Crete, a distance of some 5000 miles. Her new owner, William Robinson of Ipswich and the wife for whom the boat is re-named, were at the Walen wharf to greet her. Before a half hour had passed, hundreds had gathered to catch a glimpse of what resembles the ghost of His Majestys Ship Bounty returning to the seas to haunt Cape Ann. As she passed the sch.(i.e.”schooner”) Gertrude L. Thebaud, it was as if east had met west in schooner design. Lumbersome as she looks, however, Capt. Norman A. Ross of the Marconi-rigged sch. Blue Dolphin (who) is (an) authority that the stranger can sail.
IMG_20170427_234845

The Long Trip

Theirs’ was a long, crawling (trip)hindered by lack of wind, days of endless calm when the Atlantic was like a mill pond, a mirrored surface without a sign of any breeze. Capt. MacCuish left here by steamer for the island port to get the craft and bring her here. Her crew consisted of five Hindus from Jaffna, northern Ceylon, that little tea island south of India. The craft itself, a 90-foot affair, was built at Jaffna some nine years ago on the (lines of) whichever British man-o-war (that) hit into that area at the beginning of the 19th century. That model was the much the same as the Bounty on which a crew mutinied and became white settlers of Pitcairn Island. The natives have never changed the mould, and though larger ones are built, the sch. Annapoorani as it was known, is the popular (size for) cargo ship(s) plying their trade in the Indian Ocean. Her crew of Hindus has manned her from Ceylon to Burma, and to ports of India since her launching. She had dodged all manner of monsoons and stood the strong winds of those waters. Capt. MacCuish and his dusky quintet sailed from Candia, May 3, and were 31 days before touching at Gibraltar.

Here they took on an extra helper, Alexis Doster, Jr., of Litchfield, Conn., 20 years old, who had just completed a first-hand course of two years in European politics, and was glad to greet the Goddess of Liberty again. He had rubbed elbows with Nazi conquerors of Austria, had met self- assured fascists of Italy, and had swapped bullets with the Spanish Communists to the point that he was wearied of the whole mess and saw the wisdom in returning home again to get some more “book- larnin’.” The boat hardly touched at Walens Warf before he reached over the rail, planked down his fist hard on the piles, and gleefully remarked, “America, it is really you!”
IMG_20170427_235251

Left Gibralter June 8

Leaving Gibraltar June 8, they were 41 days reaching Hamilton, Bermuda. It was a slow passage with not enough wind stirring most of the time to ruffle a sail. They were equipped with a 50-horsepower Belinda marine engine but the engine had gone out of commission, six months before. Capt. MacCuish had provisioned for 30 days believing that would be plenty. The first month slipped by, however, and America was still on the far horizon. The skipper then headed the craft for Bermuda, and rationed out the food and drinking water. The Hindus cooperated by foregoing their daily habit of anointing their heads with fresh water in carrying out religious rites, and instead substituted salt water. It was a great sacrifice to them, but they knew their god would understand. That helped solve the water problem. The grub difficulties were much harder. Finally, they fell back on rice. They had a Hindu cook named Manian who knew rice inside and out. It became rice for breakfast, more rice for dinner and still more rice for supper, until yesterday. Capt. MacCuish vowed that if ever Mrs. MacCuish placed rice before him, he would “go off the handle.” They landed safely at Hamilton even though ravenously hungry Doster could not get to the Princess hotel fast enough to surround himself with a thick, juicy steak splashed with onions. Capt. MacCuish himself soon got acquainted with some good food and Saturday, July 23, (and) the voyage was resumed to this port.

A First Rate Crew

(The) Capt. has had many experiences afloat in his long day. (He) had been in Bering waters, in the South Seas, globe trotted several summers in fine yachts, been skipper of craft during taking of moving pictures especially for the filming of the famed “Captain Courageous,” and man and boy has wrung countless gallons of sea water from his oilskins. He has had all manner of crews, both good and bad, both those who can and do obey to a smattering of “sea- lawyers.”

IMG_20170428_000457

Religious observances at ship’s bow. (Source: Hornell)

So when he says the Hindus made him a first- rate crew, they must have been capable. None of the five ever bothered about shoes or stockings, making the run of the ship in bare feet, even to climbing the rigging into the cross- trees of the top masts.

The skin between their toes had become hardened, yet flexible. None ever heard of oilskins or “sou’westers,” and contented themselves with their native turbans as head- gear and “shorts” or pants with sweaters. They appeared to have one boss, a husky- bearded sailor who answered to the name of Pullai. He speaks English and of course, more fluently, his native tongue, Tamil, in which he would relay the skippers orders to the crew. Proud of his esteem, he saw to it that the other boys promptly obeyed orders. A rigid discipline could easily be observed aboard yesterday.

The Sacred Ash

Some of the Hindus sported a yellow dab on the forehead. The inquirer was informed that that dab was called the “sacred ash,” and its presence bought their god, Siva, closer to them. Siva knew all personally who wore that mark, they said. A spot on the forehead is whitewashed, and then powdered, and the dab stuck on that spot. The Hindus who belong to a high caste in Ceylon. held their weekly worship on Friday night, their Sunday, by the way. Friday evening, they would gather in the forepeak of the vessel, scooch (?) around a lighted lamp, and chant their prayers of thanksgiving to Siva in a weird rite that was the more sincere in its emphasis.

The trip was their first voyage west of the Suez Canal. They were baffled by the fogs encountered in crossing the Atlantic. They had experienced light fogs in northern areas of the Indian Ocean, according to Pullai, but this fog was so thick that they felt as if “life was shutting” its doors to them, and lifting them to another world amid the clouds.” Capt. MacCuish’s presence reassured them there was little danger. The Hindus are all British subjects and were allowed to land under custody of Robinson who was responsible.

A “Hermaphrodite Brig.”

The dictionary gives the definition of a “hermaphrodite brig” as a “two-masted vessel square-rigged forward and schooner-rigged aft” which fits the description of the Florence C. Robinson to a “T.” In Great Britain, this type of vessel is called a “brigantine”. The same dictionary in speaking about Tamils, as these Hindus call themselves, says “the Tamils are members of the most enterprising branch of the Dravidian race, mostly Hindus, though a few still are animists. They are numerous throughout South India and northern Ceylon. The language is the oldest, most cultivated and best known of the Dravidian languages. Modern Tamil uses an alphabet descended from the Brahmi character. The typical Dravidian is short, very dark, with plentiful and often wavy hair, and broad nose.” Jaffna, the port from which these Hindus sail, and where the craft was built, is on the northern tip of Ceylon, separated from the southwest tip of India by the Gulf of Mannar.

Greeted by Tug

The first to sight the craft here was Carl. D. Hill, light keeper at Eastern Point, who relayed the news to the waterfront at 12: 45. A short while later, the tug Mariner, Capt. Loren A. Jacobs, steamed out to take the vessel in tow to the wharf as the sails were furled. Those who caught a glimpse of her as she rounded the Point were treated to an unusual sight. Another craft to speed out to her was one of Joseph Mellow’s party boats, having aboard Mrs. MacCuish, the skipper’s wife and their son. Capt. MacCuish received a thrill to once more greet his family after a three months’ absence. Vouching for her speed was Capt. Norman A. Ross of this port, skipper of the Marconi-riggerd auxiliary sch. yacht Blue Dolphin. Capt. Ross was in Massachusetts bay yesterday with the yacht owner and others aboard and happened to come abreast of the strange craft. The Dolphin using auxiliary power was unable to keep up with the brig even though the latter had only sail. Capt. MacCuish declared he would be willing to put the Robinson up against the Canadian champion Blue Nose in a race.

Reader’s comment

Source: “jacob99”s Homepage in LankaNewspapers.com.

Greetings from the USA.

My name is Donald MacCuish. My grandfather skippered the Florence C. Robinson from Crete to Gloucester, MA. I seek additional information on the ship before she was renamed, the voyage itself, and members of the crew. Ideally, I’d very much like to chat with descendants of the crew members. Any help would be greatly appreciated. Thank you very much.

Postscript

That is the story. But I can’t let it rest there. Nearly 70 years later, a warship built in America and purchased by Sri Lanka, repeated the voyage in reverse order. The US Coast Guard cutter, USCG Courageous was bought by Sri Lanka and a naval crew flew to Norfolk to take her over and acclimatize themslves with her. Then, the ship was commissioned SLNS Samudura, and sailed by her 90-man crew for Colombo which she reached six weeks later. This was the longest voyage undertaken by a naval ship, whether Ceylonese or Sri Lankan: the longest prior to it was the voyage by the minesweeper HMCyS Parakrama, to Japan way back in 1961. Since her arrival, Samudura has played her part in naval operations with distinction.

But I think that voyage should be the subject to be written up by someone who sailed aboard her.

உச்சந்துணை :
http://www.sundaytim…mesplus_01.html

02 சிவசுப்பிரமணிய புரவி :

சிவசுப்பிரமணிய புரவி என்ற பெயரை கொண்ட இந்தக் கப்பல் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு 1918 ஆம் ஆண்டுவரைக்கும் சேவையில் இருந்து வந்துள்ளது . இதன் உரிமையாளர்கள் ஏரம்பமூர்த்தி, சிதம்பரப்பிள்ளை, ஆ. நாகமுத்து ஆகியோராகும் . இந்தக் கப்பலில் அ. ஆறுமுகம், கு. சரவணமுத்து ஆகியோர் தண்டையல்களாக பணிபுரிந்துள்ளார்கள்.

03 பர்வதபத்தினி 
Back Camera

இந்தக் கப்பல் வல்வெட்டித்துறையில் கடைசியாகக் கட்டப்பட்ட மூன்று பாய்மரங்களைக் கொண்ட பெரிய கப்பல் ஆகும். இதை 1943 ஆம் ஆண்டு ச. பாலசுப்பிரமணியம் மேஸ்திரியார் கட்டினார் . இதன் உரிமையாளர் சி.குமாரசாமி என்பவர் இருந்திருந்தார் .

இந்த தரவுகளில் இருந்து ஈழத்துத் தமிழர் கப்பல்கட்டுங் கலையில் எத்தகைய நிலையில் இருந்தார்கள் என்று நாம் அறியகூடியதாக இருக்கின்றது .

உச்சந்துணை :

01. http://www.sundaytim…mesplus_01.html

02 . https://groups.googl…rY/js43pA2P7BAJ

03 பா. மீனாட்சிசுந்தரம். (2006). வரலாற்றில் வல்வெட்டித்துறை. . யாழ்ப்பாணம்: அரும்பொருள் காப்பகம்.
IMG_20170427_234328
IMG_20170427_234507
IMG_20170427_234702

http://www.thisaikaddi.com/?p=5727

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தந்தையின் தகப்பனாரும் (அதாவது எனது அப்பப்பாவும்) ஒரு தண்டேல் கப்பலோட்டி ...... அவரும் இத்தகைய பணிகளில் ஈடுபட்டிருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போது 
நாம் எவ்வளவு சோம்பேறிகள் 
என்பதும் வெறும் சுயநலத்தால் 
இந்த அரிய பிறவியான 
மனித வாழ்வு வாழ கிடைத்தும் 
உண்ணுவதும் உறங்குவதும் 
என்று கிடக்கிறோம் என்று எண்ணும்போது 
அருவெறுப்பாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

annapoorani-ship-jaffna-1024x637.pngOne of Robinson’s little-known adventures involved the purchase in Colombo Ceylon of the Annupoorunyamal an Indian copy of a full rig ged NewEngland clipper in miniature. Which he had first seen on his circumnavigation in Svaap. Returning to India later. he found the ves sel bought her outfitted her at Colombo. and with an all Indian crew he and his first wife Florence sailed her back to Gloucester. There. the Florence C. Robinson. as the Annapooranyamal had been renamed. startled the natives when the Hindu crew flew kites from the deck to celebrate the safe passage.

The clipper was used as a rigging model for the sailing ships Robinson’s firm was then building. along with working fishing boats. Then came World War II. and his yard was taken over and expanded for Navy vessels. At the peak. More than six hundred men were em ployed and some two hundred ships were built. Just prior to the defe nse effort. Robbie had purchased in Ceylon a beautiful full rigged ship and had it brought to Gloucester as a model for designing and restoring classic old vessels. Later he sent this vessel to Tahiti to be operated in partnership with Henri Grand.
The Circumnavigators – by Don Holm CHAPTER – 9

Image may contain: 1 person

Image result for the Florence C. Robinson. … Continue readingImage may contain: outdoorannapoorani-ship-3.jpg

அன்னபூரணி அம்மாள்!….

அன்னபூரணிஅம்மாள் என குறிப்பிடப்படும் மேற்படி இக்கப்பல் 1930ஆண்டு வல்வெட் டித்துறை மேற்குத்தெரு வாடியில் சுந்தரமேஸ்திரியாரால் கட்டிமுடிக்கப்பட்டது. இங்கு வாடி என அழைக்கப் படுவது கப்பல் கட்டப்படும் தளமாகும். இதனையே ஆங்கிலத்தில் லுயசன என அழைப்பார்கள். இக் கப்பல் ஆங்கிலேயரின்Baltimoreஅல்லது NewEngland clipper ரக கப்பலாகவே கட்டப் பட்டிருந்தது. 1856இல் வல்வெட்டித்துறையின் சமூகச் சிற்பி எனப்போற்றப்படும் பெரியவர் வெங்கடாசலம் பிள்ளையால் முல்லைத்தீவுக்கு தென்கிழக்காக(கப்பல்திட்டு எனஇவ்விடம் இன்றும் அழைக்கப் படுகின்றது) கடலில் மூழ் கியிருந்த King Of Atlantic எனும்கப்பல் மீட்டெடுக்கப்பட்டது. இக்கப்பல் பிரித்தானியா வில் கட்டப்பட்டதும் ஆங்கிலேயரு க்கு சொந்தமானதுமாகும். வங்காளவிரகுடாவிலி ருந்து மீட்கப்பட்ட மேற்படிகப்பலை அடியொற் றியே அதன்பின்னாக வல்வெட்டித்துறையில் பல கப்பல்கள் கட்டப்பட்டு வந்தன. அவ்வாறே அன்ன பூரணிஅம்மாளும் கட்டப் பட்டிருந்தது. அன்ன பூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபா ளத்தின் எல்லைக்குட்பட்ட இதன்உயரம் 26504 அடி களாகும். அத்துடன் அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால் ஆராதிக்கப் படும் பெண்தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும்.

90 அடி நீளமும் 19அடி அகலமும் 90தொன்கள் கொள்ளளவும் கொண்ட அன்னபூரணி அம்மாள் முழுவதும் உள்ளூர் வேப்பமரத்தினால் கட்டப்பட்டி ருந்தது. இரண்டாயிரம் வருடவரலாறு கொண்ட வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து பத்தொன்ப தாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதி(1852) முதல் இருபதாம்நூற்றாண்டின் முன்னரைப்பகுதி(1942)யான ஏறக்குறைய தொண்ணூறாண்டு காலம்வரை இருநூறுக்கு மேற்பட்ட கப்பல்கள் பர்மாவுடனான அரிசிவர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தன. எனினும் வல் வெட்டித்துறையின் பொற் காலங்களில் ஒன்றென வர்ணிக்கப்படும் இக்காலத்திலிருந்த நூற்றிமுப் பத்தி நாலு(134) வரையான கப்பல்களின் பெயர் விபரங்களே இன்று எமக்கு கிடைத்துள்ளன. இவ் வாறான பாய்க்கப்பல்களில் ஒன்றே அன்னபூரணி அம்மாள் ஆகும். எனினும் இக்கப்பலொன்றே அமெ ரிக்காவைக் கடந்து பசுபிக்சமுத்திரத்தில் அமைந் திருந்த தாஹிற்றிவரை சென்ற தனிப்பெரும் சிறப் புடையது.(மேற்காணும் ஆங்கிலகுறிப்பினைப் பார்க்க) இந்துசமுத்திரம் அத்திலாந்திச்சமுத்திரம் பசுபிக்சமுத்திரம் என உலகத்தைச்சுற்றிய அன்ன பூரணிஅம்மாளின் கடற்பயணம் கீழைத்தேய மக்களின் குறிப்பாக ஈழத்தமிழரின் அழிக்க முடியாத பெருமை யாகும். நம்நாட்டு கப்பற் கலை யின் சிறப்பினை ஐரோப்பாகடந்து அமெரிக்கா வரை எடுத்துக்கூறிய அன்னபூரணிஅம்மாளை அடியொற்றி கப்பல்கள் மற்றும் கடற்கண்ணி அகற்றும் கப்பல்கள் என இருநூறுவரையான கப்பல்கள் அமெரிக்ககடற்படைக்காக இரண்டாம் உலகமகாயுத்தகாலத்தில் திரு.William Albert Robinson என்பவரினால் உருவாக்கப்பட்டன. இதன்விவர ணமே மேலே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

annapoorani-ship.jpg

அமெரிக்காவின் William Albert Robinson இலங்கை யின் புகழ்பெற்ற வல்வெட்டித் துறை மண்ணின் வரலாற்றுடன் பிணைக்கப்பட்டிருக்கும் அற்புத மனிதர். அமெரிக்காவின் வடமாநிலங்களில் ஒன் றான Wisconsin மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்திருந்த Kenosha நகரத்தில் 13 August 1902 இவர் பிறந்திருந்தார். EllaHuegin எனும் தாயின் ஏகபுதல்வனான இவருடைய தந்தையார் midwestern newspaper வெளியீட்டாளர் ஆவார்;. 32 அடி நீளமான Svaap எனும்படகில் முதன்முதல் உலகத்தைசுற்றிய துணிச்சலான கடலோடியெனப் பெயர்பெற்றவர் வில்லியம் அல்பேட் றொபின்சன் ஆவார். தனது இருபத்தைந்தாவதுவயதில் 10 June 1928இல் அமெரிக் காவின் NewYork நகரில் இருந்து Swaap என்றதனது Ketch ரகபடகில் இவர் புறப்பட்டார். ஸ்கிப்பர் தரசான்றிதழ் பெற்றஇவர் 32.000மைல்கள் பயணம்செய்து உலகத்தை சுற்றியபின் 24 Novem ber 1931இல் மீண்டும் தலைநகரான NEWYORK இனை அடைந்திருந்தார். சிறிய படகொன்றில் முழு உலகினையும் முதலில் சுற்றிவந்த இக்காலத்தில் வங்காளவிரிகுடாவில் பயணம்புரிந்த அன்ன பூரணி அம்மாளை முதன்முதலாக இவர் கண்டு கொண்டார். அதன் அழகினையும் உறுதியான கட்டுமானத்தையும் கண்ட சிறந்தகடலோடியான றொபின்சன் அதன்மீது மையல்கொண்டார். இதன் காரணமாக மீண்டும் அதனைத்தேடி இலங்கை வந்த றொபின்சன் 1937இல் அதனைக் கொள்வனவு செய்து அமெரிக்காவிற்கு கொண்டுசென்றார். றொபின்சன் அன்னபூரணியை பார்த்துதுமுதல் இதனை விரும்பி கொள்வனவு செய்தது எவ்வாறு என்பதை 1972இல் தான் எழுதிவெளியிட்ட சுநவரசn வுழ வுhந ளுநய எனும் நூலின் முன்னுரையில் பின்வருமாறு சிறப்பாக குறிப்பிடுகின்றார்.

annapoorani-ship-2.jpg

 

I had seen several of them while homeward bound in 1931 on my circumnavigation with Svaap. One in particular had come racing in through the narrow entrance to Colombo harbor in Ceylon under full sail – so beautifully proportioned that it was impossible to judge her size until she approached the anchorage. Later I measured her and took her off the lines. She was a direct descendent of an early nineteenth century British naval brig, ninety feet on deck, complete with all the rigging and fittings of her ancestor. To complete the picture, her crew sang lusty sea-chanties in an incongruous biblical English while warping the ship into place with her traditional capstan and bars.
And this is how it came about that a reincarnation of an almost forgotten type of sailing ship arrived in Glouchester that warm summer day in 1938. I had found her tucked away between monsoons in the tiny harbor of near Jaffna, after combing the Indian peninsula and Ceylon and bought her in exchange for a carload of paper money worth $9000, bales of it that filled the entire of back of an ancient open Buick. Her Hindu crew sailed her to Colombo with me through the harrowingly narrow lift bridge of Pamban Channel, which separates Ceylon from India.

வில்லியம் அல்பேட் றொபின்சனுடனான அன்ன பூரணிஅம்மாளின் இச்சாதனைப் பயணத்தின் போது சூயெஸ்கால்வாயினைக் கடந்து மத்திய தரைக்கடலில் மேற்குநோக்கி பயணம் செய்த போது ஏற்பட்டபுயலில் சிக்கியகப்பல் பின்புறமாக பாலஸ்தீனத்தின் ஹைபா(Haipaர்) நகரம்வரை அடித்துச்செல்லப்பட்டது. (பெய்ரூத் நகரத்தின் தெற்காக அமைந்திருக்கும் Haipa நகரம் 1949 இல் உருவாகிய இஸ்ரேலின் எல்லைக்குள் இன்று அடங் கியுள்ளது) இவ்வாறு பல்லாயிரம்மைல் தூரத்தை யும் பலகடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 01 ஓகஸ்ட் 1938 திங்கட் கிழமை அமெரிக்காவின் Massachusettsஆ மாநிலத்திலுள்ள Gloucester துறைமுகத்தில் நிறைவுபெற்றது. தென் னாசிய நாடொன்றில் கட்டப்பட்டு பிரதானமாக காற்றின்துணையுடன் இயங்கும் கப்பலொன்று ஐரோப்பாகடந்து Atlanticயு கடல்வழியே அமெரிக்கா வைக் கடந்து பின்னர் பசுபிக்சமுத்திரத்திலும் பயணம் சென்றது உலகவரலாற்றில் இவ்வாறு ஒரேயொருமுறை தான். இச்சாதனைப் பயணம் பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine என A. Barrows என்பவரால் விவரிக்கப் பட்டிருந்தது. மற்றும் அன்றையநாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான Gloucester Time இல் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணியின் நீண்ட கடற்பயணம் முன்பக்க செய்தியாக வெளிவந்திருந்தது. அன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும் போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவை யாகும். கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இச் செய்தியிதழ்களே இலங்கையிலிருந்து அன்ன பூரணி அம்மாள் அமெரிக்காவந்த சாதனையின் ஆதாரங்களாக எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்தன.

யாழ்ப்பாண குடாநாட்டின் வடதிசையில் வங்காள விரிகுடாவின் அருகாமையில் தனது புவியியல் அமைவிடத்தை கொண்டிருப்பது வல்வெட்டித் துறை பட்டினமாகும். இதனால் வாடைக்காற்றென அழைக்கப்படும் வடகீழ்ப் பருவப்பெயற்சிகாற்றின் எழும் பாரிய அலை களின் தாக்குதலினால் இக் காலங்களில் இதன்கரைகளில் கப்பல்கள் தரித்து நிற்பது கடினமாகும். இதனால் அக்காலங்களில் வல்வெட்டித்துறைக் கப்பல்கள் பாக்குநீரிணை யின் அருகாமையில் அமைந்திருக்கும் ஊர்காவற் துறை(kaits)க்கு கொண்டுசென்று பாதுகாப்பாக கட்டப்படும். இக்காலங்கள் ஒக்டோபர் முதல் ஜனவரி வரையானதாகும். இதனை தீபாவளிமுதல் தைப்பொங்கல் வரையான காலமாக வல்வெட்டித் துறை கடலோடிகள் வகுத்துக்கொள்வர்.

Religious-observances.jpg

வல்வெட்டித்துறையிலிருந்த பலகப்பல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமான மூடைகள்வரை கொள்ளும் பாரிய அளவுடையதாயிருந்தன. இவைகள் பெரியகப்பல்கள் எனவும் ஐயாயிரம் முதல் பத்தாயிரம்மூடைகள் கொள்ளக்கூடிய கப்பல்கள் நடுத்தரக்கப்பல்கள் எனவும் ஆயிரம் முதல் ஐயாயிரம்மூடைகள் கொள்ளளவு கொண் டவை சிறியகப்பல்கள் எனவும் அழைக்கப்பட்டன. ஆயிரத்திற்கும் குறைவான மூடைகளை கொள் வனவாய்; கொண்டவை தோணிகள் எனப்படும். கப்பலின் அளவிற்கேற்ப பாய்மரங்கள் மற்றும் பாய்களின் தொகை அதிகரித்து காணப்படும். இத்தகைய அதிகரிப்பிற்கு ஏற்றவாறு மாலுமி களின் தொகையும் அதிகரிக்கும். இவ்வாறே கப்பலின் நீளம் அகலம் உயரம் என்பவற்றின் மூலம் அதன் கொள்ளளவு தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய நவீனகப்பல்களும் அவற்றின் கொள் ளளவு கொண்டே எத்தனை அல்லது எவ்வளவு தொன்நிறை கொண்டதென அழைக்கப்படு கின் றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறே பர்மாவுடனா ன அரிசிவர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த வல்வெட்டித் துறை கப்பல்களும் அவைகள் தாங்கிச் செல்லும் அரிசிமூடைகளின் எண்ணிக்கை கொண்டு வகுக் கப்பட்டன. பர்மாவில் இருந்து கொண்டுவரப்படும் அரிசிமூடைகள் ஒவ்வொன் றும் 164 இறாத்தல் நிறை கொண்டவையாகும். இம்மூடைகள்யாவும் உத்தரவாதப்படுத்தப்பட்ட பச்சைக்கோட்டு சாக்கு களில் நிறைக்கப்பட்டி ருந்தன.

கப்பலின் பாய்கள்(Rigged) பாய்மரங்களின்(Masts) அளவுகள் மற்றும் வடிவங்களை கொண்டு கப்பல் மற்றும் தோணிகளின் வகைகள் மாறுபடுகின்றன. மேற்கூறிய பாய்கள் மற்றும் பாய்மரங்கள் தேவை க் கேற்றவாறு மாற்றப்படக்கூடியன. தமிழில்பொது வாக பாய்க்கப்பல்கள் என இவை அழைக்கப்படு கின்றன. எனினும் இவ்வகைக்கலங்களில் நீளத் தால் கூடியவை ‘தீர்கா’ எனவும் உயரத்தால் கூடிய வை ‘உன்னதா’ எனும் பெயர்களால் கப்பல்சாத்தி ரத்தில் வேறுபடுத்தப்படுகின்றன. இவ்வகை நீர் வழிக்கலங்களில் இரண்டுபாய்மரம் கொண்ட கப் பல் களின் பெயர்கள் Ketch, Schooner, Brig, Brigan tine
மற்றும் Hwrmaphrodite Brig என ஆங்கிலத்தில் பலவகைப்படுத்தப்பட்டுள்ளன. அன்னபூரணி அம்மாள் ஆரம்பத்தில் ஸ்கூனர்(Schooner
) வகையினதாகவே சுந்தரமேத்திரி யாரால் கட்டப்பட்டுள்ளது. ஸ்கூனர்வகை கப்பல்களின் பாய்கள்யாவும் எப்பொழுதும் கோணவடிவுடன் காணப்படும். இது 1937தை மாதமளவில் அமெரி க்காவின் பிரபல கடலோடியான திரு. William Albert Robinson என்பவரால் கொள்வனவு செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்பட்டது. Robinson னினால் கொள்வனவு செய்யப்பட்ட பின் அன்னபூரணிஅம்மாள் அவரது காதல்மனைவியின் Florence C Robinson எனும் பெயருடன் 27.02.1937இல் வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவை நோக்கிய தனது சாதனைப்பயணத்தை ஆரம்பித்தது. அச்சாதனைப்பயணம் பின்வருமாறு அமைந்திருந்தது.

27.02.1937 வல்வெட்டித்துறையில் கொழும்புநோக்கி புறப்படுதல் 7நாட்கள் கடந்து
04.03.1937 கொழும்பிலிருந்து பயணம் ஆரம்பம் 23நாட்களின் பின்
27.03.1937 ஏடன்(யேமன்)துறைமுகத்தை அடைதல். இங்குதங்கியகாலம் எட்டுமாதங்கள்.
18.10.1937 ஏடனிலிருந்து புறப்படுதல். 14நாட்களின் பின்
01.11.1937 போர்ட்சூடானை அடைதல். 43நாட்கள் தரித்து நின்றபின்
13.12.1937 போர்ட்சூடானிலிருந்து புறப்படுதல் 13நாள் பயணத்தின் பின்
26.12.1937 சூயெசை அடைதல். 13 நாட்கள் தங்கியபின்பு
09.01.1938 சூயெஸிலிருந்து புறப்படுதல் 1நாள் பயணத்தின்பின்பு
10.01.1938 எகிப்தின் இஸ்மாலியாவை அடைதல். 20நாள் தங்கியபின்
30.01.1938 இஸ்மாலியாவில் இருந்து புறப்படுதல். அதேநாளில்
30.01.1938 போர்ட்செயிட்டை அடைதல். 20நாள் தங்கியபின்
20.02.1938 போர்ட்செயிட்டிலிருந்து புறப்படுதல். 1மாதப்பயணம் இவ்விடக்காலத்தில் மத்தியதரைக் கடலில் புயலில் அகப்படுதல்.
21.03.1938 கிறீற்தீவின் கன்டியாதுறைமுகம் சென்றடைதல். 39நாட்களின்பின்
29.04.1938 கன்டியாவிலிருந்து புறப்பாடு 39 நாட்களின்பின்
02.06.1938 ஜிப்ரேர்ரர் சென்றடைதல். 8நாட்களின்பின்பு
09.06.1938 ஜிப்ரேர்ரரிலிருந்து புறப்படுதல். 42 நாட்களின் பின்பு
21.07.1938 போர்முடாவின் ஹமில்ரன்துறைமுகத்தை சென்றடைதல். 3நாட்களின்பின்
24.07.1938 ஹமில்ரனிலிருந்து புறப்படுதல். 7நாட்களின் பின்பு
01.08.1938 அமெரிக்காவின் மசேசூசெட்மாநிலத்தின் குளேசெஸ்டர் துறைமுகத்தை வந்தடைதல்.

அன்னபூரணிஅம்மாளின் புதியபெயரான Florence C Robinson என்பதில் குறிப்பிடப்படும் c என்பது Crane எனும் பெயரின் முன்னடையாகும். அமெரிக் காவின் முன்ணணிச்செல்வந்தராக அக்காலத்தில் திகழ்ந்தவர் Richard Teller Crane Jr ஆவார். இவர் தனதுதந்தையரான Richard Teller Crane இனால் சிக்காக்கோவில் 1855 ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை தொடர்ந்துஇயங்கும் “Crane Manufacturer Of Plumbing Fixtures” எனும் பெரும்நிறுவனத்தின் பரம்பரைவழிவந்த உரிமையாளர் இவராவார். இவருக்கும் இவரது மனைவியான Florence Crane இற்கும் ஒரேமகளாக அவதரித்தவரே Higgenbotham Crane ஆவார். எனினும் Higgenbotham Crane
இவரதுதாயான Florence Crane பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்பட்டுவந்தார். 25 Feb 1909 அமெரிக்காவின் சிக்காக்கோநகரில் பிறந்த இவரை எமதுகடலின் கதாநாயகனான William Albert Robinson மணந்தபின்Florence Crane Robinson என இவர் அழைக்கப்படலானார். 1931ஆம் ஆண்டின் இறுதியில் தனதுசகோதரன் Cornelius Grane ஏற்பாடுசெய்த விருந்தொன்றிற்காக தமது மாளிகைக்கு வருகைவந்த William Albert Robinson ஐ முதன்முதலாக சந்தித்ததுமுதல் Florence Grane
அவர்மீதுகாதல் கொண்டிருந்தார். இதன்தொடராக 1933 Feb 18 ல் இவர்களுடைய திருமணம் நடை பெற்றது. 1937 ஒக்டோபர் 18 முதல் 20பெப்ரவரி 1938 வரை ஏடன் முதல் PortSaidவரை சுயஸ் கால்வாயை கடக்கும்வரை அன்னபூரணிஅம்மாளில் இவரும் பயணம்செய்தார். இக்காலங்களில் வல்வெட்டித் துறை மாலுமிகளுக்கு இவர் ஆங்கிலம் கற்பித் தமை குறிப்பி டத்தக்கது. 1939 இல் இவர்களுடைய ஏகபுதல்வனான கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Chrictoper ColumbuChristoper Columbus) பிறந்திருந்தார்.

வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காநோக்கி புறப்பட்ட அன்னபூரணிஅம்மாளின் இச் சாதனைப் பயணத்தில் எம்மவரான தண்டையல் கனகரத் தினம் தம்பிப்பிள்ளை தலைமையில் ஆரம்பத்தில் எட்டுக்கடலோடிகள் இணைந்திருந்தனர். எனினும் வெவவேறு காரணங்களிற்காக இடையில் சிலர் விலகிக்கொள்ள அமெரிக்காவரையான பயணத் தில் ஐந்து கடலோடிகள் முழுமையாக பங்கேற்றி ருந்தனர்.

annapoorani-ship-8-1024x366.png

இவர்களின் முழுமையான பெயர்கள் பின்வருமாறு

கனகஇரத்தினம் தம்பிப்பிள்ளை வயது 48 தண்டையல்
தாமோதரம்பிள்ளை சபாரத்தினம் வயது 28 முதல்நிலை அதிகாரி
ஐயாத்துரை இரட்ணசாமி வயது 24 இரண்டாம்நிலை அதிகாரி
சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை வயது 28
சிப்பந்தி
பூரணவேற்பிள்ளை சுப்பிரமணியம் வயது 29 சமையல்வேலை
ஐயாத்துரை தில்லையம்பலம் (ஜிப்றேர்ரர்வரை சென்றவர்)
சேதுநாராயணபிள்ளை நவரத்தினராசா வயது22 (ஏடன்வரை சென்றவர்)
நடராசா(இப்பெயருக்குரியவர் யாரென்று அடை யாளம் காணப்படவில்லை)
சாண்டோ சங்கரதாஸ் (ஏடன்வரை சென்றவர்)

மேற்படி கப்பல்மாலுமிகளான இவர்களைப்பற்றி அன்னபூரணிஅம்மாள் அத்திலாந்திச் சமுத்திரத் தை கடந்து அமெரிக்காவை அடைந்தகாலத்தில் வழிகாட்டியாக செயற்பட்ட Captan Ducan a Maccuish

கூறிய கருத்துக்கள் 02.08.1938 Gloucester Time எனும் பத்திரிகையிலிருந்து பின்வருமாறு

‘இந்துக்களான இவர்கள் முதல்தரமான மாலுமி கள். காலணி எதுவும் அணியாத பாதங்களுடன் செயற்படும் திறன்மிக்கவர்கள். உயர்ந்த பாய்மரங் களில் பயமின்றி பக்குவமாக ஏறிப்பாய்களை கட்டு ப் படுத்துவதில் வல்லவர்கள். தமிழ் பேசுபவர்கள். பாதாதி கேசம்வரை இரும்பைஒத்த உடலமைப்பு கொண்டவர்கள். தலையில் தலைப்பாகை அணிந் து தம்தண்டையலுக்கு நம்பிக்கையும் பணிவும் உள்ளவர்களாக செயற்பட்டனர். அவரை ‘பிள்ளை’ என மதிப்புடன் அழைத்தனர். சிவன் தங்கள் அரு கில் இருந்து தம் மை அணைத்துக்காப்பார் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். வெள்ளிக்கிழமை தேறும் விளக்கேற்றி தம்மததோத்திரங்களை பாடி வழிபடும் வழக்கம் உடையவர்கள். இத்தகை யவர் களின் பயணம் இடையில் தோன்றிய கடும் பனிப் புகை மூட்டத்தினால் தடுமாறியது. மேற்கொண்டு தக்கபாதை எதுவெனக் கண்டு கப்பலை நகர்த்த முடியாது என்பதையும் நகர்த்தினால் எங்கேனும் மோதும் அபாயம் உண்டெனவும் உணர்ந்தனர். இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். தென் னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்பவர்கள். இவர்கள் பேசும் மொழி தமிழ். அகன்றநாசி சுருண்ட மயிர் கறுப்புநிறம் அளவானஉயரம் உடையவர்கள். கப்பல்கட்டுவதிலும் கடலோடு வதிலும் இவர்கள் தலைசிறந்தவர்கள். அவர்கள் யாபேரும் பிரிட்டிஸ்குடிமக்களாக இருந்தமையால் றொபின்சனின் பொறுப்பில் அமெரிக்காவிற்குள் வருவதற்கு இவர்களுக்கு தடைகளேதும் இருக்கவில்லை.’annapoorani-ship-7-1024x482.png

மேற்படி குறிப்பி;ட எம்மாலுமிகளை அமெரிக்கா விற்கு அழைத்துச்சென்றவர் William Albert Robinson
ஆவார். 1939 March இல் இலங்கையில் இருந்த American Consuler எழுதியகடிதத்தில் குறிப்பிட்ட மாலுமிகளைப்பற்றி பின்வரு மாறு கூறியுள்ளார்.

‘ஒரேநேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து ஆறு ஆட்களை என்னுடன் வைத்திருந்தேன். முழுப் பயணத்தின் போதும் இவர்கள்தான் நான் வைத்தி ருந்த ஓரேகப்பல் சிப்பந்திகள். அதில் ஒருவர் சமை யல் வேலை பார்த்தார். மற்றவர்கள் திறமையான கடலோடிகள். அதை விட சிறப்பென்னவென்றால் எனக்கும் எனதுமனைவிக்கும் தேவையான எல்லா வசதிக ளையும் செய்து கப்பல் ஓட்டுதல்பற்றி அதிகளவு கற்றறிந்ததோடு ஆங்கிலமும் கற்றார் கள். பயணத்தின் இறுதியில் இருவரைத்தவிர மற்றவர்கள் ஆங்கிலம் சரளமாகப் பேசினார்கள்.
பயணத்திற்கு தேவையான பாய்மரவேலை தச்சுவேலை வர்ணம்பூசுதல் கப்பலை செலுத்துதல் ஆகியவேலைகளில் எனக்கு நன்குஉதவினார்கள். இலங்கையிலிருந்து இத்தகைய கப்பல்சிப்பந்தி களை அழைத்துசெல்லும் எனக்கு பைத்தியமென்று சிலர் கூறியதும் எனக்கு ஞாபகம் உள்ளது. நான் அதைப்பற்றி கவலைப்பட்டது கிடையாது. அவர்கள் எல்லோரும் சிறந்த குணமுடையவர்கள். என்னு டைய மனைவியும் அவர்களைப்பற்றி இதே உணர் வுடனே இருக்கின்றார்.’

மேற்கூறிய William Albert Robinson தான்எழுதிய நூல்களின் பலஇடங்களிலும் நமது மாலுமிக ளைப்பற்றியும் அன்னபூரணி அம்மாளைப் பற்றியும் நிறையவே குறிப்பிட்டுள்ளார். எனினும் மேற்படி அவரது இக்கூற்றுக்கள் 26 march 1939 திகதியிட்ட Times Of Ceylon பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.annapoorani-ship-6.jpg

1938 ஓகஸ்டில் அமெரிக்கா சென்றடைந்த எம்மவர் கள் அங்கிருந்த புகழ்பெற்ற New York இன் Skygraf

தொடர்ந்தநாட்களில் Robin son னின்மனைவியான Florence Grane உடைய குடும்பச்சொத்தான Grane Beach உடன்கூடிய Grane Estate இல் அமைந்திருந்த Great House இற்கு அழைத்துச் செல்லப்பட்டு எமது வல்வெட்டித்துறை மாலுமிகள் விருந்துபசாரத்து டன் பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்பட்டு நன்கு கௌரவிக்கப்பட்டனர். மேற்கூறிய Grane Estateஆனது 2100 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந் துள்ளது. இன்றும் பயணிகளை கவர்ந்திழுக்கும் அப்பிரதேசம் 59 அறைகளைக் கொண்ட அமெரிக் காவின் இரண்டாவது பிரமாண்டமான மாளிகை யாகும். இதனால் இன்றும்இது The Great GraneHouse எனவே அழைக்கப்படுகின்றது. அம்மாளிகையின் வடகிழக்கு வாசல் அத்திலாந்தி பெருங்கடலினை நோக்கியதாக அமைக்கப் பட்டுள்ளமை அதன் சிறப் பம்சமாகும். இதன் கிழக்காக Ipswich துறை முகம் அமைந்துள்ளது.
அமெரிக்கா செல்வதற்காக Schooner கப்பலாக இருந்த அன்னபூரணிஅம்மாள் Brigantine ரக கப்ப லாக மாற்றப்பட்டுள்ளமை பற்றி முன்பே குறிப்பிட் டுள்ளோம். இதுபற்றியகுறிப்பு அன்னபூரணி அம் மாள் அமெரிக்கா சென்றபோது 1938 ஆகஸ்ட் 02ந் திகதி வெளியாகிய அமெரிக்காவின் Boston Globe பத்திரிகையில் A.Barrows எழுதிய Voyage Ended By Brigantine……..என்ற கட்டுரையில் காணப் படுகின் றது.அத்துடன் Six Ceylonese From The Seafaring Town Of valvettithurai in NorthCeylon என எம் தாயான வல் வெட்டித்துறையை மட்டுமல்லாது இலங்கைத் தீவையும் அமெரிக்காவிற்கு எழுபத்தி யெட்டு வருடங் களிற்குமுன் முதன்முதல் அறிமுகப் படுத்திய பெருமையும் Brigantine Florence C Robinson எனும் பெயருடனான அன்னபூரணி அம்மாளையே சாரும்.annapoorani-ship-5-1024x474.png

இந்நிலையில் ஈழத்தமிழரின் அமெரிக்கக் கண்டம் வரையான புலப்பெயர்வும் புதிய தொழில்நுட்ப மாக உலகினை எங்கும் ஆக்கிரமித்திருக்கும் கணணியின் கூகிள்வழி தேடு தல் செயற்பாடும் அன்னபூரணி அம்மாளைப்பற்றி இதுவரைநாம் அறியாத மேலும் பலதகவல்களைத்தந்து மேன் மேலும் ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றன. வல் வெட்டித்துறை சமூகத்திற்கான சாதனையாக மட்டுமே ஒருசிலரால் இதுவரை பார்கப்பட்டுவந்த அன்னபூரணி அம்மாளின் கடற்பயணம் ஈழத்தமிழ ருக்கு மட்டுமல்லாது முழுஇலங்கைக்குமான பெருமை யென்பதை தொடர்ந்து கிடைத்துவரும் ஆதாரங்களும் அதுபற்றிய செய்திகளும் இன்று உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத் தில் 15.08.2016 அமெரிக்க ஸ்ரீலங்காப் படையினர் இணைந்துநடத்திய ‘ஒப்ரேசன் பசுபிக்ஏஞ்சல்’ நிகழ்வின் ஒருகட்டமாக இடைக்காடு மகாவித்தி யாலயத்தில் அமெரிக்கதூதுவரான அதுல்ஹேசப் ஆரம்ப உரை யாற்றியிருந்தார். அவரதுஉரையில் 1813இல் அமெரிக்கமிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம்உருவாக்கிய அன்னபூரணிஅம்மாள் என்ற பாய்கப்பலில் அமெரி க் காவின் குளோஸ்ரர் துறைமுகம்வந்த வல்வெட்டி த்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதை பின்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் கடல் வழிப்பயணம் சரித்திரபூர்வமானது என்பதையும் அவர் குறிப் பிடத்தவறவில்லை. 1938 ஓகஸ்டில் அமெரிக்கபத்திரிகைகள் குறிப்பிட்டதனையே எழுபத் தெட்டுவருடம் கடந்து 2016 ஓகஸ்டில் அமெரக்கதூதுவரான அதுல்ஹோசப் இவ்வாறு மீளவும் நினைவூட்டியுள்ளார்.annapoorani-ship-4-1024x354.png

Brigantine Florence C Robinson

குறிப்பிட்ட Brigantine வகை கப்பல்கள் மற்றும் தோணிகள் என்பன இரண்டு பாய்மரங்களுடனும் ஆகக்கூடியவாறு பதினாறுபாய்களுடனும் பயணிப் பவையாகும். குறிப்பாக முன்னிருக்கும் பாய்மர மான தன்மரம் அல்லது திலிங்கத்து மரத்தின் (Foremast) பாய்கள் செவ்வக வடிவினதாகவும் அத ற்கு முன்னிருக்கும் அணியத்து பறுவான் மற்றும் பின்னிருக்கும் இரண்டாவது பாய்மரமான கலிமரம்(MainMast) உட்பட கப்பலில் கட்டப் படும் ஏனைய அனைத்துப்பாய்களும் கோணவடிவுடையதாகவும் காணப்படும். பிறிக்கைன் ரைன் வகைக்கப்பல்கள் நீரைக் கிழித்து வேகமாக செல்லக்கூடியவை. இதனால் இவை பெரிதும் போர்க்கப்பல்களாகவும் திமிங்கில வேட்டைக்கும் பயன்பட்டன.

அன்னபூரணிஅம்மாளின் அதிகூடியவேகம் பதினெட்டு கடல்மைல்களாகும். இது செங்கடலில் எட்டப்பட்டது என A.Barrows எழுதிய Voyage Ended By Brigan tine…….. என்ற கட்டுரை கூறுகின்றது. இது சாதாரணபாய்க்கப்பல்களின் வேகத்தைவிட இரு மடங்கு அதிகமாகும். வல்வெட்டித்துறையில் கட்டப் பட்டகப்பல்கள் மற்றும் பின்னர் கட்டப்பட்ட வள் ளங்கள் ஆரம்பகாலங்களில் முழக்கணக்கிலும் பின்னர் அடிக்கணக்கிலும் கட்டப்பட்டவையாகும். எனினும் இவை கப்பல்சாத்திரத்தில் உள்ளவாறு முடிவுறா எண் களுடன் அரைஅங்குலம் அல்லது முக்கால் அங்குலம் அதிகமாக இருக்குமாறு

‘நீளத்தின் காற்பங்கு அகலம்
அகலத்தின் அரைப்பங்கு உயரம்’

என்னும் அளவுத்திட்டத்தில் கட்டப்பட்டவையாகும். இன்று எமக்கு கிடைத்திருக்கும் அன்னபூரணி அம்மாள் Aboard a Ninety-Foot Teak wood Trading Vessel Named the Annapooranyamal என கப்பலை அமெரி க்கா கொண்டு சென்றவரான William Albert Robinson தனது To The Great Southern sea எனும் நூலின் முன் னுரையில் குறிப்பிட்டுள்ளார். எனினும் அன்ன பூரணியின் தாஹிற்றி பயணம்பற்றி எழுதப்பட்ட Tahiti Bound நூலின் 3ம்பக்கத்தில் She was89’ on Deck with a33’ Jibboom. Giving Her Overall Length 122’. She had a 19’ Beam and drew only8’ எனும் குறிப்பு காணப்படு கின்றது. அத்துடன் Tahiti பயணத்தில் Captin ஆக பணியாற்றிய Sterling Hayden எழுதிய Wandere நூலி ன் 228ம்பக்க குறிப்பொன்று The Little Ship – She is only 89 feet long was built in Ceylon என காணப்படுகின் றது. இவைகளின்மூலம் அன்னபூரணியின் நீளம் 89 – 90 அடிகளிற்கு இடைப் பட்டதாகவும் அகலம் 19 அடியாகவும் இருந்துள்ளது புலனாகின்றது. இது மேற் குறிப்பிட்ட ‘நீளத்தின் காற்பங்கு அகலம்’ என்ற சாதாரண அளவுத் திட்டத்தைவிட சற்றேரக் குறைய 3அடிகள் அகலம் குறைவானதாகும். இதன் மூலம் அன்னபூரணிஅம்மாள் கட்டப்படும்போதே வேகமாக செல்லக்கூடியவாறுannapoorani-ship-9-1024x364.png

‘அகலம் கூட வேகம் குறையும்
அகலம் குறைய வேகம் கூடும்’

என்பதற்கிணங்க ‘தீர்கா’ வகை கப்பலாகவே சுந்தர மேத்திரியாரால் கட்டப்பட்டுள்ளது தெரியவரு கின் றது. இதன்காரணமாகவே அமெரிக்கா சென்றடை ந்த அன்னபூரணி அம்மாளில் இறுதியாக கடமை யாற்றிய Captan Ducan a Maccuish அவர்கள் 02 Aug ust 1938 இல்வெளிவந்த அமெரிக்காவின் Gloucester Time பத்திரிகையூடாக அன்றைய அமெரிக்காவின் படகுப்போட்டி சாம்பியனும் Capton Benpine இனால் செலுத்தப்படும் கனடா வைச்சேர்ந்த Blue Nose எனும் படகுடன் Florence C Robinson என்ற அன்ன பூரணி அம்மாள் போட்டியிடத்தயாராக இருப்பதாக சவால்விட்டுள்ளமை தெரியவருகின்றது.

இக்கட்டுரையாக்கத்திற்கான மூலங்கள்.

To The Great Southern sea by Albert William Robinson
Return to the sea by Albert William Robinson
Tahiti Bound by Donald J. Langley and Holly Blake
Wanderer by Sterling Hayden
The Boston Globe Time 02.08.1938
Gloucester Time 02.08.1938
Times Of Ceylon 26.03.1939
Ceylon Today 20.08.2016
கப்பல் சாத்திரம்
நாவாய் சாத்திரம்
வரலாற்றில் வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை ஊரின்னிசை
மற்றும்பல இணையத்தள பத்திரிகைகள் கட்டுரைகள் மற்றும் நூல்கள்.

விரைவில் வெளிவரஇருக்கும் ‘அமெரிக்க கடற்படையில் அன்னபூரணிஅம்மாள்’ எனும் நூலின் சுருக்கமே இக்கட்டுரையாகும்.

-பொன்.சிவா(சிவகுமாரன்)
10.03.2017

https://eelamaravar.wordpress.com/2017/03/12/annapoorani-ship/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and people sitting  Religious-observances.jpg

எமது வரலாறுகளும் பெருமைகளும் மழுங்க/மறுக்கப்படுவதற்கான காரணங்களில் இவைகளும் அடங்கலாம்.

இவையெல்லாம் சர்வதேச நலன் சம்பந்தப்பட்டது. :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.