Sign in to follow this  
கிருபன்

மீ டூ: பத்திரிகையாளர் பல்லவி கோகோயின் கதை!

Recommended Posts

மீ டூ: பத்திரிகையாளர் பல்லவி கோகோயின் கதை!

29.jpg

பல்லவி கோகோய்

சமீப காலமாக மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்துவருகிறது. இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரின் மீதும் மீ டூ புகார்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பரால் ஏற்பட்ட கொடூரமான நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்திரிகையாளர் பல்லவி கோகோய்.

ஏசியன் ஏஜ் செய்திதாளில் எடிட்டர் இன் சீப் ஆக இருந்த எம்.ஜே.அக்பரை எனக்குத் தெரியும். அவர் சிறந்த பத்திரிகையாளர். அவரும், தன்னுடைய அதிகாரத்தை வைத்து என்னை இரையாக்கினர் என்கிறார் பல்லவி கோகோய். 23 ஆண்டுகளாக மூடிவைத்திருந்த வாழ்வின் மிக வலி மிகுந்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறுகிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்காவிலுள்ள என் வீட்டிலிருந்தபோது, பத்திரிகையாளர்கள் சிலர் பல ஆண்டுகளுக்கு முன்பு அக்பரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகளை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அக்பர் இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக இருந்தவர். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு வெளியுறவுக் கொள்கையை அமைக்கும் உயர்மட்ட அரசாங்க அதிகாரியாக இருந்தார். அவர் இன்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆளும் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.

இந்தச் செய்திகளைப் பார்த்தபோது என் தலை சுற்றியது. உடனே இந்தியாவிலுள்ள எனது நெருங்கிய இரண்டு தோழிகளுக்கு செல்போனில் அழைத்து பேசினேன். இரு தோழிகளுக்குமே என் வாழ்க்கையில் அக்பரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் குறித்து நன்றாகவே தெரியும். அதே சமயத்தில், இது குறித்து என்னுடைய கணவரிடம் கூறியுள்ளேன். அவரைச் சந்தித்த சில வாரங்களிலேயே அவரிடம் கண்ணீருடன் என் கதையைக் கூறினேன்.

எனக்கு 22 வயதானபோது, ஏசியன் ஏஜ் செய்தித்தாளில் வேலைக்குச் சென்றேன். அங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். என்னுடன் வேலைக்குச் சேர்ந்தவர்களில் பலரும் அப்போதுதான் கல்லூரி முடித்து வெளியே வந்தவர்கள். எங்களுக்கு இதழியல் குறித்த அடிப்படைகள் அந்த அளவுக்குத் தெரியாது. டெல்லியில் அக்பரின் கீழ் வேலைசெய்த நாங்கள் அவரது ஆளுமையைக் கண்டு அசந்துபோயிருந்தோம்.

அவர் பிரபலமானவர். நன்கு அறியப்பட்ட இரண்டு அரசியல் புத்தகங்களின் ஆசிரியர். முன்னணி எடிட்டர். பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் சண்டே (வார இதழ்), டெலிகிராப் (தினசரி) ஆகிய இரண்டு மிக வெற்றிகரமான பிரசுரங்களைத் தொடங்க உதவியாக இருந்தவர். சர்வதேசப் பத்திரிகையான ஏசியன் ஏஜ், அவருடைய முயற்சியிலேயே உருவானது.

40 வயதைக் கடந்திருந்த அக்பரின் இதழியல் திறன்கள் மிகவும் உயர்வானவை. தனது சிவப்பு மை நிரப்பப்பட்ட மாண்ட் பிளாங்க் பேனாவால் நாங்கள் எழுதிய செய்தியைக் கிறுக்கி, அங்குள்ள குப்பைத் தொட்டியில் போடுவார். அதைப் பார்த்து நாங்கள் பயந்து நடுங்குவோம். எங்களைப் பார்த்துப் பெருங் குரலெடுத்துக் கத்துவார். ஒருநாள்கூட அவர் திட்டாமல் இருந்ததே கிடையாது. அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களால் பணியாற்ற முடியவில்லை.

மொழியை அவர் கையாளும் விதத்தைப் பார்த்து நான் வசியமானேன். அவரைப் போல நானும் எழுத வேண்டும் என்று தோன்றியது. அதனால், அவருடைய சொல்லம்புகளை ஏற்றுக்கொண்டேன். சிறந்த திறமைசாலி ஒருவரிடமிருந்து தொழிலின் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதை எண்ணிச் சமாதானம் அடைந்தேன்.

23 வயதில், ஏசியன் ஏஜ் செய்திதாளின் op-ed பக்கத்தின் எடிட்டராகப் பதவி உயர்வு பெற்றேன். பிரபல கட்டுரையாளர்களைத் தொடர்புகொண்டு எழுத வைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. ஜஸ்வந்த் சிங், அருண் ஷோரி, நளினி சிங் போன்ற போன்றவர்களைத் தொடர்புகொண்டு கட்டுரைகள் வாங்க வேண்டியிருந்தது. அந்த இளம் வயதில் இது மிகப் பெரிய பொறுப்பாக இருந்தது.

விரும்பிய வேலையைச் செய்வதற்கு நான் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. அக்பர் என்னை முதல் முறையாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை எனது தோழி துஷிதா இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். அது 1994ஆம் ஆண்டின் பிற்பகுதி. நான் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அவருடைய அறைக் கதவு எப்போதுமே மூடியிருக்கும். புத்திசாலிதனமாகத் தலைப்புகளை வைத்ததாக நினைத்த நான் op-ed பக்கத்தினைக் காண்பிப்பதற்காக அவருடைய அறைக்குச் சென்றேன். என்னுடைய முயற்சியைப் பாராட்டிய அவர், எனக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்தார். நான் தள்ளிவிட்டு வந்துவிட்டேன். சிவந்த முகத்துடனும், அவமானத்துடனும், குழப்பமான மனநிலையிலும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். அன்றைய தினத்தில் என்னுடைய முகம் எப்படியிருந்தது என்பதை துஷிதா இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். அறையில் என்ன நடந்தது என்று துஷிதா கேட்டவுடன், அவளை நம்பி உடனடியாக எல்லாவற்றையும் கூறினேன். அவளிடம் மட்டும்தான் இந்த சம்பவத்தைக் கூறினேன்.

இரண்டாவது சம்பவம் அதற்கு ஒரு மாதத்துக்குப் பின்பு நடந்தது. பத்திரிகை ஒன்று தொடங்குவதற்கு உதவியாக நான் மும்பைக்கு அனுப்பபட்டேன். லேஅவுட்டைக் காண்பிக்கக் கூறி தாஜ் ஹோட்டலில் தான் தங்கியிருந்த அறைக்கு அக்பர் என்னை அழைத்தார். அப்போதும், அவர் முத்தம் கொடுப்பதற்கு என்னை நெருங்கி வந்தபோது, அவரை தள்ளிவிட்டு வெளியேற முயன்றேன். என்னைப் பிடிக்க முயன்றபோது அவரது நகம் என் முகத்தைக் கீறியது. என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ஹோட்டலில் தவறி விழுந்துவிட்டதால் காயம் ஏற்பட்டது என அன்று மாலையில் எனது தோழி ஒருத்தியிடம் கூறினேன்.

திரும்ப டெல்லிக்கு வந்தவுடன் என் மீது அக்பர் கோபமாக இருந்தார். அவருடைய விருப்பத்துக்கு உடன்படவில்லையென்றால், வேலையை விட்டுத் தூக்கிவிடுவதாக மிரட்டினார். ஆனால், என்னுடைய வேலையை நான் விடவில்லை.

அனைவருக்கும் முன்பே காலை 8 மணிக்கெல்லாம் அலுவலகத்துக்குச் சென்றுவிடுவேன். 11 மணிக்கெல்லாம் op-ed பக்கத்தை முடித்துவிட வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள். 11 மணிக்கு மற்ற ஊழியர்கள் வந்துவிடுவார்கள். அவர்கள் வந்ததும் செய்திகளைச் சேகரிப்பதற்காக நான் வெளியே கிளம்பிவிடுவேன். அலுவலகத்திலிருந்து தப்பிப்பதற்காகவே பெரும்பாலும் வெளியே சென்றுவிடுவேன்.

மும்பையில் நடந்த சம்பவத்துக்கு அடுத்ததாக, செய்தி ஒன்றுக்காக டெல்லியிலிருந்து 100 மைல் தொலைவிலுள்ள ஒரு குக்கிராமத்துக்குச் சென்றேன். அந்த கிராமத்தில் வேறுவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். அவர்களை அந்த ஊர் மக்கள் சேர்ந்து தூக்கில் தொங்கவிட்டுக் கொலை செய்தனர். இது குறித்த செய்தியைச் சேகரிப்பதற்காகச் சென்றேன். இந்தச் செய்தியை முடிப்பதற்காக ஜெய்ப்பூர் வரை செல்ல வேண்டியிருந்தது. இது குறித்துக் கலந்தலோசிக்க என்னைத் தன்னுடைய ஹோட்டல் அறைக்கு வரச் சொன்னார் அக்பர்.

அங்கு என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த அக்பரிடமிருந்து தப்பிக்கச் சண்டையிட்டேன். ஆனால், உடலளவில் சக்தி நிறைந்தவராக இருந்ததால், என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுப்பதற்கு பதிலாக அவமானத்தால் முடங்கிவிட்டேன். இதுகுறித்து யாரிடமும் நான் சொல்லவில்லை. யாரும் என்னை நம்புவார்களா என என்னை நானே குற்றம்சாட்டிக்கொண்டேன். நான் ஏன் ஹோட்டல் அறைக்குப் போனேன் எனப் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டேன்.

29a.jpg

இதைவிட மோசமான சம்பவம் என்னவென்றால், அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து என் மீதான அவரது பிடி இறுக்கமானது. நான் மிகவும் நிராதரவாக உணர்ந்ததால், அவரிடம் சண்டையிடுவதை நிறுத்திவிட்டேன். அவர் தொடர்ந்து என்னை நிர்பந்திக்க ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு வார்த்தையிலும், பாலியல் ரீதியாகவும், உணர்வுபூர்மாகவும் என்னை அவர் கொடுமைப்படுத்தினார். அலுவலகத்தில் என் வயதையொத்த உள்ள ஆண் ஊழியர்களிடம் நான் பேசுவதை அவர் பார்த்தால், பயங்கரமாகச் சத்தம் போடுவார். அது என்னை மிகவும் பயமுறுத்தும்.

நான் ஏன் அவரிடம் சண்டை போடவில்லை? என் வாழ்க்கையில் இதர எல்லா அம்சங்களிலும் எப்போதும் போராடுபவளாகத்தான் இருந்திருக்கிறேன். அவர் ஏன், எப்படி என் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என்று இப்போது என்னால் கூற முடியவில்லை. என்னை விட அவர் சக்தி வாய்ந்தவர் என்பதாலா? அல்லது அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள எனக்குத் தெரியாததாலா? அல்லது வேலையை இழந்துவிடுவோம் என்ற பயத்தினாலா? தூரத்தில் இருக்கும் எனது பெற்றோர்களுக்கு இதைப் பற்றி எப்படிக் கூறுவது? இப்படிப் பல்வேறு கேள்விகளை எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். என்னை நானே வெறுத்தேன். ஒவ்வொரு நாளும் நான் கொஞ்ச கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருந்தேன்.

தொலை தூரத்துக்குச் செல்லும் வேலைகளிலேயே நான் கவனம் செலுத்தினேன். 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் குறித்த செய்திகளை சேகரித்தது குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். கர்நாடகா மாநிலத்தில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தேன். பெரிய அரசியல் தலைவர்களிடம் பேட்டி எடுத்தேன். பல்வேறு பேரணிகளில் கலந்துகொண்டேன். கிராம மக்களிடம் பேசினேன். அரசியல் பத்திரிகையாளராக இருந்த பலன்களை முதல் முறையாக உணர்ந்தேன். அந்த ஆண்டில் வெளிவந்த தேர்தல் முடிவுகளைச் சரியாகக் கணித்த நிருபர்களில் நானும் ஒருவராக இருந்தேன்.

இதற்குப் பரிசளிக்கும் விதமாக அமெரிக்கா அல்லது இங்கிலாந்து அனுப்பி வைப்பதாகச் சொன்னார் அக்பர். எனக்கு இருநாடுகளுக்கும் செல்ல வேலை விசா கிடைத்தது. எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது. என் மீது நிகழ்த்தப்பட்டுவந்த துஷ்பிரயோகம் ஒருவழியாக நிறுத்தப்படும் என்று நினைத்தேன். ஆனால், அதிலுள்ள அபாயத்தை நான் உணரவில்லை. ஏனென்றால், அங்கு என்னைக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லை. நினைத்த நேரத்தில் என்னிடம் வரலாம் என்பதுதான் அவருடைய திட்டம்.

லண்டன் அலுவலகத்தில் ஒருமுறை ஆண் நண்பருடன் நான் பேசுவதைப் பார்த்த அவர் என்னிடம் எப்படி நடந்துகொண்டார் என்பது இப்போதும் நினைவில் இருக்கிறது. சக ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்ற பின்னர், என்னை அடிப்பார். கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து என் மீது எறிவார். அலுவலகத்தை விட்டு ஓடி, ஒரு மணி நேரத்திற்குப் பக்கத்தில் இருந்த ஹைட் பூங்காவில் மறைந்திருப்பேன். இது குறித்து அடுத்த நாள் என் தோழியிடம் தெரிவிப்பேன். என் தாயிடமும் சகோதரிடமும் பேசுவேன். ஆனால், இந்தச் சம்பவத்தைச் சொல்வதற்கு எனக்கு தைரியம் வந்ததே இல்லை. ஆனால், நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்பது அவர்களுக்குத் தெரியவந்தது. என்னைத் திரும்பி வரச் சொன்னார்கள்.

உடலளவிலும் மனதளவிலும் நான் உடைந்துபோனேன். லண்டன் அலுவலகத்தை விட்டு ஓட வேண்டும் என தீர்மானித்தேன். இது குறித்து எனது இன்னொரு தோழியிடமும் கூறினேன். அமெரிக்காவுக்குச் செல்ல எனக்கு விசா இருந்தது. அங்கு இதே பத்திரிகையில் எனக்குத் தெரிந்த இரண்டு எடிட்டர்கள் இருந்தார்கள். அவர்களுடன் வேலை பார்க்க முடியும் என நினைத்தேன். ஆனால், அப்போது அக்பர் பொறுப்பில் இருந்தார். உடனடியாக என்னை மும்பைக்கு மாற்றினார்.

இந்த முறை வேலையை விட்டுவிட்டேன். பிறகு, நியூயார்க்கில் டவ் ஜோன்ஸ் என்ற பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தேன்.

தற்போது நான் அமெரிக்காவின் குடிமகள். மனைவி, தாய் என்ற உறவுகளுக்குச் சொந்தக்காரியாகி. பத்திரிகைத் துறை மீதான எனது விருப்பத்தை மீண்டும் கண்டுகொண்டேன். என்னுடைய வாழ்க்கையைச் சிறிது சிறிதாக மீட்டெடுத்துக்கொண்டேன்.

கடின உழைப்பு, விடாமுயற்சி, திறமை ஆகியவற்றால், டவ் ஜோன்ஸில் தொடங்கி பிசினஸ் வீக், யுஎஸ்ஏ டுடே, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் சிஎன்என் எனப் பணியாற்றினேன். தற்போது தேசியப் பொது வானொலியில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். ஒரு வேலையில் வெற்றி பெறுவதற்காக அப்படிப் பணிந்து போயிருக்கக் கூடாது என்று இப்போது தெரிகிறது.

நான் அக்பர் பற்றி யாரிடமும் பேசிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. அக்பர் சட்டத்திற்கு மேலே இருப்பதால், அவருக்கு நீதி என்பது பொருந்தாத ஒன்று என்று எப்போதுமே நான் நினைப்பேன். அவர் எனக்குச் செய்த கொடுமைக்கான தண்டனையை அவர் ஒருபோதும் அனுபவிக்கப்போவதில்லை என்றும் நினைத்தேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அக்பர் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையற்ற ஒன்று எனக் கூறியிருக்கிறார். தனக்கு எதிராகப் புகார் கொடுத்த பத்திரிகையாளர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அன்று எங்களது உடல்களை எவ்வாறு தனக்கு உரிமையானவை என நினைத்தாரோ அப்படியே இன்று தனக்கான கதைகளை உருவாக்க முயல்கிறார்.

இதை இப்போது கூறுவதால், எனக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எனக்கு நெருக்கமானவர்கள் என் வலியை உணர்வார்கள் என்பதால் இது மிகவும் சோர்வடையச் செய்கிறது. அக்பர், முன்னோக்கி வருகின்ற மற்ற பெண்களை வழக்கு தொடுத்து அச்சுறுத்தியுள்ளார். நான் நினைத்துப் பார்த்திராத விளைவுகளும் ஏற்படக்கூடும்.

அக்பரைப் போன்ற சக்தி வாய்ந்த மனிதர்களால் பாதிக்கப்படுவது என்றால் என்னவென்று தெரிந்ததால் இதை எழுதுகிறேன். இதுபோன்ற உண்மைகளைச் சொல்ல வரும் பெண்களுக்காக இதை எழுதுகிறேன். பதின் பருவத்தில் இருக்கும் என் மகனுக்காகவும் மகளுக்காகவும் எழுதுகிறேன். பிற்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்க்கொள்ள அவர்கள் கற்றுக்கொள்வார்கள். யாரையும் பலியாக்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்வார்கள். 23 ஆண்டுகள் கழித்து, அந்த இருண்ட காலத்தின் நினைவுகளிலிருந்து நான் இப்போது வெளிவந்துள்ளேன் என்பதைத் தெரிந்துகொள்வார்கள். நான் யார் என்பதை வரையறுக்கப் பிறரை அனுமதிக்காமல் நான் முன்னேறிக்கொண்டிருப்பேன்.

தமிழில்: சா.வினிதா

நன்றி: வாஷிங்டன் போஸ்ட்

 

https://minnambalam.com/k/2018/11/03/29

 

Share this post


Link to post
Share on other sites

அந்த பெண், கோட்டல் அறைக்கு வேலை விடயமாக தானே அழைக்கப்பட்டார்... அவரது நோக்கம் வேறு என்று தெரிந்திருக்க முடியாது.

தவிச்ச முயல்  அடிக்கிறது இதுதான்..... இவர் இப்போது தான் மாட்டி உள்ளார்.

உள்ள இருக்க வேண்டிய கருமம் பிடித்த மனிதர்.

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

பெண்கள் பொருளாதாரம் வேலைவாய்பு சார்ந்த தேவைகளுக்காக ஆண்களை அனுசரித்து போவதும் தேவைகள் பூர்த்தியாகி வளர்ந்த பின் குற்றம் சுமத்துவதும் தன் இந்த மீ டு வில் அதிகம் காணக் கூடியதாக உள்ளது. இந்த பல்லவியும் நீண்ட காலமாக அக்பருடன் விரும்பி உறவில் இருந்தவர் என்றே அறிய முடிகின்றது. 

 

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, சண்டமாருதன் said:

பெண்கள் பொருளாதாரம் வேலைவாய்பு சார்ந்த தேவைகளுக்காக ஆண்களை அனுசரித்து போவதும் தேவைகள் பூர்த்தியாகி வளர்ந்த பின் குற்றம் சுமத்துவதும் தன் இந்த மீ டு வில் அதிகம் காணக் கூடியதாக உள்ளது. இந்த பல்லவியும் நீண்ட காலமாக அக்பருடன் விரும்பி உறவில் இருந்தவர் என்றே அறிய முடிகின்றது. 

 

உண்மைதான் சண்டமாருதன்...

நானும் ஒரு பச்சாபாதத்தில் அவ்வாறு பதிவு இட்டேன்.

நினைத்துப் பார்க்கையில், இவர் ஒன்று வேறு வேலை தேடிப் போயிருக்க வேண்டும்... அல்லது போலீசாரை அழைத்து இருக்க வேண்டும். மேலும் இது நடந்தது ஒரு வேலை இடத்தில்... அங்கே சொல்லி இருந்தாலே அவரை அனுப்பி இருப்பார்கள்..

ஆகவே... தனக்கு ஒரு நன்மை தேவைப்படும் போது, கவர்ச்சியினைக் காட்டி, அந்த மனிதரை மடக்கி, உறவில் இருந்து, தன்னை வளர்த்து, அமெரிக்காவில் மிகப் பெரும் நிறுவனங்களில் வேலை எடுத்தபின், ஏறிய ஏணியை உதைப்பதாகவும் சொல்ல முடியும் தான்.  

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

பெண்ணுக்கு யார் காவல்,யாருமில்லை அந்தப் பெண்தான் காவல்.ஒரு ஆணின் அணுகுமுறை பாலியல்சார்பானதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளும் திறன்பெண்களுக்கு உண்டு.எதிர்பாராமல் முதல்தடவை நிகழும் வன்முறை புதிதாக இருக்கலாம் ஆனால் தொடர்ந்து நிகழ்கின்றதாயின் அதற்கு அந்தப்பெண்ணும் உடந்தைதான்.அந்தச்சந்தர்ப்பத்தில் வெளியில் வர நினைத்திருந்தால் வந்திருக்கலாம்.அதை விட்டுவிட்டு இப்போது பந்திபந்தியாக எழுதுவது தனது இயலாமைக்கு ஆறுதல்கூறுவதுதான்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this