Jump to content

திருடப்பட்ட 81 ஆயிரம் முகநூல் கணக்கு தகவல்கள் தனியாருக்கு விற்பனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

facebook-hacing-russia-720x440.jpg

திருடப்பட்ட 81 ஆயிரம் முகநூல் கணக்கு தகவல்கள் தனியாருக்கு விற்பனை!

முகநூலில் உள்ள சுமார் 81 ஆயிரம் கணக்குகளில் இருந்து பயனா்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடி விற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 120 மில்லியன் முகநூல் கணக்குகளின் தனிச் செய்திகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக அதனை செயற்படுத்தியவர்கள் பி.பி.சியின் ரஷ்ய சேவையிடம் தெரிவித்தனர். இந்தநிலையில், தகவல்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீங்கிழைக்கும் உலாவி நீட்டிப்புகளால் தகவல்கள் பெறப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் கணக்குகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை முகநூல் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

பெரும்பாலான பயனர்களை உக்ரைன் மற்றும் ரஷ்யாவை அடிப்படையாகக் கொண்டு முகநூலை பயன்படுத்தி வந்ததாக பிபிசி அதன் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளது. ஏனையவர்கள் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருடப்பட்ட கணக்குகளை அணுகுவதற்கு ஹெக்கர்கள் தலா 10 சதம் டொலர்களை அறவிட்டுள்ளனர். எனினும், அவர்களின் விளம்பரம் ஓஃப்லைனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/திருடப்பட்ட-81-ஆயிரம்-முகந/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.