Jump to content

ஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்து: 25 பேர் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்து: 25 பேர் உயிரிழப்பு!

201810311915222962_Helicopter-crash-kills-25-in-Afghanistan_SECVPF-720x450.jpg

ஆப்கானிஸ்தானில் அரச உயரதிகாரிகள் சென்ற இராணுவ உலங்குவானூர்தி விபத்திற்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் இன்று (புதன்கிழமை) குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் இருந்து அருகாமையில் உள்ள ஹேரட் மாகாணத்தை நோக்கி பரா மாகாண கவுன்சில் தலைவர் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட 25 பேர் குறித்த இராணுவ உலங்குவானூர்தியில் பயணித்திருந்தனர்.

இரு மாகாணங்களுக்கும் இடையிலான அனார் டாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மலைப்பகுதி வழியாக சென்றபோது (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 9 மணியளவில் மோசமான வானிலையால் கட்டுப்பாட்டை இழந்த உலங்குவானூர்தி கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.

இந்நிலையில் இந்த விபத்தில் உலங்குவானூர்தியில் சென்ற 25 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

http://athavannews.com/ஆப்கானிஸ்தானில்-உலங்குவ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.