Sign in to follow this  
மெசொபொத்தேமியா சுமேரியர்

அக்காவும் நானும்

Recommended Posts

13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் யாருக்கும் பார்சல் - பரிசு அனுப்புவதில்லையா ????

 

10/15 வருடங்களுக்கு முன்னர் அனுப்பிய ஞாபகம்.

 ஏதாவது பதிவுத் தபால் அனுப்ப சில வேளைகளில் செல்வதுண்டு.

Share this post


Link to post
Share on other sites
On 11/15/2018 at 2:23 AM, நிலாமதி said:

 அக்கா எதோ பிரச்சினைக்குள்  உங்களை தள்ளி விடப்பார்க்கிறா..நல்ல  வேளை தப்பித்துவந்துவிடீர்கள்

 அனுபவ கதை பலருக்குப்பயன் படும் தொடருங்கோ.

நன்றி நிலா அக்கா வருகைக்கும் கருத்துக்கும்

On 11/15/2018 at 7:16 AM, MEERA said:

10/15 வருடங்களுக்கு முன்னர் அனுப்பிய ஞாபகம்.

 ஏதாவது பதிவுத் தபால் அனுப்ப சில வேளைகளில் செல்வதுண்டு.

நீங்களும் என் கணவர் போல் கஞ்சனோ?? ?

Share this post


Link to post
Share on other sites

பகுதி 5

அதன் பின்னர் அக்கா மேல் எனக்கு எழுந்த சந்தேகம் வலுத்தது. வியாழக் கிழமைகளில் மட்டும் ஒரு தமிழ் அண்ணா அங்கு வேலை செய்கிறார். நான் வேலை பழகும்போது ஒருநாள் அவரிடமும் பழகியது. அதன்பின்னர் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக்கு கிடைக்கவில்லை. எப்போதாவது போனில் பேசுவதோடு சரி. நிவேதா உங்கள் துணிச்சல் எனக்கு நல்லாய் பிடிக்கும் என்று கூறுவார். அதனால் அக்கா இல்லாத வேளைகளில் அவரிடம் சந்தேகங்கள் கேட்பேன்.
ஆனால் நான் அவரிடம் கதைப்பது அக்காவுக்குப் பிடிக்காது. இரண்டு மூன்று தடவைகள் அவரைப்பற்றி என்னிடம் அப்பிடி இப்பிடி என்று கூறிய அக்கா அவருடன் கதைக்கும்போது தேன் ஒழுக்கக் கதைப்பதை ஒருநாள் தற்செயலாக அறையைத் திறந்துகொண்டு சந்தேகம் ஒன்று கேட்கப் போன நான் அறிந்தபோது, பெண்கள் எல்லோருக்கும் தன்னைவிட ஒருவருடன் ஒரு ஆண் கதைப்பது பிடிக்காதோ என்னும் கேள்வி எழுந்தது. அக்கா போனின் ஸ்பீக்கரை  போட்டுவிட்டுக் கதைத்துக்கொண்டிருக்க, கதவைத் திறந்துகொண்டு போன நான் அண்ணாவின் குரலை அடையாளம் கண்டுகொண்டேன். என்னைக் கண்டவுடன் அக்கா ஸ்பீக்கர் சத்தத்தை நிப்பாட்டினாலும் அந்தக் கொஞ்ச  நேரத்தில் நான் அண்ணா தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாலும் வேண்டுமென்றே வெளியே போகாமல் நின்றேன்.

அக்கா அதன் பின் அதிகநேரம் அண்ணாவுடன் கதைக்கவில்லை ஆயினும் "அவர் என்னட்டைச் சந்தேகம் ஒண்டு கேட்கத்தான் அடிச்சவர் என்றா. நானோ எல்லாத்தையும் கவனிச்சும் அதுபற்றி அக்கறை இல்லாதது போல் காட்டிக்கொண்டு என் இடத்துக்கு வந்திட்டன்.  

அக்கா என்ன செய்கிறா என்று எனக்கு வடிவாத் தெரியாவிட்டாலும் எதோ விதத்தில் என்னை முட்டாளாக்கி என்னைப்  பயப்பிடுத்தி வைக்கவேண்டுமென்பதும் அக்காவின் ஆசை என்பது எனக்குப் புரிய, நான் அவாவுக்குச் சொல்லாமலே அண்ணாவிடம் கேட்டுக்கேட்டு Back Office என்னும் பகுதியின் வேலைகளை பழக்க ஆரம்பித்தேன். அடுத்த மாதம் நான் விடுமுறையில் செல்ல இருந்ததால் அந்த வாரம் எனது கணக்கு மிகச் சரியாக எந்தவித மைனசும் இல்லாமல் இருக்க, நன்றி கடவுளே. நான் நின்மதியாக விடுமுறையைக் கழிக்க வைத்ததுக்கு என்று வாய்விட்டுக் கூற, அக்கா ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுப் போய்விட்டா.

ஒருமாத விடுமுறை முடிய மீண்டும் வேலை தொடங்கி இரண்டாம் வாரம் மீண்டும் என் கணக்கில் £101 மைனஸ் வர, எனக்கு தலை சுத்த ஆரம்பிததுவிட்டது. ஐயோ அக்கா மீண்டும் நூறு பவுன்ஸ் நான் என்ன செய்ய. சரியான கவனமாத்தானே செய்தனான். இனி தொடர்ந்தும் வேலை செய்ய ஏலாதக்கா. நான் இண்டையோட வேலையை விடுறன் என்றேன் ஆதங்கத்துடன். எப்ப பார்த்தாலும் நான் வேலையை விடுறன் என்று வெருட்டுறீர். பொறும் என்ன பிழை விட்டநீர் என்றபடி என் முன்னாலேயே Back Office போய் முத்திரைகளை  பிரிண்ட் எடுத்துவிட்டு இங்க பாரும். இதில் நூறு 1st  கிளாஸ் முத்திரைகளுக்கான பணத்தைத்தான் காணவில்லை என்றுகூற, எனக்கு நீங்கள் போன வாரமோ இந்த வாரமோ பெரிய முத்திரைகள் உள்ள seet  தரவில்லையே என்றேன். அது நான் நீங்கள் கொலிடே போக முதல் தந்தது என்றா.

விடுமுறைக்குச் செல்ல முதல் எல்லாம் ஓக்கேயாகத் தானே அக்கா இருந்தது. அந்தக் கணக்கு எப்பிடி இந்தக் கிழமையில் சேரும் என்றேன். சும்மா சும்மா இப்பிடிக் கேள்வி கேட்கக்  கூடாது என்றதற்கு  நான் ஒண்டும் பிழையாகச் செய்யவில்லை அக்கா என்றேன். பிழை விடுறது இயற்கை. நீங்கள் முழுசா வேலை பழகுமட்டும் நான் சொன்னாலும் உங்களுக்கு ஒண்டும் விளங்காது என்று என்னை முட்டாளாக்கிவிட்டுப் போக இவவைக் கையும் களவுமாகப் பிடிக்காமல் இந்தப் இடத்தைவிட்டுப் போவதில்லை என்ற வைராக்கியம் என்னுள் எழுந்தது.

ஆனாலும் அக்கா கெட்டிக்காரி என்றதை நான் அடுத்த அடுத்த நாட்களில் கண்டுகொண்டேன். அடுத்த நாள் அண்ணா வேலை செய்யும் நாள். அக்காவுக்குச் சொல்லாது முதலாளியிடம் மட்டும் அனுமதி கேட்டுவிட்டு காலை ஒன்பதுக்கே தபாற்கந்தோர் வர, அண்ணாவுக்கு அச்சரியம். ஒவ்வொரு மாதம் முடியவும் கணக்குத் துண்டுகள் அனைத்தையும் ஒன்றாகக் கட்டி என் பக்கமுள்ள சிறு பெட்டியில் போட்டு மூடி விடுவார்கள்.அந்தப் பெட்டியை மகிழ்வுடன் திறந்து கடந்த மாதக் கணக்குத் துண்டுகளைத் தேடினால் ஒன்றையுமே காணவில்லை. அக்காவைத் தவிர யாரும் அதை எடுக்கவேண்டிய தேவை இல்லை. அண்ணாவிடம் விசாரித்தால் அவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. ஒரு மணிநேரம் விரயமாகியதுதான் மிச்சம். நான் கிளறிப் பார்க்கலாம் என்று முன் கூட்டியே கணித்து அக்கா அதை எங்கோ வைத்துவிட்டுப் போயிருப்பது புரிந்தது.

சரி வந்ததுதான் வந்தோம் அண்ணாவிடம் பழக்கவேண்டிய வேலைகளை பழகி முடித்து இந்தப் போஸ்ட் ஆபீஸ் வேலையே விசர் அண்ணா. தொடர்ந்து இப்பிடி மைனஸ் வந்தால் என்னெண்டு வேலை செய்யிறது. நான் வேலையை விடப்போறன் என்றேன். உங்களுக்கு விசரா நிவேதா. எனக்கே 390  பவுண்ட்ஸ் மைனஸ் இருக்கு என்று கூற என்ன அண்ணா  சொல்கிறீர்கள் என்று வாய் பிளந்தேன் நான். என்ன செய்யிறது நிவேதா எனக்கு கடன். ஆறு நாளும் வேலை செய்துதான் கொஞ்சம் கொஞ்சமா அடைகிறன். அவதான் சரியில்லையே ஒழிய ஓனர் பிரச்சனை இல்லைத்தானே. நீங்கள் அவசரப்பட்டு வேலையை விடாமல் இன்னும் கொஞ்சனாள்  பாருங்களன் என்கிறார்.

அடுத்தநாள் வந்தவுடன் என் காசை எல்லாம் கணக்கெடுத்து முத்திரைகளையும் அப்டேற் செய்து அக்காவை கணக்கு முடிக்க விடாமல் நானே கண்ணுக்குள் எண்ணை குத்திக்கொண்டு என்று சொல்வார்களே  அதுபோல் என் கணக்கு, காசு, முத்திரை எல்லாவற்றையும் கண்காணித்தேன். அடுத்து வந்த ஒரு மாதம் எவ்விதப் பிரச்சனையும் இன்றிப் போக மனது கொஞ்சம் லேசானது. மீண்டும் ஒரு திங்கள் காலை வந்து என் பணப் பெட்டியைத் திறந்து எண்ணியபோது 120 பவுண்ட்ஸ் குறைவாக இருப்பதை கண்டவுடன் கோபம் தலைக்கேற அக்காவுக்குப் போன் செய்தபோது நீங்கள் மாறி எண்ணி இருப்பீர்கள். வடிவா எண்ணிப்பாருங்கோ என்றுவிட்டு போனை வைத்துவிட, அக்காதான் என் பெட்டியைத் திறந்து எடுத்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஏனெனில் பணத்தை வேலை முடிய எண்ணி cash deceleration செய்து பிரிண்ட் எடுத்து ஒன்றை அங்கே வைத்துவிட்டு மற்றத்தை நான் வீட்டுக்கு கொண்டுவருவது அக்காவுக்குத் தெரியாது.

அக்கா வந்தபின் காசைக் காணவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த, நானே உங்கட காசை எடுத்தனான். சும்மா விசர்க் கதை எல்லாம் என்னோடே கதைக்கக் கூடாது என்று  ஏசிவிட்டு அன்று முழுதும் என்னுடன் கதைக்காமலிருக்க, நானும் என் பாட்டில் இருக்க, வேலை முடியும் நேரம் சும்மா சும்மா எல்லாரையும் சந்தேகப்படக் கூடாது. நம்பிக்கையின் அடிப்படையில தானே எல்லாரும் வேலை செய்யிறம். துணிவான ஆள்த்தான் நீங்கள். அதுக்காக இனிமேல் இப்பிடிக் கதைக்காதையுங்கோ என்கிறார். அக்கா உங்களுக்கு காசு சோட் வந்தால்த்தான் தெரியும். நான் ஆறு ஆண்டுகள் கடை நடத்திப்போட்டுததான் வந்தனான். காசை இங்கை வந்து தான் காணேல்லை. வாரத்தில இரண்டு நாட்கள் நான்தான் வங்கியில் கொண்டுபோய் பணம் போடுறது. ஒருநாள் தன்னும் பிழைக்கவில்லை. இனிமேல் நான் என் காசுப் பெட்டியின் திறப்பை வீட்டுக்கு கொண்டு போகப் போறன் என்றேன்.

போஸ்டொபிஸ் பொருள் எதையும் ஒருத்தரும் வெளியே கொண்டு போகேலாது. படிச்சுப் படிச்சுச் சொல்லுறன் திருப்பவும் எங்களில சந்தேகப்பட்டுக்கொண்டு என்று கூற, நான் உங்களில சந்தேகப் படவில்லை அக்கா. முன்பு அயன்சேவுக்கு மேல கமரா இருந்தது. போனமாதம் ஓடிற்றர் வந்து போன பிறகு காமராவைக் கழட்டிப்போட்டாங்கள். அண்ணாவோ அல்லது ஓனரோ ஓனரின் தம்பியோ கூட என் பெட்டியிலிருந்து காசை எடுத்திருக்கலாம் என்றேன். "இந்தப் பெரிய கடையை வச்சிருக்கிறவங்கள் உங்கடை காசை எடுத்துத்தான் கடை நடத்தப் போறாங்களாக்கும்" என்றுவிட்டு தன் அலுவலைப் பார்க்க வேறு வழியே தெரியாது வேலையைத் தொடர்ந்தேன் நான்.

அடுத்தநாள் எனக்கு வேலை இல்லை. சாமம் நித்திரையில் இருக்க அக்காவின் போன். என்ன என்று போனை எடுத்தால் அக்காவின் கணவர்தான் கதைக்கிறார். அக்காவின் கடைசித் தம்பியார் இறந்திட்டார். நாளைக்கு நீங்கள் போய் திறவுங்கோ என்றுவிட்டு வைக்க "நீ எனக்குச் செய்யிற  அநியாயத்துக்குத்தான் கடவுளின் தண்டனை உனக்கு" என்று என் மனம் நினைத்ததை இட்டு எனக்குள் ஒரு கூச்சம் உண்டாயிற்று.  

மூன்று வாரங்கள் அக்கா அந்தப் பக்கம் வரவில்லை. முழு வேலைகளையும் நானே செய்தும் எந்த ஒரு மைனசும் வராமல் இருக்க, மனதில் நின்மதி ஒன்று ஏற்பட்டுது. அடுத்த வாரம் வேலைக்கு வந்த அக்கா வெல்டன் நிவேதா எல்லாம் ஒழுங்கா செய்திருக்கிறியள். உங்கள் மைனஸ் 120 பவுன்சை நான் கழிச்சுவிடுறன் என்றவுடன் கழிச்சால் மெயின் அக்கவுண்டுக்கு மைனஸ் வருமே அக்கா என்றேன். அதை நான் சமாளிக்கிறன் என்று கூறியவுடன் நன்றி அக்கா என்று வாய் சொன்னாலும் உன் தம்பி இறந்தவுடன் நீ திருந்திவிட்டியோ என்று மனம் கேட்க ஒன்றும் கூறாது அப்பால் சென்றேன்.

ஒரு மூன்று மாதங்கள் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதன் பின் ஒரு வாரம் மீண்டும் 100 பவுண்ட்ஸ். அக்காவுக்குத் தெரியாமல் ஆக்டிவிட்டி லொக் என்னும் பகுதியில் நான் வேலைக்கு வராத நாட்களைப்போட்டு அடித்துப் பார்க்க ஒருநாள் அக்கா என் அக்கவுண்டுக்கு வந்ததாகக் காட்டியது. அதை பிரிண்ட் அவுட் எடுத்து  அக்காவிடம் ஒன்றும் கேட்காது  வீட்டுக்கு வந்தபின் தபாற் கந்தோரில் வேலை செய்த என் நண்பியிடம் விபரத்தைக் கூறினேன்.போஸ்ட் ஒபிஸ்சில் மெயின் ஆளுக்கு எல்லோரின் பகுதிக்குள்ளும் நுழைய முடியும். ஆனால் மற்றவர் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு பணம் குறைவதை பற்றிக் கேட்டபோது, அவர் முத்திரையையோ அல்லது பணத்தையோ உங்களுக்குப்  போட்டால் உங்களுக்கு மைனஸ் தான் காட்டும். பின்னர் அவர் அதை எடுத்து விடுவார். ஆனால் இதை நீங்கள் நிரூபிக்க முடியாது என்கிறார்.

இப்பிடியே என் அக்கவுண்டில் 340 பவுண்ட்ஸ் மைனஸ் வர நானும் வேறு வேறு போஸ்ட் மாஸ்டர்களிடம் கேட்டும் யாரும் சரியான பதில் தரவில்லை. அடுத்த வாரம் அக்காவின் மகள் புதிய வீடு வாங்கிக் குடி புகுதல் சிறப்பாகச் செய்ய, மகளின் முன் கதவு 800 பவுண்ட்ஸ் நிவேதா. நான் தான் கதவுக்கு காசு குடுக்கிறன்  என்று  அக்கா சொல்லும்போதே அன்று 100 பவுண்ட்சும்  அடுத்தநாள் என் கணக்கில் நூறு பவுண்ட்சும் மைனஸ் வர என் பொறுமை காற்றில் கரைந்து போனது.

அக்கா நான் இனியும் இங்க வேலை செய்ய முடியாது. உங்களுக்கு காசுத் தேவை வரும்போதெல்லாம் எனக்கு மைனஸ் வருது. உங்கட காசில் கதவு வாங்கிப் போடவேணும் அக்கா என்றதும் அக்கா கிரீச்சிட ஆரம்பித்தார். எங்கட குடும்பம் எப்பிடியாவது தெரியுமே. அப்பிடி நீர் கதைக்க உமக்கு என்ன துணிவு என்று கூற நான் இடை மறித்து உங்கள் குடும்பம் பற்றி நீங்கள் புழுகியதை விட  எனக்கு நிறையத் தெரியும். நீங்கள் உங்கள் கணவர் பற்றி பிள்ளையள் பற்றி எல்லாம் சொன்னது பச்சைப் பொய் என்று எனக்கு முதலே திரியும் அக்கா. வேறை வழியில்லாமல் உங்கட பொய்யைக் கேட்டுக்கொண்டு இருந்தான். என்னத்துக்கு ஒவ்வொரு வெள்ளியும் கோயிலுக்குப் போறியள். உதிலும் பார்க்க ரோட்டில நிண்டு பிச்சை எடுக்கலாம் என்றதும்  "வாயை மூடும். இனிமேல் உமக்கு இங்கை வேலை இல்லை" என்று அக்கா கத்த, மணித்தியாலம் நூறு பவுன்ஸ் தாறன் எண்டாலும் எனக்கு இனிமேல் உங்களோட வேலை செய்ய ஏலாது. நீங்களெல்லாம் உயிரோட இருக்கிறதே தண்டம். இனிமேலாவது ஆற்றையன் காசை அடிச்சு வாழாமல் ஒழுங்கா வேலை செய்யுங்கோ என்றுவிட்டு என் பையைத் தூக்கிக்கொண்டு வெளியே வர, "இப்பிடி ஒரு கொடுமையான ஆளே நீர். என்னிலையா  வீண்பழி சுமதத்திப்போட்டுப் போறீர் . கடவுள் இருக்கிறார்" என்கிறார். கடவுள் உங்களையே பார்த்துகொண்டு சும்மா இருக்கிறார். என்னை என்ன செய்யப் போறார். பெற்றோர் செய்யிறது பிள்ளையளுக்குத்தான் என்று சொல்லுறவை  என்றுவிட்டு கதவை அடித்துச் சாத்திவிட்டு காருக்குள் சென்று அமர்ந்து முதலாளி சணிக்கு போனடித்து எல்லா விடயத்தையும் கூறிவிட்டு எனக்கு அக்காவுடன் வேலை செய்ய விருப்பம் இல்லை என்றுவிட்டு நின்மதியாக வீடுவந்து சேர்ந்தேன்.

  • Like 3
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

நல்ல ஓரு அனுபவப் பகிர்வு. சுமே{

எனது அவதானிப்பில் இருந்து ...இப்படியானவர்கள் மிகுந்த பக்திமான்களாக அல்லது பெரும் பக்தைகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டு கொள்வார்கள்! இவர்களின் தவறு ஒன்றைத்தான் சுட்டிக்காட்டும்போது அதிகமாகக் கோப்பபடுவார்கள்!

ஆனால், கடவுள் ஒருவர் இருக்கிறார்....அவர் இப்படியானவர்களைத் தண்டிப்பார் என்பதில் எனக்கு என்றுமே... நம்பிக்கை இல்லை!

நீங்கள் அவரது தவறுகளை....எழுத்து மூலம்...மேலாளர்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கலாம்! அதைத்தான் நான் செய்திருப்பேன் என நினைக்கிறேன்! நீங்கள் வேலையை விட்ட்து சரியான முடிவு தான்!

எனது அவுஸ்திரேலிய நண்பரொருவர்...தங்கம் உருக்கி வார்க்கும் ஒரு கொம்பனியில் நல்ல வேலையில் இருந்தார்!

சில நாட்களில் அந்த வேலையை விட்டு விட்ட்தாகக் கூறினார்! 

ஏன் என்று கேடடபோது...தான் வேலை செய்த காலத்தில்...அங்கிருந்து தங்கத்தை வெளியால் கொண்டுவர....நாலு வழிமுறைகளைக் கண்டு பிடித்தாகக் கூறி...அதனால் அந்த வேலையே விட்ட்தாகக் கூறினார்!

மனித மனம் பொல்லாதது! தான் செய்யும் செயல்களை நியாயப்படுத்த படுத்த எப்போதும் காரணங்களைக் கண்டு பிடித்த படியே இருக்கும்!

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் வேலையை விட்ட்து தான் சரியான முடிவு ! இப்படியான அக்கா போன்ற மனம் படைத்தவர்கள் வேறு ஒரு  ஏமாளியை தேடிக்கொண்டு இருப்பார்கள்.  பெரிய சிக்கலில க்கப்பட்டு தா ன் இவர்கள் திருந்துவார்கள். அனுபவப்பகிர்வுக்கு மிக்க நன்றி . மனித மனம் மிகவும் தந்திரமுள்ளது .அகப்படும் வரை நல்லவர்கள் அகப்பட்ட் பின் தான் கள்வர்  என தெரியவருகிறது 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

உங்களது அனுபவப் பகிர்வு ஏனையோருக்கும் ஒரு நல்ல படிப்பினையாகும் சகோதரி. நேர அவவின் மகள் வீட்டை போய் கதவைப் பிடுங்கிக் கொண்டுவந்து உங்கட வாழைக்கு முட்டாவது கொடுத்திருக்க வேண்டும் அப்பதான் மனதின் ரணம் ஆறும்.....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, புங்கையூரன் said:

நல்ல ஓரு அனுபவப் பகிர்வு. சுமே{

எனது அவதானிப்பில் இருந்து ...இப்படியானவர்கள் மிகுந்த பக்திமான்களாக அல்லது பெரும் பக்தைகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டு கொள்வார்கள்! இவர்களின் தவறு ஒன்றைத்தான் சுட்டிக்காட்டும்போது அதிகமாகக் கோப்பபடுவார்கள்!

ஆனால், கடவுள் ஒருவர் இருக்கிறார்....அவர் இப்படியானவர்களைத் தண்டிப்பார் என்பதில் எனக்கு என்றுமே... நம்பிக்கை இல்லை!

நீங்கள் அவரது தவறுகளை....எழுத்து மூலம்...மேலாளர்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கலாம்! அதைத்தான் நான் செய்திருப்பேன் என நினைக்கிறேன்! நீங்கள் வேலையை விட்ட்து சரியான முடிவு தான்!

எனது அவுஸ்திரேலிய நண்பரொருவர்...தங்கம் உருக்கி வார்க்கும் ஒரு கொம்பனியில் நல்ல வேலையில் இருந்தார்!

சில நாட்களில் அந்த வேலையை விட்டு விட்ட்தாகக் கூறினார்! 

ஏன் என்று கேடடபோது...தான் வேலை செய்த காலத்தில்...அங்கிருந்து தங்கத்தை வெளியால் கொண்டுவர....நாலு வழிமுறைகளைக் கண்டு பிடித்தாகக் கூறி...அதனால் அந்த வேலையே விட்ட்தாகக் கூறினார்!

மனித மனம் பொல்லாதது! தான் செய்யும் செயல்களை நியாயப்படுத்த படுத்த எப்போதும் காரணங்களைக் கண்டு பிடித்த படியே இருக்கும்!

கடவுள் யாரைத்தான் தண்டிக்கிறார் இந்தக் காலத்தில்.அந்த அக்கா மற்றவர்களுடன் கதைக்கும்போது பார்க்கவேண்டும். சத்தியம் செய்தாலும் யாரும் நம்பமாட்டார்கள்.

14 hours ago, நிலாமதி said:

நீங்கள் வேலையை விட்டது தான் சரியான முடிவு ! இப்படியான அக்கா போன்ற மனம் படைத்தவர்கள் வேறு ஒரு  ஏமாளியை தேடிக்கொண்டு இருப்பார்கள்.  பெரிய சிக்கலில க்கப்பட்டு தா ன் இவர்கள் திருந்துவார்கள். அனுபவப்பகிர்வுக்கு மிக்க நன்றி . மனித மனம் மிகவும் தந்திரமுள்ளது .அகப்படும் வரை நல்லவர்கள் அகப்படட் பின் தான் கள்வர்  என தெரியவருகிறது 

அவரைக் கையும் களவுமாகப் பிடிக்க முடியாமல் போய்விட்டதே என்பதுதான் என் கவலை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, suvy said:

உங்களது அனுபவப் பகிர்வு ஏனையோருக்கும் ஒரு நல்ல படிப்பினையாகும் சகோதரி. நேர அவவின் மகள் வீட்டை போய் கதவைப் பிடுங்கிக் கொண்டுவந்து உங்கட வாழைக்கு முட்டாவது கொடுத்திருக்க வேண்டும் அப்பதான் மனதின் ரணம் ஆறும்.....!  tw_blush:

tw_blush:tw_blush:

நான் கூட நினைத்ததுண்டு. அவரின் வீட்டுக்குச் சென்று பிள்ளைகள் எல்லோரும் இருக்கும் போது திட்டுதிட்டென்று திட்டிவிட்டு வரவேண்டும் என்று. ஆனால் வீடு என் கணவர் அப்படிச் செய்ய வேண்டாம் என்று தடுத்துவிடடார். ஆனால் அக்காவின் கணவர் பாவம் மிகவும் நேர்மையான நல்ல மனிசன். ஆனால் அக்கா கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார்.அவருக்கு இந்த யாழ் லிங்க்கை அனுப்பியுள்ளேன். ஆனால் அவர் என் முகநூல் நட்பில் இல்லாததால் இன்னும் பார்க்கவில்லை.

Share this post


Link to post
Share on other sites


நல்லதொரு அனுபவபதிவு. நானும் பெட்ரோல் செட்டில் வேலை செய்யும்போது இதேபோல் பல அனுபவங்களை பெற்றுள்ளேன். இதனால் நான் தமிழர்களுடன் வேலை செய்யவதை விரும்புவதில்லை.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, colomban said:


நல்லதொரு அனுபவபதிவு. நானும் பெட்ரோல் செட்டில் வேலை செய்யும்போது இதேபோல் பல அனுபவங்களை பெற்றுள்ளேன். இதனால் நான் தமிழர்களுடன் வேலை செய்யவதை விரும்புவதில்லை.

உண்மைதான் கொழும்பான். லண்டனில் பல இடங்களில் தமிழ் மேல்நிலை ஊழியர் செய்யும் அநியாயம் கொஞ்சம் அல்ல.வேலை போய்விடும் என்னும் பயத்திலேயே பலர் எதுவும் பேசுவதில்லை.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this