Jump to content

தோற்றுப் போதலின் அழகியல் - உமையாழ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றுப் போதலின் அழகியல் - உமையாழ் 
 

மிலன் குந்தரேவின் சிறுகதையான The Apologizer-யை முன்வைத்து...

எல்லோரையும் முந்திக் கொண்டு தமிழில், உலக இலக்கிய மொழிபெயர்ப்பு நிகழ்வது பற்றி முகநூலில் எழுதி இருந்தேன். அதை வாசித்த நண்பி, “ஆனால் மிலன் குந்தரேவின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவே இல்லையே” என பதில் இட்டிருந்தாள். அது பற்றி அப்போது நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பின்னர் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி, குந்தரேயின் The Unbearable Lightness Of Beingயை மொழிபெயர்க்க காலச்சுவடு கண்ணனிடம் மொழிபெயர்ப்பு உரிமையை வாங்கச் சொல்லி மன்றாடுவதாகச் சொன்னபோதுதான் அந்த நாவலே இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது உறைத்தது.

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ராஜகோபாலுடன் முன்னர் ஒருமுறை கதைத்துக் கொண்டிருந்தபோது குந்தரேயின் Laughable Love சிறுகதைத் தொகுதியில் இருந்த Nobody Will Laugh சிறுகதையைதான் மொழிபெயர்த்ததாகச் சொல்லி அதன் இணைப்பை அனுப்பி இருந்தார். அட்டகாசமான மொழிபெயர்ப்பு அது. நான் ஏற்கனவே அந்த Laughable Love தொகுதியின் ஏழு கதைகளையும் வாசித்திருந்தேன். மிலன் குந்தரே, அவரது மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மூலமாகதான் எனக்கு அறிமுகமானார். 

மிலன் குந்தரே கதைகளைப் புரிந்து கொள்வதில் ஆரம்பத்தில் எனக்கு சிக்கல்கள் இருந்தன. அவரது தத்துவார்த்த நிலைப்பாடுகளுடன் ஒன்றிப் பயணித்தலில் ஏற்படும் தடைகள்தான் அவை என பின்னர் புரிந்து கொண்டேன். எனக்கான நியாயங்களை கலைந்து, வெற்றுச் சிந்தையுடன் குந்தரேயை வாசிக்க ஆரம்பித்த பின்னர் அவரைப் பின் தொடர்வது இலகுவானதாக இருந்தது.

அவருடைய எல்லா கதைகளும் ஒரு அடிப்படையான கேள்வியில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன என்பதை புரிந்துகொள்ள எனக்கு சற்றே நாளாயிற்று. ‘நான் ஏன் பிறந்தேன்?, என்ன செய்கிறேன்? எங்கே போய்க் கொண்டிருக்கிறேன்? என்பதைப் போல ஓர் ஆழமான தத்துவார்த்தக் கேள்வியாக அவை அமைந்திருப்பதையும் அவரின் கதைகள் மீதான எனது இரண்டாம் வாசிப்பினூடே நான் அவதாணித்திருந்தேன். அந்தக் கேள்விகளுக்கான விடை தேடலின் உளவியல் அலைக்கழிப்பை, ஒரு பெரிய சுவரில் வரையப்பட்ட ஒரு நவீன ஓவியத்தின் நுணுக்கங்களுடன் அவர் எழுதி இருப்பதை வாசிப்பது ஒரு தேர்ந்த வாசகனுக்கு பேரின்ப அனுபவம். அந்த அனுபவம், மூலப்பிரதியை எழுதிய குந்தரேயில் எவ்வளவு பிரமாண்டமாக நிகழ்ந்திருக்கும்! அந்த பிரமாண்டமான உளவியல் அலைக்கழிப்பு அனுபவத்தைதான் மிக முக்கியமாக தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முயல்வதாக எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு.

தமிழில் ஷோபாசக்தியின் கதைகளில் இப்படியான அலைக்கழிப்பு இருப்பதை அவதானித்திருக்கிறேன். ஆனால், ஷோபாவின் கதைகளில் நிகழும் அலைச்சல், நிலம் சார்ந்தது மட்டுமே. அவரது கதைகளில் மனிதர்கள் எப்போதும் புறவயமாக பெரும் அலைச்சல் ஒன்றுக்குள் ஆளாகிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், ஷோபாவின் கதாபாத்திரங்களின் அகஉலகம் மாறாத் தன்மை கொண்டது. காரணம், ஷோபாசக்தி கதையின் வடிவத்திலும் கதைகூறல் முறையிலும் காட்டும் சிரத்தையை அவரது கதை ஒன்றிற்குள் கதாபாத்திரங்களின் உளவியல் மாற்றங்களில் காட்டுவதில்லை என்பது எனது எண்ணம். ஷோபாவின் திட்டமிடல்கள்  கதை கூறல் யுக்தியில் கொட்டித் தீர்க்கப்படுகிறது. கதாபாத்திரங்கள் கதை போகும் போக்கில் ஓடையில் விழுந்த சருகு போல கூடவே போகிறார்கள். உன்னிப்பாக அவதானிக்கையில், அவரது கதாபாத்திரங்கள் எல்லாம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு தட்டையான நிலையில் இருப்பதையே உணரலாம். உதாரணமாக, கப்டன் கதையில் வரும் அந்த கப்டன் ஆகட்டும், லைலா கதையில் வரும் அந்தக் கதைசொல்லி மற்றும் இலங்கை ராணி ஆகட்டும், திரு.முடுலிங்க கதையில் வரும்மம் முடுவாகட்டும், எழுச்சி கதையில் வரும் சரவணனாகட்டும், இப்படியாக எல்லோருமே கதை ஆரம்பித்த போது எப்படியானவர்களாக விபரிக்கப்பட்டார்களோ கதை நெடுகிலும் அப்படியே இருப்பதை கவனிக்கலாம். சிறுகதை ஒன்றில் இவ்வாறான கதாபாத்திரங்களின் உளவியல் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டுவது சவாலானது. அந்தச் சவாலை ஷோபாசக்தி என்றைக்கும் எதிர்கொண்டதே இல்லை.  ஷோபாவின் கதைகளில் நிலம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், மனிதர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். இதில் தவறொன்றுமில்லை. தன் கதைகளை எழுத ஷோபா தேர்ந்தெடுக்கொண்ட முறைமை அது.

ஆதலால், நான் மேற்சொன்னவை ஷோபாவின் கதைகளின் மீதான விமர்சனமில்லை. இந்தப் பிரதான வேறுபாட்டை முன்னிலைப்படுத்தி ஷோபாவும் குந்தரேயும் ஒப்பிடப்படவே முடியாத எழுத்தாளர்கள் ஒரு முடிவிற்கு வரலாம் என்பது எனது எண்ணம்.

ஷோபாவும், குந்தரேயைப் போலவே அதிகமாக எழுதியவரில்லை. இந்தக் கட்டுரை எழுதப்படும் 20-07-2018 வரையிலும் மூன்று நாவல்களும், முப்பத்தேழு சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். அதே வேளை கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் குந்தரே 10 நாவல்களும் 8 சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். ஆக, ஷோபாசக்தி ஒரு சிறுகதை ஆசிரியராகவும் மிலான் குந்தரே ஒரு நாவலாசிரியராகவும் முன்னிலைப் படுத்துவதே சரியானது.

அண்மையில் லண்டனில் நடந்த இலக்கியக் கூட்டமொன்றில் மிலான் குந்தரே ஷோபாசக்தியைப் போல அதிகாரத்திற்கு எதிராக எழுதியவர் என ஒரு ஒப்பிட்டுச் சொல்லி இருந்தார்கள். அதை நான் முற்றாக மறுத்திருந்தேன். எந்த இடத்திலும் ஷோபாவும் குந்தரேயும் ஒப்பிடவே முடியாத எழுத்தாளர்கள்.

மிலான் குந்தரே எழுதிய நாவல்களிலும் சரி, சிறுகதைகளிலும் சரி வரும் கதாபாத்திரங்கள் எல்லாமும் அசாதாரன சிந்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வாசகர்கள் நினைக்காத புறத்தில் இருந்து பேசுகிறார்கள். அவரது கதைகளில் இடையில் தொடர் பறுந்த சம்பவங்கள் போல தெரியும். எல்லாமும் கதையின் பிற பகுதியில் ஏதோ ஒரு இடத்தில் தொடுப்பை ஏற்படுத்தி மலைக்க வைக்கிறது. அவருக்கான ஆழமான தேடலில் வாசகர் வெளியையும் மதிப்பவராகவே குந்தரே இருக்கிறார். அதற்காகவே கதையில் இடைவெளிகளை இட்டு நிரப்புகிறார். சிறுகதைகளைக்கூட, பகுதி பகுதியாகப் பிரித்து, நாவல் வடிவத்தில் உள்ளதைப் போல அத்தியாயம் அத்தியாயமாக்கி எழுதுகிறார். அவர் கதைகளில் உள்ள இடைவெளிகள் வாசக சஞ்சரிப்புக்கானவை. தனது The art of the Novel எனும் கட்டுரைத் தொகுதி ஒன்றில் குந்தரே இப்படி எழுதுகிறார் ‘ The reader's imagination automatically completes the writer's vision’. 

 

மிலான் குந்தரே எழுதிய புனைவுகளில் ஆகவும் சிறந்ததாக The Unbearable Lightness Of Being நாவலை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நாவலின் முதல் இரண்டு பக்கமும் எந்தப் புள்ளியில் இருந்து அவரில் தொடங்கியது என்பதை எழுதிவிடுகிறார். அதில் நீட்சே வருகிறார். Parmenides வருகிறார். இன்னும் சில தத்துவவாதிகள் வருகிறார்கள். அவர்களது கருத்துக்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும் குந்தரே, தனக்குள்ள கேள்விகளையும் முன் வைத்து அவர்களை மறுதலிக்கவும் முயல்கிறார். அதில் இருந்து தனக்கான தேடலை முன்னகர்த்துகிறார். அப்படியாகத்தான் இந்த நாவல் உருக்கொள்கிறது.

Tomas எனும் ஒரு வைத்தியர் பற்றிய கதை அவரில் நிலைகொண்டு சொல்கிறபோது,

I have been thinking about Tomas for many years. But only in the light of these reflections did I see him clearly. I saw him standing at the window of his flat and looking across the courtyard at the opposite walls, not knowing what to do.

மிகக் தட்டையானதொரு அறிமுகம், அதோடு இந்த நாவலில் முக்கியமான மற்றைய மூன்று கதாபாத்திரங்களையும் இப்படித் தட்டாயகத்தான் அறிமுகம் செய்கிறார். இதுவரையும் முதலாம் நபர் முன்னிலையில் சொல்லப்பட்ட கதை, இந்த அறிமுகத்தில் இருந்து மூன்றாம் நபர் படர்க்கையில் சொல்லப்படுகிறது. இந்த மாற்றம் நிகழ்ந்ததை வாசகர்களிடம் இருந்து எப்படியோ தூரமாக்கிவிடுகிறார் குந்தரே.

அறிமுகத்தில் அழகியல் வேண்டியதில்லை என்னும் அவரது நிலைப்பாடு அவரது எல்லாக் கதைகளிலும் தொடர்கிறது. அவர் ஆழமாக நம்பியது மனித மனத்தின் அகவெளியையும் அதில் நிகழும் மாற்றங்களையும்தான். அதை கதைகளில் வெளிக்கொணர சம்பாசனைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் என நான் நம்புகிறேன். அவரது கதைகளில் உரையாடல்கள்தான் கதையின் மையத்தை நோக்கி வாசகர்களை நகர்த்துகிறது.

இந்த நாவலில் கதாபாத்திரங்களின் புறச்சூழல் மாறிக்கொண்டே இருக்கிறது. Czech நாட்டின் மீது ரஷ்ய கம்யூனிசப் படையின் ஆக்கிரமிப்புகள் பின்னனியில் சொல்லப்படுகிறது. பிரதான பாத்திரங்கள் சுவிஸ் நாட்டிற்கு இடம் பெயர்கிறார்கள். பிறகு மீண்டும் Prague திரும்புகிறார்கள். அங்கிருந்து ஒரு கிராமத்திற்குப் நகர்கிறார்கள். இப்படியாக கதையின் புறச் சூழல் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அவை எல்லாம் கதையில் முன்னிலைப் படுத்தப்படவே இல்லை. கதையில் முக்கிய கதாபாத்திரங்களின் உளவியல் மாற்றமே பிரதான பேசும் பொருளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரதான பாத்திரங்களின் அகநிலை மாற்றவரைபு மொத்தக் கதையில் இருந்தும் மேலெழுந்து அந்த நாவலை உலகின் சிறந்த நாவல்களுள் ஒன்றாக ஆக்கிவிடுகிறது.

ஏழு பாகங்களைக் கொண்ட நாவலில் முதல் பாகத்தில் பெரும்பாலும் எல்லாமும் சொல்லப்பட்டு விடுகிறது. அடுத்த பாகங்கள் முதல் பாகத்தில் சொல்லப்பட்டவைகளின் தொடர்ச்சி போல அமைந்திருக்கிறது. இது ஒரு ‘டெம்ளட்’ போல அவரது படைப்புலகத்தைப் பற்றி இருக்கிறது. இதேபோன்றதொரு அமைப்பையே குந்தேரா தனது மற்ற நாவல்களிலும் கையாண்டிருக்கிறார். சிறுகதைகளையும் கூட அந்த அடிப்படையிலேயே எழுதுகிறார்.

முகநூலில் குந்தரேயின் சிறுகதைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் The Apologizer கதைக்கான சுட்டியைப் பகிர்ந்திருந்தார். இன்றைய நிலையில் இறுதியாக அச்சில் வெளியான குந்தேராவின் சிறுகதையாக அந்தக் கதை சொல்லப்படுகிறது. 2015யில் The Newyorker யில் இந்தக் கதை வெளியாகி இருக்கிறது. அதற்கு முன்னர் 2014யில் வெளியாகி இருந்த குந்தரேயின் The Festival Of Insignificance நாவலை ‘வாசிப்பதற்கான புத்தகங்களின்’ பட்டியலில் சேர்ந்திருந்தேன். ஆனால், இன்னும் அது கைகூட வில்லை. கடைசியாக நான் வாசித்த குந்தரேயின் நாவல் Ignorance. அதுவும் பாதி வாசித்து, முடிக்காமலே நிறுத்தி இருந்தேன். எப்போதும் போல குந்தரேயின் கதைகளை வாசிப்பதற்கு ஒரு மன நிலைவேண்டி இருக்கிறது. அந்த மனநிலை வாய்த்து விட்டால் ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடலாம். ஆனால் அந்த மனநிலை வாய்ப்பதுதான் பெரும்பாடாக இருக்கிறது. அல்லது எப்போதாவது வாய்க்கும் அந்த மனநிலையை தக்கவைப்பதும் பெரும்பாடுதான்.

 

The Apologizer

ரஷ்ய இலக்கியத்தில் நாவல்களும் சரி, சிறுகதைகளும் சரி நீண்ட விவரணைகளுடன்தான் ஆரம்பிக்கும். குறிப்பாக நாவல்களில் பக்கம் பக்கமாக நீள்கிற விவரணைகள் மையக்கதைக்கு ஏன் அவசியம் எனும் கேள்வி என்னை எப்போதும் சோர்வடையச் செய்வதை அவதானித்திருக்கிறேன். இதே தன்மையை தமிழின் காப்பிய மரபிலும் அவதானிக்கலாம். கடவுள் வாழ்த்து, சலாம் போடுதல், நன்றி நவிதல் என அறிமுகம் நீண்டுகொண்டே இருக்கும். என்னதான் செவ்வியலில் ஓரளவு பரீட்சயம் இருந்தாலும் அவ்வாறான நீளமான விவரணைகளில் மனம் ஒட்டுவதே இல்லை.   அதனாலோ என்னவோ ரஷ்ய இலக்கியத்தில் எனக்கு அவ்வளவு ஆர்வமிருந்ததில்லை. அதே நேரம் ஐரோப்பிய இலக்கியம் முற்றிலும் மாறுபட்ட ஒரு தன்மையைக் கொண்டது. முதல் வரியில் இருந்தே கதை ஆரம்பித்து விடும். உதாரணமாக; Maupassant உடைய A Poor Girl சிறுகதை பின்வருமாறு ஆரம்பிக்கிறது;

 

Yes, the memory of that evening can never be affected.

 

இதை வாசிக்கும் ஒரு சாதாரண வாசகனுடைய மனநிலையை யோசித்துப் பாருங்கள். முதல் வரியைக் கடக்கும் போதே, நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது கதை. Maupassant தன்னுடைய கதைகளை எல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கிறார். ஐரோப்பிய இலக்கியத்தின், குறிப்பாக நவீன ஐரோப்பிய இலக்கியத்தில் நான் அறிந்த பல நாவல் ஆசிரியர்களும் சிறுகதை எழுத்தாளர்களும் தங்களது படைப்புகளில், முதல் பக்கத்தை புரட்டுவதற்கிடையிலேயே வாசகனைக் கதைக்குள் கூட்டி வந்து விடுகிறர்கள்.

Milan Kundera ஒரு கிழக்கு ஐரோப்பியர். ரஷ்யாவிற்கு அருகில் இருந்த Czechoslovakia, பல நாடுகளாக பிரிவதற்கு முன்னர் அங்கே பிறந்து வளர்ந்தவர். 1975 வாக்கில் பிரான்ஸ் வந்து தன்னை முழுமையான ஒரு பிரன்சுக்காரராகவே ஆக்கிக் கொண்டவர். அவருடைய கதையில் ரஷ்ய ஐரோப்பிய இலக்கியத்தின் கலவை இருப்பதை உணரமுடியும்.

The Apologizer கதை, ஒரு ஜூன் மாதத்துக் காலையில் பாரீஸின் வீதி ஒன்றில் நடந்துபோகும் Alian, அவனைக் கடந்துபோகிற பெண்களின் தொப்புளை மட்டுமே கூர்ந்து அவதானிப்பதில் இருந்து தொடங்குகிறது. அவனுக்கு ஒரு பெண்ணின் மொத்தக்க வளர்ச்சியும் அவளது தொப்புளைச் சுற்றியே இருப்பதாகத் தோன்றுகிறது. பின்னர் அவன் பெண் உடலின் வெவ்வேறு பாகங்களை மோகிப்பவர்கள் பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கிறான். அவனது சிந்தனை பெண்ணின் மார்பகங்களை, தொடையை, பின்னங்களை மோகிப்பவர்களை எப்படி வகைப்படுத்துவது என கேள்விகளாக விரிகிறது. அந்தக் கேள்விகளுக்கான விடைகளாக கற்பனையில் ஏதோ ஒன்றை உருவாக்கிக் கொள்கிறான். ஆனால் தொப்புளை மோகிப்பவனை எப்படி வகைப்படுத்துவது என்பதை அவனால் சரியாக வரையறுக்க முடியவில்லை.

மிலன் குந்தேராவின் கதைகளை வாசிப்பதை, Christopher Nolanயின் திரைப்படங்களைப் பார்ப்பதோடு ஒப்பிட்டு நான் எப்போதும் பேசிக்கொள்வதுண்டு. Nolanயின் படத்தைப் புரிந்துகொள்ள குறைந்தது இரண்டு முறைகளாவது பார்க்க வேண்டும். காட்சிகளுக்கிடையே அவ்வளவு நுணுக்கமான உள்மடிப்புகளும் தகவல்களும் போகிற போக்கில் சொல்லப்பட்டிருக்கும். பார்வையாளன் இயக்குனரின் கோணத்தில் கதையை புரிந்துகொள்ள, திரைக்கதையில் அவனுக்கென விடப்பட்டிருக்கும் இடையில் அவன் பயணிக்க வேண்டி இருக்கும். குந்தரேயின் கதைகளும் அப்படித்தான். வரிகளுக்கிடையேயே கதை நகர்ந்து கொண்டே இருக்கும். காட்சிகளும் சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததைப் போல இருக்கும். ஆனால், கதை முடிவை நெருங்குகையில் முடிச்சுகள் அவிழ்ந்து எல்லாமும் தெளிவாகும்.

The Apologizer கதையை, Alain அதீதமான கற்பனை கொண்ட ஒரு இளைஞன் என நேரடியாகவே சொல்லி ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்திருந்தால் Alain தனக்குள் கொட்டிக் கிடக்கிற குழப்பங்களுக்கு விடை தேடும் ஒரு இளைஞன் என்பது பதிவாகாமல் போயிருக்கும். அவனது குழப்பங்கள் பொதுவானதுதான் என்றாலும் அவன் அதற்கான விடைகளை சிக்கலான இடங்களில் இருந்து தேடிக் கொண்டிருப்பவன். மனித மனமும் உடம்பும் சங்கமிக்கும் ஒரு புள்ளியில் காமத்தின் வெளிப்பாடாய் பிறக்கும் கேள்விகளில் இருந்து பிரதான பாத்திரத்தின் அறிமுகம் நிகழ்கிறது. அதன் தொடர்ச்சியாய் தொப்புளை பின்னனியில் வைத்து பிரதான பாத்திரமான Alain யிற்கும் அவனது அம்மாவிற்குமான உறவு விபரிக்கப்பட்ட இடத்தில் ஒரு தேர்ந்த கதைசொல்லியாக குந்தேரா உயர்ந்து நிற்கிறார்.

இதுவே ஒரு வணிக அல்லது ஜனரஞ்சக எழுத்தாளனையும் தீவிர இலக்கிய எழுத்தாளனையும் பிரிக்கும் கோடாய் அமைந்திருக்கிறது.

ஏழு பாகங்களாக  பிரிக்கப்பட்ட The Apologizer கதையின் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது பகுதியில், முதல் பகுதிக்கு சம்பந்தமே இல்லாத போல தற்கொலைக்கு முயற்சி செய்கிற ஒரு இளம் பெண்ணின் கதை சொல்லப்படுகிறது. ஆற்றில் மூழ்கி இறக்கப்போனவளை ஒரு இளைஞன் காப்பாற்ற முயல்கிறான். அவள் அவனை ஆற்றில் முக்கி மூழ்கடித்துக் கொல்கிறாள். அந்தப் பகுதிகள் வாசிப்பதற்கு சுவாரஷ்யம் குன்றியதாக இருந்திருக்குமானால், இந்தக் கதையை யாரும் முற்றாக வாசித்து முடிக்கமாட்டர். ஆனால் குந்தேரா அந்தப் பகுதிகளை கேள்விகளும் பதிலுமாக தர்கங்களினூடே நகர்த்திச் செல்கிறார். அதனூடே அந்தப் பெண்ணின் மனநிலையும் புறநிலையையும் வாசகர்களை புரிந்துகொள்ள வைக்கிறார்.  நான்காவது பகுதியில் அந்தப் பெண், வயிற்றில் ஒரு சிசுவை சுமந்திருப்பது தெரிய வருகிறது.

//The person who tried to impose life on her has died from drowning, and the person she was trying to kill in her belly is still alive. The idea of suicide is ruled out forever. No repeats. The young man is dead, the fetus is alive...//

கதையை முற்றாக வாசித்து முடிக்கும் வரை மேலுள்ளது வெறுமனே நேரடியான ஒரு அர்த்தத்தை மட்டுமே தருகிறது. ஆனால் இந்தக் கதையில் உள்ள மற்ற ஒவ்வொரு வசனத்தையும் போல இந்த வசனமும் கதையின் மையத்துடன் பின்னிப்பிணைந்தே இருக்கிறது.

இப்போது, அவளால் நீரில் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட அந்த வாலிபன் எதன் குறியீடு என்பதை வாசகர்கள் கதை முடிவில் யூகித்துக் கொள்வதற்கான இடைவெளியை விட்டுச் செல்கிறார் குந்தரே.

நான்காவது பகுதி முடிகிற இடத்தில் தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண்ணை கதையின் நாயகனான Alain சந்திக்கிறான்.

Alain felt a violent blow on his shoulder. “Watch out, you idiot!”

He turned and saw a girl passing him on the sidewalk with a rapid, energetic stride.

“Sorry!” he cried after her (in his frail voice).

“Asshole!” she answered (in her strong voice) without turning around.

குறித்துக் கொள்ளுங்கள்; கருவைச் சுமந்திருக்கும் ஒரு இளம் பெண்ணை கதையின் நாயகனைச் சந்திக்கிறான். அந்த இளம் பெண் சுமந்திருக்கும் கரு, கதையின் நாயகன்தான் என வாசகர்களுக்கு புரிகிற இடத்தில், புனைவின் பிரமாண்டத்தை வியக்காமல் இருக்க முடிவதில்லை. தன்னைக் கருவில் சுமந்து கொண்டிருக்கும் தன் தாயை இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் அவன் சந்திக்கிறான். இப்போது அவனுக்கும் அவன் தாய்க்கும் கிட்டத்தட்ட சம வயது.

போர்ஹே தன்னுடைய The Other சிறுகதையை, வயது முதிர்ந்த போர்ஹே இன்னமும் தன் இளமையை வாழ்ந்து கொண்டிருக்கும் போர்ஹேயை சந்திப்பது போல அமைத்திருப்பார். அந்தக் கதையை வாசித்து, அதன் பிரமாண்டம் அகல கன நாளாயிற்று. அப்படியான ஒரு பிரமாண்டத்தை குந்தரேயும் இந்தக் கதையில் நிகழ்ந்தி இருக்கிறார்.

இந்தக் கதையின் ஐந்தாவது பகுதிதான் கதையின் மையத்தை நோக்கி வாசகர்களை நகர்த்துகிறது. கதையின் நாயகன் தன் நண்பனுடன் உரையாடுவதாக அமைந்த பகுதி இது. இந்தக் கதை இந்தப் புள்ளியில் இருந்துதான் குந்தரே மையங் கொண்டிருக்க வேண்டும்.

“Feeling guilty or not feeling guilty I think that’s the whole issue. Life is a struggle of all against all. It’s a known fact. But how does that struggle work in a society that’s more or less civilized? People can’t just attack each other on sight. So instead they try to cast the shame of culpability on each other. The person who manages to make the other one guilty will win. The one who confesses his crime will lose. You’re walking along the street, lost in thought. Along comes a girl, walking straight ahead, as if she were the only person in the world, looking neither left nor right. You jostle each other. And there it is, the moment of truth: Who’s going to bawl out the other person, and who’s going to apologize? It’s a classic situation: actually, each of them is both the jostled and the jostler. And yet some people always immediately, spontaneously, consider themselves the jostlers, and thus in the wrong. And others always immediately, spontaneously consider themselves the jostled, and therefore in the right, quick to accuse the other and get him punished.

இரண்டு பேருக்கிடையிலான ஒரு முறுகலின் போது ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ பிழை செய்திருந்தாலோ அல்லது அவன் செய்யாத பிழைக்காகவோ பொதுவில், நல்லெண்ண அடிப்படையில் மன்னிப்பு நல்கும் போது, அவன் தோற்றவனாகவும், தான் பிழைதான் செய்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாது தன் பிழைக்கு பிறரையே சாடுபவர்கள் எப்போதும் வெற்றவர்களாகவும் ஆகிவிடுகிறார்களே, அது ஏன்?

ஏன் எப்போதுமே ஒரு சிலர் மன்னிப்புக் கேட்பவர்களாகவே இருக்கிறார்கள்?

இப்படியாக கதையின் நாயகனுக்கு இருந்த குழப்பத்தை அவன் தன் நண்பனுடனான உரையாடலில் வெளிப்படுத்துகிறான். நண்பனும் தானும் ஒரு மன்னிப்புக் கேட்பவனாகவே இருக்க விரும்புவதாகச் சொல்கிறான்.

மன்னிப்புக் கேட்பவன் தன்னைத்தானே குற்றவாளி என அறிவித்துக் கொள்கிறான். அது மற்றவன், உங்களை மேலும் மேலும் துன்புறுத்த வழி சமைத்துக் கொடுக்கிறது. இந்த இடத்தில் கதையின் நாயகன் மன்னிப்புக் கேட்பது தப்பு எனச் சொல்கிறான். நண்பன் அதையும் ஏற்றுக் கொள்கிறான். ஆனாலும் இந்த உலகத்தில் எல்லோரும் மன்னிப்புக் கேட்பவர்களாக இருந்தால் எவ்வளவு நல்லது என்கிற ஆதங்கமும் அந்த நண்பனுக்கு இருக்கத்தான் செய்கிறது.

இந்தக் கதை நெடுகிலும் வாசகனுக்கு கிடைப்பது ஒரு விதமான அசௌகரியங்களின் மீதான அனுபவங்களே. Alain எனும் ஒரு பாத்திரத்தின் எண்ணக் குழப்பங்களின் குளறுபடியில் ஒரு வாசகனை வெற்றுடலாய் களிமண் தரையில் இழுத்துச் செல்வதற்கு சமானமான அசௌகரியங்களை இந்தக் கதை ஏற்படுத்தும். எந்த விதமான ஒரு முடிவை நோக்கிய நகர்வையும் கதை ஆசிரியர் முன்னெடுத்ததாக தெரியவில்லை. கற்பனையின் பிரமாண்டமும். புனைவின் சாத்தியங்களும் ஒரு தனிமனிதனின் இருப்பை எங்கனமாய் வரையறுக்க முடியும் என்பதை பரீட்சித்தலே ஆசிரியரின் நோக்கமாக இருக்கலாம்.

கதையின் அடுத்த பகுதியில் கதை நாயகன் Alain தனது தாயுடைய இருப்பை தனது பிரமாண்டமான கற்பனையின் மூலம் நிலை நிறுத்திக் கொள்கிறான் என்பது சொல்லப்படுகிறது. நான் எப்படிப் பிறந்தேன்? என்பது முதல் தனது தாய் ஏன் தனது பிறப்பை அங்கிகரிக்கவில்லை? அவள் ஏன் தன்னை கருவிலேயே அழிக்க நினைத்தாள்? போன்ற எண்ணக் குழப்பங்களுக்கு விடை காணுவதே அவனது நோக்கமாக இருக்கிறது.

குந்தரே இந்த இடத்தில் வாசகனிடமே விட்டு விட்ட இடங்கள் சிலவும் இருக்கின்றன. கதையில் எது கற்பனை எது நிஜம் என வாசகனை முடிவு செய்து கொள்ளட்டும் எனவிட்ட இடங்கள் அவை. ஆனால், ஆசிரியருக்கு சொல்ல வேண்டி இருந்ததை அவர் தெளிவாக சொல்லி விடுகிறார்.

மனித உரிமை எனும் கருத்தாக்கத்தின் மீதான வசை பாடல்கள் கதையின் ஓர் இடத்தில் பதிவு செய்யப்படுகிறது.

Everyone jabbers about human rights. What a joke! Your existence isn’t founded on any right. They don’t even allow you to end your life by your own choice, these defenders of human rights.”

The light at the intersection went red. He stopped. Pedestrians from both sides of the street set out toward the opposite sidewalk.

And the mother went on: “Look at them all! Look! At least half the people you’re seeing are ugly. Being ugly—is that one of the human rights, too? And do you know what it is to carry your ugliness with you through your whole life? With not a moment of relief? Or your sex ? You never chose that. Or the color of your eyes? Or your era on earth? Or your country? Or your mother ? None of the things that matter. The rights a person can have involve only pointless things, for which there is no reason to fight or to write great declarations!”

ஒரு மனிதனுடைய பிறப்பையே அவனால் தீர்மானிக்க முடிவதில்லை. அப்புறம் என்ன பெரிய மனித உரிமை! Best interest of a child எனும் ஒரு கருத்தாக்கம் சட்டவியலில் வரையறைகளில் பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறப்பதுவும் வாழ்வதுவும் யாருடைய Best interest அடிப்படையில் என்பதை மனித உரிமை ஆர்வாளர்களால் வரையறுக்க முடியுமா என்ன! பாதி வாழ்ந்து முடித்தவன் “தான் இந்த மண்ணில் பிறந்திருக்கவே கூடாது” என எண்ண நேர்ந்தால் அவனது பிறப்பிற்கான காரணங்களை எங்கனம் கற்றபிப்பர்! அதேபோலவே தனது இறப்பையும் தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு சட்டத்தால் வழங்கப்படவில்லையே! ஆக, மனிதன் உருவாக்கிய சட்டத்தில், மனித உரிமைகள் எனும் பகுதி சிக்கல் நிறைந்தது. அடிப்படையான சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத அளவிற்கு குழப்பங்கள் நிறைந்த பகுதி.

இந்தக் கதை முடிவை நெருங்குகையில் கதை நாயகன் தனது தாயை (அவனது பத்து வயதிற்குப் பிறகு ஒரு தரமேனும் சந்தித்தே) தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போவதாக அமைந்திருக்கிறது. அவர்களுக்கிடையிலான உரையாடலில் அவனது தாய் ‘என்னைப் பற்றிய உனது கற்பனைக் கதை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அதில் நீ என்னை கொலைகாரியாக காட்டியதில் எனக்கு உடன்பாடில்லை’ எனச் சொல்வதன் மூலம் இதுவரையிலும் நாங்கள் வாசித்தது Alain யின் கற்பனையைத்தான் என அறிந்து கொள்கிறோம். தனது தாயைப் பற்றியும் அவனது பிறப்பு பற்றியுமான அவனது எண்ணங்களே இவ்வளவு நேரமும் சொல்லப்பட்டதாக வாசகன் அறிவிக்கப்படுகிறான். அப்படி என்றால் இப்போது கதைநாயகனுடன் அவனது இளவயது தாய் மோட்டார் சைக்கிளில் போவதாகச் சொல்லப்படுவது என்ன! அது யாருடைய கற்பனை?

இந்த இடத்தில், மிலான் குந்தரே இந்தக் கதையை எழுதிக் கடக்கும் போது என்ன மாதிரியான ஒரு மனநிலையில் இருந்திருப்பார் என எண்ணிப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் வியக்க வேண்டி இருப்பது புனைவின் சாத்தியங்களைத்தான்.

கதையை முடிவை நோக்கி நகர்த்து கையில் குந்தரே தெளிவாகவே இருந்திருக்கிறார். இப்படியான semi-abstractive வடியில் அமைந்த கதைகளுக்கு ஒரு இறுதியான முடிவு வேண்டியதில்லை.

நீ நல்லவனாக இருப்பதால்தான் முட்டாளாக இருக்கிறாய் என அவனது தாய் குற்றச் சாட்டுகிறாள். அப்படியெனில் நான் மன்னிப்புக் கேட்பவனாகவே இருந்து கொள்கிறேன். எனக்கு வேறெதுவும் வேண்டியதில்லை என தனது இயல்பை ஏற்றுக் கொள்கிறான் Alain.

Quit your apologies! What do you know about my life, my little idiot! Can I call you idiot? Yes, don’t be angry; in my own opinion, you are an idiot! And you know where your idiocy comes from? From your goodness! Your ridiculous goodness!”

He reached the Luxembourg Gardens. He parked the bike.

“Don’t protest, and let me apologize,” he said. “I’m an apologizer. That’s the way you made me, you and he. And, as such, as an apologizer, I’m happy. I feel good when we apologize to each other, you and I. Isn’t it lovely, apologizing to each other?”

அவர்கள் இருவருக்குமான வேறுபாடுகளுன் இருவரும் அருங்காட்சியகத்தை நோக்கி நடக்கின்றனர் என கதையை முடிக்கிறார் மிலான் குந்தரே.

 

The Apologizer கதையின் அரசியல்

இந்தக் கதையில் இழையோடி இருக்கும் அரசியல், வழமையான குந்தேராவின் கதைகளைப் போலவே இதிலும் முன்னிலைப் படுத்தப்படவில்லை. ஆனால், அவை எழுப்புகிற அடிப்படையான கேள்விகளும் அவற்றுக்கு ஒன்றுதான் விடை என்று வரையறுத்து விடாமல் திறந்து விடப்பட்ட வாசல்களையும் புரிந்துகொண்டு முன்னேறுவது வாசகர்களின் பால், வயது, அனுபவம், முதிர்ச்சி என பலனின் பயனாய் நிகழ்வது.

ஆனால், இங்கே ஒன்றை மட்டும் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. இந்தக் கதை ஆரம்பத்தில் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளுடன் இறுதியில் முறன்பட்டு நிற்பதையும் காணமுடிகிறது.

“People can’t just attack each other on sight. So instead they try to cast the shame of culpability on each other. The person who manages to make the other one guilty will win. The one who confesses his crime will lose”

என நாயகன் பேசுவதாக வைக்கப்பட்ட வசனம் ‘ஒருவன் ஒரு காலமும் மன்னிப்புக் கோரக்கூடாது’ என முடிவடையும்.

அதுவே கதை முடிவுகளை , அதே நாயகன் இப்படிச் சொல்லி...

“Don’t protest, and let me apologize,” he said. “I’m an apologizer. That’s the way you made me, you and he. And, as such, as an apologizer, I’m happy. I feel good when we apologize to each other, you and I. Isn’t it lovely, apologizing to each other?”

என மன்னிப்புக் கேட்பதை நியாயப்படுத்தி நிறைவுறுகிறது. இந்த intended contractions வகையறா. அது இந்த கதைசொல்லின் யுக்தியாகவும் அமைந்து விடுகிறது.

கடைசியாக மேலே சொன்னதைப் போல இந்தக் கதையில் இழையோடி இருக்கும் அரசியலும் அங்கதமும் தனிநபர் ரசனைக்குரியவை. மிலான் குந்தரே போன்ற தேர்ந்த கதைசொல்லிகளின் கதைகளில் இருந்து கற்றுக் கொள்ள ஓர் இலக்கிய உபாசகனுக்கு எப்போதும் ஏதாவது இருந்து கொண்டே இருக்கிறது.

 

http://neerkoodu.net/Site/news1/85

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கிருமி

 

மிலான் குந்தரேயின் எழுத்தை பற்றிய விமர்சனம் அவருடைய எழுத்தை வாசித்தே தீரவேண்டும் என்ற வேட்கையை உருவாக்கி இருக்கிறது. மிலானின் கதைகள் ஏதேனும் தமிழாக்கம் பெற்றுள்ளனவா? இருந்தால் அறியத்தாருங்கள்.

விமர்சனமே இப்படி துணுக்குற வைக்கிறதென்றால் நாவல் எப்படி இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/30/2018 at 7:36 PM, கிருபன் said:

அதை வாசித்த நண்பி, “ஆனால் மிலன் குந்தரேவின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவே இல்லையே” என பதில் இட்டிருந்தாள்

 

The Apologizer சிறுகதையை இலவசமாக ஆங்கிலத்தில் படிக்கலாம்.

 

https://www.newyorker.com/magazine/2015/05/04/the-apologizer

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.