Jump to content

சர்கார்: தொடரும் குழப்பங்கள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்கார்: தொடரும் குழப்பங்கள்?

93.jpg

சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டுக்கு முற்றிபுள்ளி வைக்கும் விதமாக இன்று (அக்டோபர் 30) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் பெரும் பங்காற்றிய இயக்குநர் பாக்யராஜ், இந்த தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “வருண் எழுதிய கதையின் கருவும், சர்கார் படக் கதையின் கருவும் ஒன்றுதான். பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இயக்குநர் முருகதாஸிடம் முன்னதாக தெரிவித்திருந்தேன். வருணின் கதை என ஒப்புக் கொண்டால் தன்னைத் தவறாக பேசுவார்கள் என முருகதாஸ் மறுத்தார். இதனையடுத்து இணை இயக்குநரான வருணின் பிரச்சினை பற்றி முருகதாஸிடம் விளக்கினேன். எனது மகன் கூட விஜய்யின் ரசிகன்தான். ஆனால், சங்கத் தலைவர் என்ற முறையில் முடிவெடுத்தேன். இதில் அதிகம் காயப்பட்டது நான்தான். விஜய் ரசிகர்கள் எனது முடிவை புரிந்து கொள்ளாமல் எனது மகனை கடுமையாக விமர்சித்தனர். இணை இயக்குநர் வருணை விட இயக்குநர் முருகதாஸ் எனக்கு அதிகம் அறிமுகமானவர். இதுகுறித்து விஜய்யிடம் பேசும் போது ‘என் படம் பார்த்து செய்யுங்கள்’ என விஜய் கூறவில்லை. என்னுடைய படம் என்பதற்காக அல்லாமல் ‘எது சரியோ, அதன்படியே முடிவெடுங்கள்’ என விஜய் என்னிடம் கூறினார். அவரின் பெருந்தன்மை பிடித்திருந்தது. பட விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டதில் மகிழ்ச்சி. அனைவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படமாக உருவாக்கியது முருகதாஸ் உழைப்பு. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்பே வருண் அந்தக் கருவை உருவாக்கியிருக்கிறார். அதன்படி தலைப்பில் அவருக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

93c.jpg

“விஜய் சர்கார் அமைக்க எனது செங்கோலை பரிசாக அளிக்கிறேன்” என்று இணை இயக்குநர் வருண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சர்கார் திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் தன்னுடையதுதான் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கமளித்து இயக்குநர் முருகதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மதிப்பிற்குரிய பாக்யராஜ் சார் கூப்பிட்டு இந்த மாதிரி பிரச்சினை போயிட்டு இருக்கிறது. ஒருத்தனின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுடாங்க என்று பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருக்கிறார் வருண். அந்த கரு இதில் இருக்கிறது. மற்றபடி அந்த கதைக்கும் இந்த கதைக்கும் எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது. நமக்கு முன்னாடி ஒரு உதவி இயக்குநர் இதைப் பதிவு செய்திருக்கிறார் என்பதைப் பாராட்டி அவரை ஊக்குவிக்கும் வகையில் தலைப்பில் ஒரு கார்டு போடுங்கள் என்று சொன்னார். சரி என்று நான் ஒத்துக் கொண்டேன். மத்தப்படி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் எந்த மாற்றமும் கிடையவே கிடையாது” என்று கூறியுள்ளார்.

சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டு சம்மந்தமான சர்ச்சை இன்றைய தீர்ப்பின் மூலம் ஓரளவு முடிவுக்கு வந்திருக்கிறது என்று பார்த்தால், இந்த விவகாரம் குறித்து இயக்குநர் முருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியதோடு, கதைத் திருட்டு விவகாரத்தில் முருகதாஸுக்கு ஆதரவாகக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டார். இதனால் ஜெயமோகனும், முருகதாஸ் மீது வசனம் என்னுடையது என்று வழக்குத் தொடுப்பரா என சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

93d.jpg

ஒரு படத்துக்குக் கதை எந்தளவுக்கு முக்கியம் என்பதை சர்கார் சர்ச்சை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமா கதையாசிரியர்களைக் கொண்டிருந்தது. ஆனால், இன்று அப்படி ஒரு இலாகா இருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. சில பெரிய இயக்குநர்கள் கூட வெளியிலிருந்து கதையை வாங்கி திரைக்கதை, இயக்கம் என மட்டும் தங்களது பெயர்களைப் போட்டுக் கொண்டு வெற்றி பெற்றதுண்டு. இன்றைய பல இயக்குநர்கள் அவர்களது உதவியாளர்களின் கதைகளையோ, வேறு யாருடைய கதைகளையோ வாங்கி அவர்களது பெயரைப் போட்டுக் கொள்ளத்தான் விரும்புகிறார்கள். வாய்ப்புக்காகவும், சூழ்நிலைக்காகவும் அப்படி தங்களது கதைகளைத் தொலைத்த பல உதவி இயக்குநர்கள் உண்டு என தன் ஆவேசக் குரலை ஒலித்துக்கொண்டே இருக்கிறது கோடம்பாக்கம்.

சர்கார் கதை விவகாரத்தில் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக இருக்கும் பாக்யராஜ் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் திரையுலகினரும், ரசிகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம், கடந்த வாரம் வரை இந்த விவகாரத்தில் ஆவேசமாகப் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். சர்காருக்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யுடன் இணைந்த கத்தி திரைப்படத்தின் ரீமேக் வழக்கு விசாரணை நாளை நடைபெறும்.

https://minnambalam.com/k/2018/10/30/93

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்க்கார் சர்ச்சை: காப்பியும் தழுவலும் ஒன்றா?

 Image result for sarkar movie

 

புதிய தலைமுறை இணையதளக் கட்டுரை ஒன்று - “கதைத் திருட்டில் தமிழ் சினிமா” – இதுவரை வெளிவந்த பல முக்கிய தமிழ்ப் படங்களின் கதைகள் தழுவல் என்கிறது. சமூக வலைதளங்களில் மேலும் பல தழுவல் படங்களின் பெயர்கள் தரப்படுகின்றன. ஒரு நண்பர் கமலின் அத்தனை நல்ல படங்களும் தழுவல் தானே எனச் சொல்லி ஒரு பட்டியல் அளித்திருந்தார். இதையே பாலு மகேந்திராவுக்கும் சொல்கிறவர்கள் உண்டு. மணிரத்னமும் விடுபடுவதில்லை. “இருவர்” படத்தில் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு வெகுவாய் கொண்டாடப்பட்ட ஒன்று. ஆனால் இப்படத்திலும் மோகன் லால் தன் மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கு பெறும் காட்சியின் ஒளிப்பதிவு செவன் சாமுராய் படத்தின் இறுக்காட்சியை வெகுவாய் ஒத்திருக்கும். தமிழின் மகத்தான படங்களில் ஒன்றான “நந்தலாலா” “கிக்குஜீரோ” எனும் படத்தின் தழுவல் என சர்ச்சை அப்படம் வெளியிடப்பட்ட காலத்தில் எழுந்தது. இப்படியே, நுண்ணோக்கியை இப்படி அருகில் கொண்டு போய்ப் பார்த்தால் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எந்த சாதனையாளர்களும் எஞ்ச மாட்டார்கள். 

ஆனால் இவ்வாறு காப்பியடிப்பவர்கள் எனும் முத்திரையை ஒரு படைப்பாளி மீது குத்துவதும் முழுக்க நியாயம் அல்ல. காப்பிக்கும் தழுவலுக்கும் வித்தியாசம் உண்டு. தழுவலில் ஒரு இயக்குநர், கதாசிரியர் மற்றும் நடிகர்களின் ஒரிஜினலான பங்களிப்பு இருக்கும்; இது முக்கியம். தழுவலின் போது ஒரு படம் அதன் ஒரினினலை விட பல மடங்கு மேலானதாக வர வாய்ப்புண்டு.

சினிமாக்காரர்கள் மட்டுமல்ல, இலக்கியவாதிகளும் தழுவல் பணியில் ஈடுபட்டதுண்டு. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் மீதே இக்குற்றச்சாட்டுகள் உள்ளன. தமிழில், புதுமைப்பித்தன், கா.ந.சு போன்றோரின் தழுவல்கள் பேசப்பட்டுள்ளன. தொண்ணூறுகளுக்குப் பிறகு லத்தீன் அமெரிக்க கதைகள் தமிழில் அழகாய் சாமர்த்தியமாய் தழுவி எழுதப்பட்டு பெயர் பெற்றுள்ளன. சில சினிமா பாத்திரங்கள், காட்சிகளின் தாக்கம் கொண்ட தமிழ் நாவல்களை அறிவேன். இதனால் இந்த படைப்பாளிகளின் மாற்று எந்த விதத்திலும் குறைந்து போவதில்லை. 

சொல்லப் போனால் எழுத்தாளன் என்பவனை (எந்திரமயமாக்கலுக்குப் பின்பு) ஒரு உற்பத்தியாளனாய் காணும் நிலை ஏற்படுவதற்கு முன்பு இந்த காப்புரிமை அவசியத்தை யாரும் உணர்ந்திருக்கவே இல்லை. ஒரு கதை பலவாறாக திரிந்து பல வடிவங்களெடுத்து அதைக் கூறுபவரே அதன் உரிமையாளன் என ஆனதே நம் பண்டைய கதைகூறல் மரபு. ஆசியா முழுக்க பாரதக் கதைகள் நூறு நூறு திரிபுகளுடன் உலவுகின்றன. அவை ஒரிஜினலாய் யாரோ ஒருவரின் மூளையில் உதித்தது தானே? அதை திருட்டு என யாரும் அன்றும் இன்றும் கவலைப்பட்டதில்லை. ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது. இன்று ஒரு படைப்பை படைப்பாளனுக்கு மட்டுமே சொந்தமான பண்டமெனப் பார்க்கிறோம். ஆனால் படைப்பின் இயல்பே சங்கிலித் தொடர் போல மற்றொரு படைப்பை நினைவுபடுத்துவதும், அதனால் பாதிப்படைவதுமே. இந்தியாவில் வெளியான எந்த கேங்ஸ்டர் படத்திலாவது “காட்ஃபாதர்” தாக்கம் இல்லாமல் உண்டா? நாம் “காட்ஃபாபதரின்” மூலத்தை துலக்கினால் மற்றொரு ஒரிஜினல் தட்டுப்படும். இப்படியே தான் போகும்.

இதில் எந்த அளவிற்கு தழுவப்பட்டது, உருவப்பட்டது போன்ற வாதங்களில் எந்த அர்த்தமும் இல்லை. ரெண்டு சீன்கள் உருவப்பட்டால் தப்பில்லை, ஆனால் பத்து சீன்கள் என்றால் தப்பா?

சர்க்கார் விவகாரத்தில், 1) வருணின் கதைக் கருவை அறிந்தே முருகதாஸ் பயன்படுத்தி இருக்கலாம், அல்லது 2) எதேச்சையாய் அமைந்திருக்கலாம். நடைமுறை சார்ந்து யோசிக்கையில் 1 தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். சிவாஜியின் ஓட்டையே ஒருவர் கள்ள ஓட்டாய் போட்டார் என்கிற ஒற்றை வரியைக் கொண்டு தான் கதையமைப்பை உருவாக்கினோம் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். இது சரி எனில், அச்சம்பவம் நடந்து சுமார் இரு பத்தாண்டுகள் வருடங்கள் ஆகின்றன. முருகதாஸ் போன்ற ஒரு வெற்றிப்பட இயக்குநர் அந்த ஒற்றை வரியைக் கொண்டு படமெடுக்க இத்தனை வருடங்கள் ஏன் காத்திருந்திருக்க வேண்டும் எனும் கேள்வி எழுகிறது. ஆனால் வருண் 2004இல் இக்கதை வரியை அப்போதே உருவாக்கி வாய்ப்புக்காக காத்திருந்தார் என்பது நம்பத்தகுந்ததாய் உள்ளது.

சரி எப்படியோ முருகதாஸ் இவ்வரியை எடுத்துக் கொண்டு திரைக்கதையை உருவாக்குகிறார். இப்போது சர்ச்சை ஏற்பட நாம் ஒட்டுமொத்தமாய் இது ஒரு காப்பியடித்த கதை என்கிறோம். இது மிகைப்படுத்தல் இல்லையா? கதையின் மூல ஐடியா இன்னொருவருடையது எனினும், திரைக்கதை உருவாக்கியவர்கள் முருகதாஸ் உள்ளிட்ட கதை இலாகா அல்லவா?

முருகதாஸ் தான் கதை வரியை மட்டுமே வரித்துக் கொண்டதை ஒப்புக் கொண்டால் தனக்கு கெட்ட பெயர் ஏற்படும் என அஞ்சியதாய் பாக்யராஜ் கூறுகிறார். தழுவல் கதைகளை அவற்றுக்குரிய மரியாதை அளித்து ஏற்க நாம் தயாராக வேண்டும். அப்போதே கதை தழுவல்காரர்கள் அதை பொதுவில் ஒப்புக்க தயங்க மாட்டார்கள். MeTooவினர் குறுஞ்செய்தி அனுப்புவதையும் பலாத்காரம் செய்வதையும் ஒன்றாய் பாவித்து “அவன் தலையை கொய்” என கூச்சலிடுவதைப் போன்றே நாம் இந்த மாதிரி தழுவல் விவகாரங்களில் நடந்து கொள்கிறோம். சம்மந்தப்பட்டவர்கள் அஞ்சி பின்வாங்கி உண்மையை ஒப்புக்காமல் மறுக்கிறார்கள்.

ஒரு படத்தின் கதை, வசனம், திரைக்கதை அனைத்தும் தனதே என கோரும் ஒரு தேவையற்ற பிம்பத்தை இயக்குநர்கள் நீண்ட காலமாய் சுமக்கிறார்கள். அவசியமற்ற ஒரு கிளுகிளுப்புக்காக இதை செய்கிறார்கள். விளைவாக திரைக்கதை எழுத்தாளர் எனும் இடத்துக்கான மரியாதையை தர மறுக்கிறார்கள். திரைக்கதையை எழுதி வாங்கிக் கொண்டு அதில் சில பல மாற்றங்களை செய்து தம் திரைக்கதை என போட்டுக் கொள்கிறார்கள். டைட்டில் போடும் போது “கதை திரைக்கதை இயக்கம்” என தம் பெயருக்கு மேல் போட்டுக் கொண்டு “வசனம்” எனும் தகுதியை மட்டும் திரைக்கதையாளருக்கு அளிக்கிறார்கள்.

இந்த அகந்தையை ஒழித்து விட்டால், தழுவலை ஒப்புக் கொள்ளும் கௌரவ சூழல் ஏற்பட்டால் “சர்க்கார்” போன்ற அநீதிகள் நடக்காது. தாம் தழுவி உருவாக்கிய கதையை ஒட்டுமொத்தமாய் காப்பி எனக் கூறி மீடியாவில் மக்களிடம் தர்ம அடிவாங்கும் அவல நிலையும் முருகதாஸ் போன்றோருக்கு ஏற்படாது.

http://thiruttusavi.blogspot.com/2018/10/blog-post_87.html?m=1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜனி படம் ஒரு ஆங்கில பட கொப்பி 
இந்தாளுக்கு சொந்தமா கதை எழுதவே தெரியாதுபோல இருக்கு 

30லட்ஷம் வருணுக்கு கைமாறியதாக கதைக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.