Jump to content

2021 இற்குப் பின்னர் அரசியலில் இருந்து விலகுகிறார் அஞ்ஜெலா மெர்க்கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2021 இற்குப் பின்னர் அரசியலில் இருந்து விலகுகிறார் அஞ்ஜெலா மெர்க்கல்

angela-1-660x450.jpg

ஜேர்மனியின் நிதியமைச்சரான அஞ்ஜெலா மெர்க்கல் 2021 ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் தனது பதவிக்காலத்தின் பின்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பிராந்திய தேர்தலில் அவரது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை தொடர்ந்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமது பதவிக் காலம் முடிந்த பிறகு, எந்த அரசியல் பதவியும் வகிக்க மாட்டேன் என பெர்லினில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவருக்கான தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

64 வயதான அஞ்ஜெலா மெர்க்கல் 2000ஆம் ஆண்டிலிருந்து அவர் இக்கட்சியின் தலைவராக உள்ளதுடன் 2005 ஆண்டிலிருந்து ஜெர்மனியின் நிதியமைச்சராக பதவி வகிக்கிறார்.

தனது கட்சியின் மோசமான செயல்திறனுக்கு தாமே முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதாக மெர்கல் கூறியதோடு அடுத்த தலைவரை தாம் தேர்வு செய்யப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

http://athavannews.com/2021-இல்-பதவி-விலகும்-ஜேர்மனி/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

2021 இற்குப் பின்னர் அரசியலில் இருந்து விலகுகிறார் அஞ்ஜெலா மெர்க்கல்

நாளைக்கே போனாலும் சந்தோசமெண்டு சனம் முணுமுணுத்துக்கொண்டு போனது என்ரை காதிலை விழுந்து தொலைச்சுது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.