கிருபன்

அரசியலில் பாரிய மாற்றம் நான் சொன்னதே நடந்தது – இனி முஸ்லீம் ஏகாதிபத்தியம் கிழக்கில் இல்லை - கருணா அம்மான்

Recommended Posts

அரசியலில் பாரிய மாற்றம் நான் சொன்னதே நடந்தது – இனி முஸ்லீம் ஏகாதிபத்தியம் கிழக்கில் இல்லை - கருணா அம்மான்

October 28, 2018

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

இலங்கையின் அரசியலில் பாரிய ஏற்படும் என கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார். தான் இதனையே எதிர்வு கூறியதாக கருணா தெரிவித்துள்ளார்.

இதேவேளை குரோதங்களை மறந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக தமது தலைவர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றுவோம் என்று தெரிவித்த கருணா, நாட்டின் அபவிருத்திகளை முன்னெடுக்கும் செயல் வீரர்கள் தாம் என எல்லோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.

எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் மாற்றங்களுடன் கிழக்கில் உள்ள முஸ்லீம் ஏகாதிபத்திய பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்றும் கருணா கூறியுள்ளார். இந்த நிலைமை ஏற்பட கிழக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களே காரணம் என்றும் குற்றம் சுமத்தினார்.

இதனால் கிழக்கில் பல நிலங்கள் பறிபோகின்றது என்றும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அத்துடன் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள், அரசியல் தீர்வு முதலியவையும் தீரக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கூறினார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாணக்கியமான தீர்வொன்றை எடுக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மதிப்பிற்குரிய சாணக்கியமான தலைவர் சம்பந்தனை கேட்டுக் கொள்ளதாகவும் கருணா கூறினார்.

http://globaltamilnews.net/2018/100996/

Share this post

Link to post
Share on other sites

இரண்டு காணொளிகளிலும் எதுவித தடுமாற்றங்களும் இல்லாமல் பல அரசியல் விடயங்களை சரளமாக அலசும் கருணா அம்மானைப் போன்று தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளில் எவருமில்லை.

புலிகளின் பாசறையில் இருந்து வந்தவரின் வசீகரமான பேச்சு அவரைத் தமிழ் மக்களின் தலைவனாக விரைவில் மாற்றினாலும் ஆச்சரியமில்லை!

  • Like 1
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

கருணாவின் தளம்பாத, ஆணித்தரமான பேச்சு என்பதில் கேள்வியில்லை.

கருணா தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி சொன்னது உண்மை.

ஆனால், அதே அழுத்ததை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவராக, தான் வழங்கமுடியாது என்பதையும் சொல்லாமல் சொல்கிறார்.

முக்கியமாக, அவரின் பூர்விக மண்ணில், முஸ்லீம் நிலா அபகரிப்பை தடுத்து, அபகரிப்பட்ட நிலங்களை மீட்டாலே, அவரின் பூர்விக மண்ணில், அவர் பூர்வீகம் நிலைக்கும்.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, Kadancha said:

முக்கியமாக, அவரின் பூர்விக மண்ணில், முஸ்லீம் நிலா அபகரிப்பை தடுத்து, அபகரிப்பட்ட நிலங்களை மீட்டாலே, அவரின் பூர்விக மண்ணில், அவர் பூர்வீகம் நிலைக்கும்.

வார்த்த்தைக்கு வார்த்தை தலைவர் என்று விளிக்கும் மகிந்த மாத்தயாவோடும்,  தம்பிகளின் துணையோடும் கருணா அம்மான் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பார். ஆனால் அவற்றை அப்படியே சிங்களவர்களைக் குடியேற்றக்கொடுப்பார்!

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இதற்குப் பச்சை போடவேண்டும். போட்டால் இந்தக் கோதாரியை வரவேற்றதுபோலாகிவிடும். பச்சையைப் பாதுகாத்து பின்பு தருகிறேன்.

23 minutes ago, Kavi arunasalam said:

E60057-ED-7-C73-413-F-8-F8-D-7-A978245-E

Share this post

Link to post
Share on other sites
On ‎10‎/‎27‎/‎2018 at 8:07 PM, கிருபன் said:

இரண்டு காணொளிகளிலும் எதுவித தடுமாற்றங்களும் இல்லாமல் பல அரசியல் விடயங்களை சரளமாக அலசும் கருணா அம்மானைப் போன்று தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளில் எவருமில்லை.

புலிகளின் பாசறையில் இருந்து வந்தவரின் வசீகரமான பேச்சு அவரைத் தமிழ் மக்களின் தலைவனாக விரைவில் மாற்றினாலும் ஆச்சரியமில்லை!

 இப்பத் தான் உங்களுக்கே விளங்கி இருக்கு....மற்றவர்களுக்கு போகப் போக விளங்கும் 

Share this post

Link to post
Share on other sites
On 10/28/2018 at 8:40 AM, Kadancha said:

அவரின் பூர்விக மண்ணில், முஸ்லீம் நிலா அபகரிப்பை தடுத்து, அபகரிப்பட்ட நிலங்களை மீட்டாலே, அவரின் பூர்விக மண்ணில், அவர் பூர்வீகம் நிலைக்கும்.

இவர்  பிரான்சுக்கு  வந்திருந்தபோது

ஒவ்வொரு  பேச்சிலும் 

தொப்பி பிரட்டிகள்

தொப்பி பிரட்டிகள்   என்ற சொல்லைப்பாவிப்பார்

ஆனால் இறுதியாக தொப்பி  பிரட்டியை  பிடித்து  தொங்கிக்கொண்டு தான் ஓடிப்போனார்

Share this post

Link to post
Share on other sites

தமிழ் மக்கள் நம்பக் கூடியவாறு கருணா தன அரசியலை நடத்தலாம்.

அதன் மூலம், தமிழ் பூர்வீக கிழக்கில், தமிழரின் பெரும்பான்மையும், பூர்வேகமும் தக்கவைக்கப்பலாம் என்றால் அது நன்மையே.

ஆனால், கருணா எதை செய்தாலும், கருணாவை ஈழத்தமிழ்  அரசியல்,  ஓர் பிரிக்கமுடியாத அங்கமாக ஏற்றுக்கொள்ளாது.    

அதை தவிர, கருணாவிடம் அரசியல் இறைமை என்பது இல்லை, அது எப்போதும் சிங்களம் வகுத்த கோட்டுக்குளேயே நிற்கவேண்டும்.

முனைய பதிவுகளில் சொன்னதை போலவே, கருணாவை ராஜபக்சே அரசாங்கமே ஏற்றுக்கொண்டிருக்கிறது. சொறி லங்கா அரசாய் பொறுத்தவரையில், கருணா இன்னமும் enemy of the State.

கருணாவை, சொறி லங்கா supreme court தான் அரசு எதிரி இல்லை என்று பிரகடனப்படுத்தலாம். அல்லது சொறி இலங்கை அதிபர். ஓர் பிடி இருக்கவேண்டும் என்பதற்காகவே, இதை சொறி லங்கா அரசு செய்யவில்லை. கருணாவும், ஏன் அதை கண்டு கொள்ளவில்லை என்பது புரியாமல் உள்ளது.    

மாறாக, சாம்-சும், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் அரசியல் இறைமை உண்டு, அதை வைத்து அவர்கள் வேறு பேரம் பேசுகிறார்கள்.

இந்த கருத்துக்களில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 10/28/2018 at 1:10 PM, Kadancha said:

கருணாவின் தளம்பாத, ஆணித்தரமான பேச்சு என்பதில் கேள்வியில்லை.

கருணா இப்படி "ஆணித்தரமான" பேசிப் பேசித் தானே தான் சார்ந்த இயக்கத்தை மட்டும்மல்ல தனது மனைவியையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தினார்!

பொதுவாகவே திருடர்கள் அனைவரும் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருப்பதை காணலாம். 

பொதுவாக நேர்மையாக நடப்பவர்கள் எழுதிவைத்து தான் வாசிக்கிறார்கள்!

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

முதலாவது காணெளி ஏற்கனவே எழுதி தயாரிக்கப்பட்டு பின்பு ஒருவரே கேள்விகளை கேட்க விறுவிறு என்று யோசிக்காமல் பாடமாக்கி வைத்திருந்ததை சொல்வத போலவே இருக்கிறது.ஆனாலும் எல்லாமே சரியாக சொல்கிறார்.

இருந்தும் மகிந்தவுடன் சேர்ந்திருந்தவர் 2009 இல் யுத்தம் முடிந்துவிட்டதென்று அரசு கூறியபின்னரும் 6வருடங்கள் மகிந்தவுடன் சேர்ந்திருந்தவர் செய்த எல்லாவிதமான அநியாயங்களையும் பார்த்துக் கொண்டிருந்தவர் இன்று நித்திரையால் எழும்பி வந்து திட்டமிட்ட ஒரு காணெளியை காட்டுறார்.சம்பந்தர் செய்ய வேண்டுமென்று சொல்வது சரி அதை இவரே கூட இருந்த மகிந்தவுக்கு சொல்லி தமிழர் பிரச்சனையை தீர்க்க முயற்சியாவது செய்திருக்கலாம்.

கிழக்கிலே பிள்ளையானுக்கு இருக்கும் செல்வாக்கு கூட இவருக்கில்லை என்கிறார்கள்.

சரி இன்றுடன் காலம் முடியப் போவதில்லை.இனி என்றாலும் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் பார்க்கலாம்.

Share this post

Link to post
Share on other sites
On 10/28/2018 at 12:37 PM, கிருபன் said:

இரண்டு காணொளிகளிலும் எதுவித தடுமாற்றங்களும் இல்லாமல் பல அரசியல் விடயங்களை சரளமாக அலசும் கருணா அம்மானைப் போன்று தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளில் எவருமில்லை.

புலிகளின் பாசறையில் இருந்து வந்தவரின் வசீகரமான பேச்சு அவரைத் தமிழ் மக்களின் தலைவனாக விரைவில் மாற்றினாலும் ஆச்சரியமில்லை!

2 hours ago, ஈழப்பிரியன் said:

அப்படியில்லை .....கூத்தமைப்பின் மீது அவ்வளவு வெறுப்பில் உள்ளனர் கிழக்கு மக்கள் 
நான் கூட அடுத்த தேர்தலில் கருணாவிற்கு வாக்களிப்பேன் அவர் முஸ்லிம்களுடன் சுழித்து ஓடுவார் என்றால் ...
கூத்தமைப்பு கையாலாகாதவர்கள் என்று பலமுறை காட்டிமுடித்துவிட்டார்கள் 
இனி அவர்களை பிடித்து தொங்குவது மக்கள் செய்யும் அரசியல் தற்கொலை 

Share this post

Link to post
Share on other sites
On 10/28/2018 at 12:37 PM, கிருபன் said:

இரண்டு காணொளிகளிலும் எதுவித தடுமாற்றங்களும் இல்லாமல் பல அரசியல் விடயங்களை சரளமாக அலசும் கருணா அம்மானைப் போன்று தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளில் எவருமில்லை.

புலிகளின் பாசறையில் இருந்து வந்தவரின் வசீகரமான பேச்சு அவரைத் தமிழ் மக்களின் தலைவனாக விரைவில் மாற்றினாலும் ஆச்சரியமில்லை!

கருத்து உன்மை ஆனால் தலைவனாக எல்லாம் ஏற்க முடியாது :grin:

Share this post

Link to post
Share on other sites

அதுசரி.. இந்த ஆரூட பூசணத்துக்கு இன்னும் ஒரு பதவியும் கொடுக்கல்லையா..??!

5 இடத்தில் இருக்கும் பணக்காரர் இவர்.. 2 ம் இடத்துக்காவது நகரனும். மகிந்த தான் நிதியமைச்சர். நீங்கள் அவர் காலை சுற்றி வருவதே சிறப்பு மிஸ்டர் முரளிதரன். 

?

Share this post

Link to post
Share on other sites
On 10/30/2018 at 12:23 AM, Kadancha said:

தமிழ் மக்கள் நம்பக் கூடியவாறு கருணா தன அரசியலை நடத்தலாம்.

அதன் மூலம், தமிழ் பூர்வீக கிழக்கில், தமிழரின் பெரும்பான்மையும், பூர்வேகமும் தக்கவைக்கப்பலாம் என்றால் அது நன்மையே.

ஆனால், கருணா எதை செய்தாலும், கருணாவை ஈழத்தமிழ்  அரசியல்,  ஓர் பிரிக்கமுடியாத அங்கமாக ஏற்றுக்கொள்ளாது.    

கொஞ்சம் கீழ உள்ளத்தையும் படியுங்க சார் 

On 10/30/2018 at 10:05 AM, அக்னியஷ்த்ரா said:

நான் கூட அடுத்த தேர்தலில் கருணாவிற்கு வாக்களிப்பேன் அவர் முஸ்லிம்களுடன் சுழித்து ஓடுவார் என்றால் ...
கூத்தமைப்பு கையாலாகாதவர்கள் என்று பலமுறை காட்டிமுடித்துவிட்டார்கள் 
இனி அவர்களை பிடித்து தொங்குவது மக்கள் செய்யும் அரசியல் தற்கொலை 

தப்பு அக்கினி 

அவர் சுளித்து ஓடுவாரா இல்லை ஒழித்து ஓடுவாரா என்பது தெரிவு செய்யப்பட்டால்த்தான் தெரியும்.

அப்படி சுளித்தார் என்றால் அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களியுங்கள். இப்பவே எப்படி .. ஒபாமாவுக்கு சமாதானத்துக்கு நோபல் பரிசை நோர்வே வழங்கியது போலவா 

அதுசரி ஜனநாயகத் தேர்தலில் மண்கவ்விட ரொம்ப பயம் பலருக்கு - 

On 10/30/2018 at 5:20 AM, போல் said:

பொதுவாகவே திருடர்கள் அனைவரும் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருப்பதை காணலாம். 

பொதுவாக நேர்மையாக நடப்பவர்கள் எழுதிவைத்து தான் வாசிக்கிறார்கள்!

ஆகா

கேள்வியும் நானே பதிலும் நானே ஸ்டைல் 

இதைத்தான் நாங்கள் 30 வருசமா பாத்திட்டமே 

இன்னமுமா....

இங்கு ஒருத்தர் வேறு திரியில் டக்லஸுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால் 20 வீத வாக்குகளை பெற்றுவிடுவாராம் என்று கவலைப் படுகின்றார். காரணம் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்து விடுவாராம். அட பாவியளே, மக்களுக்கு எது பிடிக்கும் + யாரை தேர்ந்தெடுக்கணும் என்று அவர்களுக்கு தெரியும்.

இந்த அடிப்படையே புரியாம ஜனநாயக விரோதிகள் இன்றும் கைகளில் துவக்கு இருப்பதாக கனவில்.

Share this post

Link to post
Share on other sites

யாழ் களத்தில் உள்ள நாம் கூட மகிந்த ராஜபக்சேவினைக் கோருகின்றோம்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில், கருணா அம்மானை நிறுத்த வேண்டும், அதன் மூலம் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு உறுதிப்படும்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, ஜீவன் சிவா said:

கொஞ்சம் கீழ உள்ளத்தையும் படியுங்க சார் 

ஏற்றுக்கொள்ளப்படுவது வேறு. தேர்தலில் வெல்வது வேறு.

பிரபாகரன் - பலருக்கு அவர் பல்வேறு படிகளில் அவருடன் முரண்பாடு இருந்தது.

ஆனால் , தலைமை என்று வரும் போது, வெகு சிறிய பகுதியினரை தவிர, அவராய் பொதுவாக ஏற்றுக்கொண்டார்கள்.

இப்படியே செல்வ நாயகமும்.

அமீர், அப்படி ஓர் காலத்தில் இருந்தார், அனல் தக்கவைக்கவில்லை.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

முஸ்லீம்களை வைண்ட் அப் பணணும் அம்மானோட ஜடியா ராஜபக்சேக்கள் சொல்லிவிட்டது...

அவையன்ற எம்பிமாரை ஓடிப்போய் மகிந்த உடன் நிற்பதற்கான அழுத்தம் போடுறாராம். 

ஏதோ அம்மானால முடிஞ்சது.

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, ரதி said:

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

அடேங்கப்பா  ரொம்பதான் குசும்பு :grin::grin:

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

யூ மீன் அசைக்க முடியாத "சகதி"... ?

Share this post

Link to post
Share on other sites
24 minutes ago, ரதி said:

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

முன்பு நடந்தவைகளை வைத்து, எதிர்வு கூறமுடியாது தான்.

கருணாவின் அசைக்க கூடிய அல்லது அசைக்க முடியாது என்ற தன்மை, சிங்களம் கிழித்த கூட்டுக்குள் தான் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.

அடிப்படையாக, கருணாவிடம் தான் நினைக்கும் அரசியல் கருத்துக்களை  சொல்வதற்கு, சொறி சிங்கள யாப்பிற்கு உட்பட்டுக்  கூட,   இறைமை இல்லை.

இப்பொது கூட, கருணா  கூறுபவை ராஜபக்சேயால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த நிலைமையில், கருணா சிங்களத்தோடு கிழக்கு தமிழ் நலன் சார் நிலைப்பாட்டில் நிற்கமுடியாது.

இவை, அரசியலில் மட்டுமல்ல, கருணை சொல்லும் அபிவிருத்தியிழும், கருணா இதனை நிதர்சனமாக காண்பார்.

இலங்கைத் தீவில் இருக்கும் பிரச்சனையனையின்  ஓர் பரிமாணம், ஓர் இனம் தானே முழு தேசிய செல்வங்களை உரித்ததாக்க  கொண்டு அனுபவிக்க வேண்டும் என்பது.

இந்த பிரச்னைனையின் முரண்பாடு, இனத்துவேச அரசால், அரசியல் யாப்பால்  இன்னும் கூர்மையாக்கப்பட்டுள்ளது.  

முன் பதிவுகளில் கூறியது போல, கருணா இதனை தனிப்பட்ட உறவின் (ராஜ்பகேசே அரசாங்கம்) மூலம் கையாளலாம் என்று நினைத்தால், அதுவே கருணாவின் புதைகுழியாக மாறினாலும் ஒன்றும் புதினமில்லை.

கருணா, சிலவேளைகளில், தனிப்பட்ட முறையில் அசைக்க முடியாதவர் ஆகலாம், ஆனாலும் அது கிழக்கை சிங்களத்துக்கு விலை கொடுத்தே முடியும். அது, குருநாவீட்ற்கும் கிழக்கு மக்களுக்கும் பாரிய முரண்பாடாக மாறும்.   

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ரதி said:

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

karuna amman and women à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஓமோம் அதெண்டால் உண்மைதான்.....உப்பிடி கட்டிப்பிடிச்சால் அவரை என்னெண்டு அசைக்கிறது? sign0186.gif

Edited by குமாரசாமி
  • Like 1
  • Haha 2

Share this post

Link to post
Share on other sites
On 10/31/2018 at 8:02 PM, ஜீவன் சிவா said:

தப்பு அக்கினி 

அவர் சுளித்து ஓடுவாரா இல்லை ஒழித்து ஓடுவாரா என்பது தெரிவு செய்யப்பட்டால்த்தான் தெரியும்.

அப்படி சுளித்தார் என்றால் அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களியுங்கள். இப்பவே எப்படி .. ஒபாமாவுக்கு சமாதானத்துக்கு நோபல் பரிசை நோர்வே வழங்கியது போலவா 

அதுசரி ஜனநாயகத் தேர்தலில் மண்கவ்விட ரொம்ப பயம் பலருக்கு - 

அண்ணை ...இது தப்பு என்றால் கூத்தமைப்பிற்கு மக்கள் எந்த அடிப்படையில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கினம். 
செய்வதை பார்த்துத்தான் வாக்களிக்கவேண்டுமென்றால் கூத்தமைப்பிற்கு வாக்குவிழாது செருப்பால் திரத்தி திரத்தி வெளுவை வேண்டுமென்றால் விழும். ஒவ்வொரு வருடமும் பொங்கல் ,தீபாவளி ,வருடப்பிறப்பிற்கு தீர்வு பொதியுடன் வரும் சம்மையும் ,சமஷ்ட்டி புகழ் சும்மையும் மக்கள் நம்பி வாக்குகளை கடாசும் போது நோபல் பரிசு எல்லாம் பெரிசா என்ன ...? 

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

நாங்களெல்லாம் பொங்கலுக்கு தமிழ் ஈழம் வரும் + தீபாவளிக்கு தமிழ் ஈழம் வரும் + இறுதி யுத்தம் + அடுத்த வருடம் தமிழ் ஈழத்தில்தான் மலரும் என்று பல ஜூஜுபிகளைப் பார்த்து கேட்டு வளர்ந்தனாங்கள் // முடிவில சுடுகாடுதான் கண்ட மிச்சம்.

ஜனநாயகம் என்பது வேறு அராஜகம் என்பது வேறு என்பதை மக்கள் புரிந்து பல சகாப்தங்களாகிவிட்டன. இல்லாவிட்டால் ஸ்கொல்லில பலர் நாட்டை விட்டே வெளியேறி வந்து வீர வசனம் பேசி இருக்க மாட்டார்கள்.

மக்களை அவர்கள் விருப்பப்படி தெரிய விடுவோம் - அதன் வழி போவோம். அவர்கள் விருப்பத்திற்கு எதிராக துவக்காலயே ஒன்னும் புடுங்க முடியலை, நாம எழுத்திலையா.

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now