Jump to content

அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம் இல்லை – ஒன்ராறியோ அரசு


Recommended Posts

doug-ford.jpg

அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம் இல்லை – ஒன்ராறியோ அரசு

கத்தலின் வின் தலைமையிலான முன்னைய லிபரல் அரசாங்கம் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பை அறிவித்திருந்ததுடன், ஆண்டு தோறும் அது அதிகரித்துச் செல்லும் வகையிலான திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தியிருந்தது. மணித்தியாலத்திற்கு 11.60 டொலர்களாக இருந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை, மணித்தியாலத்திற்கு 14 டொலர்களாக அதிகரித்த லிபரல் அரசாங்கம், எதிர்வரும் ஆண்டு அந்த தொகை 15 டொலர்களாக அதிகரிக்கும் என்றும் அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த அந்த திட்டத்தினை மீட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ள தற்போதய பழமைவாதக் கட்சி அரசாங்கம், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத் தொகையில் மாற்றம் இருக்காது என்று நேற்று அறிவித்துள்ளது. அதன்படி ஒன்ராறியோ மாகாணத்தில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை 2020ஆம் ஆண்டு வரையில் 14 டொலர்களிலேயே வைத்திருக்கப் போவதாக ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முதல்வர் டக் ஃபோர்ட்டின் இந்த அறிவிப்புக்கு வர்த்தக நிறுவன தலைமைகளிடம் இருந்து வரவேற்பு வெளியிடப்பட்டுள்ள போதிலும், தொழிற்சங்கங்களும் வறுமைக்கு எதிரான வழக்கறிஞர் அமைப்பும் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளன

http://muthalvan.com/அடிப்படைச்-சம்பளத்தில்-ம/?fbclid=IwAR3rGEjZZm9eQJSsaH4yssgmpPdOhiB1wyO1vQsHlnT267v5IYJNylmRhls

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.