Jump to content

ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்!

001093f8-800-720x450.jpg

பனிப்போர் காலத்தில் ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட அணுவாயு வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்ளப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுடனான சந்திப்பில் நேற்று (சனிக்கிழமை) கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1987ஆம் ஆண்டு இடைப்பட்ட தூரத்திற்குள் செயற்படும் அணுவாயுதங்களுக்கான வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா-ரஷ்யா கைச்சாத்திட்டதற்கு இணங்க, ரஷ்யா முறையாக செயற்படவில்லையென ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஒப்பந்தமானது, 500 தொடக்கம் 5,500 வரையான கிலோ மீற்றர் பரப்பிற்குள் செயற்படும் அணுவாயுதங்கள் தொடர்பான ஒப்பந்தமாகும்.

மேலும், அமெரிக்கா முன்னெடுக்காத குறித்த அணுவாயுத செயற்பாடுகளை ரஷ்யாவும் முன்னெடுக்க முடியாத வகையிலேயே குறித்த ஒப்பந்தம் அமைக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பல காலங்களாக ரஷ்யா இந்த ஒப்பந்தத்திற்கு இணங்க செயற்படவில்லையென்றும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ரஷ்யாவுடனான இதுகுறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமைக்கான காரணம் தொடர்பாக தனக்குத் தெரியவில்லையெனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று ஊடகங்களுக்கு மத்தியில் ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விரைவில் விடுபடபோவதை ஜனாதிபதி ட்ரம்ப் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://athavannews.com/president-trump-to-pull-us-from-russia-missile-treaty/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.