Jump to content

அகிம்சை வழி­யி­லான போராட்டம்- இந்த நாட்டுக்குப் பொருந்துமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகிம்சை வழி­யி­லான போராட்டம்- இந்த நாட்டுக்குப் பொருந்துமா?

பதிவேற்றிய காலம்: Oct 20, 2018

அகிம்சை வழி­யி­லான போராட்­டங்­க­ளில் தமி­ழர்­கள் தொடர்ந்து ஈடு­பட்­டி­ருந்­தால் அவர்­கள் தமது உரி­மை­க­ளைப் பெற்­றி­ருக்க முடி­யு­மெ­னக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் நிகழ்­வொன்­றில் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கி­றார். தமி­ழர்­க­ளின் ஆயு­தப் போராட்­டம் மௌனிக்­கப்­பட்­ட­தன் பின்­னர் அகிம்சை தொடர்­பாக அவர் கருத்து வெளி­யிட்­டமை கவ­னத்­துக்­கு­ரி­யது.

மனித தர்­மத்­தில் அகிம்­சைக்கு எப்­போ­துமே உயர்ந்த இட­முள்­ளது. எந்­தப் பிரச்­சி­னை­யாக இருந்­தா­லும் அகிம்சை வழி­யில் அதை அணு­கும்­போது பாதிப்­புக்­க­ளுக்கு இட­மி­ருக்­காது. அகிம்சை வழி­யி­லான போராட்­டம் எனும்­போது முத­லில் எமது நினை­வுக்கு வரு­ப­வர் இந்­தி­யா­வுக்­குச் சுதந்­தி­ரத்­தைப் பெற்­றுக்­கொ­டுத்த அண்­ணல் மகாத்மா காந்­தி­தான். வெள்­ளை­யர்­கள் இந்­தி­யாவை நீண்­ட கா­ல­மாக அடி­மைச் சிறைக்­குள் அடக்கி வைத்­தி­ருந்­த­னர்.

 

நிற­வெறி கார­ண­மா­கச் சுதே­சி­கள் பல்­வேறு கொடு­மை­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்­ட­னர். வெள்­ளை­யர்­கள் அவர்­களை மனி­தப் பிற­வி­க­ளா­கவே மதிக்­க­வில்லை. பூச்சி, புழுக்­க­ளைப் போன்று கேவ­ல­மாக அந்த மக்­களை நடத்­தி­னார்­கள். இந்த அடி­மைத்­த­னத்­தி­லி­ருந்து இந்­தி­யர்­க­ளால் விடு­பட முடி­ய­வில்லை.

காந்­தி­யில் அகிம்­சையை 
வெள்­ளை­யர்­கள் மதித்­த­னர்
வெளி­நாடு சென்று சட்­டத்­து­றை­யில் உயர்­பட்­டங்­க­ளைப் பெற்ற காந்தி சிறிது காலம் வழக்­க­றி­ஞ­ரா­கப் பணி­பு­ரிந்­தார். ஆனால் அவ­ரு­டைய சிந்தை முழு­வ­தும் நாட்­டின் அடி­மைத்­த­னம் தொடர்­பான கவ­லையே நிறைந்து காணப்­பட்­டது. வெள்­ளை­ய­ருக்கு எதி­ராக அகிம்­சைப் போராட்­டங்­களை நடத்­து­வ­தன் மூ­ல­மாக அவர்­களை நாட்­டை­விட்­டுத் துரத்தி விட­லா­மெ­னக் காந்தி உறு­தி­யாக நம்­பி­னார். அதைச் செயல் வடி­வி­லும் காட்­டி­னார். அவ­ரு­டைய அகிம்­சைக்கு வெள்­ளை­யர்­கள் மதிப்­ப­ளித்­தி­ருந்­த­னர்.

இதே­வேளை நேதாஜி, சுபாஷ் சந்­தி­ர­போஸ் போன்­ற­வர்­கள் காந்­தி­யின் அகிம்­சைப் போராட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­க­வில்லை. ஆயு­தப் போராட்­டத்­தின் மூல­மா­கவே நாட்டை அடி­மைத்­த­னத்­தி­லி­ருந்து விடு­விக்க முடி­யு­ மென அவர்­கள் திட­மாக நம்­பி­னார்­கள். வாஞ்­சி­நா­தன், பகத்­சிங் போன்­ற­வர்­கள் சந்­தி­ர­போ­சின் கொள்­கை­யைக் செய­லு­ரு­வில் காட்­டி­னார்­கள்.
காந்தி தமது அகிம்­சைப் போராட்­டங்­க­ளால் வெள்­ளை­யர்­க­ளுக்­குப் பெரும் நெருக்­க­டியை வழங்­கி­னார்.

 

இத­னால் பல தட­வை­கள் சிறை­வா­சத்­தை­யும் அனு­ப­வித்­தார். இறு­தி­யில் அவ­ரது பேராட்­டங்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்க முடி­யா­மல் வெள்­ளை­யர்­கள் இந்­தி­யா­வை­விட்­டுப் பின்­வாங்­கிச் சென்­ற­னர். இந்­தியா பூரண சுதந்­திர நாடாக மாறி­யது. மகாத்­மா­காந்தி இந்­தி­யா­வின் தந்­தை­யெ­னப் போற்­றப்­பட்­டார். அவ­ருக்­கான மதிப்பு இன்­று­வரை இந்­திய மக்­க­ளி­டம் குறை­வின்­றிக் காணப்­ப­டு­கி­றது.

ஈழத்­த­மி­ழர்­க­ளின் அகிம்­சையை 
அர­சு­கள் மதிக்­க­வில்லை
மகாத்மா காந்­தி­யின் அடிச்­சு­வட்­டைப் பின்­பற்றி ஈழத்­துக் காந்­தி­யென அழைக்­கப்­பட்ட தமிழ் அர­சுக் கட்­சி­யின் ஸ்தாப­கத் தலை­வ­ரான தந்தை செல்­வ­நா­ய­கம் தமி­ழர்­க­ளின் உரி­மை­க­ளைப் பெறு­வ­தற்­காக அகிம்­சைப் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டார்.

வெள்­ளை­யர்­க­ளி­டம் காணப்­பட்ட பண்பு சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் இல்­லா­த­தால் அந்­தப் போராட்­டங்­கள் வன்­மு­றை­க­ளைப் பயன்­ப­டுத்தி ஒடுக்­கப்­பட்­டன. தமி­ழர்­க­ளின் உரி­மை­க­ளும் இன்­று­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் அகிம்­சைக்கு இட­மில்லை என்­பதை உணர்ந்தே தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­தங்­க­ளைக் கைக­ளில் தூக்­கி­னார்­கள். சுமார் 30 ஆண்­டு­க­ளாக ஈழத்து இளை­ஞர்­கள் அர­சு­டன் போரா­டி­னார்­கள். இத­னால் ஏற்­பட்ட இழப்­புக்­கள் மதிப்­பிட முடி­யா­தவை.

அற­வ­ழி­யில் போராடி 
உரிமை வெல்­வது பகற்­க­னவு
நீண்ட போர் கார­ண­மாக நாடு மீள­மு­டி­யாத பின்­வி­ளை­வு­க­ளைச் சந்­தித்து வரு­கின்­றது. பொரு­ளா­தா­ரம் பெரும் சரி­வைக் சந்­தித்­துள்­ளது. நாட்டு மக்­கள் பொரு­ளா­தா­ரச் சுமைக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாது தவிக்­கின்­ற­னர். ஆனால் ஆட்­சி­யா­ளர்­க­ளின் மனங்­க­ளில் மாற்­றம் எது­வும் நிக­ழ­வில்லை. பல நாடு­க­ளின் உத­வி­யு­டன் விடு­த­லைப் புலி­க­ளைத் தோற்­க­டித்த வெற்­றிக் களிப்­பு­ட­னேயே அவர்­கள் இன்­றும் உள்­ள­னர்.

போர் இடம்­பெற்­ற­தற்­கான கார­ணங்­களை ஆராய்­வ­தற்­குக்­கூட அவர்­கள் விரும்­ப­வில்லை. இந்த நிலை­யில் சாத்­வீ­கப் போராட்­டங்­க­ளால் தமி­ழர்­க­ளின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தென்­பது பகல் கன­வா­கவே முடி­யும். ஆயு­தங்­க­ளுக்கு அஞ்­சா­த­வர்­கள் அகிம்­சைக்கு மதிப்­புக் கொடுப்­பார்­க­ளென ஒரு போதுமே எதிர்­பார்க்க முடி­யாது.

ஏற்­றுக்­கொள்ள 
முடி­யாத கருத்து
தற்­போது ஏகப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்­குத் தமி­ழர்­கள் முகம்­கொ­டுத்து வரு­கின்­ற­னர். இவற்­றில் ஒன்­றுக்­குக்­கூ­டத் தீர்­வைக்­காண முடி­ய­வில்லை. அர­சு­டன் பல தட­வை­கள் பேச்சு நடத்­திய போதி­லும் பய­னொன்­றும் கிடைக்­க­வில்லை. இறு­தி­யாக இடம்­பெற்ற அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை தொடர்­பான பேச்­சுக்­க­ளும் நம்­பிக்கை தரு­வ­தா­கக் காணப்­ப­ட­வில்லை. இந்த விவ­கா­ரம் கூட்­ட­மைப்பை பெரும் சிக்­க­லுக்­குள் தள்­ளி­விட்­டது.

 

இந்த நிலை­யில் அகிம்­சைப் போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்தால் தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­கள் கிடைத்து விடு­மெ­னக் கூறப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

அகிம்சை என்ற ஆயு­தம் மகாத்மா காந்­திக்கு வெற்­றி­யைக் கொடுத்­தி­ருக்­க­லாம். ஆனால் இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் அதை மதிப்­ப­தற்­குத் தேவை­யான தகுதி எவ­ருக்­குமே இல்­லை­யென்­று­தான் கூற வேண்­டும். அவ்­வாறு இருந்­தி­ருந்­தால் தியாக தீபம் திலீ­ப­னின் அவ­லச் சாவு இந்த மண்­ணில் நிகழ்ந் தி­ருக்­கவே மாட்­டாது.

 

https://newuthayan.com/story/12/அகிம்சை-வழி­யி­லான-போராட்டம்-இந்த-நாட்டுக்குப்-பொருந்துமா.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.