Jump to content

சபரிமலையும் ஆண் மையவாதமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: சபரிமலையும் ஆண் மையவாதமும்

33.jpg

ராஜன் குறை

சபரிமலை வழிபாடு குறித்துச் சற்றே விரிவாக யோசித்தால்தான் பெண் விலக்கத்தின் கொடுமையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

அறுபதுகளில் சூடுபிடித்த சபரிமலைக்கு மாலை போடும் கலாசாரம், எழுபதுகளில், எண்பதுகளில் பெருகி தொண்ணூறுகளில் மிகப் பரவலான சமூக இயக்கமாக மாறியது. முக்கியமாகத் தமிழகத்திலும், ஓரளவு ஆந்திராவிலும் பரவியது என்பது என் அனுமானம். கர்நாடகாவிலும் சிறிது நுழைந்திருக்கலாம்.

சபரிமலைக்குக் கூட்டாகப் பேருந்து அமர்த்திக்கொண்டு செல்வது, கோயிலுக்குச் சென்ற பிறகு ஊர் திரும்புகையில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா செல்வது, நாற்பத்தெட்டு நாள் (இது பல விதமாகச் சுருக்கப்படுவதும் உண்டு என நினைக்கிறேன்) விரதமிருந்த அழுத்தத்திற்கு “சாமிகள்” அந்த சுற்றுலாத் தலங்களில் ஆசுவாசம் தேடி மகிழ்வது என்பதெல்லாம் பரவலான சமூக வழக்கங்களாயின. இப்போதைய நிலவரம் என்ன என்று தெரியவில்லை.

தீட்டு என்னும் கற்பிதம்

விரிவான, பரவலான இந்த சமூக நிகழ்வின் மையமாக ஒவ்வொரு வீட்டிலும், நகர்ப் பகுதியிலும், ஊரிலும் ஆண்கள் “சாமிகளாக”, புனித விரதம் இருப்பவர்களானார்கள். “சுத்த பத்தமாக” இருப்பதெனப் பெயர். அவர்களைப் பெயர் சொல்லி அழைக்காமல் சாமி என்று அழைப்பதும் ஒரு வழக்கமாயிருந்தது. அதனால் பல பணியாளர்களுக்கும் மேலாளர்கள், முதலாளிகள் மரியாதை தருவதும் நிகழ்ந்தது. அதே சமயம் பெண்கள் “சாமிகள்” ஆக முடியாது என்பதும் நிறுவப்பட்டது. “சுத்த பத்தமாக” இருப்பதன் முக்கிய அம்சமே உடலுறவு கொள்ளாமல் இருப்பதுதான். பெண்கள் பங்கேற்க முடியாதது மட்டுமல்ல. அவர்களே “தீட்டின்” மூலாதாரங்கள்.

இந்த மொத்த ஏற்பாடுமே பெண் விலக்கத்தினை சமூக வெளியில் பரவலாக நிகழ்த்தி அவர்களை ஆண்களுக்குத் தாழ்ந்தவர்களாக மாற்றுவதாகவே இருந்தது. ஆனால், இந்துப் பெண்களுக்கு இது முற்றிலும் பழகிப்போனதுதான். எப்படியெனில், இறந்தவர்களுக்கு கொள்ளி வைப்பது, சடங்கு செய்வது ஆகியவற்றிலும் பெண்கள் ஈடுபடக் கூடாது, கோயில்களில் பூசாரி ஆகக் கூடாது என்பது போன்ற வழக்கங்களால் அவர்கள் தாங்கள் ஆண் சமூகத்தில் நுழைய முடியாது என்பதை நன்கு உணர்ந்தவர்கள். இதற்கெல்லாம் காரணம் கர்ப்பப் பையும், மாத விடாயும்தான் என்பது கடலளவு விரிந்த பொதுப்புத்தி.

இந்த நிலை நீடிப்பது நாகரீக சமூகத்தில், இன்றைய சமூகத்தில் சாத்தியமில்லை. பல்வேறு பணிகளிலும், பொது வாழ்க்கையிலும் இன்று ஈடுபடும் பெண்கள் இறைமை சார்ந்த வழிபாடுகள், சடங்குகளில் ஈடுபட முடியாது என்பது தனிப்பட்ட வாழ்க்கையை, அதாவது ஒரு கலாசார அகத்தன்மையை, பொதுவாழ்க்கை, அதாவது அரசியல் பொருளாதார புறத்தன்மையிலிருந்து வேறுபடுத்தி பார்க்க அவசியம் என்று நினைத்தாலும் இந்த அகம்-புறம் எல்லைக்கோட்டைத் தொடர்ந்து பேணுவது சாத்தியமேயல்ல.

ஆழமாக வேரோடிய பெண் வெறுப்பு

ஏறக்குறைய உலக சமூகங்கள், மதங்கள் அனைத்திலுமே பெண்ணை இரண்டாம் நிலையில் வைப்பது, பெண் விலக்கம் செய்வது ஆகியவை நிகழ்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அதற்காக நம் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது என்பதில்லை.

குறிப்பாக சபரிமலை தொடர்பான ஐதீகங்கள் பெண்கள் கோயில் நுழைவு மட்டும் சார்ந்ததல்ல. மேலே விளக்கியபடி மிகப்பெரிய சமூகப் பரப்பில் பெண் விலக்கத்தையும், பெண் வெறுப்பையும் நிகழ்த்திக்காட்டுவது. Misogyny என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

இது மிக அவசரமாகவும், அவசியமாகவும் சரி செய்யப்பட வேண்டியது. உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பையே வழங்கியது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளிலும்கூட, பெண் விலக்கத்தைத் தவிர்க்க நினைப்பவர்கள் இருக்கிறார்கள் போலத் தெரிகிறது. அவர்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் சமூக உளவியலில் பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது வரவேற்கத்தக்க மாற்றத்தையே கொண்டுவரும்.

பெண்ணைக் காமத்திற்கான மூலாதாரமாகவும், மாதவிடாய் போன்றவற்றால் இயற்கையுடன் பிணைக்கப்பட்ட மோட்சத்திற்கு அருகதையற்ற விலங்காகவும் கற்பிப்பது மிகப்பெரிய சமூக இழுக்கு என்பதை இந்துக்களாகவும், இந்தியர்களாகவும் நாம் உணர வேண்டும்.

 

 

http://www.minnambalam.com/k/2018/10/20/33

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலை யாத்திரை என்பது தமிழ்நாட்டின் பலகோடி கீழ்நடுத்தரவர்க்கத்தினரைக் குறிவைத்து பல ஆண்டுகாலமாகத் திட்டமிட்டு அவர்களது பணத்தினை கபளீகரம் செய்வதற்கான  ஒரு நடைமுறை, தமிழ்நாட்டிலிருந்தே சபரிமலைக்கு இலட்சக்கணக்கான யாத்திரீகர்கள் படையெடுப்பார்கள் தன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து பல மில்லியஙணக்கான பணம் கேரளாவுக்கு இடம்பெயர்கிறது. இதைத்தடுக்காது தமிழ் பெண்ணியல் உரிமையாளர்கள் அதுவும் பெரியாரிசம் பேசுவோர் உட்பட சபரிமலைக்குப் பெண்களை அனுமத்தித்தால் அவர்கள் வாழ்வில் இனிமேல் பாலாறும் தேனாறும் ஓடப்போகிறது பூரண பெண் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள் இற்றைவரைக்கும் இதுதான் ஒரு குறையாக இருந்தது இனிமேல் ஏல்லாம் சும்ம அதிரிமெல்லொ என கூவுகிறார்கள்.

பெண்களே உங்களுக்கான சுதந்திரத்தையும் உரிமையையும் யாரும் பிச்சைபோட்டு நீங்கள் உங்களின் முந்தானைகளில் அவற்றை முடிந்துவைத்து எதுவும் நடந்துவிடப்போவதில்லை. நீங்களே உங்களுக்கான விதியினைச் செய்யுங்கள் என்றுதான் பாரதி கூறுகிறான்.

நாங்கள் சபரிமலைக்கு வந்தால்தானே உங்களுக்குப் பிரச்சனை சரிதான் போங்கடா நீங்களும் உங்களது ஐயப்பனும் எனக்கூறிப்பருங்கள் பொத்திக்கிட்டுக் கிடப்பானுங்கள்

ஆம் இனியொரு விதிசெய்யுங்கள் அதை எந்த நாளும் காத்திடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இறை நம்பிக்கை இல்லையென்றாலும், சபரிமலையிலும் மசூதிகளிலும் பெண் அனுமதிக்கப்பட வேண்டும் என்று போராடுவது பெண்ணை ஒதுக்கி வைக்கும் ஆண் மையவாதச் சமூகத்திற்கெதிரான நிலைப்பாடு. குறிப்பாக மாதவிடாய் காலத்தில் 'தீட்டு' எனச் சொல்லி கோயிலுக்குச் செல்ல அவளிடமே ஒரு மனத்தடையை உருவாக்கிய பேடித்தனத்தை என்னவென்று சொல்ல? மேல்மருவத்தூர் 'அம்மா'விடம் எனக்கு எந்த அபிமானமும் இல்லையென்றாலும், இந்த 'தீட்டு' நம்பிக்கையைத் தூக்கியெறிந்த 'புரட்சி' சிந்தனையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தேவையற்ற விழாக்களையும், ஆடம்பரங்களையும் தவிர்க்கும் நான் பூப்புனித நீராட்டு விழாவை ஆதரிப்பது - அது தீட்டன்று, புனிதமானது ; அந்த உடல் மாற்றத்திற்காக பெண் போற்றுதலுக்குரியவள், கொண்டாடப்பட வேண்டியவள் என நிறுவுவதால் (பழங்காலத்தில் அந்த விழாவின் நோக்கம் எவ்வாறும் இருந்திருக்கலாம்).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.