Jump to content

நானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன்; விக்கி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன்; விக்கி

தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு நாடாளுமன்ற பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.அப்போது ஆட்சியாளர்களுக்கு நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவை நல்க முற்பட்டதனூடாக அரசின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டது.

vikkines-2-600x382.jpg

தமது அரசியல் தீர்வு விடயங்களை சுமூகமாக கையாளமுடியும் என்ற எதிர்ப்பை எமது தலைவர்கள் கொண்டிருந்தனர். ஆனால் அது கை கூடவில்லை.எமது அப்போதைய தலைவர்களின் தூரநோக்கற்ற செயல்போல அதே பிழையை தற்போது எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளும் செய்துவருகின்றவென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கலாநிதி க.சர்வேஸ்வரனால் எழுதப்பட்ட நூலின் அறிமுக நிகழ்வு நல்லூரில் நேற்று நடைபெற்றிருந்தது.அங்கு உரையாற்றிய முதலமைச்சர் வரலாற்றில் இருந்து தமது பிழைகளை இனங்காண மறுக்கின்றார்கள். எமது அரசியல் வரலாற்றில் சேர்.பொன்.இராமநாதன் தொடக்கம் இரண்டாயிரமாம் ஆண்டுதமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை வரையான தமிழ் அரசியல் தலைவர்கள் சிறந்த புத்திக்கூர்மையுள்ளவர்களாக இருந்த போதும் எப்போதுமே மேலாதிக்கச் சிந்தனையுடன் செயற்பட்ட சிங்களத் தலைமைகளுக்கு எம்மவரின் அரசியல் நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும் தமிழ்த் தலைமைகளைப்பிரித்தாளும் தன்மைகளை மேலோங்கச் செய்வதற்கும் முடியுமாக இருந்தது. காரணம் எமது தலைமைகள் புகழ்ச்சிக்கும் மாய்மாலத்துக்கும் எடுபடக் கூடியவர்கள்.

பேரறிஞரான கணிதவியல் பேராசிரியரான சி.சுந்தரலிங்கம்  சிங்களத் தலைவர்களின் புகழ்ச்சியில் மயங்கி தம் இனத்துக்குக் கெடுதல் விளைவித்த“சிங்களவர் மட்டும்”அமைச்சர் குழாமை அமைக்க அடிஎடுத்துக் கொடுத்தார். அவ்வளவுக்கும் 5ம் தரத்திற்குமேல் படிக்காத சிங்களத் தலைவர் ஒருவர் பேராசிரியரை“உன்னைவிட இந்தவையத்துள் யாருண்டு”என்றுகேட்டதால் அதில் மயங்கி தனது கணக்கியல் திறனை அவருக்குக் காட்டிவிட்டார். இப்பொழுது எங்கள் தலைமைத்துவத்தினரிடையேயும் தம்மைவிட எவரும் இல்லை என்ற சிந்தனை இருந்து வருகின்றது. இவ்வாறான சிந்தனை உடையவர்களைச் சிங்களத் தலைவர்கள் இலேசாகத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளுகின்றார்கள்.

இன்று பலரும் அரசுடன் இணைந்து கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லையென்று என்னைப் பேசுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களுக்குரிய உரித்துக்கள் முதலில் உறுதிசெய்யப்படவேண்டும். அதன் பின்னர் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக முன்னெடுக்கமுடியும் என்பதே எமது கொள்கை 

வழிச்சிந்தனை. உரித்துக்கள் எதுவும் உறுதிசெய்யப்படாதநிலையில் வழங்கப்படுகின்றஅபிவிருத்திகள் அனைத்தும் ஏதோ ஆட்சியாளர்களின் அன்பளிப்புக்களாக கருதப்படுமேயன்றி அது தமிழர்களின் உரித்துக்களாக கொள்ளப்படமாட்டா.நாம் அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்ட நிலையிலேயே இருக்க நேரிடும்.

எமது இனம் எப்படிப்போனாலும் பரவாயில்லை அபிவிருத்திகள் மட்டும் நடைபெறவேண்டும் எனநான் சிந்தித்திருப்பின் எனது தனிப்பட்ட நட்புக்களினூடாக பலவற்றை சாதித்திருக்க முடியும்.கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் நான். அங்கு கல்வி கற்றவன்.ஆனால் எதிர்காலத்தில் நானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன். இதனால்தான் எனது தனிப்பட்ட நட்புக்களையும் துறந்து உரித்துக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றேன்.

அண்மையில் ஜனாதிபதி தமிழ்த் தலைவர்களுள் என்னை மட்டும் தனது செயலணியில் சேர்த்திருந்தார். ஆனால் எமது உரிமைகளைக் கேட்டு நான் செயலணியைப் பகிஷ்கரித்துள்ளேன். எனது எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் பற்றி எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவிருக்கின்ற தமிழ் மக்கள் பேரவையின் சிறப்புக் கூட்டத்திலேயே வெளிப்படுத்த இருப்பதால் நான் எனது எதிர்கால அரசியல் பற்றி தற்போது பேசாது விடுகின்றேன்.எனினும் கலாநிதி சர்வேஸ்வரன்  தமது நூலில் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தலைமைத்துவங்களின் தவறுகளை நாம் இனிமேலும் விடக் கூடாது என்பதில் நான் திடமாக உள்ளேனென முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/42818

Link to comment
Share on other sites

17 hours ago, கிருபன் said:

எமது இனம் எப்படிப்போனாலும் பரவாயில்லை அபிவிருத்திகள் மட்டும் நடைபெறவேண்டும் எனநான் சிந்தித்திருப்பின் எனது தனிப்பட்ட நட்புக்களினூடாக பலவற்றை சாதித்திருக்க முடியும்.கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் நான். அங்கு கல்வி கற்றவன்.ஆனால் எதிர்காலத்தில் நானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன். இதனால்தான் எனது தனிப்பட்ட நட்புக்களையும் துறந்து உரித்துக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றேன்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் முற்றிலும் உண்மையான, நேர்மையான கூற்று! 
அதனால் தான் கயவர்கள், காடையர்கள், கைக்கூலிகள், தமிழினக் விரோதிகள் எல்லாரும் சேர்ந்து சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அநீதிமன்று வரை சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களை இழுத்து வந்துள்ளனர்! 

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

???

கொஞ்சம் நிஜத்தில நடமாடுங்க சார்.

உங்கள் பொய்களையும் புனைவுகளினையும் நம்ப இனியும் மக்கள் தயாரா இல்லை சார்.

சி வி ஏன் நீதிமன்றம் போனார் என்பதும் சகலரும் அறிந்த உண்மை. அங்கு என்ன நடக்குது என்பதும் சகலருக்கும் தெரியும்.

தெரியாவிட்டால் கீழுள்ள தொடர்பில் நீங்கள் வாசிக்கலாம்.

சி வி க்கு தலைமைத்துவம் முகாமைத்துவம் இல்லை என்பது வடமாகாணத்தில் உள்ள சிறுபிள்ளைக்கும் தெரியும் தலைவா 

https://newuthayan.com/story/10/அர­சி­யல்-பழி­வாங்­க­லில்-ஈடு­பட்­டார்-வடக்கு-முத­ல­மைச்­சர்-மீது-குற்­றச்­சாட்டு.html

Link to comment
Share on other sites

49 minutes ago, ஜீவன் சிவா said:

உதயனா....!!! இந்த  கூட்டமைப்பின் எடுபிடி  திருட்டு கும்பல் சொல்லுவதை நம்புகிறீர்களா ...????

Link to comment
Share on other sites

Just now, Dash said:

உதயனா....!!! இந்த  கூட்டமைப்பின் எடுபிடி  திருட்டு கும்பல் சொல்லுவதை நம்புகிறீர்களா

இதுதான் உண்மை என்பது சகலரும் அறிந்தது 

இதை Dash சொன்னாலென்ன போல்  சொன்னாலென்ன 

உண்மை செத்தா போகும்

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

கொஞ்சம் நிஜத்தில நடமாடுங்க சார்.

உங்கள் பொய்களையும் புனைவுகளினையும் நம்ப இனியும் மக்கள் தயாரா இல்லை சார்.

சி வி ஏன் நீதிமன்றம் போனார் என்பதும் சகலரும் அறிந்த உண்மை. அங்கு என்ன நடக்குது என்பதும் சகலருக்கும் தெரியும்.

தெரியாவிட்டால் கீழுள்ள தொடர்பில் நீங்கள் வாசிக்கலாம்.

சி வி க்கு தலைமைத்துவம் முகாமைத்துவம் இல்லை என்பது வடமாகாணத்தில் உள்ள சிறுபிள்ளைக்கும் தெரியும் தலைவா 

https://newuthayan.com/story/10/அர­சி­யல்-பழி­வாங்­க­லில்-ஈடு­பட்­டார்-வடக்கு-முத­ல­மைச்­சர்-மீது-குற்­றச்­சாட்டு.html

ஒன்றுக்குமே உதவாதவர்கள், தமிழினத்தின் எதிரிகளுடன் கூடிக் குலாவுபவர்கள், சுயநலன்களுக்காக எதிரிகளின் தாளத்துக்கு ஆதரவாக இருப்பவர்கள், சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்ற அசுரர்கள் என்று தமிழினம் மனப்பூர்வமாக நம்பும் மாக்களின் பத்தாம்பசலித்தனக் கருத்துக்களை அச்சொட்டியதாகவே உங்கள் கருத்தும் அமைந்துள்ளது.

பிளேட்டை தலைகீழாக புரட்டிப்போடும் கயவர்களை தமிழினம் இனியும் நம்பும் என நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்!

தமிழர்களை படுகொலை செய்தவர்களுடன் கேக் வெட்டி பிறந்ததினம் கொண்டாடுவதை முதன்மைத் தொழிலாக  செய்துவரும் சரவணபவன் போன்ற மாக்கள் நடத்தும் பத்திரிகைகளை மட்டுமே உங்கள் புலம்பலுக்கு ஆதாரமாக காட்ட முடியும்.

எனவே பிளேட்டை திருப்பிப் போட்டு கூக்குரலிடும் உங்கள் பொய்களையும் புனைவுகளினையும் நம்ப இனியும் மக்கள் தயாரா இல்லை! இதுவே நிஜம் சார்!

Link to comment
Share on other sites

3 hours ago, Rajesh said:

நான் பதில் அளித்தது கீழுள்ள விடயத்திற்கு 

5 hours ago, போல் said:

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் முற்றிலும் உண்மையான, நேர்மையான கூற்று! 
அதனால் தான் கயவர்கள், காடையர்கள், கைக்கூலிகள், தமிழினக் விரோதிகள் எல்லாரும் சேர்ந்து சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அநீதிமன்று வரை சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களை இழுத்து வந்துள்ளனர்! 

உங்களுக்கு அதுவே புரியாதபோது நான் என்ன பண்ணுவது.

???

*****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை வாசிக்கும்பொழுது, இந்த ஞாபகம் ஏனோ வந்து தொலைக்கிறது.

ஷப்ரா யுனிக்கோ பைனான்ஸ் என்று நினைக்கிறேன். அதில் முதலீடு செய்திருந்தோம். ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்த அலுவலகம் மூடப்பட்டு, நட்டத்தில் ஓடிவிட்டோம் என்று சொன்னார்கள். போட்ட காசும் இல்லை, ஆட்களும் இல்லை. அதன் தலைவர் பெயர் கூட சரவணபவன் என்று கேள்வி.

அதேபோல இப்போது உதயனின் உரிமையாளரும் ஒரு சரவணபவனாம். இவருக்கும் தமிழ்க் கூட்டமைப்பில் இருக்கும் சரவணபவனுக்கும் ஏதும் உறவு முறை இருக்கிறதோ தெரியாது.

அப்படி இந்த மூவருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டிருப்பின், நிச்சயமாக விக்னேஸ்வரன் சொல்வதும் பொய், அவர் நீதிமன்றம் சென்றதுகூட பாரிய குற்றம் செய்தபடியினால்த்தான் அடுத்ததாக, உதயன் எழுதுவதால் அது வேதவாக்காகத்தான் இருக்கவேண்டும்.

ஏனென்றால் சரவணபவன் என்பவர் ஒரு நீதவான், மக்களுக்காக தனது சொத்துக்களை இழந்தவர், உதயன் பத்திரிக்கையை அவர் நடத்துவது மக்களின் நலனுக்காக மட்டும்தான், கூட்டமைப்பில் அவர் இருப்பது விக்கினேஸ்வரன் போன்ற சுத்து மாத்துப் பேர்வழிகளை தமிழர்களுக்கு இனங்காட்டுவதற்காகத்தான் என்று நான் சத்தியமாக நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

9 hours ago, ஜீவன் சிவா said:

???

கொஞ்சம் நிஜத்தில நடமாடுங்க சார்.

உங்கள் பொய்களையும் புனைவுகளினையும் நம்ப இனியும் மக்கள் தயாரா இல்லை சார்.

சி வி ஏன் நீதிமன்றம் போனார் என்பதும் சகலரும் அறிந்த உண்மை. அங்கு என்ன நடக்குது என்பதும் சகலருக்கும் தெரியும்.

தெரியாவிட்டால் கீழுள்ள தொடர்பில் நீங்கள் வாசிக்கலாம்.

சி வி க்கு தலைமைத்துவம் முகாமைத்துவம் இல்லை என்பது வடமாகாணத்தில் உள்ள சிறுபிள்ளைக்கும் தெரியும் தலைவா 

https://newuthayan.com/story/10/அர­சி­யல்-பழி­வாங்­க­லில்-ஈடு­பட்­டார்-வடக்கு-முத­ல­மைச்­சர்-மீது-குற்­றச்­சாட்டு.html

விக்னெசுவரன் இது பற்றி நீதிமன்றம் உட்பட பல  இடங்களில் விளக்கம் கொடுத்து உள்ளார். 
ஆளுனர் செய்ய வேண்டிய வேலைகள் இவை. 
முதலமைச்சர் இவற்றை செய்ய விரும்பினாலும் செய்ய முடியாது. ஆளுனருக்கு பிரேரிக்கவே முடியும்.
முதலமைச்சருக்கு எதிரான அரசியலில் ஆளுனர் திட்டமிட்டே ஈடுபடுகிறார்.

Link to comment
Share on other sites

On 10/20/2018 at 6:55 AM, கிருபன் said:

அங்கு உரையாற்றிய முதலமைச்சர் வரலாற்றில் இருந்து தமது பிழைகளை இனங்காண மறுக்கின்றார்கள். எமது அரசியல் வரலாற்றில் சேர்.பொன்.இராமநாதன் தொடக்கம் இரண்டாயிரமாம் ஆண்டுதமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை வரையான தமிழ் அரசியல் தலைவர்கள் சிறந்த புத்திக்கூர்மையுள்ளவர்களாக இருந்த போதும் எப்போதுமே மேலாதிக்கச் சிந்தனையுடன் செயற்பட்ட சிங்களத் தலைமைகளுக்கு எம்மவரின் அரசியல் நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும் தமிழ்த் தலைமைகளைப்பிரித்தாளும் தன்மைகளை மேலோங்கச் செய்வதற்கும் முடியுமாக இருந்தது. காரணம் எமது தலைமைகள் புகழ்ச்சிக்கும் மாய்மாலத்துக்கும் எடுபடக் கூடியவர்கள்.

தமிழ் அரசியல் தலமைகளின் புத்திக் கூர்மை , கல்வி கறறலின் மேல் நிலை நோக்கிய பாய்ச்சல் அரசியல் ஈடுபாடு,  தனியே பொருளாதர விருத்தி சார்ந்ததோ சமூக  நலன் சார்ந்ததோ கிடையாது  மாறாக தமிழ்ச்சமூகத்தில மேலதிக்கத்தை உறுதிப்படுத்தவும்  நிரந்தர சாதிய பிடியில் இருந்து  அடயாளம் அந்தஸ்த்தை உயர்தவுமாக காலாகாலம் இருந்துவருகின்றது. இவற்றில் ஒரு அங்கமாக சிங்கள மேலாத்திக்கத்தை அண்டி அனுசரித்துப்போவது என்ற நிலை தொடர்கின்றது. இந்த அனுசரிப்புக்கு  தொடர்ந்து பலியாகிவருவது தமிழர்களது உரிமைகள். தமிழ்ச் சமூகத்தின் தன்னினத்துக்குள் இரைதேடும் இந்த குணம் முதன்மையாக இருப்பதால் உரிமைகள பறிபோகும் வேகத்தையோ கனதியையோ வரலாற்று நெடுகிலும் தமிழ் அரசியல் தலமைகள் உணரவில்லை. இதை புகழ்ச்சிக்கும் மாய்மாலத்துக்கும் எடுபடக் கூடியவர்கள் என்று சுருக்கிவிட முடியாது.  அரசியல் தலமைகளின பேச்சுவார்த்தை அறிக்கைவிடுதல் பேரினவாத அரசை அண்டிப்பழைத்தல், மக்களில் இருந்தும் அவர்கள் பிரச்சனைகளில் இருந்தும்  விலத்தி தத்தமதது அடயாளத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தல் எல்லாவற்றுக்கும் மேலாக உரிமைக்கான மக்களின் போராட்ட குணத்தையும் இயல்பையும் தமது அடயாள அந்தஸ்த்தை தக்கவைப்பதற்காக நீர்த்துப்போகச் செய்தல் என முற்றுமுழுதான தவறான அணுகுமுறையின் எதிர்வினையாக  செயலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தும் அடித்தட்டு மக்கள் வரை இணைநத ஆயுதப்போரட்டம் உருவாக காரணமாகியது. அனைத்து அழிவுகளின் ஆரம்பப் புள்ளியும் முதன் நிலைச் சூட்சுமமும் வரலாறு நெடுகிலும் தவறான அரசியல் அரசியல் அணுகுமுறைதான்.  ஒரு பேரழிவின் பின்னர் கூட ஆயுதப்போராட்டத்திற்கு முன்னர் இருந்த அரசியல் அணுகுமுறையை விட மோசமான அணுகுமுறையை தொடர்கின்றனர். தன்னினத்துக்கள் இரைதேடும் சமூகம் அதை திருத்தாவிடின் ஒரு கட்டத்தில் அழிந்து போவது விதி. ஒரு இனம் அழிந்து புலம்பெயர்ந்து பெருமளவு சிதைந்தத நிலையில் ஏஞ்சிய நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பகள் தொடர்வதால் இறுதியில் நல்லூர் எதிர்காலத்தில்  கோயில் மட்டும் தமிழர்களின் அடயாளமாக இருக்கும் அப்போது அங்கு மணியாட்டுவதாக இப்போதைய அரசியல் தொடரும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.