Jump to content

புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார் பிராம்டன் நகர மேயர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார் பிராம்டன் நகர மேயர்!

Linda-Jeffery.jpg

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தின் உள்ளூராட்சித் தேர்தல்களின் முன் கூட்டிய வாக்களிப்புக்கள் முடிவடைந்து எதிர்வரும் திங்கட்கிழமை ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழர்கள் அதிகமாக வாழும் ஸ்காபரோ, மார்க்கம், ஒஷாவா மற்றும் பிராம்டன் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், பல வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவைக் கோரிய நிலையில் நடத்தப்படுகின்றன. பிராம்டன் நகரில் மேயராக பதவி வகித்து மீண்டும் அப்பதவிக்காக போட்டியிடும் Linda Jeffery ஏகோபித்த ஆதரவு தொடர்ந்தும் ஏறு முகமாக இருப்பதாகவே கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் இதை உறுதிப்படுத்துவது போல கனடாவின் பிரதான மூன்று கட்சிகளின் பிராம்டன் பகுதி மத்திய பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒன்ராறியோசட்ட மன்ற உறுப்பினர்களும் Linda Jeffery ‌அவர்களுக்கு தமது ஆதரவை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள்.

கனடிய தமிழர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிரத்தியேக நேர்காணலில், Linda Jeffery பல்வேறு விடயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனது பதவிக்காலத்தில் தமிழ் மக்களுடன் தனக்கிருந்த பிணைப்புக்களை சிறப்புற வெளிப்படுத்திய அவர், எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து பணிபுரியும் வழி வகைகளையும் தெரிவித்துள்ளார்.

கனடிய தமிழர்களின் மரியாதையை பெற்றிருப்பவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுப் பணியாற்றுவதே தனது நோக்கம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களை ஒன்றாக்குவதில் தனக்கிருக்கும் கடப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதுடன், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி, அதில் குளிர்காய்ந்து அரசியல் இலாபம் காண நினைக்கும் சக்திகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பிராம்டன் பகுதிகளில் அதிக அளவில் வாழும் சீக்கிய, வட இந்தியவம்சாவளியினைச் சே‌ர்ந்தவர்களுடன் ஈழத்தமிழ்க் கனடியர்களின் ஆதரவும் ஏகோபித்துக் கிட்டும்நிலை இருப்பதால் Linda Jefferyயின் வெற்றிவாய்ப்புக்கள் பிரகாசமாக இருப்பது அவதானிக்கப்படுகிறது.

 

http://athavannews.com/புலம்-பெயர்-தமிழர்களின்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரம்டன் மேயர் தேர்தல் – பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவர் வெற்றி

Patrick-Brown-wins_Super_Portrait.jpg

பிரம்டன் மேயர் பதவிக்காக போட்டியிட்ட முற்போக்கு பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவர் பற்றிக் பிரவுன், அதில் வெற்றி பெற்றுள்ளதுடன், தனது அரசியல் மீள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் மேயர் லின்டா ஜெஃப்ரியை சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, பிரம்டனின் அடுத்த மேயராக அவர் தேர்வாகியுள்ளார்.

பற்றிக் பிரவுன் ஏறக்குறைய 44.4 சதவீத வாக்குகளையும், லின்டா ஜெஃப்ரி கிட்டத்தட்ட 40.8 சதவீத வாக்குகைளையும் பெற்றிருந்தனர்.

பற்றிக் பிரவுன் முன்னதாக பீல் பிராந்திய மேயர் பதவிக்கான போட்டியில் குதித்த போதிலும், அந்த நகருக்கான தேர்தலை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் நிறுத்தியதை அடுத்து, வேட்புமனு பதிவின் இறுதி நாளன்று பற்றிக் பிரவுன் பிரம்டன் மேயர் பதவிக்கான போட்டியில் தனது பதிவினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்த்ககது.

இதேவேளை ஒன்ராறியோவின் பல உள்ளூராட்சி சபைகளிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்றைய வாக்குப் பதிவுகளில் தடங்கல்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அவற்றில் இன்றும் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.

சில இடங்களில் வாக்குப் பதிவுகள் மேலும் இரண்டு மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்ட போதிலும், மேலும் சில இடங்களுக்கு இன்று நாள் முழுவதற்கும் வாக்குப் பதிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

http://athavannews.com/பிரம்டன்-மேயர்-தேர்தல்-ப/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.