Jump to content

பணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி!

பணவீக்கத்தின் முக்கிய விளைவாக சீனாவின் நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ), செப்டம்பர் மாதம் ஆண்டுக்கு 2.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

இது ஓகஸ்ட் மாதத்தில் 2.3 சதவீதமாக இருந்ததாக தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தொழிற்சாலை வாசலில் பொருட்களின் பெறுமதியை அளவீட செய்யும் சீனாவின் தயாரிப்பாளர் விலை குறியீட்டெண் (பிபிஐ), செப்டம்பர் மாதம் ஆண்டுக்கு 3.6 சதவீதம் உயர்வடைந்துள்ளது.

ஆனாலும் முந்தைய மாதத்தை விடவும் 0.5 சதவீத புள்ளிகள்; குறைவடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

மேலும், காய்கறிகள், பழங்கள், மற்றும் முட்டை, பன்றி இறைச்சி விலைகள் 2.4 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன் உணவு விலைகள் வருடத்துக்கு 3.6 சதவீதத்துக்கு உயர்வடைந்துள்ளது.
அதேவேளை உணவு அல்லாதவற்றின் விலைகள் ஆண்டுக்கு 2.2 சதவீதம் அதிகிரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக விடுதி செலவு 2.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளை கல்வி, சுகாதாரம், மற்றும் மரத்துவ செலவுகள், எரிவாயு, டீசல், எண்ணெய் விலைகளும் அதிகரிப்பை காட்டியுள்ளன.

ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான சராசரி ஆண்டு நுகர்வோர் விலை குறியீட்டெண் வளர்ச்சியானது 2.1 சதவீதத்துக்கு உயர்வடைந்துள்ளது.

உலோகம் அல்லாத கனிம பொருட்கள், இரும்பு உலோக உருக்குதல் மற்றும் உருளையாக்குதல், இரசாயன மூலப்பொருட்கள் மற்றும் இரசாயன பொருட்கள் உற்பத்தி, நிலக்கரி சுரங்கம் போன்ற முக்கிய தொழிற்துறைகளும் மெதுவான விலை வளர்ச்சியை கண்டுள்ளன.

ஆனாலும், எண்ணெய் மற்றும் எரிவாயு பிரித்தெடுத்தல், எண்ணெய், நிலக்கரி மற்றும் இதர எரிபொருள் பதப்படுத்தும் துறைகளின் தொழிற்சாலை விலைகள் வேகமான வளர்ச்சியை காட்டியுள்ளன.

 

http://athavannews.com/பணவீக்கத்தின்-விளைவு-சீ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.