Jump to content

வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா? இறுதி முடிவு 17 ஆம் திகதி…

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா? இறுதி முடிவு 17 ஆம் திகதி…

October 15, 2018

sumanthiran.jpg?resize=800%2C450

வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் இருக்கின்றது. ஆனால், எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதால், அந்த சந்திப்பின் பின்னரே உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டில் இன்று (15.10.18) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், பல விடயங்கள் செய்து முடிப்பதாக சொன்ன விடயங்களை அரசாங்கம் செய்து முடிக்கவில்லை. எல்லாவற்றினையும் தொட்டுத் தொட்டு, இருக்கின்றார்கள். இன்னும் பூரணமாக முடிக்கவில்லை.

அரசாங்கம் பல விடயங்களை செய்து முடிக்காமல் இருப்பதனால், வரவு செலவு திட்டத்தினை நிராகரிக்க வேண்டுமென்ற எண்ணம் கூட்டமைப்பின் பலர் மத்தியில் இருக்கின்றது.
வரவுசெலவுத் திட்டம் குறித்து என்ன நிபந்தனைகள் வழங்க வேண்டும் எவ்வளவு காலக்கெடுகள் வழங்க வேண்டுமென்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை. எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற இருக்கின்றது. அந்தக் கலந்துரையாடலின் போது, என்ன தீர்மானம் எடுப்பார்கள் என்பது தெரியாது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதியுடனான சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த சுமந்திரன், தேவையேற்படின், நீதியமைச்சரும், சட்டமா அதிபரும், அழைக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார் எனினும் அந்தக் கலந்துரையாடல், அன்றைய தினம் நடக்குமா அல்லது வேறு ஒரு தினத்தில் நடக்குமா என்பதும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றினை கொண்டுவர, தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து நகர்வுகளை முன்னெடுத்துள்ளன.. சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரி, அந்தப் பிரேரணை நகர்த்தப்படவுள்ளது.கடும்போக்கினை உடைய சிங்கள கட்சிகளும், அமைப்புக்களும், குற்றம் புரிந்தவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசிக்கின்றதென்ற பொய்யான பிரச்சாரத்தினை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புகின்றார்கள். அவைகள் திருத்தப்பட வேண்டும்.

நீண்டகாலமாக தடுப்பில் இருக்கின்றார்கள் என்றும், வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே, தண்டணை விதிக்கப்பட்ட காலத்திற்கு அதிகமாக தடுப்பில் இருக்கின்றார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் பிணை வழங்க முடியாதென்பதாலும், ஏற்கனவே, நீதிமன்ற விசாரணைகளின்றியும், சிறைகளில் இருக்கின்றார்கள் என்பதனால், அவர்களை விடுவிக்கும் படியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தம்மை வெறுமனவே விடுவிக்குமாறும், அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுக்கவில்லை. குற்றத்தினை ஒப்புக்கொள்வதாகவும், நீண்டகாலம் சிறையில் இருப்பதனால், அதனைக் கருத்திற்கொண்டு, புனர்வாழ்வு அளித்து விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த உண்மைகளை சரியான விதத்தில் சிங்கள மக்களிடம் சொன்னால், சிங்கள மக்கள் மத்தியில் இருந்து பாரிய ஆதரவு கிடைக்கும். இந்த விடயங்கள் விளக்கமின்மையால் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளனவே தவிர, நியாயமான முறையில், சிங்கள மக்களுக்கு எடுத்துரைதால், இவர்களை விடுவிப்பதற்கு எந்த சிங்கள மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/99480/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ அதுதான் அணிலும் மைத்ரியும் உலகம் சுற்ற கிளம்பியிட்டினம். சுமத்திரன் சம்பந்தன்  கூட்டம்  என்ன முடிவு எடுப்பினம் என்றும் தெரியும் .எலும்புத்துண்டுகளை வீசும் எஜமானர்கள் முகம் கோணக்கூடாது என்று நாய்கள் கவலைப்படும் நேரம் இதுதான் . அவையளுக்கு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை முக்கியமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா? இறுதி முடிவு 17 ஆம் திகதி…

எப்பிடியான வரவு செலவு எண்டாலும் அதை ஆதரிப்பது தமிழ்கட்சிகளின் மரபு....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுபற்றியும் தெரியாது, தெரியாது, தெரியாது என்று சொல்லும் ஒரு தமிழ்ப் பிரதிநிதி எமக்குத் தேவைதானா?

நல்லிணக்க அரசாங்கம் வந்தபின்னர் எத்தனை தடவைகள் அதற்குச் சார்பாக இவர்கள் கைதூக்கியிருக்கிறார்கள்? ஒவ்வொருமுறையும் கைதூக்குவதற்குமுன்னர் இவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் என்ன? அரசாங்கம் செய்வோம் என்று உறுதியளித்தவை என்ன? இவையெல்லாம் செய்தாயிற்றா என்று ஏன் இவர்களால் இன்றுவரை கேட்க முடியவில்லை?

இந்த நிலையில் இன்னொரு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகக் கை தூக்குவதென்கிற யோசனை ஏன் இவர்களுக்கு வருகிறது? ஒரே முடிவாக, "நாம் இனிக் கை தூக்கப் போவதில்லை, உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட்டால் ஒழிய, இனி அரசாங்கத்தை ஆதரிக்க மாட்டோம்" என்று இவர்களை சொல்லமுடியாமல்த் தடுப்பது என்ன?

இன்றுவரை உறுதியளித்தவற்றில் எதையுமே செய்யாத அரசை இன்னமும் காக்க நினைக்கும் சுமந்திரனோ அல்லது சம்பந்தனோ ஏன், தமக்கு நல்லதைச் செய்வார்கள் என்றெண்ணி  அவர்களைப் பாராளுமன்றம் அனுப்பிய மக்களின் தேவைகள், கோரிக்கைகள் பற்றி எதுவுமே நினைப்பதில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ragunathan said:

ரகுஅண்ணை 
அப்போ வாக்களித்த மக்கள்கள் முட்டாள்களா ....?
எனக்கு பதில் தெரியவில்லை ..உங்களுக்கு ....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ரகுஅண்ணை 
அப்போ வாக்களித்த மக்கள்கள் முட்டாள்களா ....?
எனக்கு பதில் தெரியவில்லை ..உங்களுக்கு ....?

உண்மைதான். மக்கள் வாக்களித்தபடியினால்த்தான் இவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

மக்களுக்கு வேறு தெரிவுகளும் இருந்தன. ஆனால், வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவோ அல்லது பாரம்பரியத்தைப் பேணுவதற்காகவோ தொடர்ந்தும் இவர்களுக்கே வாக்களிக்கிறார்கள். இது இவர்களுக்கும் நன்கே தெரிவதால்த்தான் இந்த அசமந்தமும், தாந்தோன்றித்தனமும்.

தாம் சொல்வதைச் செய்யாவிட்டால், மக்கள் அடுத்த தேர்தலில் தமக்குப் பாடம் புகட்டுவார்கள் என்கிற பயமிருந்தால் சுமந்திரனோ அல்லது சம்பந்தனோ இப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். 

சுமந்திரனும், சம்பந்தனும் தமது அரசியலைச் செய்வதால் சிங்களவர்கள் கோபப்படுவார்களோ என்று நினைப்பதை முதலில் கைவிட வேண்டும். எம்மில் 200,000 பேரைக் கொன்றவர்கள் எந்த அச்சமுமில்லாமல், மார்தட்டிக் கொண்டு அரசியல் நடத்துகையில், ஏன் நாம் எமக்கான நீதியைக் கோருவதற்குப் பயப்பட வேண்டும்? 

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது ஆயுதப் போராட்டம் மட்டும்தான். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் அழியவில்லை. அதைச் சொல்வதற்குப் பயம் தேவையில்லை. சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்று பயப்படுபவர்களால் தமிழருக்கான நீதியை ஒருபோதுமே பெற்றுக்கொடுத்துவிட முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.