Jump to content

மேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு!

DpY2I0cWsAAoKMr.jpg

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 95 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களை சேர்த்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98, பிஷூ 2 களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோஸ்டன் சேஸ் சதம் அடித்தார். உமேஷ் யாதவ் மீதமிருந்த மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் 311 ஓட்டங்களுடன் அட்டமிழந்தது. உமேஷ் யாதவ் 26.4 ஓவரில் 88 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. கடந்த டெஸ்டில் சதம் அடித்த பிரித்வி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் லோகேஷ் ராகுல் 4 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து பிரித்வி ஷா உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். பிரித்வி ஷா 39 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 80 ஓட்டங்களை எடுத்திருந்தது. பிரித்வி ஷா 52 , புஜாரா 9 ஒத்தாங்க;ளுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. புஜாரா மேலும் ஒரு ஓட்டங்களை எடுத்த நிலையில் வெளியேறினார். பிரித்வி ஷா 70 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு விராட் கோஹ்லி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். ரகானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த விராட் விராட் கோஹ்லி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

விராட் கோஹ்லி 45ஓட்டங்களை எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை எடுத்திருந்தது.

5-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை எடுத்திருந்தது. ரகானே 19, ரிஷப் பந்த் 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்தியா 52 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களை எடுத்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்ட நேர் முடிவில் ரகானே 75 , ரிஷப் பந்த் 85 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

DpZmddYUcAAAhT5.jpg

DpXJvk3U4AE4l1u.jpg

DpYLwGyWsAAAQMz.jpg

 

http://athavannews.com/மேற்கிந்திய-தீவுகள்-அணி-22/

Link to comment
Share on other sites

 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது!

10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது!

இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிகள் முதல் இன்னிங்சில் 311 ஓட்டங்களும், இந்தியா 367 ஓட்டங்களும் சேர்த்தது. 

56 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்திய அணிகள் 2 வது இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ் (4), ஜடேஜா (3) ஆகியோரின் அபார பந்து வீச்சால் மேற்கிந்திய அணி 127 ஓட்டங்களில் சுருண்டது. 

இதனால் இந்தியாவை விட 71 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றது. 

இதனால் இந்தியாவிற்கு 72 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மேற்கிந்திய அணி. 72 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 

இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக முதல் இன்னிங்சில் ஏமாற்றம் அடைந்த லோகேஷ் ராகுல் பொறுப்புடன் விளையாடினார். இருவரும் ஆட்டமிழக்காமல் இலக்கை எட்ட உதவிகரமாக இருந்தனர். 

17 வது ஓவரின் முதல் பந்தை பிரித்வி ஷா பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 75 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா தலா 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=107383

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 நாளில் ஆட்டத்தை முடித்து தொடரை கைப்பற்றியது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 127 ஓட்டத்துக்குள் சுருட்டி, 10 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று, 2:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

kholi.jpg

இந்தியா மற்றும் மேற்கிந்தியத்  தீவு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவு அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கிணங்க மேற்கிந்தியத் தீவு  அணி தனது முதல் இன்னிங்ஸில் 311 ஓட்டங்களை குவித்தது. அதன் பின்னர் முதல் நாள் ஆட்டத்தை நேற்றைய தினம் ஆரம்பித்த இந்திய அணி இரண்டம் நாள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 308 ஓட்டத்தை எடுத்தது.

இந் நிலையில் 308 ஓட்டத்துடன் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 367 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 56 ஓட்டத்தினால் முன்னிலை பெற்றது.

56 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவு  அணி உமேஷ் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்து வீச்சுக்கு முகங்கொடுத்தக் தெரியாது 40.1 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டத்தை மாத்திரம் பெற்றது.

அதன்படி மேற்கிந்திய அணிக்கு முதல் ஒவரை உமேஷ் யாதவ் வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பிரித்வெய்ட் ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார். மறுமுணையில் கிரேன் பவுல் ஓட்டம் எதையும் எடுக்காது அஸ்வினின் பந்து வீச்சில் ரஹானேயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

yadav.jpg

இதனால் மேற்கிந்தியத் தீவு அணி 6 ஓட்டங்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. மூன்றாவது விக்கெட்டுக்காக ஹெட்மையருடன் ஷெய் ஹோப் ஜோடி சேர்ந்தாடி ஓரளவு தாக்கு பிடித்தார். எனினும் ஹொப் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் சுழலில் சிக்கி வெளியேறினார். 

அவரின் வெளியேற்றத்தையடுத்து ஹெட்மையரும் 17 ஓட்டத்துடன் குல்தீப் யதவ்வின் பந்து வீச்சில் புஜாராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இந் நிலையில் மதியநேர உணவு இடைவேளைக்கு சற்றுமுன் உமேஷ் யாதவ், ரோஸ்டன் சேஸ் (6), டவ்ரிச் (0) ஆகியோரை  போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். இதனால் மேற்கிந்தியத் தீவு அணி 70 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

7 ஆது விக்கெட்டுக்கு அம்ப்ரிஸ் உடன் அணித் தலைவர் ஹோல்டர் ஜோடி சேர்ந்தாடிவர மேற்கிந்திய் தீவு அணி தேனீர் இடைவேளை வர 6 விக்கெட் இழப்பிற்கு 76 ஓட்டங்களை பெற்றது.

எனினும் தேனீர் இடைவெளியின் பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தது. அதன்படி அணித் தலைவர் ஹோல்டர் 19 ஓட்டத்துடன் ஜடேஜாவின் பந்து வீச்சுலும், சுனில் அம்ப்ரிஸ் 38 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சுலும், ஜோமல் வோரிக்கன் 7 ஓட்டத்துடன் அஸ்வினின் பந்து வீச்சிலும், கப்ரில் ஒரு ஓட்டத்துடன் உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

jadaja.jpg

இதனால் மேற்கிந்தியத் தீவு அணி 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை பெற்றது. பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அசத்தலாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 3 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 2 விக்கெட்டினையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

அதன்படி இந்திய அணியக்கு வெற்றியிலக்காக 72 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

72 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி இன்றைய தினமே தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 16.1 ஓவர்களை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி மேற்கிந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கினை கடந்தது அபாரமாக வெற்றியீட்டி தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் தலா 33 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்து போட்டியை முடித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.virakesari.lk/article/42430

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.