கிருபன்

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்

Recommended Posts

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்

ஆர். அபிலாஷ்
 
15391011493295.jpg
 
சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைத்த பின் 2004இல் இருந்து சமீபம் வரைஅவரும் அவரது தாயாரும் வைரமுத்துவை புகழ்ந்தது (வைரமுத்துவும் ரஹ்மானும்தண்ணீர் ஊற்றி வளர்த்த செடி என் மகள்), அவருக்கு பத்மஸ்ரீ கிடைத்த போதுகொண்டாடியதுதன் திருமணத்துக்கு அவரை அழைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம்வாங்கியது ஆகிய சான்றுகளைக் காட்டி “ஒருவர் உங்களிடம் 2004இல் தவறாகநடந்து கொள்ள முயன்றிருந்தால் அவரை எப்படி பாராட்டி திருமணத்துக்கு அழைக்கமுடியும்?” என டிவிட்டரில் பலரும் சின்மயியிடம் கேட்டார்கள்அதற்கு பதிலளித்தசின்மயி வைரமுத்துவுடன் 2004க்குப் பின் சில மேடைகளை பகிர்ந்து கொண்டதற்குமட்டும் விளக்கம் அளித்துள்ளார்அந்நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டது தான்அல்ல, “அதற்கு பொறுப்பானவரிடம் என் தேதிகளை ஒப்படைத்த நிலையில் எனக்குமுடிவெடுக்கும் வாய்ப்பு இருக்கவில்லை” என்கிறார்ஆனால் இந்த விளக்கம்ஏற்கும்படியாய் இல்லைசின்மயி இவ்விவகாரத்தில் முரண்படவே செய்கிறார்.
 
என் ஊகம் என்னவெனில்ஒருவேளை அவர் சொல்வது போல வைரமுத்து தவறுஇழைத்திருந்தால்தனது திரைவாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு அவர்வைரமுத்துவிடம் நட்பு பாராட்டியிருக்கலாம்அதை நான் தப்பென்று சொல்லமாட்டேன்வாழ்க்கை என்பதே பலவகையான சமரசம் தானே!
 
 “அன்று நான் வெளிவந்து அவரைப் பற்றி பேசியிருந்தால் யாராவது ஏற்றுக்கொண்டிருப்பாராஅன்று எனக்கு பேச ஒரு தளம் இல்லை” என்றெல்லாம் சின்மயிசொல்வது சப்பைக்கட்டு.
இதற்கு ஒரு நல்ல ஆதாரம் அவர் இதுவரை திரைத்துறையின் முக்கிய இயக்குநர்கள்இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட வி..பிகள் பற்றி எதுவும் வெளியிட வில்லை என்பதுதிரைத்துறையில் நடக்கும் கேஸ்டிங் கவுச் குறித்து நன்கு அறிவோம்ஆனால் சின்மயிஅது குறித்து வாயே திறக்கவில்லைசுசித்ரா லீக்ஸ் பிரச்சனை எழுந்த போதுநடிகைகள் பயன்படுத்தப்படுவது பற்றி பேசினாரா இவர்
 
ஏன் இல்லை என்றால் அவர் சாமர்த்தியசாலிசாமர்த்தியசாலியாய் இருப்பதுதப்புமல்லநான் உண்மையில் இதைப் பாராட்டுகிறேன்.
 
சின்மயி சமரசம் செய்து கொண்டிருப்பார் என்றால் என்ன பொருள்? (சின்மயியின்குற்றச்சாட்டு உண்மையானால்)
வைரமுத்து அவரை இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கோரஇவர் அதைஏற்றுக் கொண்டு சமரசம் நடந்திருக்க வேண்டும்அல்லாவிடில் 2004க்கு பிறகுஇவ்வளவு பாடல்கள் அவர் வைரமுத்துவுக்கு பாடவோவைரமுத்துவை விண்ணுயரபுகழவோ அவரை திருமணத்துக்கு அழைத்து காலில் விழவோ செய்திருக்க மாட்டார்
 
இருவருக்குமிடையே ஒரு சுமூகமான உறவு நிலவியிருக்கும்வைரமுத்து இவரைஅதிகம் அண்டாமல் இணைந்து பணியாற்றி இருப்பார். “பெரியவர்” இறங்கிவருகிறாரே என சின்மயியும் நெகிழ்ந்து பல சந்தர்பங்களில் அவரை புகழ்ந்திருப்பார். (மீண்டும் சொல்கிறேன் – சின்மயியின் குற்றச்சாட்டு உண்மை எனும் பட்சத்தில்மட்டுமே இதைச் சொல்கிறேன்அது பொய்யாகவும் இருக்கலாம்.)
ஆனால் இந்த சுமூக உறவுக்குப் பின்னால் சின்மயி புகைந்து கொண்டு தான்இருந்திருப்பார்
இது பெண்களுக்கே உரிய ஒரு பிரத்யேக சுபாவம்அவர்களால் முரண்பாடுகளுடன்தொடர்ந்து வாழ முடியும்அப்படி முரண்பாட்டுக்குள் அவர்களைத் தள்ள கடுமையானஅழுத்தங்கள் எல்லாம் அதற்குத் தேவையில்லைமிகக் கடுமையாய் வெறுக்கிறஒருவரையே மதிக்கவும் அவருடன் இணைந்து செயலாற்றவும் பெண்களால் முடியும்ஆனால் சூழ்நிலை என்றோ ஒருநாள் மாறும் போது அதே அவர் மீது கடுமையாய்தாக்குதல் நடத்தவும் அவர்களால் முடியும்
 
ஏன் இத்தனைக் காலம் கழித்து?
 
முரண்பாடுகளுடன் வாழும் பெண்ணின் மன இயல்பு பற்றி சொன்னேனேஇந்த இயல்புஅவர்களுக்குள் கடும் அழுத்தத்தை உருவாக்கும்ஒரு கட்டத்தில் வெடித்துவிடுவார்கள்அவரை புகழப் புகழ அவரை இகழ்வதற்கான சாத்தியங்களும் அவருக்குள்எட்டிப் பார்க்கும்அதை தலையில் தட்டி அப்போதைக்கு துயில வைப்பார்கள்ஒருகட்டத்தில் புகழ வேண்டிய மனம் உறங்க காறித் துப்ப வேண்டிய மனம் விழிக்கும்.
 
சின்மயி செய்தது சந்தர்ப்பவாதமா என்றால் ஆமா மற்றும் இல்லை என்பேன்.
 
அவருக்கு உண்மையிலேயே வைரமுத்து மீது மரியாதை இருக்கலாம்அவரது பாடல்வரிகளை இவர் புகழ்ந்து எழுதியுள்ளதைப் பார்க்கும் போது இது தெரிகிறது. “சரசரசாரக் காத்து” பாடலைப் புகழும் போது எப்படி வைரமுத்துவால் பெண் மனத்தைநுணுக்கமாய் புரிந்து கொண்டு இவ்வளவு எதார்த்தமாய் எழுத முடிகிறது எனசிலாகிக்கிறார் சின்மயிஇது பாசாங்கு அல்ல.
 
ஆனால் இதைச் சொல்லும் போதே ஒரு பெண் மனத்தை இவ்வளவு நன்றாய் எழுத்தில்சித்தரிக்கத் தெரிந்தவர் நடப்பில் அதே புரிதலுடன் கண்ணியமாய் தன்னைநடத்தவில்லையே என (ஒருவேளை அவரது குற்றச்சாட்டு உண்மையெனில்சின்மயியின் மனம் சொல்லும்.
 
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அழைத்து விடுக்கும் போது பெண் அதை அவனதுபிரச்சனையாக மட்டும் பார்க்க மாட்டாள்தன் மீதான பாலிய ஒழ்க்க விமர்சனமாகவும்அதைப் பார்ப்பாள். “இத்தனைப் பெண்கள் இருக்கையில் நான் மட்டும் ஏன் அப்படி ஒருஎண்ணத்தை ஏற்படுத்துகிறேன்என்னைப் பார்க்க இவனுக்கு அப்படி ஒழுக்கமற்றவள்எனப் படுகிறதா?” என்றெல்லாம் அவர்கள் குமைவார்கள்ஆக அவர்களை அழைப்பதுஎன்பது ஆயிரம் முறை முகத்துக்கு முன்னால் ஈனமானவளே என கூவுவதற்கு சமம்ஆகையால்விரும்பாத பாலியல் அழைப்பை பெண்கள் வெறும் அழைப்பாய் மட்டும்பார்ப்பதில்லைஅவர்கள் கடுமையாய் காயப்படுகிறார்கள்இவ்வளவு குழப்பங்கள்அவர்களுக்கு ஏற்படுவதை ஆண்கள் உணர்வதில்லை.
 
இப்படி அவமதிப்பு நிகழ்ந்த பின் அதை வெளியே சொல்லாமல் இருந்தால்அவருடன்சுமுகமாய் பணியாற்ற நேர்ந்தால்கூடுதல் சமாளிப்புக்காகவும் உண்மையாகவும்அவரை பலமுறை புகழவும் காலில் விழுந்து அவரிடம் ஆசி வாங்கவும் செய்தால்அப்பெண்ணுக்கு என்னவாகும்ஒரு பக்கத்தை மட்டும் வைத்து அவரை புகழ்கிறேனேஎனும் உறுத்தல் பாம்பாய் படமெடுத்து அவரைக் கொத்தும்ஒருநாள் சின்மயியே அந்தபாம்பாகி வெளிவந்து சீறி விட்டார்அது தான் நடந்திருக்க வேண்டும்.
நான் சின்மயியின் முரண்பட்ட செயல்களை ஒருவித உள்முரணின் வெளிப்பாடாகபார்க்கிறேன்இது பெண் உளவியலின் அடிப்படை இயல்பு என்கிறேன்அதேவேளைதன் தொழிலை பாதுகாத்துக் கொள்ளும் சின்ன சந்தர்ப்பவாதமும் இருக்கிறது.
 
மற்றபடி அவர் எந்த அச்சமும் இல்லாத பெண்ணுரிமைப் போராளி என சொல்லமாட்டேன்காஸ்டிங் கவுச் விவகாரத்தில் அவர் மௌனம் காப்பது அதைக் காட்டுகிறது.
 
ஆனால் அவர் ஏன் போராளி ஆகி ஊருக்கே கொடி பிடிக்க வேண்டும்அவசியமில்லை.
அவர் தன் தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்திய ஒரு சராசரி மனுஷி அவ்வளவு தான்தன்னை ஒத்த பெண்களின் டிவீட்களையும் இதை ஒட்டி அவர் பகிர்ந்திருக்கிறார்இதுவரையில் அவரது பகிர்வு அவரது திரைவாழ்வை முழுக்க காலி பண்ணாது எனநம்புகிறேன்அவர் கர்நாடக இசைப் பாடகர்களைபிராமண சங்கத் தலைவரைஎல்லாம் இழுத்து விட்டிருக்கிறார்ஆனால் இவர்களுடன் அவர் எப்படியும் பணியாற்றப்போவதில்லை.
 
 ஆகஅவர் பெரிய ரிஸ்க் எடுத்திருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லைஇனிமேல்வைரமுத்து பங்கேற்கும் படங்களில் அவர் பாடுவது சிரமமாகும்வைரமுத்துவின்பாடலாசிரியர் வாழ்க்கை அஸ்தமனத்தில் இருக்கும் இந்த சந்தர்பத்தில் சின்மயியின்பாடல் வாய்ப்புகளும் பெரிய அளவில் இனி பாதிக்கப்படாது என நினைக்கிறேன்இயக்குநர்கள்தயாரிப்பாளர்கள்இசையமைப்பாளர்கள் என யாரையும் சீண்டாமலேஅவர் விளையாடி வருகிறார். Safe play!
 
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இவ்வளவு காலம் கழித்து சின்மயி பிரச்சினையைக் கிளப்பியதும் , ஆண்டாள் விவகாரத்தில் இந்துத்துவாவாதிகளின் பழிவாங்கும் ஆயுதமாய்ச் செயல்படுகிறாரோ என்று எண்ணத் தோன்றியது . பிராமண சங்கத் தலைவரையெல்லாம் கூட அவர் இழுத்து விட்டதைப் பார்க்கையில் , courtesy ' Me too ' என எடுத்துக் கொள்ளலாம் . சூழ்நிலை காரணமாக சமரசம் செய்திருந்தால் , இத்தனைக் காலம் கழித்தா குற்றம் சாட்டுவது? பெண்  பன்முனைத் தாக்குதல்களுக்கு உள்ளாகிறாள் என்பது உண்மை . அவளைக் காத்து நிற்பது இச்சமூகத்தின் கடமை .  சமரசமாகவோ விருப்பத்தினாலோ ஒரு பெண் உடன்பட்டிருந்தால் , எந்த நேரத்திலும் நிறுத்திக் கொள்ள அவளுக்கு உரிமையுண்டு . ஆனால் முந்தைய காலத்திற்கு ஆணை மட்டும் குற்றம் சாட்டுவது நேர்மையன்று  (சின்மயியின் குற்றச்சாட்டு உண்மையாயிருந்தாலும் கூட ) .

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

இவ்வளவு காலம் கழித்து சின்மயி பிரச்சினையைக் கிளப்பியதும் , ஆண்டாள் விவகாரத்தில் இந்துத்துவாவாதிகளின் பழிவாங்கும் ஆயுதமாய்ச் செயல்படுகிறாரோ என்று எண்ணத் தோன்றியது . பிராமண சங்கத் தலைவரையெல்லாம் கூட அவர் இழுத்து விட்டதைப் பார்க்கையில் , courtesy ' Me too ' என எடுத்துக் கொள்ளலாம் . சூழ்நிலை காரணமாக சமரசம் செய்திருந்தால் , இத்தனைக் காலம் கழித்தா குற்றம் சாட்டுவது? பெண்  பன்முனைத் தாக்குதல்களுக்கு உள்ளாகிறாள் என்பது உண்மை . அவளைக் காத்து நிற்பது இச்சமூகத்தின் கடமை .  சமரசமாகவோ விருப்பத்தினாலோ ஒரு பெண் உடன்பட்டிருந்தால் , எந்த நேரத்திலும் நிறுத்திக் கொள்ள அவளுக்கு உரிமையுண்டு . ஆனால் முந்தைய காலத்திற்கு ஆணை மட்டும் குற்றம் சாட்டுவது நேர்மையன்று  (சின்மயியின் குற்றச்சாட்டு உண்மையாயிருந்தாலும் கூட ) .

சின்மயி தரப்பில் இது ஒரு வகை முட்டாள் தனம் போலவே தெரிகிறது. (over reacting)

தாயுடன் அங்கே சென்றிருக்கிறார். தாய், மகளது, பாதுகாப்புக்காகத் தானே போனார். அப்படி இருக்கும் போது, கவிஞர் அழைத்தாரா?

அவர் ஏன் தமிழகத்தில் இருக்கும் போது அழைக்கவில்லை. சுவிஸ்ஸில் இருக்கும் போது தானா அழைக்க வேண்டும்?

சரி அழைத்தவர், நேரடியாக அழைக்காமல், மாமா வேலை பார்க்க, மூன்றாவது ஆளையா பாவிக்க வேண்டும்.

இவ்வளவு பணம் செலவழித்து, இவர்களை அழைத்த சுவிஸ் காரர்களுக்கு, இந்த மாமா வேலை பார்ப்பதால் என்ன பலன் வர போகிறது?

சரி, வைரமுத்து உண்மையில் அழைத்தார் என்று வைத்துக் கொள்ளுவோம்... மறுத்த பெண்ணை வஞ்சம் வைத்து, பின்னர் வாய்ப்புகளை வழங்காமல் அல்லவா இருந்திருப்பார். அப்படி நடந்ததாக தெரியவில்லையே.

எனக்கென்னவோ... யாரு வைரமுத்து பெயரில் அழைத்தாரோ, அவர் மீது தான் சந்தேகம்... அவர் சும்மா முஜன்று  பார்த்திருக்கலாம். சினிமா கார பொண்ணு தானே... பணத்துக்கு ஆக வந்தால்...தாயை விட்டு தனியே வந்தால் வெளியே கூட்டிப்போய் பரிசுகள் வாங்கிக் கொடுத்து தன் வழிக்கு கொண்டு வர நினைத்து இருக்கலாம்.

இங்கே, முன்னரே, நடிகை பானுபிரியா, ரஞ்சனை, மாதுரி, நடிகர் விஜய் என்று இலங்கை தமிழர்களை கலியாணம் பண்ணியவர்களும், கூட சில நாள் வாழ்ந்தவர்களுக்கும் உண்டே. 

Share this post


Link to post
Share on other sites

வைரமுத்துவை ஏன் என் திருமணத்துக்கு அழைத்தேன்!’’ – விளக்கிய சின்மயி

`வைரமுத்துவை ஏன் என் திருமணத்துக்கு அழைத்தேன்!’’ – விளக்கிய சின்மயி
 

வைரமுத்து மீதான பாடகி சின்மயினுடைய பாலியல் குற்றச்சாட்டுதான், தமிழகத்தின் தற்போதைய பரபரப்பு. இதுபற்றி, தன்னுடைய முகநூலில் இன்று நேரடியாக வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் சின்மயி.

இந்த விவகாரத்தில் பலரும் எழுப்பிவரும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அதில் பதில் சொல்லியிருக்கிறார். இதோ… அந்த வீடியோ பதிவு அவரது வார்த்தைகளில்…

“எனக்குத் திருமணமாகும் வரைக்கும் என்னோட கரியர் பத்தி எதையுமே நான் முன்வந்து பேசியதில்லை. எல்லாமே என் அம்மாதான்.

வெளிநாடுகளில் புரோகிராம் நடத்துறதுக்கு சிங்கர்ஸைக் கூட்டிக்கிட்ட போகிற ஆர்கனைசர்ஸ் பற்றி சிங்கர்ஸ்கிட்ட கேட்டீங்கன்னா,

நிறைய கதைகள் சொல்வாங்க. சிங்கர்ஸோட பாஸ்போர்ட்டை வாங்கிவெச்சுட்டு திருப்பிக் கொடுக்காம இருக்கிறது, டிக்கெட்டை புக் பண்றேன்னு சொல்லிட்டு. பண்ணாம இருக்கிறதுன்னு இருப்பாங்க.

இதை நான் பாலியல் வன்முறையாகச் சொல்லலை. ஸோ, இன்டஸ்ட்ரியில் இந்த மாதிரி ஆர்கனைசர்கிட்ட பேசாதீங்கன்னு எல்லோரும் சொல்றதால, மத்தவங்களை மாதிரி நான் நிறைய வெளிநாட்டுப் புரோகிராமுக்குப் போனதில்லை.

`கன்னத்தில் முத்தமிட்டால்’ வந்த புதுசுல, ஒரு தடவை ஸ்டேஜ்ல பாடி முடிச்சுட்டு இறங்கும்போது கீழே விழுந்துட்டேன். அதைப் பார்த்த வைரமுத்து சார், மறுநாள் லேண்ட் லைன்ல அம்மாவுக்குப் போன் பண்ணி, `விழுந்ததுல ஊமைக்காயம் ஏதாவது பட்டிருக்கப் போகுதும்மா. பார்த்துக்கோங்க’னு சொன்னார்.

அவ்ளோ பெரிய மனுஷன், அக்கறையா விசாரிக்கிறாரேன்னு அவர் மேலே மரியாதை வந்துச்சு. இன்டஸ்ட்ரியில் பெரிய மனுஷன், வயசானவரு அவரே, `ஸ்விட்சர்லாந்தில் ஒரு கான்சர்ட். வாங்க’னு சொல்லும்போது, அவநம்பிக்கை வர்றதுக்கு சான்ஸ் இல்லையே.

சுவிஸ் சுரேஷ், எங்க ஆர்கனைசர். 2004-2005-ல் அவருக்குக் கொஞ்சம்கூட ஆங்கிலமே வராது.

சுவிஸில் பேசக்கூடிய ஒரு வகை ஜெர்மன் மொழிதான் தெரியும். நான் அப்பத்தான் ஜெர்மன் மொழியில் டிகிரி வாங்கியிருந்தேன். அதனால், எனக்கு யார் ஜெர்மன்ல என்ன பேசினாலும் நல்லா புரியும்.

நாங்க தங்கியிருந்தது சுரேஷ் சார் வீட்லதான். ஹோட்டல தங்குறது பாதுகாப்பில்லை, அவங்களுக்கு ஃபைனான்ஸியலா இழுத்துவிட வேண்டாம், வெஜிடேரியன் உணவுகள் கிடைக்காது போன்ற காரணங்களால், யுரோப் நாடுகளுக்கு கான்சர்ட் செய்யப்போறவங்க ஆர்கனைசர் வீட்டிலேயேதான் தங்குவாங்க. இதுதான் வழக்கம்.

அப்படி ஜெர்மன் மொழியில பேசிட்டிருக்கும்போது, அவரோட சொந்த மகளையே, வைரமுத்து சார் இருக்கும்போது தனியா அனுப்ப வேணாம்னு சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கு.

ஏன் அப்படிச் சொன்னாருன்னு அப்போ எனக்குப் புரியலை. கான்சர்ட் சனி, ஞாயிறு முடிவடைஞ்சிருச்சு. ஆர்கனைஸ் ஏற்பாடு பண்ணிட்டிருந்தவங்க, `திங்கள்கிழமையிலிருந்து நாங்க எல்லாம் வேலைக்குப் போகணும்.

உங்களை இன்னொருவர்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்றோம். நீங்க போய் ஹோட்டல்ல இருங்க’ அப்படின்னாங்க. ஆனா, எங்ககூட வந்திருந்த மாணிக்க விநாயகம் ஐயா கிளம்பிட்டாரு. இனியவன் ஐயா கிளம்பினாரான்னு தெரியலை.

ஏன்னா, அவரு எங்ககூட தங்கலை. மாணிக்க விநாயகம் ஐயா கிளம்பினதுக்கு அப்புறம்தான் எங்கம்மா, `எங்களை மட்டும் ஏன் இங்கேயே வெச்சிருக்கீங்க. எங்களுக்கும் டிக்கெட் போட்டு அனுப்புங்க’னு கேட்டப்போதான், இந்த மொத்த நிகழ்வும் நடந்ததாக எங்கம்மா பல நாள்களுக்குப் பிறகு சொன்னாங்க.

அது முடிந்து, கான்ட்ராக்ட் வவுச்சர்ல சைன் பண்ணி பேமென்ட் வாங்கும்போது, வைரமுத்து தகாத முறையில் நடந்துக்கிட்டது, அவங்க வீட்ல இருந்தவங்களுக்குத் தெரியும்,

ஆபீஸ்ல இருந்தவங்களுக்கும் தெரியும். அது உண்மை. இதெல்லாம் நடந்தது 2004-05-ல். அப்போவெல்லாம் பாதிப் பேர் வீட்ல இன்டர்நெட் கிடையாது.

மொபைல்போனும் கொஞ்சப் பேர் கையில்தான் இருந்துச்சு. இதெல்லாம் நடைமுறைக்கு வந்து ஃபேஸ்புக்குல கருத்துச் சொல்றது எல்லாம் கடந்த 3 அல்லது 4 வருடங்களாகத்தான்.

ஸோ, 2004-05-ல் தனியா இருந்த என்னையும் எங்க அம்மாவையும், `ஏன் போலீஸ்கிட்ட சொல்லலை. ஏன் இன்ட்ஸ்டிரியில சொல்லலை’னு கேட்கிறீங்க.

இப்போ நான் இவ்வளவு பிரபலமாகி சொல்லும்போதே, `நீ பப்ளிசிட்டிக்குச் சொல்றேன்னு சொல்றீங்க. 15 வருஷத்துக்கு முன்னாடி சொல்லியிருந்தா இந்தத் தமிழ்ச் சமூகம் அதை ஒத்துண்டிருக்குமா? ஏன் மீடியாவுக்குப் போகலைன்னு கேட்டா, டிவி வாசல் போய் நின்னு, வைரமுத்து ஐயா இப்படி நடந்துக்கிட்டாருன்னு எங்களை கோஷமிடச் சொல்றீங்களா?

 

பல பேரு இது பொலிடிக்கல் மோட்டிவேட்னு சொல்றாங்க. இப்போ ஏன் சொல்றேன்னா, இப்பத்தான் அதுக்கான மனதைரியம் வந்திருக்கு.

வைரமுத்துவை ஏன் திருமணத்துக்கு அழைச்சீங்கன்னு ஆளாளுக்கு மீம் போட்டுத் தள்றீங்க? இன்டஸ்ட்ரியில் பத்திரிகை வைக்கணும்னா பி.ஆர்.ஓ-களை அணுகணும். அவங்களைக் கூப்பிட்டு, யார் யாருக்கு இன்விடேஷன் கொடுக்கணும்னு பேசறப்போ, வைரமுத்து பேர்தான் லிஸ்ட்ல டாப்ல இருக்கும். எல்லா பி.ஆர்.ஓ-கிட்டேயும் எனக்கு வைரமுத்துவைக் கூப்பிட இஷ்டமில்லைன்னு சொல்ல முடியுமா? அவங்க குடும்பத்துல எல்லோருக்கும் இன்விடேஷன் வைக்கிறேன். அப்பாவுக்கு வைச்சுட்டீங்களான்னு கேட்டா என்ன சொல்றது? இதையெல்லாம் நீங்க யோசிச்சுப் பார்க்கணும்.

`புரூஃப் எங்கே?’னு கேட்கறீங்க. என்கூட இருக்கிற சிங்கர்ஸுக்கு வைரமுத்து தகாதமுறையில் நடந்துக்கிட்டாருன்னு சொல்றதுக்கு தைரியம் இல்லை.

பொலிடிக்கல் பவரை வெளிப்படையா காட்டுறவரை எதிர்த்து 15 வருஷத்துக்கு முன்னால நான் எப்படிப் போராட முடியும்? 15 வருஷத்துக்கு முன்னாடி இந்த மாதிரி விஷயத்துக்கு கேஸ் போட முடியாது.

இப்போ சட்டங்கள் மாறி இருக்கு. சின்ன வயசுல ஒரு குழந்தைக்குத் துன்புறுத்தல் நடந்திருந்தா, அவங்க வயதான பிறகும் கேஸ் போடலாம். இதெல்லாம் சமீபத்துல வந்த மாற்றம்.

`நீ என்ன ஒழுக்கமானவளா?’னு கேட்டா, ஆமா, நான் ஒழுக்கமானவதான். நான் சொல்றது நிஜம்தான். நடந்தது வைரமுத்துவுக்குத் தெரியும், சுவிஸ் சுரேஷுக்குத் தெரியும்.

அங்கே இருக்கிற இன்னொரு ஆர்கனைசரும், `வைரமுத்து உங்ககிட்ட தவறா நடந்துகிட்டது எனக்குத் தெரியும்’னு மெசேஜ் அனுப்பினாரு.

இனியவன் இப்படியெல்லாம் நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு சொல்றாரு. அவருகூட நின்னு பார்த்தாரா? நான் பத்தினியானு கேட்கிற அருகதை யாருக்கும் இல்லை.

அதை எங்க வீட்ல விட்டுருங்க. பாலியல் துன்புறுத்தல் செஞ்சவங்கதான் வெட்கப்படணும். ஆளானவங்க எதுக்கு வெட்கப்படணும்? எனக்கு வெட்கமில்லை. நன்றி. வணக்கம்!”

http://ilakkiyainfo.com/வைரமுத்துவை-ஏன்-என்-திரு/

Share this post


Link to post
Share on other sites

சின்மயினதும் அவரது தாயாரினதும் பேட்டிகளை கூர்நது அவதானிப்பவர்களுக்கு பேட்டிகளில் உள்ள பாரிய முரண்பாடுகள் தெரியவரும் . இருவருமே பதட்டத்துடன் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள். 

Share this post


Link to post
Share on other sites

சின்னமயிக்கும் அவவின்ட அம்மாவுக்கும் சமர்ப்பணம்.:grin:

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

சின்மயினதும் அவரது தாயாரினதும் பேட்டிகளை கூர்நது அவதானிப்பவர்களுக்கு பேட்டிகளில் உள்ள பாரிய முரண்பாடுகள் தெரியவரும் . இருவருமே பதட்டத்துடன் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள். 

 

Share this post


Link to post
Share on other sites

சுவிஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஸ் தனது நண்பர்களுடன்  ஜேர்மன் மொழியில் உரையாடினார் என்றும் ஜேர்மன் மொழி உரையாடலில் சுரேஸ் தனது சொந்த மகளை வைரமுத்துவுடன் அனுப்ப பயப்பட்டார் என்றும் அதை ஜேர்மன் மொழியில் டிகிறி முடித்திருப்பதால் தன்னால் முழுமையாக அதை புரிந்து கொள்ள முடிந்த‍தாகவும்  சின்மயி சொல்லியிருப்பதை நம்ப முடியவில்லை.

முதலாவது விடயம் இங்கு ஐரோப்பபாவுக்கு புலம் பெயர்ந்த முதலாம் தலைமுறையினர் தமிழ் மொழியில் தமக்குள் உரையாடுவதே வழக்கம். இரண்டாவது அப்படியே அவ‍ர் ஜேர்மன் மொழியில் உரையாடி இருந்தாலும் அது சுவிஸ் பேச்சு வழக்கு ஜேர்மன் மொழியாக தான் இருந்திருக்கும். ஜேர்மன் தாய் மொழியாக கொண்ட ஜேர்மனியருக்கே சுவிஸ் மொழி பேச்சு நடையை புரித்து கொள்வது மிகவும் கடினமாக விடயம். இந்தியாவில் ஜேர்மன் மொழியை கற்று கொண்டதாக கூறும் சின்மயிக்கு சுவிஸ் மொழிநடை நிச்சயமாக புரிந்திருக்காது. அப்படி புரிந்து கொள்வதற்கு நீண்ட மொழி அனுபவம் தேவை. ஏற்கனவே பத்தாம் வகுப்புவரை மட்டுமே  படித்துவிட்டு சாஸ்திரிய சங்கீதம் படித்த‍தாக பேட்டியில்  கூறும் சின்மயி ஜேர்மன் மொழியில் டிகிடி முடித்த‍தாக கூறுவது எப்படி சாத்தியம் என்றும் தெரியவில்லை. அப்போது அவரின் வயது 21 மட்டுமே.  அப்படியே ஜேர்மன் மொழியில் டிகிறி முடித்திருந்தாலும் சுவிஸ் ஜேர்மன் பேச்சு மொழி புரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கு சுரேஸ் ஜேர்மன் மொழியில் உரையாடுவதை தன்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிந்ததாக சின்மயி பொய் சொல்லியிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

அடுத்த‍து சுவிஸ் சுரேஸை பற்றி சொல்லும் போது தனது மகனை போன்றவர் என்று சின்மயின் தாயார் கூறுகிறார்.  அவரின் மகனை போன்ற வயதையொட்டிய சுரேஸிற்கு வளர்ந்த மகள் இருப்பதற்கான் சாத்தியம் குறைவு.  அப்படி இருக்க அவ‍ரின் மகளை வைரமுத்துவோடு அனுப்ப பயப்பட்டார் சுரேஸ் என்று கூறுவது எந்த அளவுக்கு உண்மையானது  என்றும் தெரியவில்லை.  ஆனால் இந்த முரண்பாடுகள் எல்லாம் இந்தியாவில் அலசி ஆராயப்பட மாட்டாது. 

 

  • Like 4

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

 

பார்ப்பனர்கள் எல்லோரும் ஐடியா போட்டு... ஆண்டாளை வச்சு செய்யுறாங்க...

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, Nathamuni said:

பார்ப்பனர்கள் எல்லோரும் ஐடியா போட்டு... ஆண்டாளை வச்சு செய்யுறாங்க...

வைரமுத்து குற்றவாளி அல்லது சுத்தவாளிக்கு அப்பால்.....

காயம் ஏற்பட்டால் அல்லது விபத்து ஏற்பட்டால் உடனடியாக நிவாரணம் தேடுவதுதான் வழமை. நேரகாலம் பார்த்து நிவாரணம் தேடினால்   அவர்களுக்கு  அழிவுகள் தான் ஏற்படும்.

Share this post


Link to post
Share on other sites
On 10/13/2018 at 7:45 PM, Nathamuni said:

தாயுடன் அங்கே சென்றிருக்கிறார். தாய், மகளது, பாதுகாப்புக்காகத் தானே போனார். அப்படி இருக்கும் போது, கவிஞர் அழைத்தாரா?

இப்படியும் நடந்திருக்கலாம்...... சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா.:grin:

இதெல்லாம்  சினிமா தாய்க்குலங்கள் செய்யும் வேலைகள் தானே....:cool:

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 10/13/2018 at 9:20 PM, nunavilan said:

ஏன் அப்படிச் சொன்னாருன்னு அப்போ எனக்குப் புரியலை. கான்சர்ட் சனி, ஞாயிறு முடிவடைஞ்சிருச்சு. ஆர்கனைஸ் ஏற்பாடு பண்ணிட்டிருந்தவங்க, `திங்கள்கிழமையிலிருந்து நாங்க எல்லாம் வேலைக்குப் போகணும்.

உங்களை இன்னொருவர்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்றோம். நீங்க போய் ஹோட்டல்ல இருங்க’ அப்படின்னாங்க. ஆனா, எங்ககூட வந்திருந்த மாணிக்க விநாயகம் ஐயா கிளம்பிட்டாரு. இனியவன் ஐயா கிளம்பினாரான்னு தெரியலை.

ஏன்னா, அவரு எங்ககூட தங்கலை. மாணிக்க விநாயகம் ஐயா கிளம்பினதுக்கு அப்புறம்தான் எங்கம்மா, `எங்களை மட்டும் ஏன் இங்கேயே வெச்சிருக்கீங்க. எங்களுக்கும் டிக்கெட் போட்டு அனுப்புங்க’னு கேட்டப்போதான், இந்த மொத்த நிகழ்வும் நடந்ததாக எங்கம்மா பல நாள்களுக்குப் பிறகு சொன்னாங்க.

அது முடிந்து, கான்ட்ராக்ட் வவுச்சர்ல சைன் பண்ணி பேமென்ட் வாங்கும்போது, வைரமுத்து தகாத முறையில் நடந்துக்கிட்டது, அவங்க வீட்ல இருந்தவங்களுக்குத் தெரியும்,

நீங்கள் வைரமுத்துவை நோக்கி ஓர் குற்றசாட்டை வைக்கிறீர்கள். அதுஉண்மையா, பொய்யா, வைரமுத்துவின் அணுகுமுறையை பிழையான உங்களை நோக்கிய நடத்தை என்று விளங்கிக்கொண்டீர்களா (அதாவது உங்கள் மதிக்கும் மனத்திற்கும் அவ்வாறு புரிந்ததா) அல்லது இவற்றிக்கிடையில் எதாவது ஒன்றா என்பது ஒருவருக்கும் தெரியாது.

நீங்கள் வைரமுத்துவின் state of mind  ஐ நீங்கள் உங்கள் விளக்கத்தின் படி சொல்லி இருக்கீறீர்கள். இது மிகவும் தவறானது. அவர் உங்கலாய் தனியே அழைத்திருந்தாலும், அது தகாத உறவிற்கு என்ற முடிவிற்கு எப்படி அடைந்தீர்கள்.  

ஆனால், மிகவும் வெளிப்படையான, பொருண்மையின் அடிப்படையிலான  கேள்வி ஒன்று உண்டு. ஓர் குழுவாக ஸ்விஸ் வருகிறீர்கள், அதுவும் ஓர் கால வரையுள்ள நிகழ்ச்சியில் பங்கெடுப்பதத்திற்கு. உங்கள் தாயாரும் உங்களோடு வருகிறார். உங்கள் தயார் சுவிஸ் வருவதற்கு நீங்கள் பங்கெடுக்கும் நிகழ்ச்சியே காரணம். அப்படி இல்லாவிட்டால், உங்கள் தாயாரின் ஸ்பொன்சரும், நோக்கமும் வேறாக இருந்திருக்க வேண்டும்.

உங்கள் கூற்றுப்படியே, உங்கள் தாயாருக்கு கூட சுவிஸ் வந்து, நிகழ்ச்சி முடிந்த பின்பே, அதாவது  சுவிஸ் ஐ enter பண்ணிய பின்பே  return ticket  ஐ போட்டு  சுவிஸ் ஐ விட்டு வெளியேறுவதற்கு (அனுப்புமாறு) கேட்கிறீர்கள்.   

உங்கள் தாயாருக்கு கூட சுவிஸ் return tikcet இல்லாமல் விசா வழங்கியதை, முக்கியமாக ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களை நம்ப சொல்கிறீர்களா?

உங்களிட்ற்கு கூட, சுவிஸ் ஒரு போதும் return டிக்கெட் இல்லாமல் விசை வழங்கியது என்று சொன்னால் நம்பமுடியாது. ஏனெனில், சுவிஸ் ஐரோப்பாவில் குடிவரவில் மிகவும் கட்டுப்பாடுடைய நாடாகும.

ஐரோப்பாவில் இருக்கும் நிரந்தர வதிவு பாத்திரம் உடையோருக்கே, சுவிஸ் 2005 - 2006 காலத்திலேயே விசா கட்டுப்பாட்டை தளர்த்தியது. அது கூட, படிப் படியாகவே நடை பெற்றது.  
 

Share this post


Link to post
Share on other sites

சின்மயி கூறும் விடயங்கள் உண்மையாகவோ அல்லது புனைகதையாகவோ இருக்கலாம். அதை நிறுவுவது எனது வேலையல்ல.

ஆனால், அவர் சொல்வது பொய்க்குற்றச்சாட்டென்று எம்மில் பலர் கூறுவதற்கான காரணங்களை ஆரய்வதே எனது நோக்கம்.

1. முதலாவது, அவர் ஏன் இவ்வளவு காலம் இதை வெளியே சொல்வதற்குக் காத்திருந்தார் என்பது.

நடந்தவுடன் சொல்லவேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் கிடையாது. அவர் சொல்வதுபோலவே அப்போது சூழ்நிலைகள் இல்லாதிருந்திருக்கலாம். இன்று ஹாலிவோட்டில் மிகவும் பிரபலாமன, பணபலம் பொறுந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என்று பலரைப் பற்றி நடிககள் தொடர்ச்சியாகக் குற்றச் சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். ஒருவர் பின் ஒருவராக பல பெண்கள் இவர்களைப்பற்றிய தமது அனுபவங்களைப் பகிர்ந்துவருகிறார்கள். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு ஒருமிகப்பெரும் தயாரிப்பாளர் சிறைசென்றிருக்கிறார். ஆனால் இவர்மீது சாட்டப்பட்ட குற்றங்கள் இன்று நேற்று நடந்தவையல்ல. பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றவை. ஆகவே நீதிகேட்பதற்கு கால அவகாசம் தேவையில்லை.

இவரைப் போன்றே உலகைன் கத்தோலிக்கத் திருச்சபையின் பல குருமார்கள், ஆயர்கள் என்று சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் புரிந்த சிறுவர்கள், பெண்கள் மீதான் பாலியல் கொடுமைகள் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் குரல் எழுப்பிவருகின்றனர். அந்த வகையில் அபல் குருமார் ஒன்றில் சிறைய்லோ அல்லது விசாரணை ஒன்றையோ எதிர்கொண்டு வருகின்றனர். ஆகவே உடனே சொல்லவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

ஆண் ஆதிக்க மனப்பான்மையுள்ள ஒரு சமூகத்தில் ஒரு பெண் தானகவே தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளியே சுதந்திரமாகச் சொல்வதற்கு இன்றுவரை நாம் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இது எமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கொண்டியங்கும் ஆசிய நாடுகள் மட்டுமல்லாமல், முற்றான பெண் விடுதலையை ஏற்படுத்தியதாக மார்தட்டும் மேற்குலகில் கூட இதுதான் நிலைமை.
ஆகவே, சின்மயி ஏன் பொறுத்திருந்தார் என்பது தேவையற்ற வாதம். நடந்ததா இல்லையா என்பதே பார்க்கப்பட வேண்டியது.

2. வைரமுத்து தவறான வழியில் செல்லக்கூடியவர் இல்லை என்கிற எமது பிரமை.

அவர் செய்தாரா இல்லையா என்று நாம் பார்க்கமுடியாது. ஆனால், இன்றுவரை தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திவருபவர்கள் யார்? ஆண்கள். அதுவும், வைரமுத்துப் போன்ற மிகப்பெரும் பாடலாசிரியர் ஒருவர் சினிமாவில் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பாவித்து வளர்ந்துவரும் ஒரு பாடகியை தனது இச்சைக்காகப் பாவிக்க எத்தனித்திருக்கலாம் என்பது ஏன் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது? ஏன், அவர் மனிதர் இல்லையா? அவருக்கு பாலுணர்வென்பது இருப்பதில்லையா? அல்லது, இன்று அவருக்கிருக்கும் பெயரும் புகழும் அவரை மனிதர்களிடமிருந்து பிரித்து, கடவுளாகும் நிலைக்கு உயர்த்தி விட்டதா? இவை எதுவுமேயில்லை. அவரும் சாதாரண மனிதர்தான். எமக்கிருக்கும் ஆசைகள், இச்சைகள் அவருக்கும் இருக்கிறது. சமூகத்தில் உயர்வான ஓரிடத்தில் இருக்கும் மனிதர்களின் நாளாந்த வாழ்க்கையின் நிகழ்வுகள் சாதாரண மக்களுக்கு பெருஞ்செய்தியாவதைப் போல, சாதாரண மனிதனின் நடத்தைகள் கூட வெளிச்சத்தில் பெரிப்பிக்கப்பட்டு காட்டப்படுகிறது.அவர் செய்த்தார இல்லையா என்பதற்கப்பால், இதை எம்மால் நிரூபிக்க முடியாதென்பதுதான் உண்மை. ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர், இன்றுவரை நெஞ்சைவிட்டகலா பாடல்களின் சொந்தக்காரன், எம்மில் பலரின் இளமைக் காலங்களை தனது வரிகளில் நடத்திச் சென்றவர்...இதனால் அவர் சுய ஆசாபாசங்களுக்கு அப்பற்பட்டவர் என்று எம்மை நினைக்கத் தூண்டிவிடுகிறது. வைரமுத்துவையும், சின்மயியையும் ஒரு பாடலாசிரியர், பாடகி என்று பாராது, ஒரு ஆண் ஒரு பெண் என்று பாருங்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

3. சின்மயி பிராமணியப் பெண், ஆகவே ஆண்டாள் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட வைரமுத்துவை இந்தச் சிக்கலிலும் மாட்டிவிடப் பார்க்கிறார்கள் 

இது பலரும் சொல்லும் ஒரு விடயம். இயல்பாகவே தமிழர் மீதான சின்மயியின் பார்வையையும், ஈழத் தமிழர் போராட்டம் பற்றிய அவரது விளக்கத்தையும் எம் மனதில் வைத்துக்கொண்டு அவர் பற்றிய இந்த முடிவிற்கு சட்டென்று வந்துவிடுகிறோம். 

குறிப்பாக பாரதிய ஜனதாவின் செயலாளர் ஹெச் ராஜா வைரமுத்தை அண்மையில் ஆண்டாள் விவகாரத்தில் கடுமையாக வசைபாடியிருக்கும் நிலையில், அவரை முற்றாகவே தலை குனிவை ஏற்படுத்த பிராமணியப் பெண்ணான சின்மயியை ராஜா பாவித்திருக்கலாம் என்பது.

ஆனால், ஒரு பெண் தனது வாழ்க்கையையே புரட்டிப் போடக் கூடிய ஒரு செய்தியை பலர் முன்னிலையில் தானாகவே சொல்வதற்கு, அதுவும் இன்னொருவரின் கைப்பொம்மையாக செயற்பட்டு, அப்பாவி ஒருவரின் பெயரைச் சிதைக்க விரும்புவார் என்று நாம் எப்படிக் கணக்குப் போட்டோம்? சின்மயிக்கு அப்படிச் செய்யவேண்டிய தேவை என்ன ? 

வைரமுத்துவின் பாடல்கள் பற்றிய சின்மயியின் ஆதரவுக் கருத்துக்களும், அவரது திருமணத்திற்கு அவர் அழைக்கப்பட்டதும் காரணமாக ச் சொல்லப்பட்டு, சின்மயி பொய்கூறுகிறார் என்று சிலர் கூறுகிறார்கள். ஒருவரின் மரியாதையின் நிமித்தம் அவர் அழைக்கப்படுவதற்கும், அவர் செய்த தவறொன்றிற்காக விமர்சிக்கப்படுவதற்கும் தொடர்பில்லை. ஒருவரின் திறமைக்கான தகுதி மெச்சப்படும் அதேவேளை, அவரது தவறுகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன, அவ்வளவுதான்.


இறுதியாக, வைரமுத்து செய்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், சின்மயி பொய்கூறுகிறார் என்று நாம் முன்வைக்கும் நியாயங்களைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர் கடவுளா அல்லது எம்போன்ற இன்னொரு சாதரண மனிதர் தானா என்பதை அவர் மெளனம் கலைந்து சொன்னால் ஒழிய, எமக்குத் தெரியப்போவதில்லை.

என்னை சின்மயி பக்தனா என்று கேட்க வேண்டாம். அவர் என்ன பாட்டுப் பாடினார் என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனால் வைரமுத்துவின் பாட்டுக் கேட்டு வளர்ந்தவன் நான். 

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, ragunathan said:

 

2. வைரமுத்து தவறான வழியில் செல்லக்கூடியவர் இல்லை என்கிற எமது பிரமை.

அவர் செய்தாரா இல்லையா என்று நாம் பார்க்கமுடியாது. ஆனால், இன்றுவரை தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திவருபவர்கள் யார்? ஆண்கள். அதுவும், வைரமுத்துப் போன்ற மிகப்பெரும் பாடலாசிரியர் ஒருவர் சினிமாவில் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பாவித்து வளர்ந்துவரும் ஒரு பாடகியை தனது இச்சைக்காகப் பாவிக்க எத்தனித்திருக்கலாம் என்பது ஏன் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது? ஏன், அவர் மனிதர் இல்லையா? அவருக்கு பாலுணர்வென்பது இருப்பதில்லையா? அல்லது, இன்று அவருக்கிருக்கும் பெயரும் புகழும் அவரை மனிதர்களிடமிருந்து பிரித்து, கடவுளாகும் நிலைக்கு உயர்த்தி விட்டதா? இவை எதுவுமேயில்லை. அவரும் சாதாரண மனிதர்தான். எமக்கிருக்கும் ஆசைகள், இச்சைகள் அவருக்கும் இருக்கிறது. சமூகத்தில் உயர்வான ஓரிடத்தில் இருக்கும் மனிதர்களின் நாளாந்த வாழ்க்கையின் நிகழ்வுகள் சாதாரண மக்களுக்கு பெருஞ்செய்தியாவதைப் போல, சாதாரண மனிதனின் நடத்தைகள் கூட வெளிச்சத்தில் பெரிப்பிக்கப்பட்டு காட்டப்படுகிறது.அவர் செய்த்தார இல்லையா என்பதற்கப்பால், இதை எம்மால் நிரூபிக்க முடியாதென்பதுதான் உண்மை. ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர், இன்றுவரை நெஞ்சைவிட்டகலா பாடல்களின் சொந்தக்காரன், எம்மில் பலரின் இளமைக் காலங்களை தனது வரிகளில் நடத்திச் சென்றவர்...இதனால் அவர் சுய ஆசாபாசங்களுக்கு அப்பற்பட்டவர் என்று எம்மை நினைக்கத் தூண்டிவிடுகிறது. வைரமுத்துவையும், சின்மயியையும் ஒரு பாடலாசிரியர், பாடகி என்று பாராது, ஒரு ஆண் ஒரு பெண் என்று பாருங்கள்.

பணம் அரசியல் பின்புலம் புகழ் செல்வாக்கு சாதி மதம் என்பதைக் கடந்து ஆணாகவும் பெண்ணாகவும் இந்திய சூழலில் பாரக்க முடியாது. நீதி நியாயம் மற்றும் அரசியல் என்பது இவற்றைக் கடந்து சமமாக இல்லை. ஏழைக்கும் பணக்காரனுக்கும் இந்தியாவில் நீதி சமமானதில்லை. இந்த இருவர் பிரச்சனையை வைத்து வேறு பிரச்சனைகள் மறைக்கப்படுகின்றது. ஊடகங்கள் வியாபராம் செய்கின்றது. தனிநபர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து யுரியுப் பார்வையினுடாக முடிந்தளவு வருமானத்தை தேட முயல்கின்றார்கள். அரசியல் கட்சிகள் சில இப் பிரச்சனையை தம் குரலாக மாற்றுகின்றது சில மௌனமாக இருந்து நல்லவன் வேடம் பேணுகின்றது. நாம் விரும்பினாலும் இது சாதராண ஆண் பெண் உணர்வு பாதிப்பு சார்ந்த பிரச்சனையாக அணுகமுடியாது. இப்பிரச்சனைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நாளாந்தம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் தாள்த்தப்பட்ட சமூகப் பெண்களுக்கு கொடுப்பதில்லை. குறிப்பாக வட இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் ஊர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்படுகின்றார்கள்கும்பலாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள், பல இடங்களில் கொல்லவும் படுகின்றார்கள். இவைகள் அன்றாடம் நிகழ்ந்தாலும் ஊடகங்கள் சின்மாயிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவற்றுக்கு கொடுப்பதில்லை காரணம் அதில்வருமானம் குறைவு. ஊடகங்களையே ஏனைய மக்களும் பின்பற்றுகின்றார்கள். ஒருவகையில் பிரபலங்களின் பாலியல் புகார்கள் என்பது கூட கடுமையாக பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்களை திருடுவது என்றும் அணுகமுடியும். பல சந்தர்ப்பங்களில் செல்வாக்கு மிக்க ஆண் செல்வாக்கை அடைய முற்படும் பெண்களை தமது இச்சைக்கு பயன்படுத்துகின்றார்கள் அதே நேரம் செல்வாக்கை அடைவதற்காக பெண்கள் செல்வாக்கு மிக்க ஆண்களை மகிழ்வித்து  பயன்படுத்தவும் செய்கின்றார்கள்.  ஆண்பெண் என்ற அடிப்படை அடயாளங்கள் இவ்வாறான சூழலில் எமது அணுகுமுறைக்கு அப்பால் செல்கின்றபோது நாம் வலிந்து ஆண் பெண் என்ற அடயளங்களை அடிப்படை நிலைக்கு ஏன் கொண்டு வரவேண்டும் ? 

Share this post


Link to post
Share on other sites

வைரமுத்து இப்படியான விடையங்களைச் செய்யமாட்டார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் எம்மிடம் இல்லை காரணம் அவர் தமிழ் சினிமாவிலும் இலக்கிய உலகிலும் புகழ்பெற்றவர் என்பதற்கான காரணத்தை முன்வைத்தே அவர் உத்தமர் எனக்கூறிவிட முடியாது. 

காந்தி  நிர்வாணமாகப் பல பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர் அதை யாரோ பார்த்துவிட்டதால் நான் சத்திய சோதனை செய்தேன் எனப்புலுடா விட்டவர் காந்தியவாதிகளோ அன்றேல் அக்மார்க் இந்தியர்களோ இத மறுக்கலாம் ஆனால் அதற்கு முந்தைய காலத்தில் நான் இனிமேல் ஸ்தீரி லோலராக இருக்கமாட்டேன் என அவரது தாயரிடம் கூறியதாகக் கதை இருக்கு.

வைரமுத்து சமூக ஒழுங்குவிதகளுக்குள் கட்டுப்பட்டு அன்றேல் உண்மைக்கு அண்மையில் வாழ்கிற ஒரு ஜீவன் இல்லை அப்படியானவராக இருந்திருந்தால் அவர் ஈழத்தமிழர் படுகொலையில் கருனாநிதி மத்திய அரசுடன் சேர்ந்திருந்தார் எனும் குற்றச்சாட்டுகளுக்கிடையில் அவருடன் ஒட்டி உறவாடியிருக்கமாட்டார். ஆகவே மனச்சாட்சியை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு இப்படியான விடையங்களில் ஈடுபடக்கூடிய மனப்பக்குவம் உள்ளவர்தான் வைரமுத்து. 

ஐம்பது வயதைக் கடந்த ஒரு ஆண்மகன் மனம் பக்குவப்படுவதெள என்பது மிகவும் கடினமானது அவனுக்கு ஒரு பெண்பிள்ளை இருக்கவேண்டும் சமூக அக்கறை இருக்கவேண்டும் அவன் சேரும் இடம் ஒழுக்கம் நிறைந்ததாக இருக்கவேண்டும் 

ஆனால் வைரமுத்துவின் கடந்தகாலங்களை நினைத்துப்பாருங்கள் இவருக்கு திமுக அல்லது கருனாநிதியைத் தவிர்த்து கவியரங்க மேடைகளைத் தவிர்த்து சினிமா விழாக்களைத் தவிர்த்து எந்த ஒரு இடத்திலும் சாதாரணமானவனுடன் ஒன்றுபட்டிருப்பாரா?

நல்ல கவியாக இருந்தால் மட்டும் போதாது மனிதம் இவரில் இருக்கிறதா?

மீண்டும் கூறுகிறேன் சின்மயி வைரமுத்கு விடையத்தை நாம் புறந்தள்ளிப்பயணிப்பது மிகவும் நல்லது.

கருனாநிதி வழமைக்கு மாறான திருமண உறவில் தொடசல் வைத்திருந்தார் கமல்காசன் வழமைக்கு மாறாகத் தொடர்ந்தும் தொடசல் வைத்திருக்கிறார் ஜெயலலிதா சசிகலா உறவு எப்படியானது என்பது உலகறிந்த விடையம் இவர்களையெல்லாம் ஏற்றுக்கொண்ட தமிழகமும் மக்களும் இவற்றையும் காலப்போக்கில் ஏற்றுகொள்வார்கள்.

கனடாவில் வாழும் நம்மவர்களில் அனேகர் கியூபா நாட்டில் தொடசல் வைத்து அங்கும் குடும்பத்தை மெயின்டேன் பண்ணுவதுபோலவே பத்தோடு இதுவுமொண்டு.

ஆனால் ஒரு விடையம் இனிமேல் புலம்பெயர் நாடுகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்து வருகைதரும் தென்னிந்திய சினிமாவைச்சேர்ந்த பெண்களுடன் கொஞ்சம் தூரத்தே இருப்பார்கள் நம்மவர்கள்.

அப்படித்தான் இருக்கவேண்டும் காரணம் நாம் ஈழத்தவர் எனும் கண்ணியத்தைக் காக்க முற்படல்வேண்டும்.

உங்களுக்கு அப்படியான ஆசை இருந்தால் அதற்காகவே தென்னிந்திய நகரங்களில் நிறைந்து கிடக்கின்றன அங்குபோய் உங்கள் இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் முகமறியாது(அடையாளம் அறியாது) முகவரி அறியாது பார்க்கலாம், பழகலாம்,  ...........லாம் எட்டாக்கனிகள் என நீங்கள் நினைத்தவைகள் எல்லாம் கொட்டிக்கிடக்குது அங்கு போங்கள்.

Edited by Elugnajiru

Share this post


Link to post
Share on other sites

Metoo என்பது அமெரிக்காவில் ஆரம்பித்தது. அவர்களது கலாசாரத்தில், ஒருவரிடம் படுக்கையை பகிர்ந்து கொள்வோமா என்று கேட்பது சர்வ சாதாரணமானது. அது வேறு, பாலியல் அத்து மீறல், பாலியல் வன்புணர்வு எனும் கிரிமினல் செயல்கள்  வேறு.

படுக்கையை பகிர்ந்து கொள்ள கேட்பது ஒருவகை barter (பண்டமாற்று) system. எனக்கு இது கிடைத்தால், உனக்கு அது கிடைக்கும் என்பது என்று சொன்னாலும், நமக்கு அது கிடைத்தால், உனக்கு அது கிடைக்கும் என்பதே உண்மை.

தமக்கு அது கிடைக்க வேண்டும் என நினைக்கும் பெண்ணோ, ஆணோ, நமக்கு அது கிடைக்கட்டும் என முடிவு செய்கின்றனர். இந்த முடிவு சுஜாதீனமானது. இந்த வகையில் அந்த option கொடுப்பவர், சட்டம் தெரிந்தே நடக்கின்றார்.

எல்லாம் முடிந்து, பணம் கையில் வந்து, வாழ்க்கை தரம் ஏறியதும் தாம் கடந்து வந்த பாதையினை திரும்பி பார்க்கையில் அருவெறுப்பும், விரக்தியும் உண்டாகின்றது. இந்த பரதேசியுடன் படுக்கையை பகிர்ந்தோமா என  ஆதங்கம் உண்டாகின்றது. இது அந்த ஆதங்கத்தினை வெளியே பகிர வைக்கிறது. இதுவே metoo சாராம்சம். மேலை நாடுகளில் இது நீதி மன்றங்களில் நில்லாது. 

அதேவேளை, பாலியல் பலாத்காரம், drug  rape செய்த, புகழ் மிக்க பலர் அண்மையில் சிறைக்கு போயுள்ளனர். அது வேறு metoo வேறு.

இந்த metoo சாராம்சத்தினை இந்தியாவில் apply  பண்ணும் போது பாலியல் அத்துமீறல் என்று அவர்கள் கலாசாரத்துக்கு அமைய சொல்லும் போது சிக்கல் உண்டாகின்றது. இந்திய கலாசாரத்தில், பெண்களை படுக்கையை பகிர்ந்து கொள்ளலாமா என கேட்பதே பாலியல் அத்து மீறல் தான் என நினைக்கின்றனர்.

இந்த சிம்மயி vs வைரமுத்து விஷயத்தில் பல வீடியோக்கள் வந்துள்ளன. பல வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டன. 

இதில் ஒரு பெண்மணி சொல்கிறார். ஆணை, பெண்ணும் , பெண்ணை ஆணும் கவர்வதும், காதலிப்பதும், படுக்கை வரை செல்வது தொடர்பாக கோரிக்கை வைப்பதும் சாதரணமானது. தொன்று தொட்டு, விலங்குகள், மனிதர்கள் என எங்குமே உள்ளது. பிடித்தால் இணைக்கிறோம், பிடிக்கா விட்டால் வேண்டாம் என்கிறோம். இதிலே  பாலியல் அத்து மீறல் எங்கே வருகிறது? சரி வைரமுத்து கேட்டார்  தான் என வைத்துக் கொண்டாலும், அதில் சட்ட ரீதியாக தவறு இல்லையே. முக்கியமாக இது நடந்த சுவிஸ் நாட்டில் இல்லவே இல்லை, என்கிறார். மேலும் வைரமுத்து நேரடியாக கேடக்காத வரையில், சட்ட  மீறல் என்ற பேச்சே இல்லையே என்கிறார். 

14 வருடங்களுக்கு பின்னர் திடீரெனெ உருக் கொண்டு சாமி ஆடிய சிம்மயியும் அவரது அம்மாவும், அதற்ற கான காரணத்தினை தெளிவாகவில்லை. அறப்படித்தவராக காட்டிக் கொள்ளும் அம்மாவோ, அப்போது metoo  இல்லையே என தத்துவம் சொல்கின்றார்.

இதனிடையே கல்யாண் மாஸ்டர் என்பவர் குறித்து இலங்கை தமிழ் பெண் என யாரோ prank  (குறும்புக்கு) போட்ட, பாலியல் பலாத்கார சம்பவ  பதிவினை, bastard, என்ற சொந்த பதிவுடன் உனது நேரம் வந்து விட்டது (timeup! ) என retweet செய்திருந்தார்  சிம்மயி.

அந்த நபர், இப்போது, தான் குறும்புக்கு செய்ததாகவும், விசாரிக்காமல் அப்படியேவா போடுவீர்கள் சிம்மயி என கேட்க, அதை கல்யாண் மாஸ்டர் retweet செய்ய, மன்னிப்பு கேட்டு அவிந்து  போய் இருக்கிறார்  சிம்மயி. இவருக்கு ஆதரவு சினிமா தளத்திலேயே பெருமளவில் இல்லை என்பது தெரிகிறது. அவருக்கு ஆதரவு தந்த சமந்தா, சித்தார்த், பிரகாஷ் ராவ் அனைவருமே  சிம்மயி போல் தமிழர்கள் அல்ல என்பதும், இப்போது தடுமாறுவார்கள் என புரிகிறது.

அரசியல் ரீதியாக, பிஜேபி சின்மயிக்கு ஆதரவு தருவதுடன், ஆண்டாள் சாபம் என சொல்கிறது. வைரமுத்து சார்ந்த கட்சி திமுக தலைவர் ஸ்டாலின், வழக்கம் போல மதில் மேல் பூனையாக இருக்க, சீமான் உடனே ஒரு நிலைப்பாடு எடுத்து, ஆதரவு கொடுக்கிறார். 

2016ம் ஆண்டில் சுசி லீக்ஸ் எனும் வீடியோகள் வெளி வந்து பெரும் பரபரப்பினை உருவாக்கியது. தனுஷ், அனிருத் போன்ற நிஜ உலக வில்லன்கள், தமது நண்பர்களுடன்  பார்ட்டி என்று சினிமா உலக பெண்களை அழைத்து, லூட்டி அடிப்பது வழக்கம். இங்கே மது, drug  rape  சர்வ சாதாரணம். 

இந்த பார்ட்டிக்கு போனவர்கள், மப்பில் செய்யும் அட்டகாசங்களை குறைவாக, அல்லது நிறை மப்பு மாதிரி நடித்த பாடகி சுசித்திரா (சுசி) படங்கள் பிடித்திருந்தார். அல்லது படம் பிடித்தவர்களிடம் காப்பி வாங்கி வைத்திருந்தார்.

அந்த பார்ட்டிகளில் வந்த ஒருவர் சிம்மயி. 

வீடியோ, போட்டோஸ் என பல சுசி இடம் மாட்டி இருந்தது.

இதனை இவர் அடுத்தவர்களுக்கு காட்டிட .... பிரச்சனை உருவானது. அனைத்தையுமே அழித்து விடுமாறு எல்லோரும் சொன்னார்கள். அவர்களுக்கு முன் அவ்வாறு செய்தாலும் , அவர் வேறு காப்பி வைத்திருந்தார் என அவர்கள் கருதினர். அதுவும் உண்மை.

ஆகவே இந்த வில்லாதி  வில்லர்கள் வேறு idea  போட்டார்கள். மேலுமொரு பார்ட்டி வைத்து, சுசியை எப்படியோ (drugged) போதைக்குள்ளாக்கி அவருடன் உறவு வைத்துக் கொண்டே படத்தினை பிடித்து வைத்துக் கொண்டார்கள். அது பிளாக்மெயில். 

போதை தெளிந்த போது, தனக்கு என்ன நடந்தது என அறிந்து பெரும் கோபம் கொண்டு அவர் அந்த வீடியோ களையும், படங்களையும் வெளியிட தொடங்கினார். முக்கியமாக தன்னை வன்புணர்வு செய்தவராக தனுஷை குறிப்பிட்டார் அவர். தனது கையில் உண்டாகி இருந்த சிராய்ப்பு காயத்தினையும் படமாக எடுத்துக் போட்டிருந்தார் அவர்.

அவரது வீடியோ  ஒன்றில் அனிரூத், இன்னுமொரு நடிகையுடன் கட்டிலில் இயங்கிக் கொண்டிருந்ததை மங்கலான வெளிச்சத்தில் படம் பிடித்ததாக காட்டியது. அது youtube இருந்தது. நிமிசத்துக்கு நிமிஷம் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. (நானும் பார்த்தேன் - இப்போது சுசி அல்லது youtube அகற்றி இருக்கக் கூடும்)

இது சினிமா உலகை பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது. தன்னை குறித்தும் ஏதாவது வருமோ என்கிற பயத்தில் அவருடன் தொடர்பு கொண்டார் சின்மயி. இருவருமே பாடகிகள். பெரும் கோபத்தில் இருந்த சுசிக்கும், சின்மயிக்கும் வார்த்தைப் போர் மூண்டது.

2016 ல் டாக்டரிடம் சென்று நான்கு முறை கருச்சிதைவு செய்த விசயம் எனக்கு தெரியுமே என டிவீட்டரில் சுசி, சின்மயிக்கு சொல்லுமளவுக்கு போர் நீண்டது. மறு நாள் இன்னும் பாரதூரமான தனுஷ் குறித்த வீடியோ வெளியிடுவேன் என சொல்லி இருந்தார்.

நிலைமை கை  மீறிப் போவதை உணர்ந்த பெரிசுகள் முக்கியமாக இமயமலைகாரர், களத்தில் இறங்கி வேறு வீடியோக்கள் வராமல் நிலைமையை கையாண்டார். 

சுசி லீக் பண்ணிய விடியோக்கள் எல்லாம் எடிட் பண்ணுப்பட்டவை, உண்மையானது அல்ல என்பதுடன், சுசி மன நிலை பாதிக்கப் பட்டு  உள்ளார்.... வைத்தியம் செய்கின்றோம் என அவரது கணவர் நடிகர் (யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் முறை மாப்பிள்ளையாக நடித்தவர்)  கார்த்திக் குமாரை வைத்து சொல்லி கதையினை முடித்தார்கள். பெரும் பணம் கை மாறி இருக்கும் என சொல்லிக் கொண்டார்கள்.

சின்மயியும், தனது பங்குக்கு, நான் கார்த்திக் குமாரைதொடர்பு கொண்டேன். அவரது மனைவி மன நலம்  குன்றி இருப்பதாக சொன்னார். அவர் விரைவில் குணம் பெற வாழ்த்துகிறேன் என abortion கதைக்கு மூடு விழா நடத்தினார்.

இது இப்போது விலா  வாரியாக வெளியே வந்து... சுசி ஆதாரத்துடன் சொன்ன போது அவர்  மன நலம் குன்றியவர் என்று சொன்ன நீ வைரமுத்து குறித்து ஆதாரம் இல்லாமல் சொல்லும் போது நாம  நம்ப வேணுமா என கேட்கின்றனர்.

இதுவும், கல்யாண் மாஸ்டர் விபரமும், சின்மயியின் நம்பகத் தன்மையை பெருமளவில் குறைத்து விட்டன என்றே சொல்ல வேண்டும்.

அதே வேளை, சின்மயி சிறிது தலைக்கனம் கொண்டவராக, சில விடயங்களில் அவசர குடுக்கை  போல மாட்டுப் பட்டு இருக்கிறார். உதாரணமாக மீனவர் கடலில் மாட்டியபோது, அவர்கள் பாவம் என்றால், அவர்களால் பிடிக்கப் படும் மீன்கள் பாவம் இல்லையா என முட்டாள் தனமாக கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார். 

வெகு விரைவில் இவர் அமைதி ஆக போகும் நிலையே உருவாகின்றது.

மறுபுறம் அமைதியாக இருக்கும் வைரமுத்து, தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து மான நஷ்ட வழக்கு போடும் நிலைமையே காணப் படுகின்றது.  


  

Share this post


Link to post
Share on other sites

 அட இவ்வளவுக்கு போகுதா இந்த விடயம் ..................

இதெல்லாம் திசைதிருப்பல் செய்திகள் நம்ம ஊரில் கிரீஸ் மனிதன் போன்றவை மக்களின் இயல்பு வாழ்வு மாறி கோபம் பொங்கும்போது அரசுகளால் வேண்டுமென்றே கிளப்பிவிடப்படும் செய்திகள் உதரணமாய் ஹிந்தியாவில் முதன்மை பிரச்சனையாய் பெற்றோல் விலை ஏற்றம் ,காஸ் சிலிண்டர் ,யுத்தவிமான ஊழல் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து டைவேர்ட் பண்ண செய்யும் உத்தி .

Edited by பெருமாள்

Share this post


Link to post
Share on other sites

வைரமுத்து தமிழர்,தேசியவாதி என்பதால் அவர் தப்பே செய்யவில்லை அல்லது அப்படி செய்திருந்தாலும் அது பிழை இல்லை என்பது தான்  இங்கு பலரது கருத்தாக உள்ளது.

சின்மயி,சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அந்த நேரம் அமைதியாய் இருந்திருக்கலாம் .அல்லது 
..இருவரும் விரும்பிப் படுத்திருந்தால் அது பற்றிக் கதைக்கத் தேவையில்லை .

சினிமா வாய்ப்பு  வாங்கித் தருகிறேன் என்று எத்தனை திறமையான பெண்களது வாழ்க்கையை இவரும்,இவரைப் போன்றவர்களும் சீரழித்து இருப்பார்கள்....எத்தனையோ திறமையான பெண்கள் இவர்களோடு போராட முடியாமல் ஒதுங்கி இருப்பார்கள் 

..எல்லாத்திற்கும் ஒரு முடிவு உண்டு ...சின்மயி ஒழுக்கமாவர் அல்லது இல்லை என்பது அல்ல விடயம் வைரமுத்து எப்படிப்பவர்,எப்படி துஸ்ப்பியோகம் செய்தார் என்பது தான் விவாதம் 
 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வைரமுத்து ஒரு தமிழ்த் தேசியவாதியாக தன்னைக் காட்டிக்கொண்டாரா என்பது தெரியவில்லை.

ஆனால், ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் அவரது செயற்பாடுகளில் எனக்கு நினைவிலிருப்பது 2010 இல் தமிழக அரசு நடத்திய பெரும் எடுப்பிலான தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிகழ்வுதான்.

ஏனென்றால், கருனாநிதியைப் பொறுத்தவரையில், 2009 இனக்கொலையில் காங்கிரஸ் அரசுடன் தான் ஆற்றிய பங்கின் கறையைக் கழுவுவதற்கு செம்மொழி மாநாடு தேவைப்பட்டது. அதில் பங்கேற்குமாறு வைரமுத்து அழைக்கப்பட்டபோது, பல தமிழ் ஆர்வலர்கள் அவரைப் போகவேண்டாம், கருனாநிதியின் கறை கழுவும் நிகழ்வில் நீங்களும் உடந்தையாகவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்கள். ஆனால், அந்நிகழ்வில் பங்குபற்றினால் கிடைக்கப்போகும் பாரிய அன்பளிப்புத்தொகையை தட்டிக்கழிக்க முடியாத வைரமுத்து பலர் எதிர்ப்பின் மத்தியிலும் கலந்துகொண்டார்.

இவர் ஒரு சுயநலவாதி என்பதற்கு இவரே தன்னைப்பற்றி எழுதிய ஒரு புத்தகத்திலிருந்து ஒரு குறிப்பை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். 1991 மே மாதம். ரஜீவ் காந்தி கொல்லப்பட்ட மறுநாள். தமிழகமெங்கும் காங்கிரஸ் தொண்டர்களும் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நாள். அப்படி ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியில் வந்தவர்களால், இவரது வீட்டின் முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவரது காரும் அடித்து நொறுக்குப்படுகிறது.  இதுபற்றி அவர் குறிப்பிடும்பொழுது, " யாரோ ஒருவர் இறந்ததற்காக, அறிவிலிகள் எனது காரைச் சேதப்படுத்தி விட்டுச் சென்றுவிட்டார்கள் ....." என்று பொருள்பட எழுதியிருந்தார்.
பொதுவாகவே இந்தியர்கள் அநியாயத்திற்கு தேசபக்தி கொண்டு அலைபவர்கள் என்று கருத்து உண்டு. அதிலும், தமிழக மக்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அப்படியான ஒரு தருணத்தில், ராஜீவின் இழப்பைவிட தனது கார் நொறுக்கௌப்பட்டது இவருக்குப் பெரிதாகப் பட்டதுபோல இவர் எழுதியிருந்ததைத்தான் என்னால் மறக்கமுடியவில்லை.

ரஜீவ் கொல்லப்பட்டது சரியா பிழையா, தீர்க்கதரிசனமா அல்லது சமூகம் ஒன்றின் கூட்டுத் தற்கொலைக்கான முதல் அஸ்த்திவாரமா என்பதைப் பற்றியெல்லம் நான் இங்கே கதைக்கவரவில்லை. 
சும்மா, இவரது சுயநலம் பற்றி குறிப்பிடும்பொழுது, இந்தப் பதிவும் மனதில் வந்து தொலைத்துவிட்டது. 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now